தியாகு எதிர்பார்க்கவே இல்லை இப்படி நடக்கும் என்று. தியாகுவின் மனைவி கலா அவனையும், 5 வயது மகனையும் தனியே தவிக்க விட்டுட்டு போய் விட்டார். உடனே இறந்து போய் விட்டார் என்று கற்பனை செய்ய வேண்டாம். கலா அவரின் அம்மா வீட்டிற்கு போய் விட்டார். தியாகுவுடன் குடும்பம் நடத்துவதும், காட்டில் போய் சிங்கம், புலியுடன் இருப்பது ஒன்று என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
தியாகு தொட்டதற்கெல்லாம் ஏதாவது குறை சொல்வான். சமையல் செய்தால் உப்பு, புளி, காரம் போதவில்லை என்பான். வீட்டினை சுத்தம் செய்தால் ஏதாவது புகார் வாசிப்பான்.
கலா வேலைக்கும் போய், குழந்தையை கவனித்து, இவனின் புகார்களுக்கும் விடை சொல்லி, முடியாமல் பெட்டி படுக்கைகளுடன் போய் விட்டாள்.
நீ போனால் என்ன? என் வாழ்க்கை அஸ்தமித்து விடாது என்று வீர வசனங்கள் பேசினான். எல்லாம் சில மணி நேரங்கள் தான். அதாவது மகன் பசிக்குது என்று சொல்லும் வரை தான்.
இருடா செல்லம். ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு, சட்டி, பானை, குளிர்சாதனப்பெட்டி என்று எல்லா இடங்களும் தேடிக் களைத்தது தான் மிச்சம். ஒன்றுமே அகப்படவில்லை. மகனையும் கூட்டிக் கொண்டு கடைக்கு ஓடினான். சாப்பிட்டு முடிந்ததும், மகனுக்கு கதைகள் சொல்லி தூங்க வைத்து, வேலைகள் முடித்த போது மணி இரவு 11:30 என்று காட்டியது. மிகவும் அசதியாக இருந்தது.
அடுத்த நாள் காலையில் எழுந்து, மகனையும் பள்ளிக்கு ரெடி பண்ணி, சாப்பாடு குடுத்து.... தியாகு களைத்துப் போய் விட்டான். மகனை பள்ளியில் இறக்கி விட்டு, இவன் வேலைக்கு போய் சேர 9:30 ஆயிற்று. மீண்டும் மாலை 3 மணிக்கு மகனை பள்ளியிலிருந்து கூட்டி வந்தான். மகனை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாதபடியால் தன்னுடன் வேலைக்கு கூட்டிச் சென்று மாலை 6 மணி வரை தன்னுடனே வைத்திருந்தான்.
இதெல்லாம் உனக்கு தேவையா என்று உள்மனம் கடுப்படித்தாலும் இவனால் கலாவிடம் சென்று கெஞ்சி நிற்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
இவனின் அண்டை வீட்டில் வசிக்கும் வயதான பெண்ணிடம் மகனை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். அவரும் சரி என்று சம்மதம் சொன்னார். ஆனால், அவரால் தியாகுவின் மகனை சமாளிக்கவே முடியவில்லை.
பிள்ளையா இது?... என்று ஏதேதோ முணுமுணுத்தபடி தியாகுவிடம், " வேறு ஆளைப் பாருப்பா. இன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து உன் மகன் பண்ணிய சேட்டைகள் ஒன்றா. இரண்டா??..." என்று விட்டு ஒடிப் போய் கதவை தாழ் போட்டுக் கொண்டார்.
" ஏன் செல்லம் என்ன செய்தாய் அந்த பாட்டியை? " , என்று மெல்ல பேச்சுக் கொடுத்தான்.
" ஓ! அதுவா. இன்று பள்ளியில் ஒரு போன் நம்பர் சொல்லிக் குடுத்தாங்கப்பா. அந்த நம்பரை டயல் பண்ணி தருமாறு அந்த பாட்டியிடன் கேட்டேன். அவங்க ஏன்பா டென்ஷன் ஆவுறாங்க???", என்றான் மகன்.
" என்ன நம்பர் "- இது தியாகு.
" ஏதாச்சும் அவசரம் எனில் நம்பர் 911 டயல் செய்தால் உடனே வருவாங்களாம் ", என்றான் மகன்.
தியாகு பயந்தே போய் விட்டான். " இல்லை செல்லம்.அது வந்து உனக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லை, எங்கையாச்சும் வலி இருந்தா அந்த நம்பரை டயல் பண்ணினால் போலீஸ் வரும். சும்மா டயல் பண்ணக் கூடாது சரியா? ."
" சரிப்பா ", என்றான் மகன்.
எதற்கும் கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று நினைத்துக் கொண்டான். கனடாவில் தொட்டதற்கெல்லாம் சட்டம் பேசுவார்கள். அதுவும் சின்னக் குழந்தைகளை அடித்தால் அவ்வளவு தான். நிறைய சிக்கல்கள் வரும்.
ஒரு வழியா வார இறுதி நாட்கள் வந்தது. தியாகுவின் மகன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான். இவன் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.
கோபத்தில் மகனுக்கு மெதுவாக இரண்டு தட்டு தட்டினான். அவன் அழ ஆரம்பித்து விட்டான். தியாகு போய் படுத்துக் கொண்டான். எரிச்சலாக வந்தது. அப்படியே உறங்கிப் போனான்.
கதவில் யாரோ பட படவென தட்டும் சத்தத்தில் விழிப்பு வந்தது. யாராக இருக்கும், மகன் எங்கே இப்படி பலவாறாக எண்ணியபடியே படுக்கையில் எழாமல் இருந்தான்.
" நீங்கள் கதவினை திறக்காவிட்டால் கதவு உடைக்கப்படும் " , என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வரவே அடித்துப் பிடித்து ஓடிப்போய் கதவைத் திறந்தான்.
வெளியே போலீஸ் அதிகாரிகள் மூவர் நின்றார்கள்.
" இந்த வீட்டில் ஒரு குழந்தை போன் செய்து, கம்ளைன்ட் குடுத்திருக்கு. அதான் என்னவென்று விசாரணை செய்ய வந்தோம் ", என்றார்கள்.
இவனின் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்றார்கள்.
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் கேள்விகள் கேட்டார்கள். அவன் முழிப்பதைக் கண்டு இவனிடம் குடைய ஆரம்பித்தார்கள். இவன் சொன்ன சமாதானங்கள் எதுவுமே எடுபடவில்லை. குழந்தைக்கு ஏதாவது காயங்கள் இருக்கா என்று செக் பண்ணினார்கள். இறுதியில் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் போலீஸ் இவனை சந்தேகப் பார்வை பார்த்தபடி சென்று விட்டார்கள்.
பிள்ளைக்கு ஏதாச்சும் விளையாட்டு பொருட்கள் வாங்கு குடு. தொலைபேசியெல்லாம் குடுத்து தொலைக்காதே என்று ஒரே அட்வைஸ் மழை வேறு.
மகன் அப்பாவி போல முகத்தினை வைத்துக் கொண்டு நின்றான்.
தியாகு கிளம்பி விட்டான். எங்கே என்கிறீர்களா? கலாவின் காலில் விழுந்தாவது அவளை வீட்டிற்கு கூட்டி வர. அப்படி முடியாத பட்சத்தில் மகனை அங்கு விட்டுட்டு வர வேண்டும் என்று தீர்மானத்துடன் புறப்பட்டு விட்டான்.
( கதை இவ்வளவு தான். இதற்கு மேலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கினை நுழைக்காமல் எல்லோரும் போய் ஏதாச்சும் பதிவுகள் போடுங்க, அல்லது சந்தேகங்கள் கேளுங்கள். சரியா?? )
நல்லாருக்குங்க..
ReplyDeleteநல்லாருக்கு வானதி!
ReplyDeletenice vanathy!!
ReplyDeleteசந்தேகமா அப்படின்னா..?
ReplyDeleteஅதுசரி... இம்புட்டு இருக்கா...?
ReplyDeleteஆ... வான்ஸ்ஸ், படித்திட்டு வாறேன், பொய் சொல்லமாட்டேன் படிக்காமல்.
ReplyDeleteஇங்கும் ஒன்பது வருடங்கள் முன்னால் திடீரென்று ஒரு நாள் ரிசீவரில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. ;)
ReplyDeleteபிள்ளைகளுக்கு நல்லாத் தெரியும் பள்ளியில சொல்லிக் குடுக்கிறதில எதை விட வேணும், எதை இறுக்கிப் பிடிக்க வேணும் என்று. ;))
கதை இவ்வளவு தான். இதற்கு மேலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கினை நுழைக்காமல் எல்லோரும் போய் ஏதாச்சும் பதிவுகள் போடுங்க, அல்லது சந்தேகங்கள் கேளுங்கள்//// வான்ஸ்!!! தொடக்கம் படிக்கும்போது சந்தேகம் எழுந்தது, ஆனா இதைப் பார்த்ததும் போயே போச்.....
ReplyDeleteஎன் முந்தைய ஒபீஷில், ரூம் போய்(பீயோன்) ஆக இருந்தவரின் பெயர், தியாகு, மிக நல்ல பிள்ளை, அக்கா அக்கா என என்னில நல்ல உருக்கம், நான் கேட்கமுன் ஓடி ஓடி எல்லாம் செய்து தருவார்.... அந்த நாள் ஞாபகம் வந்திட்டுது...
Good one vanathy!!
ReplyDeleteசந்தேகம்னா? என்னாது? ஒரு வேளை சந்தனம் தடவிய தேகமோ? இல்லை சந்தானமோ காலபோக்கில் மருவி சந்தேகமாகிவிட்டதோ?
ReplyDeleteகதை சூப்பரு:)
அதுசரி சந்தேகம் கேளுங்கோ என தெகிரியமா சொல்லிட்டு வெள்ளை மாளிகை முன் நின்னா, பின்னால ஓபாமா இருக்கார் என்ற தைரியமா???
ReplyDeleteஅடுத்தவங்க பிரச்சனையில் மூக்கை நுழைப்பதுனா ஒரு சந்தோசம் தான்.. ஹி..ஹி..
ReplyDeleteநல்லாருக்கு.
ReplyDeleteகலாநேசன், மிக்க நன்றி.
ReplyDeleteமகி, நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
ஜெய், சந்தேகம் அப்டின்னா ??? எனக்கு தெரியாது. அதீஸிடம் கேளுங்கோ???
ச.ச. த. ஜெய்லானி, மிக்க நன்றி.
குமார், ம்ம்ம்... இம்புட்டு அல்ல இதுக்கு மேலேயும் நிறைய இருக்கு.
மிக்க நன்றி.
இமா, மிக்க நன்றி.
ReplyDeleteஅதீஸ், இந்த ஜெய்லானியோடு சேர்ந்து எல்லோரும் நல்லா சந்தேகம்கேட்கப் பழகிட்டாங்கப்பா.
எனக்கு இருக்கிற 24 மணி நேரங்கள் போதவில்லை. வெகு விரைவில் ஒரு உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்கப் போறேன்.
அதன் பிறகு உங்களுக்கு சந்தேகங்களே வரவே வராது.
மிக்க நன்றி.
//வெகு விரைவில் ஒரு உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்கப் போறேன்.
ReplyDeleteஅதன் பிறகு உங்களுக்கு சந்தேகங்களே வரவே வராது.
மிக்க நன்றி. //
ஃபிரம்:
ஜெய்லானி
டூ :
உயர் திருமதி வானி
உங்களிடம் சந்தேகம் தீர்பதற்கு ஆள் தேவை யென்ற விளம்பரம் கண்டேன். அதுக்கு சரியான ஆளா நான் இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதால் அந்த போஸ்டை எனக்கே தரும்படி கேட்டுக்கொ(ல்)ள்கிறேன் ..முதல் அப்ளிகேஷனை நான் போட்டுள்ளதால்
இனி யாரும் எனக்கு பயந்துகிட்டு வேர அப்ளிகேஷன் போடமாட்டாங்கன்ற நம்பிக்கையில்
காத்திருக்கும் ------
இப்படிக்கு
ஜெய்லானி ,
தலைவர்
சந்தேகம் கேட்போர் மற்றும் தீர்ப்போர் சங்கம் ,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ,
ஜெய், இருங்க அதுக்குள்ள என்ன அவசரம்?? எங்கள் நாட்டு+ஆமை அப்துல் காதரும் வரட்டும் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்.
ReplyDelete;)
ReplyDelete//சந்தேகம் கேட்போர் மற்றும் தீர்ப்போர் சங்கம்//
ReplyDeleteசந்தேகம் கேட்பீங்க சரி,, எங்க தீர்க்கிறீங்க. அத தான் டிஸ்கியில விட்டுறீங்களே பாஸ். அதுக்கு ஒரு சங்கம் அதுக்கு நீங்க தலைவரா?? வெளிய சொல்லாதீங்க. க்கி.. க்கி
//முதல் அப்ளிகேஷனை நான் போட்டுள்ளதால்
ReplyDeleteஇனி யாரும் எனக்கு பயந்துகிட்டு வேர அப்ளிகேஷன்
போடமாட்டாங்கன்ற நம்பிக்கையில்//
என்ன துணிச்சல்?? என் சிக்நேச்சர் இல்லாம யார கேட்டு அப்ளிகேசன போட்டீங்க. ஆ.. செல்லாது.. செல்லாது. வாணி இது டூப்ளிகேட்,, ரிஜெக்ட் பண்ணுங்க!! சரி இவ்வளவு நடந்திருக்கே அதிஸ்க்கு தெரியமா??
//ஜெய், இருங்க அதுக்குள்ள என்ன அவசரம்?? எங்கள் நாட்டு+ஆமை அப்துல் காதரும் வரட்டும் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்.//
ReplyDeleteவாணி தேங்க்ஸ், நீங்களே உங்கள் நாட்டு, அதாவது (எங்கள் நாட்டு அமைதி அப்துல் காதர் வரட்டும்) என்று ஒரு மருவாதி தந்ததால, கெஞ்சி கேட்க்கிற அந்த மாகா தல ஜெய்லானிகே அந்த பதவிய கொடுத்துடுங்க என்று பரிந்துரைக்கிறேன். அந்த சந்தேகத்தை வச்சு நாலு இடுகையாவது போடட்டும். க்கி க்கி
வாணி கதை அருமை!!
ReplyDelete:))ஹாஹ்ஹா. நல்லா வேணும் தியாகுக்கு :)
ReplyDeleteரொம்ப கரெக்ட்..
ReplyDeleteகுட்டீஸ் கிட்ட கவனமா சொல்லி வைக்கணும்..
911 மேட்டர் எனக்கும் கொஞ்சம் பயம் தான்... :-))
nice one vanathy
ReplyDeleteசுகந்தி, மிக்க நன்றி.
ReplyDeleteஹைஷ் அண்ணா, சந்தேகமா?? பொறுங்கள் என் உதவியாளர் இன்னும் கொஞ்ச நேரத்தில் பதவியேற்பு வைபவம் முடிஞ்ச பிறகு வருவார்.
அது வரை பொறுத்தருள்க.
அது காங்கிரஸ் பில்டிங். ஒரு புது சட்டம் இயற்றுவது சம்பந்தமாக வரச் சொன்னார்கள். அதான் போய்ட்டு வந்தேன்.
மிக்க நன்றி.
நாடோடி, அடடா! நீங்கள் என் கட்சி தானா?? வெல்கம்.
மிக்க நன்றி.
ஹூசைனம்மா, நன்றி.
நாட்டாமை,
ReplyDelete//சந்தேகம் கேட்பீங்க சரி,, எங்க தீர்க்கிறீங்க. அத தான் டிஸ்கியில விட்டுறீங்களே பாஸ். அதுக்கு ஒரு சங்கம் அதுக்கு நீங்க தலைவரா?? வெளிய சொல்லாதீங்க. க்கி.. க்கி//
நல்லா கேளுங்கோ.
உங்க கையெழுத்து... அது நானே போட்டாச்சு.
மிக்க நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி.
சந்தனா, மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
ஜெய், நீங்கள் என் உதவியாளர்.
நிறைய ரூல்ஸ் இருக்கு.
எப்போதும் சிரிச்ச முகமா இருக்கணும்.
யார் எந்தக் கேள்வி கேட்டாலும், அந்தக் கேள்வி எவ்வளவு லூசுத்தனமா இருந்தாலும் பதில் சொல்லணும்.
யூனியன், சங்கம் என்று ஆரம்பிக்கவே கூடாது.
.......இன்னும் நிறைய இருக்கு பிறகு சொல்றேன்.
;)
ReplyDeleteNice blog....
ReplyDeleteJust checked today. (Followed)
//ஜெய், நீங்கள் என் உதவியாளர்.
ReplyDeleteநிறைய ரூல்ஸ் இருக்கு.
எப்போதும் சிரிச்ச முகமா இருக்கணும்.
யார் எந்தக் கேள்வி கேட்டாலும், அந்தக் கேள்வி எவ்வளவு லூசுத்தனமா இருந்தாலும் பதில் சொல்லணும்.
யூனியன், சங்கம் என்று ஆரம்பிக்கவே கூடாது.
.......இன்னும் நிறைய இருக்கு பிறகு சொல்றேன்//
ஹி...ஹி.....ஹி...ஹி..ஹி...ஹி.....ஹி...ஹி..ஹி...ஹி.....ஹி...ஹி..ஹி...ஹி.....ஹி...ஹி..ஹி...ஹி.....ஹி...ஹி..ஹி...ஹி.....ஹி...ஹி..
ஜெய், ம்ம்... நல்ல சிரிச்ச முகம் தான். ஆனா இப்படி சிரிச்சு கேள்விகளை கோட்டை விடப்படாது. எல்லா கேள்விகளுக்கும்/சந்தேகங்களுக்கும் பதில் சொல்லணும் சரியா???
ReplyDelete//ஜெய், ம்ம்... நல்ல சிரிச்ச முகம் தான். ஆனா இப்படி சிரிச்சு கேள்விகளை கோட்டை விடப்படாது.//
ReplyDeleteஇப்படி சிரிச்சா அது சிரிச்ச முகமா இருக்கிறதா அர்த்தமல்ல. ஏமாந்துடாதீங்க வான்ஸ்?? சிரிப்பை எண்ணுங்க (24) இருக்கு! இப்படி 24 மணி நேரமும் சிரிச்சா?? சரி சரி உதவியாளர செலக்ட் பண்ணிட்டு நீங்க டென்சன் ஆகாதீங்க வாணி. லூஸ்ல விடுங்க!!
அப்புறம்
ReplyDelete//எல்லா கேள்விகளுக்கும்/சந்தேகங்களுக்கும் பதில் சொல்லணும் சரியா??? //
இது கேள்வி கேட்க்கும் சரி ; சந்தேகத்துக்கு எங்கே பதில் சொல்லப் போவுது? பதில சொல்லிட்டா அடுத்த இடுகை போடா முடியாதே! அத வச்சு தானே பொழப்பு ஓடுது!! க்கி..க்கி
(((பாஸு உதவியாளர் ஆய்ட்டீங்களா? எங்கே முகத்த காட்டுங்க, நானும் பார்க்கிறேன் அது சிரிச்ச முகமான்னு??))):-D
ReplyDeleteவாணி எல்லாம் சரி!! தமிழ்ல ப்ளாக் ஸ்பாட் வச்சுக்கிட்டு அதென்ன டாப்ல "VANATHY'S". இது ரொம்ப..... உங்க அழிச்சாட்டியம் தாங்க முடியல?? ஹி..ஹி..
ReplyDeleteநாட்டாமை,
ReplyDelete//லூஸ்ல விடுங்க!!//
இது என்ன எங்க ஜெய்யை லூஸ் என்கிறீங்க???? ஓ! அது வேற அர்த்தமா?? கடவுளே! என்னைக் காப்பாற்று!!
அவர் இங்கே முகம் காட்ட மாட்டார். வேறு இடத்தில் அவர் முகம் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது நல்ல சிரிச்ச முகம் தான். ( அட! நிசமாதாங்க)
சரி மன்னிச்சு விட்டுடுங்கோ. இது அறியா வயசிலை, தெரியாமல் என் ப்ளாக்கின் பெயரை இங்கிலீசுல வைச்சுப் போட்டேன். இப்படி ஒரு நாட்டாமை வந்து கேள்வி கேட்பாரென்று யார் கண்டா???
மிக்க நன்றி, அப்துல் காதர்.
வானதி இது இங்கு ரொம்ப சகஜமா நடக்குது இந்த 911 டயல் செய்வது. நல்லா இருக்கு.
ReplyDeleteநம்ம வீட்டில் என் குட்டி பென் ஒரு தடவை சத்யாவின் ப்ளாக்பெர்ரியில் இருந்த் செய்துவிட்டாள். எங்க யாருக்கும் தெரியாது. யாரிடன் இவ பேசுகிறா என்று என்னவர் வாங்கி பார்த்தால் காப் உடனே அவர் என்னவரிடம் குழந்தைகளிடம் எல்லாம் போனை விளையாட குடுக்காதிங்க.
என்னவர் அது தான் இருக்கவே இருக்கே ஸாரி.
நிஜமாவே இவ எப்படி கத்துகிட்டா எப்ப செய்தா என்று கொஞ்சம் நேரமாச்சு கண்டுபிடிக்க.
இப்ப என் குட்டிஸும் எல்லாம் தெரிஞ்சுகிட்டாங்க.
now they know.