Monday, May 10, 2010

என் கண்ணாடி!

என் பெயர் சந்தோஷ். வயது விடலைப் பருவம். என் நண்பர்கள் எல்லோருமே வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். என் குடும்பமும் ஓரளவுக்கு வசதியானதே. ஆனால், வீட்டில் அனாவசியமாக செலவு பண்ண விடமாட்டார்கள் . என் அப்பா ஒரு டாலர் குடுத்தாலே ஆயிரத்தெட்டு கணக்கு கேட்பார்.

என் நண்பர்கள் எல்லோரும் கூலிங் கிளாஸ் எனப்படும் வெய்யிலுக்கு இதமாக அணியும் கண்ணாடிகள் வைத்திருந்தார்கள். அதை அணிந்து கொண்டு அவர்கள் பண்ணும் அலப்பறை தாங்க முடியாமல் நானும் என் அப்பாவிடம் கேட்டேன். என் அப்பா பொங்கியெழுந்து விட்டார். " துரைக்கு கண்ணாடி கேட்குதோ ? ", என்று திட்டித் தீர்த்து விட்டார்.

அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு பெரிய ஹீரோக்கள் போல என் நண்பர்கள் நடை போட்டார்கள். பெண்கள் வலிய வந்து பேசினார்கள். என்னை எல்லோரும் ஒதுக்கியது போல உணர்ந்தேன்.

என் அண்ணா படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான். அவனோடு ஒப்பிடுகையில் என் அப்பாவே பரவாயில்லை ரகம். என் அண்ணன் படு கஞ்சன். அவனிடம் ஒரு கூலிங் கிளாஸ் இருக்கு. ஆனால் கேட்டால் தரவே மாட்டான். வாங்கிய புதிதில் ஸ்டைலாக மாட்டித் திரிந்தவன் இப்போது கழட்டி அலமாரியில் வைத்திருக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் அசந்த நேரம் கண்னாடியை சுட்டு விட்டேன். கண்ணாடியை பையில் வைக்கும் போது கண்டு பிடித்து விட்டான். நான் நடுக்கத்தோடு அவனைப் பார்க்க, அவன் சொன்னான், " இனிமேல் நீயே இந்தக் கண்ணாடியை வைத்துக் கொள் ." அவன் திடீர் தியாகி ஆகிய ரகசியம் எனக்கு விளங்கவில்லை. நான் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் அதியமானிடம் நெல்லிக் கனி பெற்ற ஔவையார் போல அக மகிழ்ந்து போனேன்.

நண்பர்களுக்கு என் கண்ணாடியை அணிந்து காட்டினேன். அவர்கள் என்னை டாம் குரூஸ் போல இருப்பதாக சொன்னதும் மகிழ்ந்து போனேன்.

அந்நேரம் பார்த்து வழக்கமாக வரும் டீன் ஏஜ் பெண்கள் கூட்டம் வர, நான் கண்ணாடியை அணிந்து கொண்டு ஸ்டைலாக முன்னுக்கு போய் நின்றேன்.
அப்போது டப் என்று ஏதோ ஒரு சத்தம் என் கண்ணாடியிலிருந்து வந்தது. என் வலது பக்க கண்ணாடித் துண்டு ஃப்ரேமிலிருந்து தெறித்து தூரப்போய் விழுந்தது. கடற்கொள்ளையன் போல ஒற்றைக் கண்ணில் மட்டும் கண்ணாடியுடன் பரிதாபமாக நின்றேன்.

பெண்கள் கூட்டம் ஹோவென்று சிரிக்க, என் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

என் அண்ணன் திடீர் தியாகி ஆக மாறி என்னைக் கோமாளி ஆக்கி விட்டான். இனிமேல் ஓசி கண்ணாடிக்கு அலையக் கூடாது என்று சபதமே எடுத்து விட்டேன்.

25 comments:

  1. Nanraga sirithen. Nice.

    ReplyDelete
  2. ஹா ஹா நல்லா சிரித்தேன்...

    ReplyDelete
  3. //என் வலது பக்க கண்ணாடித் துண்டு ஃப்ரேமிலிருந்து தெறித்து தூரப்போய் விழுந்தது. கடற்கொள்ளையன் போல ஒற்றைக் கண்ணில் மட்டும் கண்ணாடியுடன் பரிதாபமாக நின்றேன்.//ஆஹா...நல்லா சிரிச்சாச்சு...

    ReplyDelete
  4. வானதி கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது என்பதற்கு உங்கள் சிறு கதைகள் எடுத்துக்காட்டு.அருமை வானதி.

    ReplyDelete
  5. Hilarious... but reminded me of olden golden days fights for silly things with siblings... thanks

    ReplyDelete
  6. ந‌ல்லா க‌மெடியா இருந்த‌துங்க‌.... ர‌சித்தேன்..

    ReplyDelete
  7. அனானி, மேனகா, கீதா, ஆசியா அக்கா, இமா, அப்பாவி தங்கமணி, நாடோடி, ஜெய்லானி, எல்லோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. கதை நன்றாக இருந்தது, வானதி!

    ‘ அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் போல’
    ‘ ஒற்றைக்கண்னாடியுடன் கடற்கொள்லையன் போல’ என்ற வார்த்தைப்பிரவாகங்கள் அருமை!

    ReplyDelete
  9. :))))
    மேலே மாறும் படங்கள் அருமை. அதற்கெனவே வரத் தோன்றும்.

    ReplyDelete
  10. கதை நன்றாக இருந்தது, வானதி!

    ReplyDelete
  11. நல்ல கொமெடி......

    ReplyDelete
  12. நல்ல வேளை பெண்களின் முன்னால் கண்ணாடிதானே கழண்டு விழுந்தது:).. இட்ஸ் ஓக்கை வாஆஆஆணி. ரொம் குரூஸ்ஸை எனக்கு ரொம்பப் புய்க்கும்ம்ம்ம்ம்.

    இமா said...
    ;)/// karrrrrrrrrr

    ஜெய்லானி said...
    :-)))// karrrr karrrrrrrrrrr karrrrrrrrrrrrr

    வாணி நீங்களும் கர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ.. ஏனெண்டெல்லாம் குறுக்குக்கேள்வி கேட்கப்படாதூஊஊஊஊஊ

    ReplyDelete
  13. மனோ அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    செல்வி அக்கா, இந்த படம் என் கணவர் எடுத்தது. வருகைக்கு மிக்க நன்றி.
    குமார், மிக்க நன்றி.
    ஜெயா, மிக்க நன்றி.
    அதீஸ், வருகைக்கு நன்றி.
    ஜெய்லானி, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    இமா, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அதீஸ், எப்படி என் உறுமல். ஏதோ நீங்கள் சொன்னதை கேட்டு உறுமி சவுன்ட் விட்டாச்சு இனிமேல் என்ன நடக்கப் போவுதோ???

    ReplyDelete
  14. பாஆஆஆஆஆஆஆஆண்டாஆஆஆஆஆஆஆ தானே இது!!!!!!

    எனக்கு சைனீஸ் ரெஸ்டாரண்ட் நியாபகம் வருது :)

    ஹாஹ்ஹா.. நல்லாவே நக்கலடிச்சிருக்கீங்க அந்தக் குட்டி பையனை..

    ReplyDelete
  15. ரொம்ப நல்ல கதை, அருமையான பகிர்வு.

    ReplyDelete
  16. ஹா..ஹா!! சூப்பர் காமெடி! போட்டோஸ் எல்லாமே அருமையா இருக்கு வானதி!

    ReplyDelete
  17. அது சரி ஒரு புன்னகையிட்டால் அதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர் அர்த்தமா ? இதெல்லாம் ஓவரா தெரியல..

    ReplyDelete
  18. என்னை மாட்டி விட்டுட்டு அதிரா எங்கே??? அதீ...........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  19. //கடற்கொள்ளையன் போல ஒற்றைக் கண்ணில் மட்டும் கண்ணாடியுடன் பரிதாபமாக நின்றேன்.

    பெண்கள் கூட்டம் ஹோவென்று சிரிக்க, என் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
    ///

    arumai.. பெண்கள் முன் சாகசங்கள் தேவை இல்லை ..

    ReplyDelete
  20. எல்கே, உங்களுக்கு விளங்குது பசங்களுக்கு விளங்கணுமே.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. //உங்களுக்கு விளங்குது பசங்களுக்கு விளங்கணுமே. /
    antha agela nanum appadithan :D :D

    ReplyDelete
  22. ஹா ஹா ஹா ...

    இதெல்லாம் பில்டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு தரும் வினைகள்

    ஆனாலும் நக்கலு எங்கள் ஆணினத்தை குறிவைத்திருப்பதால் கண்டனங்கள்...!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!