இந்தக் கதையின் முதல் பகுதி படிக்க இங்கே செல்லுங்கள்..
வாழ்க்கை
அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போனேன். என் தோழி ஒருவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்தார். நானும் துணை நடிகை ஆகலாம் என்று முடிவு செய்தேன். நான் நினைத்தது போல இலகுவாக இருக்கவில்லை அந்த வேலை. காலை 6 மணிக்கு போய், வேகாத வெய்யிலில் காத்திருக்க வேண்டும். படத்தில் கதாநாயகி நடந்து போகும் போது குறுக்கும், நெடுக்குமாக நடக்க வேண்டும் அல்லது அவரின் தோழிகளில் ஒருவராக கும்பலோடு கும்பலாக நானும் நிற்க வேண்டும். சில சமயம் பாடல் காட்சிகளிலும் தலை காட்ட வேண்டும். சொற்ப வருமானமே வந்தது.
ஒரு நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. காலையிலிருந்து உண்ணாமல் இருந்த அசதியால் நான் கால் இடறிக் கீழே விழுந்து விட்டேன். காலில் நல்ல அடி. கீழே விழுந்த என்னை ஓடி வந்து தூக்கி நிறுத்தினான் ஒருவன். அவன் பெயர் மனோகர்.
முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் முதன் முதலாக காதல் வசப்பட்டேன். கல்யாணம் செய்து கொண்டோம். வாழ்க்கை இனிமையாகப் போனது. அடுத்த வருடமே மகன் பிறந்தான். மகனுக்கு 2 வயதிருக்கும் போது மனோகர் ஒரு விபத்தில் அகாலமரணமாகி விட்டான்.
வாழ்க்கையே இருண்டு விட்டது போல உணர்ந்தேன். கையிருப்பெல்லாம் கரைந்து கொண்டே வந்தது. எதிர்காலம் பற்றிய பயம் வந்தது. அம்மா மீண்டும் தையல் மெஸினை பரணிலிருந்து தூசி தட்டி எடுத்து விட்டார். ஏதாவது லோன் அப்ளை பண்ணு என்று அம்மா என்னிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார். நான் பதில் சொல்லாது மவுனம் காத்தேன்.
ஒரு நாள் கடை வீதியில் என் தோழி வசுமதியைக் கண்டேன். வசுமதியும் என்னைப் போலவே துணை நடிகையாக இருந்தவள். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விட்டாள்.
பகட்டாக ஆடை அணிந்து, காரில் வந்து இறங்கினாள். இவள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்கின்றாள்? அங்கிருந்த ஆடம்பரமான கடை ஒன்றில் நுழைந்தாள். நானும் பின் தொடர்ந்தேன். திரும்பி பார்த்தவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். ஆனால் என்னை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். " வித்யா, நாளை என் வீட்டுக்கு வா எல்லா விபரமும் சொல்கிறேன்" , என்று சொன்னாள்.
தொடரும்....
kathai pogum vazhi oralavu purinthu vittadhu
ReplyDeletemmm... good. What did you guess, LK ??
ReplyDeleteம்ம்.. பயங்கர வேகமா போகுது கதை..
ReplyDeleteஅது சரி, ஏன் துணை நடிகை? கதாநாயகி வாய்ப்பு தேடலையா? :)))
மாடலிங் செய்த வித்யா துணை நடிகையாகி,திருமணம் செய்து குழந்தையும் பெற்று நிம்மதியாக இருக்க வேண்டிய வேளையில் கணவன் இறந்தது,கஷ்டம் ,என்ன அருமையாக அழகாக நேர்த்தியாக எழுதி வருகிறீர்கள்.அடுத்த பதிவு எப்போது?பத்திரிக்கைகளில் தொடர் கதை படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் காணாமல் போய்விட்டது.நன்றி.பெரிய எழுத்தாளராக வர என் மனப்பூர்வமான வாழ்துக்கள்.
ReplyDeleteகதை விறுவிறுப்பா போகுது. அடிச்சு தூள் கிளப்புங்க
ReplyDeleteகாத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு.... தொடருங்கள்..
ReplyDeletewowww... love it..vanathy..
ReplyDeleteromba interesting aa poguthu..
adutha part-ku waiting :)
//நாளை என் வீட்டுக்கு வா எல்லா விபரமும் சொல்கிறேன்"// என்று சொல்லிப் போட்டு, வந்த பிறகு 'இங்க என்ன வேலை, வீட்டுக்கு வீடு வாசல்படி. போங்கோ எல்லாரும்,' எண்டு சொல்லப் படாது வாணி. ;)
ReplyDeleteநல்லா எழுதுறீங்கள் எண்டு சொல்லி அலுத்துப் போச்சுது எனக்கு. ;) நல்லா எழுதுறீங்கள். ;) கெதியா மிச்சத்தையும் எழுதுங்கோ.
கதை விறுவிறுப்பாக போகுது வானதி...அடுத்த பகுதி எப்போ????
ReplyDeleteசந்து, கதாநாயகி வாய்ப்பா? அது என்னைப் போல மிகமிகமிக... அழகிய பெண்களுக்குத் தான் அமையும் வாய்ப்புகள். சரி முறைக்க வேண்டாம்.
ReplyDeleteஆசியா அக்கா, தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி. நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும் போது மிக மிக உற்சாகமாக இருக்கு.
ReplyDeleteஜெய்லானி, நன்றி.
ReplyDeleteநாடோடி, நன்றி.
ஆனந்தி, நன்றி.
இமா, ம்ம்.. நீங்கள் சொன்ன மாதிரியே கதையை முடிக்கலாம் போல இருக்கே. நல்ல ஐடியா தந்ததற்கு நன்றிகள்.
மேனகா, நன்றி.
//What did you guess, LK ?? //
ReplyDeletenan sollita kathaila interest irukkathu neengale sollunga
எல்.கே நானும் கெஸ் செய்திருக்கேன்,ஆனால் இந்த எழுத்தாளர்கள் எப்படி வேண்டுமானாலும் கதையை ட்விஸ்ட் பண்ணுவாங்க.வானதி வித்தியாசமாக எதிர்பார்க்கிறோம்,அறுசுவையில் நீங்கள் எழுதிய நகைச்சுவையை நான் எப்பொழுதும் நினைத்து சிரிப்பதுண்டு.
ReplyDeleteஆசியா அக்கா, நன்றி. கதை விரைவில் வரும். நானும் அறுசுவை மெம்பர் தான் ஆனால் அந்த வின்னி நான் அல்ல. குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
ReplyDelete