Wednesday, April 28, 2010

வாழ்க்கை

இந்தக் கதையின் முதல் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்..
வாழ்க்கை (1)
வாழ்க்கை (2)

அடுத்த நாள் போனேன் வசுமதி வீட்டிற்கு . போய் கதவைத் தட்டினேன் திறந்து உள்ளே கூட்டிச் சென்றாள். வீடு ஆடம்பரமாக இருந்தது.
சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவள் வேலைக்காரியை அனுப்பி விட்டு மெல்லிய குரலில் என்னைக் கேட்டாள், " நீ சம்மதித்தால் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்." நான் புரியாமல் பார்க்க அவள் தொடர்ந்தாள், " போதை மருந்து கடத்தல் தான் என் தொழில். பக்கத்து நாட்டிலிருந்து போதை மருந்தை என் உடலில் கட்டி, கஸ்டம்ஸ் கண்ணில் படாமல் கொண்டு வந்து சேர்த்தால் பெரிய தொகை தருவார்கள்."

நான் பதில் பேசாது இருந்தேன். இரண்டு நாள் அவகாசம் தருகிறேன் நல்ல முடிவோடு வா என்று அனுப்பி வைத்தாள்.


நான் வசுமதிக்கு சரி என்று சொல்லி விட்டேன். என்னையும் வசுமதியையும் இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து போதை மருந்து கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. நாங்கள் இலங்கை போனோம். வாழ்வில் முதன் முதலாக வேறு நாட்டினை பார்த்த பரவசம். மேலிடத்திலிருந்து அனுமதி வரும் வரை நாங்கள் நாட்டை சுற்றிப் பார்க்க அனுமதி தரப்பட்டது.

பதட்டமாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். அந்த நாளும் வந்தது. ஒரு ஆணும், பெண்ணும் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்தார்கள். அந்தப் பெண் என் உடம்பில் கிலோ கணக்கில் போதை மருந்தை வைத்து டேப் சுற்றினாள். வெளியே தெரியாமல் இருக்க பெரிய சைஸ் உடைகள் அணிந்து கொண்டோம். விமான நிலையத்தில் இறக்கி விட்டார்கள். பாஸ்போர்ட், விசா சரி பார்த்து உள்ளே அனுப்பினார்கள். திடீரென்று எங்களை நோக்கி இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம். உடலில் இருந்து போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.....

...... ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தேன். இவ்வளவு நேரமும் கண்டது கனவா? வியர்வை ஆறாக ஓடியது. ஒரு முடிவுடன் எழுந்தேன். வசுமதிக்கு கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு வங்கி தென்பட்டது.

" சிறு தொழில் தொடங்க உதவி தேவையா? எங்களை அணுக்கவும்." என்று வங்கியின் முன்பு விளம்பர பலகை. இப்போது மனம் பாரம் குறைந்து இலேசானது போல் ஒரு உணர்வு. நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தேன்.

முற்றும்.

15 comments:

  1. அருமை வானதி .. நல்லா முடிச்சுடீங்க .(முடிஞ்சிடுச்சு இல்ல ??)

    ReplyDelete
  2. இன்று தான் இந்த வாழ்க்கையின் மூன்று பகுதியினையும் படித்தேன்...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. கதையை இழுக்காமல் நச்சுன்னு இருந்தது குட்டி தொடர்,ஒரு நீண்ட தொடரும் எழுதுங்க வானதி.

    ReplyDelete
  4. முடிவு அருமைங்க‌.... நான் நேற்று யூகித்த‌து வேறு மாதிரி... சூப்ப‌ர்..

    ReplyDelete
  5. நல்ல முடிவு வானதி!! நானும் வேறமாதிரிதான் யூகித்தேன்...பெரிய தொடர்கதை எழுதுங்க...

    ReplyDelete
  6. நல்லா முடிவு... நல்லா எழுதி இருக்கீங்க... கூடவே ஒரு மெசேஜ்ம் சொல்லி இருக்கீங்க... nice

    ReplyDelete
  7. நல்லபடியா முடிச்சுட்டீங்க.. ஆனாலும் கொஞ்சம் திக்குன்னு தான் இருந்தது.. எப்படியாகுமோ அந்தப் பொண்ணோட வாழ்க்கைன்னு..

    பூ ரொம்பவே அழகாயிருக்கு வானதி.. இப்போத் தான் பூத்த மாதிரி..

    ReplyDelete
  8. வானதி சும்மா என் ப்ளாக் பக்கம் ஒரு விசிட் அடியுங்களேன்.

    ReplyDelete
  9. வாணி கதையும் முடிவும் அருமை.
    என்னுடன் படித்த பிள்ளை ஒருவருக்கும் வசுமதி என்று பெயர்.

    அழகழகா பூக்களை மாத்தி மாத்திப் போடுறீங்கள்... எல்லாம் இப்போ பூக்கிறதோ?

    ReplyDelete
  10. எல்கே, முற்றும் போட்டாயிற்று. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
    கீதா ஆச்சல், நலமா? கருத்துக்கு நன்றி.
    ஆசியா அக்கா, நீண்ட தொடரா? பார்க்கலாம். நன்றி.
    நாடோடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. மேனகா, நன்றி.
    அப்பாவி தங்கமணி, நல்வரவு. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. சந்தனா, மிக்க நன்றி. பூ நான் காமராவில் சுட்டது. எங்கள் அயலார் வீட்டில் இருக்கு.
    இமா, நன்றி.
    ஆசியா அக்கா, வந்து விட்டேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
    அதீஸ், நன்றி. இங்கே இப்போது spring . பார்க்கவே ஆசையாக இருக்கு. இன்னும் நிறைய சுட இருக்கு. ஒவ்வொன்றாக சுடனும்.

    ReplyDelete
  13. Thanks, தக்குடுபாண்டி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!