Thursday, July 29, 2010

சமையல் போட்டி

வாணி : சமையல் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வந்தனங்கள். சமையல் போட்டியில் பங்கேற்கப் போறவங்களை அறிமுகப்படுத்தப் போறேன்.

இதோ, முதலாவதாக வருபவர் திருமதி. அதிரா.

அதிரா, வாங்கோ. நல்வரவு.
இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? இந்த மூட்டையில் என்ன இருக்கு?
அதிரா : நன்றி. இது மிளகாய்த்தூள்.

வாணி : கடவுளே! ஏன் அதீஸ் ? ஒரு 4 டேபிள்ஸ்பூன் பத்தாதா?
அதிரா : 4 மேசைக்கரண்டியா? எந்த மூலைக்கு ???
வாணி : சரி. இந்த மூட்டையை தூக்கிக் கொண்டு அப்படி ஓரமா போய் நில்லுங்கோ.

வாணி : இரண்டாவது போட்டியாளர் திரு. ஜெய்லானி.
ஜெய், வாங்கோ. நல்வரவு. என்ன இது ஒரு அண்டா மட்டும் கொண்டு வறீங்க?
ஜெய் : ஏன் அண்டா கொண்டு வரப்படாதா?
வாணி : சரி. இந்த அண்டாவையும் கொண்டு போய் அதிராவின் பக்கத்தில் அமருங்க.

வாணி : மூன்றாவதாக வருபவர் திருமதி. இமா கிறிஸ். நல்வரவு. அது சரி. இவர் யார்?
இமா : இவர் கிறிஸ்.
வாணி : இமா, போட்டி விதிமுறைகள் தெரியுமல்லவா? ஒருவருக்குத் தான் அனுமதி. உதவியாளரை அனுமதிக்க மாட்டோம்.
இமா: நான் விண்ணப்ப படிவத்தில் இமா கிறிஸ் என்று இவர் பெயரையும் சேர்த்து அல்லவா போட்டேன்.
வாணி : கடவுளே! கிறிஸ் அண்ணாச்சி, நீங்கள் போய் அப்படி பார்வையாளர்களுடன் இருந்து உங்கள் மனைவிக்கு கை தட்டுங்கோ.
இமா, நீங்கள் போய் ஜெய் பக்கத்தில் இருங்கோ.

இமா: ( மனதினுள் ) எங்களைப் பிரிச்சு... இது பெரிய சதி வேலையாக் கிடக்கு.

வாணி : அடுத்து வருபவர் இட்லி மாமி.
வாங்க! நலமா. அப்படி போய் உட்காருங்கள்.

இதோ! அடுத்து வருபவர் திவ்யாம்மா. நல்வரவு.

இட்லிமாமி : ( மைன்ட் வாய்ஸ் ) இது என்ன கூத்து ? திவ்யாம்மா என்றால் பெண் அல்லவா? எப்படி எல்கே பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.
( சத்தமாக ) ஏன்பா அறிவிப்பாளர், இது என்ன அக்கிரமம்? இதெல்லாம் கண்டிக்கவே மாட்டீங்களா?
எல்கே : நான் தான் அப்படி என் பெயரை பதிவு செய்தேன்.
இட்லிமாமி : பெயரை மாத்தினா மட்டும் சமையல் செஞ்சு கிழிச்சிடுவியாக்கும் ஹாஹா..

எல்கே : உன் இட்லியை விட நான் நல்லாவே சாதம் வடிப்பேன்.
இ. மாமி : ம்ம்.. பார்க்கலாம்.

வாணி : அடுத்து வருபவர் மகி. வணக்கம். இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? உங்கள் பின்னாடி மறைஞ்சு நிற்பது யாரு?

மகி : வணக்கம். அது வந்து.... தண்ணி

வாணி : ஏம்பா நாங்கள் தண்ணீர் கொடுப்போம் என்று விண்ணப்படிவத்தில் இருந்திச்சு அல்லவா? இவங்க பெயர் என்ன?
மகி : ஹிஹி.. சந்தனா. நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை. இப்ப நல்லா உனக்கு வேணும், தண்ணி.
தண்ணி : ஏதோ நம்ம அண்ணி புண்ணியத்திலை சமையல் கற்றுக் கொள்ளலாம் என்றால் விடமாட்டார்கள் போல இருக்கே. நான் எப்ப கேக், பன் எல்லாம் செய்யப் பழகுவது...சரி வரட்டா.

வாணி: இப்ப போட்டி விதிமுறைகளை நான் மீண்டும் சொல்றேன்.
போட்டி சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகும். 3 மணி நேரம் டைம் தருவோம். ஒரு மெயின் டிஷ், பக்க உணவு, ஒரு டிசர்ட் செய்து அழகா அலங்கரித்து வைக்கணும். சுவை, அலங்கரிப்பு, நேரம் இப்படி எல்லாமே கவனிக்கப்படும். போட்டி நடைபெறும்போது யாரும் பெருஞ்சீரகம், பெருங்காயம் கடன் வாங்கப் போறேன்னு கிளம்பிடக்கூடாது. இடையில் பேசுவதோ, மற்றவரைக் காப்பி பண்ணுவதோ கூடாது.


ஜெய் : அப்ப கடுகு வாங்கலாமா?
அதிரா : கர்ர்... ஜெய், நீங்கள் என்னிடம் மிளகாய் பொடி வாங்கலாம் என்று கனவு கூட காண வேண்டாம்.
ஜெய் : அது சரி. இங்கு என்ன போட்டி நடக்குது?
அதிரா : சரியாப் போச்சு. இது சமையல் போட்டி.
ஜெய் : இது என்ன அக்கிரமம்? நான் என் பெயர் குடுக்கவே இல்லையே....

வாணி: அங்கு என்ன அரட்டை? போட்டி ஆரம்பமாகப் போகுது எல்லாரும் உங்கள் இடங்களுக்குப் போய் ரெடியாக நில்லுங்கோ.


ஜெய் : ( மனதினுள் ) 3 மணி நேரமெல்லாம் ரொம்ப ஓவர். எனக்கு ஒரு அரை மனி நேரம் போதும். நான் சொல்லி யார் கேட்பா. இந்த அண்டாவில் தண்ணியை நிரப்பி வைச்சா முடிஞ்சுது வேலை.
அதிரா : ( மனதினுள் ) டிசர்ட்டும் செய்யணுமாமே. எனக்கு இனிப்பு பிடிக்காது என்று எத்தனை முறை சொல்வது. மிளகாய்த்தூள் போட்டு கேக் செய்து, மேலே மிளகாய் பொடி ஐஸிங். சூப்பர் ஐடியா!!

இமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.

எல்கே : ( மனதினுள் ) அடச்சே! ஒரு ஐடியாவும் தோணமாட்டுதாம். பேசாம தயிர் சாதம், அப்பளம், இனிப்பு தயிர் சாதம் டிசர்ட். ஆகா! சூப்பரா ! இந்த இட்லி மாமி என்ன பண்றா? அதுக்கு இட்லியை விட்டா வேறு கதி. பாவம்.

3மணி நேரம் கடந்த பின்னர்.
வாணி : எல்லோரும் நீங்கள் சமைச்சதை டேபிளில் அழகா பிரசன்ட் பண்ணுங்கோ. இந்த முறை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒருவரை தீர்ப்பு சொல்ல தெரிவு செய்து இருக்கிறார்கள்.

இப்ப உங்கள் நடுவர் மேடைக்கு வந்து, தன்னை தானே அறிமுகம் செய்து கொள்வார்கள்.

நாட்டாமை : என் பெயர் ஆஹா பக்கங்கள்! அப்துல் காதர். எதைச் சொல்ல? எதை விட? நான் பாட்டுக்கு ( சிவெனேன்னு ) ஒருவரை தேடி இந்தப் பக்கம் வந்தேன். கூப்பிட்டு நாட்டாமை பதவி குடுத்து, கொடுமையா....

வாணி : சிறப்பான அறிமுகம். நன்றி.
முதலில் அதிராவின் சாப்பாட்டினை ருசி பார்ப்போமா.
நாட்டாமை : என்ன கலர் இது? எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ?. மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.
அதிரா : முழுவதும் உங்களுக்கே.
நாட்டாமை : கடவுளே! இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....

தொடரும்...
( தொடரும் என்று போட்டிருப்பதால் மீதி வரும் பிறகு படிக்கலாம்ன்னு பகல் கனவு காணப்படாது. இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன். ஜெய்லானி, உங்களுக்கு நேரமில்லை, நேரமிருக்கு என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் எழுதணும். அப்படி முடியாத பட்சத்தில் இன்னொருவரை நோக்கி கையை காட்டணும். உங்களுக்கு ஒரு வாரமே அவகாசம். )

48 comments:

 1. //நாட்டாமை : கடவுளே! இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....//


  நடுவர் மயக்கம் போட்ட பின்னாடி....வேற என்ன ஆகும்....?! இதில தொடரும் வேறையா.... ம்.....நல்ல கற்பனை வாணி.... சூப்பர் கலக்குங்க....

  ReplyDelete
 2. என்னது மிளகாய்பொடி கேக்கா......

  ReplyDelete
 3. வானதி அருமை,தொடருங்க.இட்லிமாமி,எல்.கே காமெடி சூப்பர்.

  ReplyDelete
 4. @வாணி
  என்ன இது ??? என்ன விளையாட்டு ???

  @ஆசியா
  அக்கா நீங்களுமா சரி இல்ல :(((

  ReplyDelete
 5. மிகவும் அருமையாக எழுதி இருக்கின்றிங்க...பல இடங்களில் சிரித்து விட்டேன்...நன்றாக இருந்தது நன்றி...

  ReplyDelete
 6. நல்ல கற்பனை வானதி,
  அருமை...

  ReplyDelete
 7. இருங்கோ சிரிச்சு முடிச்சுட்டு மீதி எழுதுகிறேன்:))))))

  ReplyDelete
 8. சூப்பர் கற்பனை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்காமல் படிக்க முடியவில்லை. காப்பி எடுத்து வைத்து இருக்கிறேன், வேண்டும் போது சிரிக்கதான்.

  பி.கு:ஒரு சேப்டிக்காக யாராவது முதல் சமையல் செய்தவரின் படைப்புகளை சோதித்த பிறகு பதிவு போட வேண்டும் என காத்திருந்தேன். இந்த வடை/ஆயா எல்லாம் போகட்டுமே என:)))

  ReplyDelete
 9. மிகவும் ரசித்தவைகள்:

  //அதிரா : 4 மேசைக்கரண்டியா? எந்த மூலைக்கு ???
  வாணி : சரி. இந்த மூட்டையை தூக்கிக் கொண்டு அப்படி ஓரமா போய் நில்லுங்கோ.// பூஸு ரியாக்‌ஷை நினைத்து:)))

  //வாணி : மூன்றாவதாக வருபவர் திருமதி. இமா கிறிஸ். நல்வரவு. அது சரி. இவர் யார்?
  இமா : இவர் கிறிஸ்.
  வாணி : இமா, போட்டி விதிமுறைகள் தெரியுமல்லவா? ஒருவருக்குத் தான் அனுமதி. உதவியாளரை அனுமதிக்க மாட்டோம்.
  இமா: நான் விண்ணப்ப படிவத்தில் இமா கிறிஸ் என்று இவர் பெயரையும் சேர்த்து அல்லவா போட்டேன்.
  வாணி : கடவுளே! கிறிஸ் அண்ணாச்சி, நீங்கள் போய் அப்படி பார்வையாளர்களுடன் இருந்து உங்கள் மனைவிக்கு கை தட்டுங்கோ.
  இமா, நீங்கள் போய் ஜெய் பக்கத்தில் இருங்கோ.
  //இமா: ( மனதினுள் ) எங்களைப் பிரிச்சு... இது பெரிய சதி வேலையாக் கிடக்கு.//

  //எல்கே : நான் தான் அப்படி என் பெயரை பதிவு செய்தேன்.
  இட்லிமாமி : பெயரை மாத்தினா மட்டும் சமையல் செஞ்சு கிழிச்சிடுவியாக்கும் ஹாஹா..
  எல்கே : உன் இட்லியை விட நான் நல்லாவே சாதம் வடிப்பேன்.
  இ. மாமி : ம்ம்.. பார்க்கலாம். //

  //வாணி : அடுத்து வருபவர் மகி. வணக்கம். இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? உங்கள் பின்னாடி மறைஞ்சு நிற்பது யாரு?

  மகி : வணக்கம். அது வந்து.... தண்ணி

  வாணி : ஏம்பா நாங்கள் தண்ணீர் கொடுப்போம் என்று விண்ணப்படிவத்தில் இருந்திச்சு அல்லவா? இவங்க பெயர் என்ன?
  மகி : ஹிஹி.. சந்தனா. நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை. இப்ப நல்லா உனக்கு வேணும், தண்ணி.//

  //
  ஜெய் : ஏன் அண்டா கொண்டு வரப்படாதா?
  ஜெய் : அப்ப கடுகு வாங்கலாமா?
  அதிரா : கர்ர்... ஜெய், நீங்கள் என்னிடம் மிளகாய் பொடி வாங்கலாம் என்று கனவு கூட காண வேண்டாம்.
  ஜெய் : அது சரி. இங்கு என்ன போட்டி நடக்குது?
  அதிரா : சரியாப் போச்சு. இது சமையல் போட்டி.
  ஜெய் : இது என்ன அக்கிரமம்? நான் என் பெயர் குடுக்கவே இல்லையே....

  வாணி: அங்கு என்ன அரட்டை? போட்டி ஆரம்பமாகப் போகுது எல்லாரும் உங்கள் இடங்களுக்குப் போய் ரெடியாக நில்லுங்கோ.
  //

  //
  அதிரா : ( மனதினுள் ) டிசர்ட்டும் செய்யணுமாமே. எனக்கு இனிப்பு பிடிக்காது என்று எத்தனை முறை சொல்வது. மிளகாய்த்தூள் போட்டு கேக் செய்து, மேலே மிளகாய் பொடி ஐஸிங். சூப்பர் ஐடியா!!

  இமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.
  //
  ***அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு :))))

  //மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.
  அதிரா : முழுவதும் உங்களுக்கே.
  நாட்டாமை : கடவுளே! இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....//


  வாழ்க வளமுடன் உங்களின் கற்பனைத்திறன்:)

  ReplyDelete
 10. ஆரம்பத்திலேர்ந்தே சிரிச்சுட்டுத் தான் இருந்தேன்.. இருந்தாலும், அதிகமா சிரிச்சது - அந்த மிளகாய் கேக் வித் மிளகாய்ப் பொடி ஐஸிங்.. அதுவும் - இந்தாங்க முழுசுமே உங்களுக்குத் தான்.. ஹாஹ்ஹா.. இருங்க இருங்க அதிரா வந்துட்டே இருக்காங்க :))

  வான்ஸ்... மற்ற கெட்டுகெதர்கள விட இதான் டாப்.. ரொம்ப ரசிச்சேன்.. வெரி வெரி குட்..

  மஹி இருந்துட்டுப் போறாங்க போட்டியில.. நான் விலகிக்கறேன்.. :)

  என்ன போட்டின்னே தெரியாம அண்டாவத் தூக்கியாந்த ஜெய்லானி அண்ணாத்த தான் இதய தொடரப் போறாங்களா? கலக்குங்க (அண்டாவுல தான்).. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. ரொம்ப எதிர்பார்க்கறேன்.. நல்லா சிரிக்க வைக்கோனும்.. ஓக்கை?

  ReplyDelete
 11. கிக்க் கிக் கேக். ;))

  கடவுளே!! இது என்ன பெரிய சதி வேலையாக் கிடக்கு. டிஷ் கழுவுறதுக்குக் கூட அசிஸ்டன்ட் கூட்டிக் கொண்டு வரப்படாதோ!!

  ReplyDelete
 12. நல்ல காமெடி நம்ம lk சேர்த்து கொண்டதற்கு நன்றி ஹா ஹா ஹா ஜெய்லானிக்கு தொடரவேண்டும் என்று மிரட்டல்..... அது சரி

  ReplyDelete
 13. அடப்பாவிங்களா முதல் பலியே நாந்தானா...அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 14. ஒட்டு போட்டுட்டேன்!
  இருங்க இன்னும் மயக்கம் தெளியல வாணி,,
  அப்புறமா வந்து விளக்கமா வச்சுக்கிறேன்.

  அப்பா... மிளகாயில ஏதும் லாகிரி வஸ்து கலந்திருக்கோ,, போதையா வேற வருதே.. அவ்வவ்வ்வ்வ்!!

  வாணி இவ்வளவு தானா இன்னுமிருக்கா.
  இப்பவே கண்ணா கட்டுதே!!

  தல ஜெய்லானி வர்றவரைக்கும் (பம்மி பம்மி) எஸ்கேப் ஆயிடுறேன்..

  இப்ப தப்பிசாச்சு... இனி (அம்மாடியோவ்)

  ReplyDelete
 15. வாஆஆஆஆனீஈஈஈஈ வாஆஆஆஆஆணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ, இத் தலைப்பு என் கண்ணில் படவில்லையே அதெப்படி? இன்றொருவர் சுட்டிக்காட்டிய பின்பே கவனித்து ஓடிவந்தேன், நான் கொஞ்சம் பிசியாக இருந்திட்டேன்.

  கொஞ்சம் பொறுங்கோ, படிச்சுச் சிரிச்சிட்டு வாறேன்:)).

  ReplyDelete
 16. அதிரா, வாங்கோ. நல்வரவு.
  இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? இந்த மூட்டையில் என்ன இருக்கு?
  //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாகரீகம் மலையேறிவிட்ட பின்பும், மூட்டையிலதான் மிளகாய்த்தூளோ?:)))ஆச்சூஊம்... அப்பவே சொன்னனான் “ரங்ஸ்” சீ..சீ ரங்குப்பெட்டியில் கொண்டு போனால் நல்லதென, ஜெய் தான் சொன்னார் வாணாம்... சமையல் சாமான் என்றால் மூட்டையாகத் தான் கொண்டுபோகோணும், அப்பத்தான், பக்கத்திலிருக்கும்... வான்ஸ், இம்ஸ், சந்தூஸ் அல்லோரையும் வள வளவென அரட்டையடிக்க விடாமல் ஆச்சூஊஊஉம் சொல்ல வைத்து வாயை அடைக்கலாம் என்று:). அப்படியிருந்தும் வள வளப்புக் குறையவில்லையே:)))).

  ReplyDelete
 17. நல்ல கற்பனை வானதி! பூஸ் எங்க போனாலும் எதாச்சும் லொள்ளு பண்ணிக்கிட்டே இருக்குதே!

  ReplyDelete
 18. ஏங்க நாட்டமை அந்தஸ்து கொடுத்தீங்க சரி.. ரொம்ப தேங்க்ஸ்..அது என்ன நாட்டாமை. ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இது மாதிரி தந்தா கொறஞ்சா போய்டும். விடுங்க அடுத்த தடவ பாத்துக்கலாம்.

  ஆஆமாஆ.. நா காமன்ட்ஸ்ல போட்டிருக்கிறேனே "எப்படி அடிச்சாலும் இந்த ஆமை தாங்கும்"னு, அத நெனெச்சு இந்த நாட்டாமை பதவிய கொடுத்திட கிடுத்திடலையே

  (அதானே பார்த்தேன்)....ஹி.. ஹி..

  ReplyDelete
 19. //இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன். ஜெய்லானி, உங்களுக்கு நேரமில்லை, அப்படி முடியாத பட்சத்தில் இன்னொருவரை நோக்கி கையை காட்டணும். //

  இதென்னங்க அநியாயம். பதினெட்டு பட்டிக்கும் நாட்டமை சொல்றது தான் தீர்ப்பு. என்ன நாட்டமையா போட்டுட்டு ஜெய்லானி தீர்ப்பு சொல்லனுமா?? அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா?? 1 2 3 4 5 6 7 8 9 10 மச்சுங்க.. ஹி ஹி

  ReplyDelete
 20. நானும் போட்டியில கலந்துக்கலாமா

  ReplyDelete
 21. முதலில் அதிராவின் சாப்பாட்டினை ருசி பார்ப்போமா.
  நாட்டாமை : என்ன கலர் இது? எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ?. மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.
  அதிரா : முழுவதும் உங்களுக்கே.
  நாட்டாமை : கடவுளே! இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....
  /////////// வாணி...வாஆஆஆணீஈஈ உடனடியாக நாட்டாமையை மாத்திடுங்க.... என் கேக்குக்கு களங்கம் வந்திடப்போகுதூஊஊ, இனிமேல் ஆர் வாங்குவினம் என் கேக்கை.... இதுக்குத்தான் சொல்றது நடுவரைத் தெரிவு செய்யுமுன் ஊதச் சொல்லி(போலிசில் செய்வார்களே:)) செக் பண்ணோணும்.... இது கேக் சாப்பிட்ட மயக்கமல்ல...:).

  //இமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.
  ////
  அப்போ இம்முறையும் இமா சமைக்காமலே... டிமிக்கி காட்டிற்றாவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

  ReplyDelete
 22. இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன்//// கிக்..கிக்...கீஈஈஈஈ ஹக்...ஹக்..ஹா.... இது சந்தோசச் சிரிப்பூஊஊஊஊ:), மாவீரர் ஜெய்.... வாழ்க... தொடர்க....

  வாணி.... ிம்முறை சந்துவை விட்டிட்டீங்களே:(((, மாட்டிவிட்டிருக்கலாமெல்லோ....

  முக்கிய குறிப்பு:):
  அதிகம் சிரிச்சுட்டேன் என...... என்னை நோக்கி தொடரும்படி ஆரும் கையைக் காட்டிடப்பூடாது.... ரண்டு கால் ஆட்களால மட்டும்தேன் சமைக்க முடியும்.... சொல்லிட்டேன் ஆமா..:)).

  ReplyDelete
 23. ஹைஷ்126 said...
  சூப்பர் கற்பனை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்காமல் படிக்க முடியவில்லை. [[/////காப்பி எடுத்து வைத்து இருக்கிறேன், வேண்டும் போது சிரிக்கதான்.

  /////]]வாணி எனக்கொரு சந்தேகம்.... காப்பி குடிச்சால் சிரிப்பு வருமோ?:), அப்போ எனக்கும் கொஞ்சம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நான் காப்பியைச் சொன்னேன்.

  ReplyDelete
 24. எம் அப்துல் காதர் said...
  இதென்னங்க அநியாயம். பதினெட்டு பட்டிக்கும் நாட்டமை சொல்றது தான் தீர்ப்பு. என்ன நாட்டமையா போட்டுட்டு ஜெய்லானி தீர்ப்பு சொல்லனுமா?? அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா?///

  ஜெய்..லானி யூகேஜி வரைக்கும் படிச்சிருக்கிறாரே:))), அப்போ அவர் தீர்ப்பு சொல்றதுதானே ஞாயம்? எவ்ளோ பெரிய படிப்பு படிச்சிருக்கிறார்.... கவிப்பக்கத்தில அவர்தான் சொன்னார்... நான் பொய் சொல்வேனோ?... அதைவிடப் ஆரும் பெரிய படிப்பு படிச்சவை இருந்தால் அடுத்தமுறைக்கு கூப்பிடுவம்:).

  ReplyDelete
 25. இதைத்தான் ரூம் போட்டு யோசிபாய்ங்கன்னு சொல்லுவாங்களா?சூப்பர்!

  ReplyDelete
 26. சூப்பர் வாணி! கலக்கிட்டீங்க!!!!!!!!!! நல்லா சிரிச்சேன்!!

  ReplyDelete
 27. கௌஸ், நாட்டாமை மயக்கம் போட்ட பின்னாடியும் நிறைய இருக்கு, இருக்கணும்! நான் சொல்வது சரி தானே.... ஜெய்.
  மிக்க நன்றி, ஸிஸ்.

  கலாநேசன் , உங்களுக்கு தெரியாதா? அதிரா அறுசுவையில் செய்து காட்டினாங்க. அதீஸ், அந்த லிங்க் கொஞ்சம் சொல்ல முடியுமா?
  மிக்க நன்றி, கலாநேசன்.

  ஆசியா அக்கா, மிக்க நன்றி.
  ஆனா பயந்துகிட்டே தான் எழுதினேன்.

  எல்கே, நீங்கள் திட்டுறீங்களா?
  மிக்க நன்றி.

  ReplyDelete
 28. கீதா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  குமார் அண்ணாச்சி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ஹைஷ் அண்ணா, எனக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்துவிட்டீங்க. மிக்க நன்றி.
  முதலாவது வந்த கௌஸ் சிஸ்டருக்கு இந்த வடை மேட்டர் தெரியாது போல நீங்களே வடை, ஆயா, சட்னி எல்லாத்தையும் சாப்பிடலாம்.
  ரசித்தமைக்கு மிக்க நன்றிகள். ரசித்த வரிகளை சொன்ன விதம் அருமை.
  முன்பு உங்கள் பெயரையும் போடலாம் என்றிருந்தேன். ஆனா ஏதோ ஒரு தயக்கம். வயதிலை மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்று யாராவது போர்க்கொடி தூக்கினால்.
  மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 29. சந்தூ, மிக்க நன்றி.
  நம்ம ஜெய் கலக்கிடுவார். என்னை விட சூப்பரா காமெடியில் கலக்குபவர் அல்லவா? சும்மா பிச்சு உதறிடுவார் பாருங்க.
  போனால் போகுதுன்னு மகிக்கு உங்கள் இடத்தை குடுத்திட்டீங்க. நல்ல உள்ளம் வாழ்க.
  அதீஸின் ரெசிப்பி எல்லாத்திலும் காரம் தூக்கலா இருக்கும். அதான் அப்படி ஒரு கற்பனை.
  மிக்க நன்றி.

  இமா, நீங்கள் எந்த நூற்றாண்டிலை இருக்கிறீங்க. சட்டி கழுவும் மெஸின்லை போட்டு கழுவிடலாம். பாவம் அண்ணாச்சி இது ஒரு வேலை என்று கூட்டி வரப்படாது.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 30. //இமா, நீங்கள் எந்த நூற்றாண்டிலை இருக்கிறீங்க. சட்டி கழுவும் மெஸின்லை போட்டு கழுவிடலாம். பாவம் அண்ணாச்சி இது ஒரு வேலை என்று கூட்டி வரப்படாது.// :)))

  ReplyDelete
 31. சௌந்தர், மிரட்டல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு அன்பு வேண்டுகோள்.
  மிக்க நன்றி.

  ஜெய், நீங்களே தான். அழுவாமல் தைரியமாக இருக்கோணும். எங்கள் ஷார்ஜா போர்வாள் இப்படி கலங்கலாமா?
  மிக்க நன்றி.
  அப்துல் காதர், நீங்கள் ஜெய்க்கு அவ்வளவு பயமா? யாம் இருக்க பயமேன்.
  மிளகாயில் லாகிரி... அதீஸ் உண்மையே?? ஏதாவது போதை பொருள் கலப்படம்...
  மிக்க நன்றி.

  ReplyDelete
 32. அதீஸ், நான் அப்பவே சொன்னேன் ஜெய்யின் பேச்சை கேட்க வாணாம் என. யார் சொன்னா ஒரு நாய், பூனை கூட கேட்காது. நாங்கெல்லாம் யாரு??? மூக்கிலை துணியை கட்டிக் கொண்டு அரட்டையை தொடரும் ஆட்கள் அல்லவா?
  கேக்குக்கு கலங்கம் வராது. அதற்கு நான் பொறுப்பு. உங்கள் கேக் - அதற்கு ஏற்பட்ட கலங்கத்தை போக்குவதே என் அடுத்த வேலை.
  இமா சமைச்சாவா இல்லையா என்று ஜெய்யைத் தான் கேட்கோணும்.
  ஜெய், நோட் திஸ் பாயின்ட். கடவுளே! அடுத்து அதிராவா இருக்கோணும்.
  உண்மைதான். ஒரு நாளைக்கு சுமாரா ஒரு 10 காப்பி குடிச்சா, இரவு முழுக்க நித்திரை வராது. நல்லா சிரிக்கலாம். திரு. அதீஸ் இடம் திட்டு வாங்கலாம். சூப்பர் ஐடியா!!!
  இதில் கல்வி தகுதி எதுவுமே பார்த்து வழங்கப்படவில்லை. சும்மா எதேச்சையா நடந்திச்சு... நடந்து முடிஞ்சு போச்சு??
  சந்தூ பாவம்... அதான் இந்த தடவை விட்டாச்சு. ஜெய் எப்படி எழுதுறார் பார்க்கலாம் ( இதான் சொல்றது சும்மா நிற்கிறவனை சொறிஞ்சு விடுறது என்று ...)

  கவிசிவா, உண்மைதான். அதன் லொள்ளு மழையில் நனைவதே ஒரு சந்தோஷம்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 33. அப்துல்காதர், நடுவர் நீங்கள் தான். சந்தேகமே வாணாம். 10 வரைக்கும் சரியா சொல்லிட்டீங்க. கல்வி தகுதியின் அடிப்படையில் நாங்கள் யாரையும் ஒதுக்குவதில்லை.
  மிக்க நன்றி.

  சந்ரு, சமைக்க தெரிந்தால் போதும். நீங்களும் கலந்துக்கலாம்.
  மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
  தெய்வசுகந்தி, பாராட்டிற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 34. இப்போ இந்த பின்னூட்டத்தையெல்லாம் படிச்சுப்போட்டு மறுபடியும் தொடர் சிரிப்பு.. சத்தம் போட்டு.. ஹாஹ்ஹா :))

  ReplyDelete
 35. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
  வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
  உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

  ReplyDelete
 36. ந‌ல்ல‌ காமெடியா இருந்த‌து.... ஜெய்லானி இங்கேயும் சுடுத‌ண்ணிதானா?.... அப்துல் வாழ்த்துக்க‌ள் நாட்டாமையான‌த‌ற்கு....ஹா..ஹா..

  ReplyDelete
 37. நல்ல கற்பனை வானதி அடுத்து ஜெய்லானியா ஓகே ஓகே

  ReplyDelete
 38. ஹாஹ்ஹா..ஹா! நல்லா சிரிச்சேன் வானதி! உங்க காமெடி கற்பனை சூப்பர்!

  நல்லவேளை,மிளகாப்பொடி கேக்குடன் நிறுத்திட்டீங்க.அப்பாடி,தப்பிச்சேன்!;)

  ReplyDelete
 39. இருங்கோ இருங்கோ. வாறன். சிரிச்ச ஆக்களுக்கெல்லாம் இருக்கு.

  ReplyDelete
 40. மேல என்ன நடக்குது வாணி? உண்மைப் படமோ!!

  ReplyDelete
 41. வாணி தெய்வமே... சூப்பர் ரகளை...ஹா ஹா ஹா.... சிரிச்சு முடியல...என்னையும் போட்டில சேத்துகிட்டதுக்கு நன்றி

  ஆனா ஒண்ணு, பாசமலர் அண்ணன் தங்கையான என்னையும் LK வையும் (அக்கா தம்பின்னு LK சொல்ற வதந்திய நம்பாதீங்க) இப்படி சண்டை போட வெச்சுடீங்களே... ஹா ஹா ஹா... கலக்கல் வாணி... ஜெய்லானி எழுத போறதா படிக்க ஆவலா காத்துட்டு இருக்கேன்... (அவர் இனி என்னவெல்லாம் வார போறாரே தெரியல... அவ்வவ்வ்வ்வ்...)

  ReplyDelete
 42. சந்தனா, நன்றி. சிரிப்பது உடலுக்கும் மனசுக்கும் நல்லது.
  ஸ்வேதா, நன்றி.
  நாடோடி, ஜெய் சுடுதண்ணிதான்.
  மிக்க நன்றி.
  சரவணன், மிக்க நன்றி.
  ஜெய்யே தான்.
  மகி, மிக்க நன்றி.
  நீங்கள் ஏன் தப்பிச்சீங்க?? ஜெய், நோட் திஸ் பாயின்ட்யா!!!

  ReplyDelete
 43. சிரிச்ச ஆட்கள் எல்லாம் கவனமா கட்டிலுக்கு கீழே பதுங்கி இருங்கோ... எங்க இமா டீச்சர் பிரம்போடு வராங்களாம். சொல்றதை சொல்லியாச்சு.. யார் யார் தலையில் என்ன என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும்.
  இமா, இது என்ன கேள்வி. காட்டிற்குள் போய் மிருகங்களோடு மிருகமாக கிடந்து கஷ்டப்பட்டு எடுத்த படம் இது.
  மிக்க நன்றி.

  தங்ஸ், மிக்க நன்றி.
  சரிப்பா.. இனிமேல் உங்கள் தம்பியையும் ( நோட் திஸ் பாயின்ட் ) உங்களையும் சண்டை போட வைக்கலை.
  ஜெய் பதிலேதும் சொல்லாமல் நழுவினாலும் விடமாட்டோம்ல்ல.
  மிக்க நன்றி புவனா.

  ReplyDelete
 44. /காட்டிற்குள் போய் மிருகங்களோடு மிருகமாக கிடந்து கஷ்டப்பட்டு எடுத்த படம் இது./ வானதி,புழுகறதுக்கும் அளவு இருக்குங்கோ..:):) காட்டுக்குள்ளே போய் கஷ்டப்பட்டு எடுத்ததாஆஆ? கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்க பொம்மைய காமரால புடிச்சிட்டு வந்து இப்படி இமா காதுல பூ சுத்தறீங்களே?:):):)

  இமா,தனியா சமையல் போட்டில மாட்டிவிட்டு உங்க காதுல கதம்பமும் சுத்தறாங்க..ஜாக்கிரதை!

  ReplyDelete
 45. கொஞ்சம் டைம் தாங்க, எழுத ஆரம்பிச்சாசு ..வரேன்.

  ReplyDelete
 46. //எழுத ஆரம்பிச்சாசு // பிச்சுப் பிச்சு எழுதுறீங்க. ;)) தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  (ஒரு 'ச்'சைப் பிய்ச்சீங்க. நான் அடுத்ததையும் பிய்ச்சிட்டுப் 'பிசாசு' என்று வாசிச்சு வைத்தேன்.) ;)))

  ReplyDelete
 47. மகி, அட! நீங்க நம்பலையா? சரி நம்மளுக்குள்ளே இருக்கட்டும். யாருக்கும் சொல்ல வேண்டாம்.
  ஜெய், டைம் - நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ. மிக்க நன்றி.
  இமா, எனக்கு முடியை "பிச்சு"க்கலாம் போல இருக்கு. நீங்கள் ஒரு புரியாத புதிர் இம்ஸ்.

  ReplyDelete
 48. ஆஹா.. வாணி கலக்கிட்டீங்கபா.
  சிரிச்சு முடியல... :D :D
  கண்ணெதிரே எல்லாம் நடப்பது போல் இருக்கு..

  அதுவும் ஜெய்-க்கு குடுத்திருக்கும், தொடர்பதிவு..அருமை..
  அவர் அதை எழுதியும் தள்ளி விட்டார்..
  அதையும் படித்தேன்.. :D :D

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!