Sunday, March 14, 2010

முள்ளங்கி சுண்டல்


தேவையானவை:


முள்ளங்கி - 1 கட்டு
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 8
பூண்டு - 2 பல்
தேங்காய்பூ - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம்- தலா 1 டீஸ்பூன்
குடமிளகாய் - பாதி
வெந்தயம் சோம்பு பவுடர்- 1 டீஸ்பூன்

முள்ளங்கியை சுத்தம் செய்து, துருவிக் கொள்ளவும்.
துருவும் போது வரும் தண்ணீரை நன்கு பிழிந்து கொள்ளவும்.
முள்ளங்கியின் இலைகளை சுத்தம் செய்து, பொடியாக அரிந்து வைக்கவும்.


வெங்காயம், பூண்டு, மிளகாய், குடமிளகாய் பொடியாக அரிந்து வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, குடமிளகாய், மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மஞ்சள், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
துருவிய முள்ளங்கி சேர்த்து கிளறவும்.
முள்ளங்கி போட்டு 1 நிமிடத்தின் பிறகு பொடியாக நறுக்கிய முள்ளங்கி இலைகளை சேர்க்கவும்.
இறுதியில் வெந்தயம் சோம்பு பவுடர் சேர்க்கவும்.
சுவையான முள்ளங்கி சுண்டல் தயார்.


குறிப்பு:
அடுப்பிலிருந்து இறக்கிய பின்பே உப்பு போட வேண்டும்.
முள்ளங்கி தண்ணீரை ரசத்தில் சேர்க்கலாம்.
முள்ளங்கியின் தோலை நீக்கியும் செய்யலாம். தோலுடனும் துருவி செய்யலாம்.

8 comments:

  1. நாங்க பொரியல்னு சொல்லறதை நீங்க சுண்டல்-னு சொல்லறீங்க..நல்லாருக்கு வானதி முள்ளங்கி சுண்டல்.

    ReplyDelete
  2. மகி, Deep fried items தான் பொரியல் என்று சொல்வோம். கொஞ்சமாக எண்ணெய் பாவித்து செய்யும் உணவு வகைகள் சுண்டல்.

    ReplyDelete
  3. net-la paarththaal ellaam sundalaath thaan irukkum. ;) avaravar vaasiththu sariyaa vilankik kolla vendiyathu thaan. ;)

    ReplyDelete
  4. நாங்க பொரியல்னு சொல்லறதை நீங்க சுண்டல்-னு சொல்லறீங்க..நல்லாருக்கு

    ReplyDelete
  5. அதையேதான் சில பேர் 'வறுவல்' என்று சொல்றீங்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு பிரபா. ;)

    ReplyDelete
  6. என்ன பெயர் என்றால் என்ன இமா?. அதுவா முக்கியம். சாப்பாடு தானே முக்கியம்..ஹி ஹி...
    பிரபா, நன்றி. இமாவின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கோ.

    ReplyDelete
  7. வறுவல்னா வெங்காயம்,தேங்காய் போடாமல் வெறும் பொடி வகைகள் மட்டும் சேர்த்து தண்ணீர் அதிகம் தெளிக்காமல் வதக்குவது இமா!

    எப்படி,எப்படி,எப்படி உங்களுக்கு இப்படில்லாம் டவுட்டு டவுட்டா வருது?? டவுட்டு இமா-ன்னு கூப்பிடலாம் போல இருக்கே உங்களை! :D ;)

    ReplyDelete
  8. அது சரி. சாப்பாடு தானே முக்கியம். ;)

    மஹி, கொஞ்சம் ரைமிங்கா ஏதாவது சொல்லுங்கோ. ;)

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!