Wednesday, August 11, 2010

மறக்க முடியாத நபர்!

எங்கள் முறை வந்தது. வரவேற்பாளினி, " உங்கள் மகளின் ஹெல்த் கார்ட் எங்கே?" என்றார்.
அது வரை அதைப் பற்றி எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு திடீரென்று பயம் உண்டானது.
கனடா வாசிகளுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

வரவேற்பு பெண் தொடர்ந்தார், " உங்கள் குழந்தையை அட்மிட் செய்ய $500 டாலர்கள். பிறகு டாக்டர் செக் பண்ண பணம், ஆஸ்பத்திரி செலவு.... " இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
" உங்களுக்கு 10 நிமிடங்கள் டைம் தருகிறேன். யோசித்து செய்யுங்கள் " என்றார்.
" இது யோசிக்க வேண்டிய விடயம் அல்ல. குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்டது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை" என்றார் அப்பா.

அப்பா கிரடிட் கார்ட் எடுத்து, அந்தப் பெண்ணிடம் நீட்டவும், வாசலில் ஏதோ சலசலப்பு எழுந்தது.
வாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி எல்லோரையும் தள்ளி நிற்கும் படி எச்சரிக்கை செய்தபடி உள்ளே வந்தார்.

போலீஸ் ஒரு குடிகாரியை கைகளில் விலங்கிட்டு அழைத்து வந்தார்கள். பயங்கர மப்பில் இருந்த அந்தப் பெண் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டியபடியே வந்தார். போலீஸூக்கு காலால் எட்டி உதைப்பதும், திட்டுவதுமாக இருந்தார். இவரிடமிருந்து நோயாளிகளைக் காக்கவே எல்லோரையும் தள்ளி நிற்கும்படி எச்சரிக்கை செய்தார்கள்.

நாங்கள் ஓரமாக அமர்ந்து கொண்டோம். வரவேற்பறை பெண் குடிகாரியை கவனிப்பதில் பிஸியாகி விட, நாங்கள் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம்.
அப்போது ஒரு பெண். 35, 40 வயதிருக்கும். ஆஸ்பத்திரி சீருடை அணிந்திருந்தார். கழுத்தில் ஸ்தெதஸ்கோப் மாட்டியிருந்தார்.
என் மகளின் நாடித்துடிப்பு, கண்கள், சுவாசம் என்று எல்லாவற்றையும் செக் பண்ணினார். " உங்கள் மகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றார். இது சளியால் வந்த பிரச்சினை. நான் சொல்லும் மருந்தை வாங்கி கொடுங்கள். நாளை காலை எல்லாமே சரியாகி விடும்", என்றார்.

வரவேற்பறை பெண் என் அப்பாவை நோக்கி வருமாறு சைகை காட்டினார்.

" நான் சொல்கிறேன்னு தப்பா நினைக்காதீர்கள். இது போல நிறைய குழந்தைகளை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். பணத்தை சும்மா உறிஞ்சி எடுப்பார்கள். வீணாக நேரத்தை இங்கு வீணடிக்காமல் நான் சொன்ன மருந்தை வாங்கி குடுங்கள் ", என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு, என் தோளில் மென்மையாக தட்டி விட்டு, உள்ளே போய் மறைந்து விட்டார்.

எனக்கு அவர் சொன்னதில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. என் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தேன். டாக்ஸியில் திரும்பி போகும் வழியில் மருந்துக் கடையில் அவர் சொன்ன மருந்து வாங்கி கொண்டோம்.
வீடு வந்து சேர அதிகாலை 4 மணி. நான் என் மகளை மடியில் வைத்து, மருந்தினை கொஞ்சம் கொஞ்சமாக கரண்டியால் வாயில் ஊற்றினேன். படுக்க வைத்தால் எங்கே மீண்டும் வாந்தி எடுத்து விடுவாரோ என்று பயத்தினால் தூங்காமல் விழித்திருந்தேன்.
ஏதோ குளிரான பொருள் என் மீது பட திடுக்கிட்டு விழித்தேன். மீண்டும் என் மகளுக்கு பிரச்சனையா என்று யோசனை ஓடியது.
என் மகள் என் அம்மாவின் கைகளிலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சிரிப்பிற்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது.

அந்த டாக்டரின் முகம் இன்னும் நினைவிருக்கு.
அவருக்கு நான் முறையாக நன்றி சொல்லவில்லையோ, ஏதாவது நன்றி/வாழ்த்து அட்டை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று இருந்த பதட்டத்தில் அவரின் பெயரைக் கூட கவனிக்காமல் இருந்துவிட்டேன்.

கனடா போகும் போது அவரைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழும். ஆனால், பெயர் தெரியாமல் எப்படித் தேடுவது, யாரைக் கேட்பது என்று அந்த எண்ணத்தை செயல்படுத்தாமல் இருந்துவிட்டேன்.

அவர் எப்போதும் நலமே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்

12 comments:

 1. மிகவும் அருமை உங்கள் பதிவுகளை http://tamil.kijj.in/ என்னும் தலத்தில் போடுங்கள்

  ReplyDelete
 2. "ந‌ன்றி ம‌ற‌ப்ப‌து ந‌ன்ற‌ன்று" திரும்ப‌மும் ஞாப‌க‌ம் ப‌டுத்திவிட்டீர்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி.

  ReplyDelete
 3. இருங்க படிச்சிட்டு வரேன்...

  ReplyDelete
 4. அடடா அந்த டாக்டருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் எங்கிருந்தாலும் வாழ்க..

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு.. இந்தமாதிரி மனிதர்களை நாம் மறக்கவே கூடாது.. பகிர்வுக்கு நன்றி வானதி..

  ReplyDelete
 6. நல்லவங்க எல்லா இடத்திலயும் இருக்கறாங்கதான்!!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு.. இந்தமாதிரி மனிதர்களை நாம் மறக்கவே கூடாது...

  அந்த டாக்டருக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இத்தகைய நல்ல மனிதர்கள் இருப்பதனால் தான் மனிதம் இன்னும் வாழ்கிறது.
  பதிவுக்கு நன்றி. மேலும் எழுதுங்கள்.

  ReplyDelete
 9. மனிதம் மரித்து விடவில்லை. அந்த டாக்டருக்கும் எங்கள் வாழ்த்துகள். அருமையா எழுதி இருக்கீங்க..வாணி!!

  ReplyDelete
 10. டாக்டருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் நல்ல பதிவு வானதி

  ReplyDelete
 11. கேப் ட்ரைவர் மற்றும் மருத்துவர் - தங்களோட கடமைக்கு அப்பாற்பட்டு ரெண்டு பேருமே மறக்க முடியாத நல்ல காரியங்களச் செய்திருக்காங்க..

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!