Friday, April 23, 2010

அமெரிக்காவும் அபியும்!

ஊரில் எல்லோரும் அமெரிக்கா மாப்பிள்ளை வேண்டும் என்று தேடித்திரிய, எனக்கு வலிய வந்த வரன் பிரசாத். என் பெயர் அபிராமி (சுருக்கமாக அபி ).
கல்யாணமாகி சரியாக ஒரு வருடம் நாற்பது நாட்கள் . கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். அமெரிக்காவில் கூட்டுக் குடும்பமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இருங்கள் என் வீட்டாரைப் பற்றி சொல்கிறேன்.

அதோ வருகிறார் பாருங்கள் அவர் தான் என் மாமனார். புகையிரதவண்டி போல எப்போதும் அவர் வாயிலிருந்து புகை வந்தபடி இருக்கும். எனக்கு சிகரெட் மணம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும். என் மாமனாரிடம் எப்போதும் நான்கடி தள்ளி நின்றே கதைப்பேன்.

மாமனார் ( மனதிற்குள் ) என்ன அபி பார்வையே சரியில்லை. தேநீர் குடிக்க வேண்டும் போல இருக்கு. மனைவியிடம் கேட்க முடியாது. கேட்டாலும் வராது. இவளை விட்டால் வேறு கதி. சும்மா சிரித்து வைப்போம்.


நான் ( மனதிற்குள் ) ம்ம்ம் ... மாமனார் எதற்கோ அடிப் போடுறாப் போல இருக்கு.
( சத்தமாக ) எனக்கு தலைவலி. நான் படுக்கப் போறேன்.

அங்கே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது தான் என் மாமியார். சாரு கானிலிருந்து டாம் குரூஸ் வரை எல்லாமே அத்துப்படி. ஓய்வு எடுத்தே டயர்டா போய் விடுவார் என் மாமியார். நான் தான் சமையல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வீடு இரண்டு பட்டுவிடும்.

மாமியார்: ( மனதிற்குள் ) சமைக்காமல் என்ன வேடிக்கை? .
( சத்தமாக ) அபி , வந்து இப்படி இருந்து டி.வி. பாரும்மா.


நான் : ( மனதிற்குள் ) இதுக் கொன்றும் குறைச்சல் இல்லை.
( சத்தமாக ) பரவாயில்லை. நான் சமைக்கப் போகிறேன்.

இவர் பக்கத்திலேயே புதையல் காத்த பூதம் போல ஒன்று இருக்குமே அது எங்கே? ஓ.. அங்கே அறையில் மைக்கேல் ஜாக்ஸன் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது பாருங்க. மைக்கேல் ஜாக்ஸன் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார். இந்தக் கொடுமையை கேட்க பார்க்க ஆளில்லையா? இவர் யாரா? என் கணவரின் தம்பி ரோஹித் . பூசனிக்காய் போல இருப்பான். ஹாலோவீனுக்கு பூசனிக்காய் வாங்கி, பற்கள் செதுக்காமல் இவனை வாசலில் நிற்க வைக்கலாம்.

ரோஹித் : ( மனதிற்குள்) பசி வயிற்றைக் கிள்ளுது. சமைக்காமல் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு.
( சத்தமாக ) அண்ணி, என் ஆட்டம் எப்படி?நான்: ம்ம்... சூப்பர்.
( மனதிற்குள் ) இதற்கு மேல் நின்றால் ஆடியே கொலை செய்வான்.

அடுத்து என் கணவர். வேலைக்குப் போய் விட்டார். வீட்டில் நடப்பது எதுவுமே தெரியாது அல்லது தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டமாட்டார்.

இன்று என் பிறந்தநாள் என் மாமனார் அசத்தி விட்டார். நண்பர்கள், உறவினர்கள் என்று வீடே நிறைந்து விட்டது. கேக், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் என்று ஒரே ஆரவாரம்.

நான் உறவினர் பெண்ணிடம் : நான் ரொம்ப லக்கி. என் மாமனார், மாமியார் போல உலகத்தில் யாருமே இல்லை. ரோஹித்தும் அண்ணி அண்ணி என்று சுற்றி வருவான்.

மாமியார் : எங்க மருமகள் ரொம்ப நல்லவள். என்னை சமையல் அறைப்பக்கம் போகவே விடமாட்டாள். பெண்ணை நல்லா வளர்த்திருக்கிறார்கள்.

மாமனார் : என் மருமகள் சொக்கத்தங்கம். எனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்வாள் ( இலேசாக கண்கள் கலங்குகின்றது).

விருந்தினர்கள் எல்லோரும் போய் விட்டார்கள். வீட்டில் எல்லோரும் படுத்து விட்டார்கள்.

ம்ம்... என்ன வேடிக்கை இங்கே. என் குடும்பத்தில் மூக்கை நுழைத்தது போதும். எல்லோரும் போய் ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். நாங்கள் அடிச்சுக்குவோம் பிறகு அணைத்துக் கொள்வோம். எல்லோரும் போய்ட்டு வாங்க.

11 comments:

 1. வானதி அப்படியே கண் முன்னாடி நடப்பை நிறுத்தீருக்கீங்க. சின்னக்கதைகள் எனக்கு பிடிக்கும்.டக்கென்று வாசித்து முடித்து விடலாம்,சொல்ல வந்ததையும் தெளிவாக சொல்லி இருக்கீங்க.இனி உங்கள் கதையின் ரசிகைகளில் நானும் ஒருத்தி.

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்ம்ம்....... ந‌ட‌க‌ட்டும் ந‌ட‌க‌ட்டும்.... க‌தை ந‌ல்ல‌ இருக்குங்க‌.

  ReplyDelete
 3. //ம்ம்... என்ன வேடிக்கை இங்கே. என் குடும்பத்தில் மூக்கை நுழைத்தது போதும். எல்லோரும் போய் ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். நாங்கள் அடிச்சுக்குவோம் பிறகு அணைத்துக் கொள்வோம். எல்லோரும் போய்ட்டு வாங்க. //
  ;)

  ReplyDelete
 4. ஆசியா அக்கா, மிக்க நன்றி. எனக்கும் சிறுகதைகள் பிடிக்கும். சொல்ல வந்ததை டக்கென்று சொல்லி விடலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. நாடோடி, நன்றி.
  இமா, நன்றி.

  ReplyDelete
 6. மிகவும் நன்றாக , இருந்தது.. நன்றி.. following you

  ReplyDelete
 7. ithu naan atikkadi seiyum sattini.
  arumai.
  ithu ponra suvaiyaana easiyaana kurippugal tharavum.

  ReplyDelete
 8. நல்ல கதை...
  அருமையான நடை...

  ம்... இது தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. Srividhya, வாங்க. நல்வரவு. கருத்துக்கு நன்றி.

  குமார், நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வேறு ரெசிப்பி போடுகிறேன். நன்றி.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. கணேசன், வாங்க நல்வரவு. தொடர்ந்து வாங்கோ. நன்றி.

  ReplyDelete
 11. செம்ம தமாஷ் வானதி.. மாமியார் ஓய்வு எடுத்தே டயர்டாயிடுவாரா? புதையல் காத்த பூதம்.. ஹாஹ்ஹா.. புன்னகைத்துக்கொண்டே படித்தேன்..

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!