Tuesday, April 20, 2010

வாழ்க்கை

என் பெயர் வித்யா.
நான் ஷோகேஸில் இருந்த பொம்மை அணிந்திருந்த சல்வார் வேண்டும் என்று அம்மாவோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம் தான் அவர் எங்களை நோக்கி வந்தார். உயரமாக, கண்ணாடி அணிந்திருந்தார். பெயர் தில்லை, ஊர் சென்னை என்றார்.
" உங்கள் பெண்ணின் அழகிற்கு அவர் மாடலிங் போனால் சிறப்பான எதிர்காலம் உண்டு " என்றார்.
அம்மா தயங்கினார். அப்பா இறந்து போய் 5 வருடங்கள் ஆகின்றது. அப்பாவுக்கு குடிப்பழக்கம் அதோடு போதைப் பழக்கமும் தொற்றிக் கொண்டது. அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை. அதோடு போதிய பொருளாதார வசதியின்மையும் அப்பாவின் மரணத்திற்கு காரணமானது.

தில்லை அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்து விட்டுப் போய் விட்டார். அம்மாவிற்கு என்னை மாடலிங் துறைக்கு அனுப்ப கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. வீடு வந்து சேர்ந்தோம்.

இதை வீடு என்று சொல்லவே அறுகதை இல்லை. ஒரு அறை, ஒரு ஹால். ஹாலின் ஒரு புறத்தை அடைத்து சமையல் அறை என்று சொன்னார் வீட்டு ஓனர். ஹாலின் மறு புறம் அம்மாவின் தையல் மெஸின், தைக்க வேண்டிய துணிகள் குவிந்திருந்தன. அம்மாவின் தையல் தான் எங்கள் இருவருக்கும் சோறு போட்டது. மேல் தளத்தில் மூன்று வீடுகள். கீழ் தளத்தில் மூன்று வீடுகள். எல்லோருக்கும் பொதுவாக இரண்டு பாத்ரூம்கள். காலையில் எழும்பி போய் லைனில் நின்று, குளித்து வருவதற்குள் வாழ்க்கையே வெறுத்து விடும்.

நான் அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லி விட்டேன். நான் கட்டாயம் மாடலிங் போகப் போகிறேன் என்பதை. இது வலிய வந்த சீதேவி. காலால் எட்டி உதைக்காமல் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட யோசனையின் பின்னர் அம்மா அரை மனதுடன் சம்மதித்தார்.

நான் பள்ளி போவதை நிப்பாட்டினேன். உலகமே என் காலடியில் இருப்பதை போன்ற உணர்வு. தில்லைக்கு என் முடிவை சொல்லி விட்டேன். அடுத்த வாரமே தில்லை வந்தார். எங்களை அவரின் அலுவலகம் கூட்டிச் சென்றார். எனக்கு எப்படி நடப்பது, சிரிப்பது, காமராவை பார்ப்பது என்று பல விடயங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. அம்மா பிரமிப்பு அடங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

நான் முதன் முதலில் மாடலிங் பண்ணியது ஒரு புடவை விளம்பரம். விலையுயர்ந்த சேலையை கண்ணால் மட்டுமே பார்த்து ரசித்த எனக்கு அவ்வளவு விலை உயர்ந்த புடவையை அணிந்திருக்கிறேன் என்று நினைவே இனிமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மளமளவென வாய்ப்புகள் பெருகியது. பணமும் பெருகியது. திரும்பிய பக்கமெல்லாம் என் விளம்பரங்களே. நாங்கள் வேறு வீடு போனோம். வசதி வாய்ப்புகள் பெருகியது. அம்மாவின் தையல் மெஸினை எடுத்து பரணில் போட்டேன்.

தொடர்ந்து நான்கு வருடங்கள் மாடலிங் துறையில் கொடி கட்டிப் பறந்தேன். வடக்கில் இருந்து வந்த பெண்களால் என் மாடலிங் தொழில் ஒரு முடிவுக்கு வந்தது. பிஸியாக இருந்த நான் ஓரங்கட்டப்பட்டேன். தில்லையும் கைவிரித்து விட்டார்.

தொடரும்.....

17 comments:

 1. Kadhai romba nallaa irukku..
  waiting for the continuation.. :)

  ReplyDelete
 2. m... what happened after that! ;)

  ReplyDelete
 3. தொடரா ... சீக்கிரமா போட்டுடுங்க !!!நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. தொடர்கதை நல்லாயிருக்கு...
  அடுத்த பகுதி படிக்க ஆவலை ஏற்படுத்திவிட்டது உங்களின் முதல் பகுதி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. தொட‌ர்க‌தை ந‌ல்லா இருக்கு.... தொட‌ருங்க‌ள்...

  ReplyDelete
 6. sema fast flow .. waiting for next chapter

  ReplyDelete
 7. ஆனந்தி, நலமா? ம்ம்... விரைவில் அடுத்த தொடர் வரும்.

  இமா, ஆனந்திக்கு போட்ட பதிலை படியுங்கோ.

  ஜெய்லானி, இமாவுக்கு சொல்லிய பதிலே உங்களுக்கும். நன்றி.

  ReplyDelete
 8. குமார், நன்றி. வருகைக்கும் கருத்துக்கும்.

  நாடோடி( புனை பெயர் நல்லா இருக்கு), மிக்க நன்றி.

  LK, வாங்கோ! நல்வரவு. விரைவில் வரும்.

  ReplyDelete
 9. வானதி.. நிறையக் கதை எழுதிட்டீங்க.. ஒன்னொன்னா படிச்சுட்டு வாறன்..

  இந்தக் கதை நல்லாயிருக்கு வானதி... தொடருங்க சீக்கிரமா.. கதாநாயகிக்கு பேரொன்னு வையுங்க..

  ReplyDelete
 10. etho puthusa oru kathai update kamichatu. vanthu paartha kanom. enna acchu :o

  ReplyDelete
 11. சந்து, பெயர் தானே வைச்சிட்டாப் போச்சு. நல்லா ஸ்டைலான பெயரா வைக்கணும். வருகைக்கு நன்றி.

  மேனகா, வாங்கோ. நன்றி.

  ReplyDelete
 12. ஹிஹி... அது ஒரு விபத்து. இன்னும் எழுதி முடிக்கவில்லை. பிறகு போடுறேன். நன்றி.

  ReplyDelete
 13. மலர்கள் அழகு, மணப்பெண் அலங்காரம் மாதிரி... ;)

  நானும் விபத்தைச் சந்தித்தேன் வாணி. ;)

  ReplyDelete
 14. Imma, thanks.
  //நானும் விபத்தைச் சந்தித்தேன் வாணி. ;) //
  I hope u r fine now!!!

  ReplyDelete
 15. வானதி,தொடர் ஆரம்பமே ஆர்வமாக இருக்கு.தொடருங்கள்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!