பேப்பர்
க்ராஃப்ட் பேப்பர்ஸ்
டேப்
பென்சில்
ஒரு பேப்பரில் உங்களுக்கு பிடித்த டிசைன் வரைந்து கொள்ளவும்.
அதில் படத்தில் காட்டியபடி கோடுகள் போட்டு கொள்ளவும்.
இந்த படத்தின் அவுட் லைனை மட்டும் வாழ்த்து அட்டையில் ட்ரேஷ் பண்ணவும்.
பின்னர் கூரான கத்தியால்/கத்தரிக்கோலால் படத்தில் காட்டியபடி டிஸைனை வெட்டி எடுக்கவும்.
வாழ்த்து அட்டையை திருப்பி வைத்து, கோடுகள் போட்ட பேப்பரின் மேலே வைத்து ஓரத்தில் டேப்(அசையாமல்)ஒட்டி விடவும்.
க்ராஃப்ட் பேப்பரை நீளமாக வெட்டி, ஓரத்தில் மடித்து நன்கு அழுத்தி(crease) விடவும்.
அழுத்தி மடித்த பேப்பரை 1 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து இருபுறமும் டேப் (வாழ்த்து அட்டையின் மேல்) ஒட்டவும்.
வேறு கலரில் பேப்பர் எடுத்து, மடித்து 2 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து டேப்பால் ஒட்டவும்.
ஒற்றைப்படை(odd numbers) இலக்கத்திற்கு ஒரே கலரிலும், இரட்டைப்படை (even numbers)இலக்கத்திற்கு வேறு கலரிலும் ஒட்டவும்.
1, 2, 3 என்ற வரிசைப்படியே ஒட்ட வேண்டும்.
நடுவில் நம்பரில்லாத பகுதிக்கு பூ, இலை என்று விரும்பிய டிஸைன் ஒட்டலாம்.
அழகிய ஐரிஸ் ஃபோல்டிங் கார்ட் தயார்.
tkz 4 da instructions vany. wil try soon.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு இந்த வாழ்த்து அட்டை.
ReplyDeleteஎந்த பேப்பரில் செய்திங்க வானதி.
கெதியா வந்து உங்களுக்கு பிடித்த பத்து பென்கள் தொடர் பதிவில் கலந்து தொடருங்க.
Imma, thanks.
ReplyDeleteவிஜி, thanks. மெல்லிய க்ராஃப்ட் பேப்பர் யூஸ் பண்ணினேன்.
ReplyDeleteஎனக்கு பிடித்த 10 பெண்களா???கொஞ்சம் டைம் தாங்கோ. அதிரா எனக்கு home work தந்துள்ளார். யோசித்து எழுதுகிறேன்.
சூப்பர் வாணி. பொறுமையாகச் செய்து எங்கட இமாவை அடிச்சிட்டீங்க.... கடவுளே படித்ததும் கிழித்திடுங்கோ... மீ. எஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteOk Take your own time. Thanks.
ReplyDeleteஅதிரா, என் குரு இமா தான். நான் அவரின் உண்மையான சிஷ்யை.
ReplyDeleteஅன்புள்ள வானதி!
ReplyDeleteவாழ்த்து அட்டை மிகவும் அழகாக இருக்கிறது. ரொம்பவும் வித்தியாசமான முயற்சி!
உங்கள் தளம் மேன்மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள்!!
மனோ அக்கா, நன்றி. தொடர்ந்து வாங்கோ.
ReplyDeleteசிரிக்காமல் சீரியஸாக சொல்லி இருக்கிறீங்கள் வாணி. எனக்கு என்ன சொல்றது எண்டே தெரியேல்ல.
ReplyDeleteநான் ஏதோ என் மனதில் படுவதைச் செய்து குறிப்புக் கொடுத்தால் நீங்கள் பெரிய வார்த்தைகளாகச் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு ரசனை இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. முயற்சிக்கிறீர்கள். எடுத்துக் கொள்ளும் வேலையை அழகாகமுடிக்கிறீர்கள். இதில் நடுவே நான் எங்கே வந்தேன். ;)
உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சிறக்க எனது பிரார்த்தனைகள்.
அன்புடன் இமா
இமா, Thanks.என் மனதில் இருந்ததை சொன்னேன்.
ReplyDeleteசரி சரி.... அழ வேண்டாம். ஒரு blanket (டவல் பத்தாது) அனுப்புறேன். கண்ணை துடையுங்கோ.
குழப்படி வாணி. ;)
ReplyDelete:)..kik....kik...kik..... Imaa!! do you want a towel??? I have a new... one..(nanku thochchathu:))
ReplyDeleteவானு, ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பராயிருக்கு வானதி!! இன்றுதான் உங்கள் ப்ளாக்பக்கம் தெரிந்து வந்தேன்.
ReplyDeleteNice work Vanathi! :)
ReplyDeleteசெல்வி அக்கா, நன்றி.
ReplyDeleteமேனகா, நலமா. ஷிவானி நலமா?
மகி, நன்றி.