Monday, June 7, 2010

மீண்டும் மீண்டும் சாம்பு!

போன முறை பந்து எடுத்து குடுக்க சொல்லி கெஞ்சினேன். யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. அதனால் நான் யாரோடும் பேசப்போவதில்லை. நான் சொல்லும் கதையை மட்டும் கேளுங்கோ. குறுக்கே குறுக்கே பேசுவதோ, கேள்வி கேட்பதோ வேண்டாம்.

நேற்று கிருஷ்ணா வந்தான். அவனுக்கு மனசே சரியில்லை. ஏன் என்று யார் கேட்பது ? இமா பாட்டியா? ஸ்ஸ்..நோ கொஸ்டின்ஸ். அவன் அம்மா வேலைக்குப் போகப் போகிறார்களாம். இவனை டேக்கேருக்கு அனுப்ப போகிறார்களாம். இவன் போய் டேக்கேரைப் பார்த்து, அங்கேயே ஒரு மணி நேரம் இருந்து விட்டு வந்தானாம்.

அந்த ஒரு மணிநேரத்திலேயே ஜஸ்டீன் என்ற பொடியன் இவன் காதைக் கடித்து விட்டானாம். சிவந்து போயிருந்த காதை எனக்கும் காட்டினான். முன்பு ஒரு முறை விளையாட்டு பொருளால் என் தலையை பதம் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டான். இனிமேல் இருவரும் அடிக்கடி பார்க்க முடியாது என்றும் சொன்னான். இப்ப எனக்கு மனசே சரியில்லை. என்ன வாழ்க்கை இது ?

ஆரம்பத்தில் கிருஷ்ணாவை பார்க்காமல் இருக்க போரடித்தது. ஆனால் இப்போது பழகி விட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கிருஷ்ணாவைப் பார்த்தேன். டேக்கேரில் மற்ற வசதிகள் இருந்தாலும் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவதாக சொன்னான். வீட்டிலிருக்கும் போது மதியம் நெய், பருப்பு சாதம் என்று விதம் விதமாக உள்ளே தள்ளியவன் பாவம் இப்போ மிகவும் நொந்து போயிருந்தான். நான் ஆறுதல் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அவனில்லை.

என் பொழுது ஆனந்தமாகவே போனது. காலையில் சீரியல், ஆப்பிள். மதியம் பருப்பு, நெய் சோறு, மீன், வாழைப்பழம். இரவு இட்லி, தோசை, முட்டை என்று மூன்று நேரமும் விருந்து தான். மதியம் சாப்பிடும் போது கிருஷ்ணாவை நினைத்துக் கொள்வேன். டேக்கேரில் என்னத்தை தின்பானோ என்று யோசனை ஓடும்.

நான்கு மாதங்களின் பின் நான் கிருஷ்ணா வீட்டிற்கு போனேன். ஆளே மாறியிருந்தான். ஏதோ மாம், டாட் என்று புதுசு புதுசாக நிறைய ஏதேதோ சொன்னான். எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை. என்னைக் கண்டதும் ஒரு நாளும் இல்லாத திருநாளாக கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தான். நான் கூச்சத்தினால் நெளிந்தேன். அவனுடைய டேக்கேரில் அப்படித்தான் செய்வார்களாம்.

கிருஷ்ணாவுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாள். அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போனார். கிருஷ்ணாவுக்கு என்ன பிடிக்கும், என்ன கிப்ஃட் வாங்குவது என்று எனக்குத் தான் தெரியும். வாங்கிய பரிசை அழகா பேப்பரில் சுற்றி பிறந்தநாளுக்கு போனோம்.

வீடு நிரம்ப ஆட்கள் . அவன் டேக்கேரிலிருந்தும் நண்பர்கள் ( தீபுக்குட்டி, அரண் , டொமார் ) வந்திருந்தார்கள். கிருஷ்ணா என்னைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஒரு ஹாய் மட்டுமே சொன்னான். அவன் நண்பன் ஜஸ்டீனை அறிமுகம் செய்து விட்டு ஓடிவிட்டான். இவன் தானே கிருஷ்ணாவின் காதைக் கடித்தவன். நான் ஒரு மூலையில் தனித்து விடப்பட்டேன். கிருஷ்ணா நிறைய ஆங்கிலம் பேசினான். நண்பர்கள் அவனை செல்லமாக கிருஷ் என்றார்கள்.

எனக்கு கேக், ஸ்நாக்ஸ் எதுவுமே இனிக்கவில்லை. கிருஷ்ணா என் நண்பன் தான் எப்போதும். அவன் மறந்தாலும் நான் அவனை மறக்கமாட்டேன்.
எனக்கு மனசே சரியில்லை. அழுகை வருது. நான் தனிமையில் கொஞ்ச நேரம் இருக்க போறேன். உங்கள் பிழைகளையும் மன்னித்து விட்டேன். எல்லோருக்கும் என் அன்பு. போய் வாருங்கள்.

16 comments:

  1. //எனக்கு கேக், ஸ்நாக்ஸ் எதுவுமே இனிக்கவில்லை. கிருஷ்ணா என் நண்பன் தான் எப்போதும். அவன் மறந்தாலும் நான் அவனை மறக்கமாட்டேன்.//

    so cuteeee

    ReplyDelete
  2. வானதி,மீண்டும் கிருஷ் -ஐ மீட் பண்ண ஏதாவது ஐடியா இருக்கா?அப்ப தான் நம்மாளு சரியாவார் போல.
    குட்டீஸீன் உணர்வுகளை தத்ரூபமாக எழுதி அசத்திட்டீங்க.

    ReplyDelete
  3. Our old (young) Vany is back. ;)))
    Enjoyed. ;)

    ReplyDelete
  4. மழலை மனதை உங்களை போல் அழகாய் பதிவு செய்ய எவரும் இல்லை. சூப்பர் வானதி

    ReplyDelete
  5. மழலைகளின் உணர்வுகளை அழகா சொல்லிருக்கிங்க வானதி,பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  6. எல்கே, மிக்க நன்றி.

    இலா, வாங்க. மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, இன்னும் யோசிக்கவில்லை. இது முன்பே எழுதி வைத்திருந்தேன். இனிமேல் தான் அடுத்த பாகம் யோசிக்கணும். மிக்க நன்றி.

    இமா, மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. கீதா, மிக்க நன்றி.

    தங்ஸ், அழகான பின்னூட்டம். மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றி.

    மேனகா, ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  8. கடைசி பாரா உண்மையிலேயே சூப்பர்.....!!!

    ReplyDelete
  9. ம‌ழ‌லையின் மன‌து... அருமையாக‌ இருக்கிற‌து.. தொட‌ர‌ட்டும்.

    ReplyDelete
  10. ஆகா... கிருஸ்ணாவுக்கு அதுக்குள் 3 வயதாகிவிட்டதோ? நம்ப முடியவில்லை. இருப்பினும் கிருஸ்ணா வின் பெயர் இப்படி கிருஷ் ஆகிவிட்டதே.. எல்லாம் ஷ்....உஷ்.... ஷ்.. மயம்.

    குறுக்க பேசவும் பூடாது, கேள்வியும் கேய்க்கப்பூடாது எண்டால் எப்பூடி? ஓக்கை நான் கேட்கமாட்டேனே... அதுசரி டொமாருக்கு இப்போ எத்தனை வயது?

    ReplyDelete
  11. நன்றாக இருக்கு உங்க கற்பனை..இன்ட்ரஸ்டிங்!

    ReplyDelete
  12. ஜெய், மிக்க நன்றி.

    நாடோடி, மிக்க நன்றி.

    தீபுக்குட்டிக்கு என்ன வயசோ அதே வயது தான் டொம்ஸ்க்கு. இப்படி எல்லாம் கேட்டு என் வயசை தெரிந்து கொள்ளலாம் என்று ஐடியா கூடவே கூடாது, அதீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    மகி, மிக்க நன்றி.

    ReplyDelete
  13. எனக்கும் மனசே சரியில்லை வானதி.. குட்டி இவ்வளவு உணர்வுள்ளவனா இருக்கானே.. எனக்கு ஏதோ என்னோட தோழிய பிரிஞ்சா மாதிரி இருந்தது.. விரைவில் அவனுக்கான புதிய நண்பர்கள் கிடைப்பாங்க.. அடுத்த வாரம் மாதிரின்னு சொல்லி வையுங்க :))

    க்ருஷ்.. ம்ம்.. இங்க வளர்ற புலம் பெயர்க் குழந்தைய அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க.. குட்..

    ReplyDelete
  14. சந்தனா, மிக்க நன்றி. அடுத்த பாகம் இன்னும் யோசிக்கவே இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!