Sunday, April 11, 2010

விருது





ஸாதிகா அக்கா கொடுத்த விருது.
என் சிறு கதைகளை பாராட்டி விருது கொடுத்துள்ளார். என் கதைகளுக்கு கிடைத்த பெரிய அங்கிகாரம். என் மனதில் தோன்றும், அல்லது என் கண் முன்னே நடந்த சிறு சம்பவங்கள், நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து, அதை வார்த்தைகளால் அலங்கரித்து, படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் எழுத வேண்டும். இந்த கதைகளை எப்படி முடிப்பது என்பதே எனக்கு பெரிய சவாலான விடயம். பெரும்பாலான நேரங்களில் கதை எழுதி எப்படி முடிப்பது என்று தெரியாமல் வாரக்கணக்கில் யோசித்து இருக்கிறேன்.

திருமதி. ரோஸூம் நானும் கதை ஒரு நகைச்சுவையான கதை. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து மீதி 99% என் கற்பனை கலந்து எழுதினேன்.
சிவகாமி, ஆயா இரு கதைகளும் முடிவு எழுத மிகவும் நாட்கள் எடுத்தன.

என் கதைகளின் முதல் வாசகர் என் கணவரே. அவருக்கு என் நன்றி.
அடுத்தது என் தோழி இமா.
தொடர்ந்து எழுதுங்கள் என்று என்னை எப்போதும் உற்சாகப்படுத்துபவர்.
தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பியோ அல்லது பின்னூட்டம் மூலமோ என்னை ஊக்கப்படுத்துபவர்.
நன்றி, இமா.

அத்திபூத்தாற்போல வந்தாலும் என் கதைகளை விமர்சிப்பவர் சந்தனா.
எனக்கும் எழுத வரும் என்று சந்தனா தந்த உற்சாகமான வரிகள் எனக்கு எப்போதும் டானிக்.
சந்து, நன்றி.
அடுத்தது.... அதிரா.
ஒரு மாமங்கத்துக்கு ஒரு தடவை வந்தாலும் இவரின் பின்னூட்டங்கள் படிக்க சுவாரசியமானவை.
தொடர்ந்து எழுதுங்கோ யார் படிக்காவிட்டாலும் நான் படிப்பேன் என்று பின்னூட்டம் இடும் உற்சாக ஊசி.

அதீஸ், நன்றி.

ஒரு வரியில் பின்னூட்டம் இடும் அண்ணாமையானுக்கு, நன்றி.

பல வேலைகளுக்கு இடையிலும் என்னை வந்து ஊக்கப்படுத்தும் மனோ அக்கா, செல்வி அக்கா, மகி, மேனகா, விஜி, ஹர்சினி அம்மா, பிரபா, மற்றும் என் கதைகளை படிக்கும் எல்லோருக்கும் என் நன்றிகள்.

எனக்கு விருது கொடுத்த ஸாதிகா அக்காவிற்கு என் நன்றிகள்.

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முதலில், விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    விருதினை அறிமுகப்படுத்தியுள்ள விதம் அழகு வாணி. ;) தெரிந்துள்ள படம், நிறப் பொருத்தம் எல்லாமே அழகு. ;)

    கதை எழுதுறதை 'மேல வைங்கோ' என்று சொன்னால் என் பேரை மேல வைக்கிறீங்கள். ;) சங்கடமாக இருக்கு. ;) இனிமேல் கதையை மட்டும்தான் மேல வைக்க வேணும். ;)

    Thanks dear. ;)

    ReplyDelete
  3. விருதுக்கு வாழ்த்துக்கள் வானதி.

    ReplyDelete
  4. இமா, சரி இனிமேல் கதைகளை மேலே வைக்கிறேன். நன்றி.
    மேனகா, நன்றி.
    மகி, காலையில் இருந்த comment ஐ காணவில்லை. Any way நன்றி.

    ReplyDelete
  5. புது வரவுகள் பவி, சாங் & ஜெயா, நல்வரவு. தொடர்ந்து வாங்கோ.

    ReplyDelete
  6. இன்னிக்கு அத்திப் பூத்திடுச்சு போல :) எனக்கும் நீங்க எல்லாருந்தான் டானிக் வானதி.. ஆ.. மறுபடியும் கண் கலங்குதே.. இந்த அதீஸ் கிட்டயிருந்து எனக்கும் தொற்றிகிட்ட நோயிது.. ம்ம்.. நன்றி..

    ReplyDelete
  7. சந்தனா, சரி. அழவேண்டாம். அதிரா வரப் போகிறார்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!