Wednesday, July 28, 2010

உன்னைத் தேடி...

உன்னைத் தேடி...


தேவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. இராணும் இவனுடன் மேலும் 50 பேரை கைது செய்து இருந்தார்கள்.

இரவு வந்த பின்னர் விடுதலை செய்து விடுவார்கள் என்று எல்லோரும் நம்பினார்கள்.
இரவு 8 மணி அளவில் இராணுவத்தினர் ஏதோ கூடிப் பேசினார்கள். எல்லோரையும் எழுந்து வரிசையாக பக்கத்தில் இருந்த நூல் நிலையத்தினுள் போகச் சொன்னார்கள். தேவனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. யாரும் தப்ப முடியாதபடி இராணுவம் சுற்றி நின்று கொண்டது.

உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கனவில் வந்த இடம் போல தோன்றியது தேவனுக்கு. கைகள் பின்னோக்கி கட்டப்பட்டன. எல்லோரையும் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். எங்கும் மரண ஓலங்கள் கேட்டன. தேவன் அழவில்லை. நர்மதாவின் முகம் மட்டுமே நினைவில் வந்தது. சில நிடங்களின் பின் இயந்திர துப்பாக்கிகள் சட சடத்தன.

தேவனுக்கு கனவா, நிஜமா என்று சொல்ல முடியாத ஒரு நிலை. பின் மண்டையில் ஏதோ பிசுபிசுத்தது. தான் இறக்கவில்லை என்பது மட்டுமே அவனுக்கு உறுதியாக விளங்கியது. இராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. இறந்தவன் போல ஆடாமல் அசையாமல் கிடந்தான்.

நன்கு இருட்டிய பிறகே தேவனுக்கு சுயநினைவு வந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததால் எழுந்து நிற்க சிரமமாக இருந்தது. ஊர்ந்து செல்ல எத்தனித்தான். பக்கத்தில் நகரவே முடியாதபடி பிணக்குவியல்.
அதிகாலை சூரிய ஒளி முகத்தில் விழுந்தது. இராணுவத்தின் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்த பின் மெதுவாக அமர்ந்து கொண்டான். தலை பாரமாக இருந்தது. கணவனைத் தேடி ஓடி வந்த நர்மதா இந்தக் காட்சியைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

நர்மதாவை மட்டுமல்ல வேறு யாரையுமே தேவனுக்கு இனங்காண முடியவில்லை. நர்மதா தன் சக்திக்கு மீறி தேவனுக்கு செலவு செய்து விட்டாள். ஆனால், தேவன் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சாத்தியமே இல்லை என்று உறவினர்கள் நம்பினார்கள்.
ஒரு நாள் வேலையால் வந்து பார்த்தபோது தேவனைக் காணவில்லை. ஊர் முழுவதும் தேடிக் களைத்துவிட்டாள் நர்மதா.
பல மைல்கள் தொலைவில் தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி, சூனியத்தை வெறிக்கும் கண்களுடன் வலம் வந்த தேவனை ஊரார் " பைத்தியம்" என்று அழைத்தது நர்மதாக்கு தெரிய வாய்ப்பில்லை.

( இது உண்மையில் நடந்த சம்பவம். முடிவை சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன். )
முற்றும்.

23 comments:

  1. காலையில் கண் கலங்க வைத்து விட்டீர்கள் வாணி

    ReplyDelete
  2. உண்மைச் சம்பவம் எனும் போது உண்மையிலேயே கண் கலங்குகின்றது.

    ReplyDelete
  3. படித்ததும் கண் கசிந்தது..

    ReplyDelete
  4. //பல மைல்கள் தொலைவில் தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி, சூனியத்தை வெறிக்கும் கண்களுடன் வலம் வந்த தேவனை ஊரார் " பைத்தியம்" என்று அழைத்தது நர்மதாக்கு தெரிய வாய்ப்பில்லை.//


    மிக உருக்கமாக இருக்கு தோழி...

    ReplyDelete
  5. நல்ல கதை.. மனசுக்கு கஷ்டமா இருந்தது..
    தொடர்ந்து எழுதுங்க வாணி..

    ReplyDelete
  6. //உண்மையில் நடந்த சம்பவம்//

    கண் கலங்க வைத்து விட்டீர்கள் வாணி.

    ReplyDelete
  7. இன்னும் எத்தனை இருக்கோ.. வெளி உலகிற்கு தெரியாமல்..:-(

    ReplyDelete
  8. நானும் இப்படி ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் வாணி. அது நிறையப்பேரைச் சுட்டபோது, ஒருவர் தனக்கும் சூடுபட்டதுபோல விழுந்து, இறந்ததுபோல கிடந்து, சூட்டுக்காயமில்லாமல் உயிர் தப்பியதாக.

    ReplyDelete
  9. ரெம்ப‌ கொடுமையான‌ முடிவு...

    ReplyDelete
  10. படித்ததும் கண் கலங்கிடுச்சு வானதி!!

    ReplyDelete
  11. வானதி...கண் கலங்க வைத்த கதை.இந்தக் குடும்பத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு பதறுகிறது.இப்படி எத்தனை நிகழ்வுகள் எங்கள் தேசத்தில்.

    ReplyDelete
  12. இன்னும் எத்தனை நிகழ்வுகள் ?

    ReplyDelete
  13. அருமை வாணி! உண்மைக் கதை உண்மையிலேயே அருமை! நிறைய மனிதர்களின் சோகங்கள் வெளிப் படுத்தப் படாமலேயே இருக்கின்றன. நீங்கள் எடுத்துச் சொன்ன விதம் வித்தியாசமானது. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  14. ம்ம்..மனசு கெனத்துப் போச்சு வானதி.. இதைப் பத்தி நினைக்கும் போதெல்லாம் கவலையாவே இருக்கும்.. இன்னும் எத்தனை நாளைக்கு.. இன்னும் எத்தனை பேரோ என...

    ReplyDelete
  15. உண்மை சம்பவம்னு சொல்லி கலங்க வெச்சுட்டீங்க வாணி...

    ReplyDelete
  16. உண்மைச்சம்பவங்களை எழுதி கண்கலங்க வைக்கறீங்க வானதிமேடம்!

    ReplyDelete
  17. //இராணும் இவனுடன்// செக்

    சில நேரங்களில் இது போன்ற கதைகள் மனத்தை கனக்க செய்துவிடுகின்றன என்ன சொல்றது பதிவுலகத்து இலங்கை நண்பி ஒருவரின் கதை இதைவிட கோர முடிவை கொண்டது... கேட்டுவிட்டு சில காலம் அதிலிருந்து மீள கஷ்டமாகிவிட்டது இதுவும் அதே போல சோகமான முடிவு என்று முடிவெடுத்தபின் உண்மையான நிகழ்வையும் சொல்லியிருக்கலாம்...!

    ReplyDelete
  18. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete
  19. எல்கே, மிக்க நன்றி.
    பல வருடங்களாக மனதில் இருந்த சம்பவம் இது.

    சந்ரு, மிக்க நன்றி.

    வெறும்பய, மிக்க நன்றி.

    கௌஸ், மிக்க நன்றி தோழி.

    ஆனந்தி, மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.

    ஜெய், உண்மைதான்.
    கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. கஷ்டமாக இருக்கிறது படிக்க. பலதும் மனதில் வந்து போகிறது. இனி ஒரு போதும் யாருக்கும் இவ்வாறு நிகழாதிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  21. அதீஸ், நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    நாடோடி, மிக்க நன்றி.

    மேனகா, மிக்க நன்றி.

    ஹேமா, வாங்கோ. இன்னும் வெளிவராத சோகங்கள் நிறைய இருக்கு.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    அப்துல்காதர், மிக்க நன்றி.

    ReplyDelete
  22. சந்து, இப்ப குறைந்து விட்டாலும். இறந்து போனவர்கள் மீண்டு வரப்போவதில்லை.
    மிக்க நன்றி.

    அப்பாவி, மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி.

    வசந்த், சொல்லியிருக்கலாம் தான். ஆனால் படிப்பவர்களுக்கு அப்படி சோகமான முடிவு தேவையில்லை என்பதால் சொல்லவில்லை.
    வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஸ்வேதா, தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரை குடுத்துட்டாப் போச்சு.
    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!