Tuesday, March 9, 2010
மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - 1
வெங்காயம் - பாதி
மஞ்சள் - சிறிது
உப்பு -தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி தழை- சிறிது
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
கிழங்கை சுத்தம் செய்து, ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டி வைக்கவும்,
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
சட்டியில் கிழங்கு, உப்பு, மஞ்சள், தண்ணீர் விட்டு அவிக்கவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் தண்ணீரை வடித்து விட்டு, மிளகாய்த்தூள், தேவையெனில் உப்பு பிரட்டி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெய் விட்டு கிழங்கை போடவும். சிறிது பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்ககவும்.
கிழங்கு பொரிந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குறிப்பு:
இந்த ரெசிப்பிக்கு அதிக எண்ணெய் தேவையில்லை.
கிழங்கை வேக வைத்து பொரிப்பதால் விரைவாக பொரிந்து விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
ஊர்ல மரவள்ளி கிழங்கு எப்பவாவது வாங்குவோம்..இங்க வந்தப்புறம் வாங்கவே இல்ல.நல்லாயிருக்கு வானதி!
ReplyDeleteமகி, எனக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி இது. நன்றி.
ReplyDeleteமரவள்ளிக் கிழங்கு பிரட்டல் நல்லாயிருக்கு super
ReplyDeleteyum ;p
ReplyDeleteImma & Piraba, Thanks!
ReplyDelete