Wednesday, March 24, 2010
வதக்கல் குழம்பு
தேவையானவை
கத்தரிக்காய் - 1
வாழைக்காய் - 1
வெங்காயம் - பாதி
பூண்டு - 5 பல்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - கொஞ்சம்
மிளகாய் - 3
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம், பூண்டு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை( லைட் ப்ரவுன் நிறம்) பொரிக்கவும். பொரித்த துண்டுகளை பேப்பர் டவலில் பரவி விடவும்.
இதே போல வாழைக்காயையும் பொரிக்கவும்.
வேறு சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை வதக்கவும்.
அடிகனமான சட்டியில் தண்ணீரை விட்டு, அதில் மிளகாய்த்தூள், வெந்தயம், புளித்தண்ணீர்,உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் கத்தரிக்காய், வாழைக்காய், வெங்காயம் கலவை சேர்க்கவும்.
தண்ணீர் வற்றியதும் விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இந்த வதக்கல் குழம்பு ரைஸ், புட்டு, இடியப்பம் இவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்கு வானதி...ஆனா,//சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கத்தரிக்காயை( லைட் ப்ரவுன் நிறம்) பொரிக்கவும்.// இதான் கொஞ்சம் இடிக்குது! :) டீப் ப்ரை தானே சொல்லறீங்க?
ReplyDeleteMahi, when you fry vegetables you can fry them into different textures. Most people love crispy/ deep fried items. But for this recipe I slightly browned the egg plants. I like it this way. I think this will help you.
ReplyDeleteThanks.