Saturday, April 10, 2010

வெண்டிக்காய் தீயல்


தேவையான பொருட்கள்:

வெண்டிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய் - 6
புளி - எலுமிச்சை அளவு
உப்பு

புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெண்டிக்காயை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.
சட்டியில் வெண்டிக்காய், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், துண்டாக நறுக்கிய மிளகாய், புளித்தண்ணீர், உப்பு சேர்க்கவும்.


சட்டியை அடுப்பில் வைத்து, சிம்மரில் வைத்து, மூடிவிடவும். வெண்டிக்காய் வெந்ததும் இறக்கவும்.

குழம்பு வகைகள், ரைஸ் உடன் சாப்பிட ஏற்ற சைட் டிஷ்.

இன்னும் சில ரெசிப்பிகள்
இடியப்பம்
மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்

7 comments:

  1. சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

    ReplyDelete
  2. வாணி...வெண்டிக்காய்த் தீயல் பழப்புளி போட்டுச் செய்திருப்பது வித்தியாசமானதாக இருக்கு. செய்துதான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  3. வானதி!

    வெண்டைக்காய் தீயல் குறைந்த பொருள்களுடன் புளிச்சாறில் செய்வது வித்தியாசமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. குறிப்பு நன்றாக இருக்கிறது வாணி. ;)

    விருது பெற்றமைக்கு (சிறப்பாக சிறுகதைகளுக்காக) வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete
  5. அதிரா, வித்யாசமான சுவையுடன் இருக்கும் செய்து பாருங்கள்.
    இமா, வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.
    மனோ அக்கா, நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!