Monday, April 5, 2010

தேங்காய் சட்னி ( Coconut chutney )

தேவையான பொருட்கள்:
தேங்காய் பூ- 1 கப்
பொட்டுக் கடலை - 1/3 கப்
வெங்காயம் - பாதி
மிளகாய் - 8
இஞ்சி - 1 துண்டு
புளி - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு

தாளிக்க
வெங்காயம் -
கறிவேப்பிலை
கடுகு
சின்னசீரகம்

தாளித்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை லேசாக வதக்கி எடுக்கவும்.
மிக்ஸியில் மிளகாய், பொட்டுக் கடலை, இஞ்சி போட்டு நன்கு அரைக்கவும்.
மிளகாய் கலவை நன்கு அரைபட்டதும், தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், சின்னசீரகம் சேர்த்து அரைக்கவும்.
சட்னியை சட்டியில் கொட்டி புளி, உப்பு, தாளித்த கலவை கொட்டிக் கலக்கவும்.
தோசை, இட்லிக்கு ஏற்ற சட்னி.


குறிப்பு:
காரம் அதிகம் விரும்பாதவர்கள் மிளகாயின் அளவைக் குறைத்து செய்யலாம்.

5 comments:

  1. மேனகா, அண்ணாமலையான், நன்றி.

    ReplyDelete
  2. அழகாய், குட்டிக் குட்டியாகக் குறிப்புக் கொடுக்கிறீர்கள் வாணி. படங்களும் பளீர். ;) பாராட்டுக்கள்.

    நிச்சயம் எனக்கு 8 மிளகாய்கள் காரம்தான். நான் உங்கள் வீட்டுக்கு வரும்போது நினைவாகக் குறைத்துப் போடுங்கள். ;)

    ReplyDelete
  3. இமா, nanRi
    //நான் உங்கள் வீட்டுக்கு வரும்போது நினைவாகக் குறைத்துப் போடுங்கள். ;)//

    ம்ம்ம்.... கட்டாயம் ஞாபகம் வைத்திருப்பேன். நீங்கள் வரும்போது 2 மிளகாய் தான்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!