நான் வெள்ளை உடை மாட்டிக் கொண்டு அப்படியே கம்பீரமாக நடந்து வருகிறேன். கட்டிலில் படுத்திருக்கும் நோயாளியை செக் பண்ணுகிறேன். திடீரென்று முகத்தில் ஏதோ தொப்பென்று விழுகிறது. அட தலையணை.... என் சகோதரி போகிற போக்கில் என் மேல் வீசி விட்டு போகிறார். இவ்வளவு நேரமும் நான் கண்டது கனவா?. எழுந்து நேரம் பார்க்கிறேன். காலை 6 மணி. ஸ்கூலுக்கு நேரமாச்சு.
டாக்டராக வேண்டும் என்பதே என் கனவு. என் தோழிக்கும் இதே கனவு தான். அவள் சொன்னாள், " வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படிப்பதென்றால் எங்காவது வாலண்டியராக வேலை செய்தால் அது ஒரு பெரிய ப்ளஸ். அதாவது ஆஸ்பத்திரி, நேர்ஸிங் ஹோம், இராணுவம்.... இப்படி எங்காவது தொண்டர் வேலை பார்க்க வேண்டும்."
இதெல்லாம் ஆவுற காரியமா?. டாக்டராக வேண்டும் என்று ஆசை தான், ஆனால் இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும். எனவே நோ ஆஸ்பத்திரியில் தொண்டர் வேலை.
இராணுவம்.... எங்காவது புயல், நிலநடுக்கம், சண்டை நடக்கும் இடத்திற்கு அனுப்பினால். நினைக்கவே தூக்கம் வரமாட்டுதாம். அம்மாவை விட்டு பிரிந்து நான் எப்படி இருப்பேன்.
இறுதியில் நானும் தோழியும் சேர்ந்து முடிவு செய்த இடம்....முதியோர் காப்பகம்.
போய் கேட்டதும் வேலையை தூக்கி தந்து விட்டார்கள்.
சம்மர் லீவில் வேலை. காலை 8 மணிக்கு வேலையில் நிற்க வேண்டும்.
முதியவர்களுக்கு பேப்பர், புத்தகம் வாசிப்பது, சில சமயம் அவர்கள் தட்டி விளையாடும் பந்துகளை தூக்கி போடுவது, கூஜா தூக்குவது என்று பல வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்ய வேண்டும்,
ரோஸ்- காப்பகத்தில் மிகவும் சிடுமூஞ்சி. எவருடனும் பேச மாட்டார். கைத்தடியை தட்டி தட்டி நடப்பார்.
சில நேரங்களில் நான் அவருக்கு பேப்பர், புத்தகம் படித்து இருக்கிறேன். கைத்தடியை நிலத்தில் தட்டியபடியே கேட்டுக் கொண்டிருப்பார்.
ஒரு நாள் ரோஸின் மகள் வந்தார். இருவருக்கும் ஏதோ வாக்கு வாதம் நடந்தது. பூட்டிய அறையிலிருந்து சத்தம் வெளியே கேட்டது. சிறிது நேரத்தில் ரோஸின் மகள் கோபத்துடன் புறப்பட்டு போய் விட்டார்.
அறையை விட்டு வெளியே வந்த ரோஸ் என்னிடம் பேப்பர் படிக்க சொல்லிவிட்டு அமர்ந்தார். நான் படிக்கத் தொடங்கியதும் சிறிது நேரத்தில் கேவி கேவி அழத் தொடங்கி விட்டார். எனக்கு அவர் மகள் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு போனது ஞாபகம் வந்தது. நான் ரோஸின் தலையில் என் கையை வைத்து மெதுவாக வருடிக் கொடுத்தேன். அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.....ரோஸின் டோப்பா( wig) என் கையில். அவர் விக் அணியும் விடயமே அப்போது தான் எனக்கு தெரியும். நான் திகைத்து நிற்க.... மற்றவர்கள் சிரிக்க... ரோஸ் அவமானத்தில் குறுகிப்போனார்.
என்னை சுட்டெரிப்பது போல பார்த்தவர். அவரின் கைத்தடியை என் காலில் வைத்து அழுத்தி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். இதெல்லாம் சில நொடிகளில் யாருக்குமே தெரியாமல் நடந்து முடிந்தது.
வலியால் துடித்துப் போனேன். யாரிடம் போய் முறையிடுவது. யார் நம்புவார்கள். உயிரே போகும் அளவு வலி. நொண்டியபடியே வெளியே வந்தேன். ரோஸ் தாக்கிய இடத்தில் மெதுவாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
வெளியே வரும்போது என் தோழியையும் எச்சரிக்கை செய்து விட்டே வந்தேன்.
டாக்டராகும் ஆசையை கொஞ்ச நாட்கள் மூட்டை கட்டி வைத்து விட்டேன். அடுத்த லீவில் பார்க்கலாம்.
குறிப்பு:
இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனை.
இது கற்பனைக்கதை மாதிரி தெரியலே வானதி.. ம்ம்.. நம்பறோம்.. :))
ReplyDeleteகதை சூப்பர் எப்பலேருந்து இந்த தொழில்?ம். கலக்குங்க.எழுத்தாளார் வானதி வருக வருக...
ReplyDeleteVaanee.... ;) kalakkal. ;)
ReplyDeletekuttik kathai thaan enraalum nallaa eluthi irukkireenkal.
intha @}->- Ms Rosukku illai, Vanykku. ;)
ஹாய் வானு,
ReplyDeleteஉன் கதையெழுதும் திறமை தான் அறுசுவையிலேயே தெரியுமே! இது நிஜம் என்றல்லவா நான் நினைத்தேன்:-) வாழ்த்துக்கள்!!
வா.... வா... வாணி நீங்களுமா? நன்றாகவே எழுதிறீங்கள்.. பாவம் ரோஸ், விக் கையில வாற அளவுக்கா தலையைத் தடவுறது???? நீங்க கனடாவில இருக்கிறீங்க என நினைத்தேன் அமெரிக்கா என போட்டிருக்கிறீங்க?
ReplyDeleteஅட நம்புங்கப்பா!! இது கற்பனைக் கதையே!!!
ReplyDeleteநன்றி, சந்தனா.
விஜி, நன்றி. கொஞ்ச காலமா இந்த தொழிலும் செய்கிறேன்.
ReplyDeleteசெல்வி அக்கா, வாழ்த்துக்கு நன்றி. நான் அறுசுவையில் புலம்பியதை நீங்களும் பார்த்தீர்களா?
ReplyDeleteஇமா, நன்றி.
ReplyDeleteபனித்துளி சங்கர்(பெயர் நல்லா இருக்கு), அனிதா வாங்கோ..வாங்கோ.நல்வரவு.
ReplyDeleteஅதிரா, தாங்ஸ்ஸ்ஸ்... நான் முன்பு கனடா... தற்போது அமெரிக்கா(10 வருடங்களாக). ரோஸ் இறுக்கமாக விக் அணியாமல் விட்டது அவர் பிழை....
ReplyDeleteகதை முடிஞ்சதோ?? அப்புறம் ரோஸ்-ஐப் பாத்தீங்களா இல்லையா?
ReplyDelete;)
மகி, ரோஸ் நல்லா இருக்கின்றார்(என் மனதில்).
ReplyDelete