Wednesday, August 4, 2010

100வது பதிவு

மக்களே! இது எனது 100வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் நன்றிகள். இது சம்பந்தமாக பிறகு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
அன்புடன் வானதி.


மா இல்லாமல் சப்பாத்தி/பரோட்டா!
தங்கமணி மைதா மா அல்லது வேறு எந்த மா வகைகளும் பாவிக்காமல் சப்பாத்தி செய்ய சொல்லி எனக்கு உத்தரவிட்டுள்ளார். இதெல்லாம் ஆவுற காரியமா?
துன்பம் வந்தால் நான் உடனடியாக உதவி கேட்டு ஓடுவது நம்ம கூகிள் ஆண்டவர்.
இந்த முறையும் ஓடினேன். மா இல்லாமல் சப்பாத்தி... இப்படி டைப் பண்ணிட்டு காத்திருந்தேன்.
யூ மீன் சப்பாட்டி வித்தவுட் ஃப்ளார் - அப்படின்னு நம்ம ஜெய் மாதிரி என்னையே திரும்ப கேள்வி கேட்டபடி.
தெரிலைன்னா தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே. என்ன அப்படி ஒரு மானப்பிரச்சினை??!!
சரி நானே ஒரு ரெசிப்பி கண்டு பிடிக்கலாம். அதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தலாம் என்று ஐடியா உருவானது.

தேவையான பொருட்கள்;
சோளம் ( மா இல்லை. முழுச் சோளம் ) - 10, 20 , 100 ( விரும்பிய அளவு )
சுத்தியல்/ மத்து - 1
தேவைப்படும் நேரம் - 2 நாட்கள்
நெய் - 1 கிலோ
உப்பு - விரும்பிய அளவு


இந்த ரெசிப்பியை தயார் செய்ய வீட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந்தது 3 பேராவது வேணும்.
முதலில் சோளத்தை உதிர்த்துக் கொள்ளவும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை என்று தோன்றினால் அவித்த பிறகு உதிர்த்திக் கொள்ளலாம். பொறுமை அவசியம். உதிரியான சோளத்தை வாய் அகன்ற பாத்திரத்தில் ( அண்டா ) போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அவித்துக் கொள்ளவும்.

முன்பே சோளத்தை அவித்திருந்தால் இரண்டாவது முறை அவித்து தொலைத்து விடாதீர்கள். பின்னர் பதம் சரி வராது.
சோளம் நன்கு குழைய வெந்ததும், அண்டாவில் வைத்து மத்து, சுத்தியல் இப்படி ஏதாவது ஆயுதங்களால் நன்கு மசிக்கவும்.
கைகளினால் மசித்தால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த நேரங்களில் சின்ன வயதில் உங்கள் அல்வா/ சாக்லேட் திருடிய டொமாரை நினைத்தால் பர பரவென வேலை முடிந்து விடும். இதை பிசைவதற்கு வீட்டில் இருக்கும் விடலைகளை துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
இப்ப இந்த வேலைகள் எல்லாம் செய்து முடிக்க 1 1/2 நாளாவது ஓடியிருக்கும். உப்பு சேர்க்க மறக்க வேண்டாம். இதில் தேங்காய், பீட்ரூட், காரட் என்று சேர்த்து, ருசியை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
நான் சொல்லும் போதே செய்து பார்த்திட வேணும் போல கைகள் பரபரக்குமே. இருங்கள் இன்னும் இருக்கு.

இப்பதான் மிகவும் முக்கியமான தருணம்.
சப்பாத்திகளாக உருட்ட வேண்டும். இது கொஞ்சம் சிக்கலான வேலை. முதல் முயற்சியில் சரியாக வராது.
முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிகள். அல்லது கஜினி முகமது இப்படி யாரையாவது ரோல் மாடலாக நினைத்துக் கொண்டே, சப்பாத்தியை ஏதாவது ஒரு ஷேப்பில் தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு, 1/4 கப் நெய் ஊத்தவும். நெய் ஊத்துவதில் கருமித்தனம் பண்ணக் கூடாது. திருப்பி விட்டு, மீண்டும் ஒரு 1/4 கப் நெய் விடவும்.

இந்த வேலைகள் எல்லாம் முடிந்ததும் காய் கறிகளை அழகா டெக்கரேட் பண்ணி, வீட்டில் யாராவது விழித்திருந்தால் அவர்களுக்கு குடுத்து சாப்பிடவும்.
இந்த ரெசிப்பியை செய்து போட்டு, கண்டிப்பா பின்னூட்டம் குடுக்கோணும். சரியா மக்கள்ஸ்...

44 comments:

  1. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

    வளர்க பதிவுகள்:)

    ReplyDelete
  2. //இந்த வேலைகள் எல்லாம் முடிந்ததும் காய் கறிகளை அழகா டெக்கரேட் பண்ணி, வீட்டில் யாராவது விழித்திருந்தால் அவர்களுக்கு குடுத்து சாப்பிடவும்.
    இந்த ரெசிப்பியை செய்து போட்டு, கண்டிப்பா பின்னூட்டம் குடுக்கோணும். சரியா மக்கள்ஸ்// எனக்கு வேண்டாம் இடிச்சவங்களுக்கு கொடுங்கோ தெம்பா இருக்கட்டும்:)

    ReplyDelete
  3. 100க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. 100க்கு வாழ்த்துக்கள்..

    வாழ்க வளமுடன்,,

    ReplyDelete
  5. congrats on your 100th post!
    corn parotta looks(!!) wonderful vanathy! naan kandippa seyyamaattennu ippave sollikkaren.hihihi!

    ReplyDelete
  6. நூறுக்கு வாழ்த்துக்கள் வாணி . சப்பாத்தி அருமை

    ReplyDelete
  7. 100 க்கு வாழ்த்துக்கள் வானதி.நான் கண்டிப்பாய் செய்து போட்டோ போட முயற்சி செய்வேன்.ஏன்னால் ஒரு ரெசிப்பியில் இருந்து இன்னொரு ரெசிப்பி பிறக்கும்.

    ReplyDelete
  8. 100வது பதிவுக்கு வாழ்த்துகள்...உங்கள் பதிவுகள் அனைத்தும் புதுமை...அருமை...சாப்பத்தி ரொம்ப டூம் வானதி...நானும் எதோ புது ரெசிப்பி என்று ஆர்வமாக படித்தேன்...உண்மையில் புதுமையான ரெசிப்பி தான்...ஆனால் நெய் தான் இடுக்குது...

    ReplyDelete
  9. 100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

    கடைசியில இருக்கும் எல்போர்ட் பீ சீரியஸ் போட்டோ சூப்பர்

    ReplyDelete
  10. வாவ்.. 100 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள் வாணி.. :-)))

    அட அட... என்னமா பின்றீங்க..
    சூப்பர்.... ரெசிபி...

    அதுவும் நல்ல டயட் சப்பாத்தி மாதிரி வேற இருக்கு... கண்டிப்பா செய்துரனும் போல் இருக்கே??

    ReplyDelete
  11. ஆ.. இப்போ சிரிக்க எனக்கு தெம்பு இல்ல.. ஏற்கனவே ஆன்ரியோட உலகத்துல ரொம்ப நேரமா சிரிச்சிட்டு இருக்கேன்.. பொறுமையா வந்து படிக்கறேன்.. சிரிக்கறேன்.. ஓக்கை..

    //கடைசியில இருக்கும் எல்போர்ட் பீ சீரியஸ் போட்டோ சூப்பர்//

    நான் இத விட கோரமா இருப்பேனுங்க :))))))))))

    ReplyDelete
  12. 100க்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. 100 வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  14. நூறுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. 100க்கு வாழ்த்துக்க‌ள். தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌.... உங்க வீட்ல‌ செய்து சாப்பிட்ட‌வ‌ங்க‌ ந‌ல்லா இருக்காங்க‌ளா?...:))))))))))))

    ReplyDelete
  16. வாஆஆஆஆஆணி.... 100 ஆவது பதிவோ?

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. இந்த ரெசிப்பியை செய்து போட்டு, கண்டிப்பா பின்னூட்டம் குடுக்கோணும். சரியா மக்கள்ஸ்/// இன்னும் சோளன் இடித்து முடியேல்லையே..... எத்தனைதரம் இடிக்கோணும் வாணீஈஈஈ?

    ReplyDelete
  18. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வானதி!

    எனக்கு சப்பாத்தி புடிக்காது. பூஸுக்கு சப்பாத்தியில் பால் ஊற்றிக் கொடுத்தால் ரொம்ப புடிக்குமாம். அதனால் செய்த எல்லாவற்றையும் பூஸுக்கு பார்சல் அனுப்பியாச்சு :-)

    ஓஹ் அது சந்துவோட ஃபோட்டோவா. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் :-)

    ReplyDelete
  19. 100க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. முதல்ல 100க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஹலோ வான்ஸ் இது செல்லாது .சோளத்தில செஞ்சா அது சோளமாவுன்னுதான் சொல்வாங்க ..ஐ...இது அழுகுணி ஆட்டம் ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  22. ///எனக்கு வேண்டாம் இடிச்சவங்களுக்கு கொடுங்கோ தெம்பா இருக்கட்டும்:) //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  23. 100க்கு வாழ்த்துக்கள். சப்பாத்தி.........தி?????????

    ReplyDelete
  24. //நான் சொல்லும் போதே...
    கைகள் பரபரக்குமே. //

    ஆமா, Siss நூறு என்ன
    ஆயிரம் பதினாயிரம் லட்சம்
    என்றெழுத உங்கள் கைகள் பரபரக்க,,

    வளமுடனும்...
    நலமுடனும்
    சீருடனும்
    சிறப்புடனும்

    அவைகளெல்லாம்
    ஒன்று சேர்ந்த
    பதிவுடனும்

    வாணி
    வாழ
    வாழ்த்துகிறோம்

    (அந்த 100-ஐ இன்னும்
    கொஞ்சம் "ரிச்சா"
    எதிர் பார்க்கிறோம்)

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள். இப்ப தான் தொடங்கினது போல் இருந்தது அதற்க்கும் சதம் அடிச்சிங்க. குட் வானதி.
    மேலும் மேலும் நிறய்ய சதங்கள் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. வானதி என்ன இப்ப எல்லாம் க்ராப்ட்ஸ் வரவே இல்லை மறந்துட்டிங்களா? ஏதாவது சுலபமா ஒரு க்ராப்ட்ஸ் போடுங்களேன். நீண்ட நாட்களாகிட்டது.

    ReplyDelete
  27. 100க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. 100க்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!

    ReplyDelete
  29. 100 வது பதிவுக்கு முதல் வாழ்த்துக்கள்... வாவ்..

    ReplyDelete
  30. //தங்கமணி மைதா மா அல்லது வேறு எந்த மா வகைகளும் பாவிக்காமல் சப்பாத்தி செய்ய சொல்லி எனக்கு உத்தரவிட்டுள்ளார்//
    மேடம்.. ரெண்டு mistake இந்த statement ல.... ஒண்ணு நான் செய்ய சொன்னது பரோட்டா சப்பாத்தி இல்ல... அப்புறம் நான் அப்பாவி தங்கமணியாக்கும் இப்படி சும்மா தங்கமணினு போட்டு என்னை பீல் பண்ணு வெச்சுட்டீங்களே...ஹும்... இருங்க உங்கள இன்னும் ரெண்டு தொடர் பதிவுக்கு கூப்பிடறேன்...

    //நம்ம ஜெய் மாதிரி என்னையே திரும்ப கேள்வி கேட்டபடி. தெரிலைன்னா தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே. என்ன அப்படி ஒரு மானப்பிரச்சினை??!!//
    சந்தடி சாக்குல ஜெய்க்கு ஒரு சூப்பர் ஆப்பு... ஹா ஹா ஹா... எப்படி இந்த திறமை எல்லாம்? கோச்சிங் க்ளாஸ் எதுனா நடத்தினா சொல்லுங்க... நான் மொதல் ஆளா join பண்ணிக்கறேன்... ஹா ஹா ஹா

    //சரி நானே ஒரு ரெசிப்பி கண்டு பிடிக்கலாம். அதை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தலாம் என்று ஐடியா உருவானது//
    விதி எங்கள விடுமா... ஹும்

    தேவையான பொருட்கள் சூப்பர் வாணி... (எப்பா...இந்த அக்கா சுத்தி எல்லாம் வெச்சு இருக்கு... கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம்...)

    //அகன்ற பாத்திரத்தில் ( அண்டா ) போட்டு//
    அண்டாவுக்கு எங்க போறது... ஓ.. ஜெய்லானி கிட்ட சுடுதண்ணி அண்டா இருக்குமல்ல... வாங்கிப்போம்...

    //நான் சொல்லும் போதே செய்து பார்த்திட வேணும் போல கைகள் பரபரக்குமே//
    ஹும்... இது வேறயா... ஏனுங்க....

    //சூடான தோசைக் கல்லில் போட்டு, 1/4 கப் நெய் ஊத்தவும்//
    அட ஈஸ்வரா... ஒரே நாளுல பரலோகம் போறதுக்கு இந்த அம்மா ஐடியா சொல்லுது போல இருக்கே...

    //இந்த ரெசிப்பியை செய்து போட்டு, கண்டிப்பா பின்னூட்டம் குடுக்கோணும். சரியா மக்கள்ஸ்//
    செஞ்சுட்டு அப்புறம் எங்க பின்னூட்டம்... நேரா பரலோகம் தான்.. மீ எஸ்கேப்

    ஹா ஹா ஹா....ஜோக்ஸ் அபார்ட்.. நான் குதுத மொக்கை டாபிக் கூட கலக்கலா சிரிக்க வெச்சு எழுதினதுக்கு நன்றி வாணி... சூப்பர் சூப்பர் சூப்பர்...

    ReplyDelete
  31. நுறாவது பதிவு ஒரு ஸ்வீட் ரெசிபி எதுனா போட்டிருக்கலாமே வானதி
    ஓகே இதுவே ஸ்வீட் ஆ தான் இருக்கு



    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வானதி

    ReplyDelete
  32. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    ReplyDelete
  33. ஹாஹ்ஹா.. நல்ல கற்பனை.. ஆனா ஒன்னு - அவங்க பரோட்டா இல்ல கேட்டிருந்தாங்க.. சப்பாத்தி எப்படி பரோட்டாவாச்சு? விட்றாதீங்க தங்க்ஸ்....

    வாழ்த்துக்கள் வானதி.. தொடருங்க.. இன்னும் எதிர்பார்க்கிறோம்.. (பரோட்டாவச் சொல்லல :)) )

    ReplyDelete
  34. http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
    விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைkkkkகிறேன்.

    ReplyDelete
  35. உங்களின் நூறாவது பதிவுக்கு என்னுடைய முதல் வாழ்த்து ;

    சமையல் குறிப்புகளை சுவையாக எழுதவும் முடியும் என்று அழகாக சொல்லி இருக்குறீர்கள் வானதி .

    ReplyDelete
  36. ஹைஷ் அண்ணா , மிக்க நன்றி.
    நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன்.

    கலாநேசன், மிக்க நன்றி.

    வெறும்பய, உங்கள் பெயர் சூப்பரோ சூப்பர்.
    மிக்க நன்றி.

    மகி, செய்து பார்க்காவிட்டால் பரவாயில்லை. நல்ல ஒரு ரெசிப்பியை மிஸ் பண்ணப் போறீங்க.
    மிக்க நன்றி.

    எல்கே, மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, செய்து பாருங்க. நல்லா வந்தா போட்டோ போடுங்க.
    அதைப் பார்த்தாச்சும் மகி செய்வாங்கன்னு நினைக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  37. கீதா, நெய்..ம்ம் ரொம்ப அதிகமோ? மைசூர் பாகு போல நினைச்சுக்க வேண்டியது தான்.
    மிக்க நன்றி.

    வசந்த், மிக்க நன்றி.
    அவங்களை நினைச்சு தான் செஞ்சது. கரீட்டா கண்டு பிடிச்சிட்டீங்க.

    ஆனந்தி, டயட் சப்பாத்தியா?? அப்படி கூட சொல்லலாம். என்ன இதை சாப்பிட்டுட்டு ஓடிங் ( நன்றி: ஜெய் ) போனால் சரியா இருக்கும்.
    மிக்க நன்றி.

    சந்து, இருந்தாலும் இவ்வளவு பெருந்தன்னை/தன்னடக்கம் கூடாது.
    மிக்க நன்றி.
    கண்ணன், மிக்க நன்றி.

    சௌந்தர், மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    புவனேஸ்வரி, மிக்க நன்றி.

    ReplyDelete
  38. நாடோடி, மிக்க நன்றி.
    எங்காத்துக்காரர் ரொம்ப உஷார் பேர்வழி.

    அதீஸ், 100வது தான்.
    எத்தனை தரம் இடிக்கோணும்???? யாரை இடிக்கப் போறீங்க? இவ்வளவு கோபம் கூடாது அதீஸ்.

    கவிசிவா, பூஸாருக்கு மிளாகாய் ஒரு 100வது சேர்க்கோணும்.
    அப்ப தான் சாப்பிடும்.
    மிக்க நன்றி.

    தமிழ் உதயம், மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.
    முதலில் நான் மா என்று எங்கும் குறிப்பிடவில்லை. இது சோளக் கூழ் என்று எடுத்துக் கொள்ளணும்.

    ReplyDelete
  39. குமார், மிக்க நன்றி.
    ஏன் இந்த இழுவை இழுக்கிறீங்க??? இது சப்பாத்தியே தான்.

    விஜி, மிக்க நன்றி.
    க்ராப்ட் - மகன் ஸ்கூஸ் தொடங்கிய பிறகு தான் நேரம் வரும்.
    கட்டாயம் கொடுக்கிறேன்.

    மேனகா, மிக்க நன்றி.
    தெய்வ சுகந்தி, மிக்க நன்றி.

    தங்ஸ், சப்பாத்தி, பரோட்டா, தோசை எல்லாம் ஒண்ணுதான் ( அப்பாடா சமாளித்தாயிற்று ). செய்முறை பொதுவாக ஒண்ணுதானே. அவரவர் வசதிக்கேற்ப ரெசிப்பியை மாற்றிக் கொள்ளலாம்.

    இதெல்லாம் இயற்கை கொடுத்த வரம். கோச்சிங் - பணம் வாங்கி கலையை விற்பதில்லைன்னு ஒரு குறிக்கோள் இருக்கு.

    பரலோகமெல்லாம் போக வேணாம் இதை சாப்பிட்டுட்டு ஒரு 4 மைல் நடந்தா போதும்.
    மிக்க நன்றி.

    சரவணன், இனிப்பு ரெசிப்பியா? சீனி சேருங்கள்.
    மிக்க நன்றி.

    சந்தூஊஊஉ, மேலே நம்ம தங்ஸூக்கு விளக்கம் குடுத்தாச்சு. அவங்களே என் பாயின்ட் சரின்னு ஒத்துக்கிட்டாங்க.
    நீங்க இடையில் குழப்ப வேண்டாம்.
    மிக்க நன்றி.

    மிக்க நன்றி.
    கட்டாயம் வருகிறேன் விருது வாங்க. இன்னொரு விருதும் பென்டிங்கில் இருக்கு அதையும் போய் வாங்கணும்.

    ப்ரியா, மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  40. நூறாவதற்கு வாழ்த்துக்கள் வாணி.

    இந்த ரெசிபி செய்தால்... இருநூறாவதுக்கு இருப்பமோ!! ;))

    ReplyDelete
  41. வாழ்த்துகள்வாணி. "வாழ்க வளமுடன்"

    ReplyDelete
  42. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!