Friday, November 9, 2012

கறி பண்

இந்த ரெசிப்பி என் சகோதரி எனக்கு அனுப்பினார். அவர் You tube இல் பார்த்து செய்த ரெசிப்பி. ஆனால், வீடியோவில் அந்த அக்கா சொன்னது போல தண்ணீர் விட்டால் பண் வராது என்பது என் கருத்து. அவரின் தண்ணீர் அளவு அதிகம். ஆனால் பாருங்கள் சூப்பராக இருக்கிறது பதம் ( அவரின் வீடியோவில் ). நான் அரை கப் தண்ணீர் விட்டேன்.

மா - 2 கப்
முட்டை - 2
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன் ( கொழுப்பு குறைவான மாஜரீன் தான் நான் பயன்படுத்தினேன் )
சீனி - 2 டீஸ்பூன்
warm water - 1/2 கப்

எண்ணெய்- தேவையான அளவு
கறி - விரும்பிய ஏதாவது ஒரு கறி வகை. சீனிச் சம்பலும் பயன்படுத்தலாம். என் குறிப்பில் ரெசிப்பி இருக்கு. இங்கே பாருங்கள். நான் செய்தது பிஷ் டின் கறி.
 நகச்சூடான தண்ணீரில் ஈஸ்ட், சீனி கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். ஒரு முட்டையினை நன்கு அடித்து வைக்கவும். பட்டர் மைக்ரோவேவில் உருக்கி வைக்கவும்.
மாவினை எடுத்து, நடுவில் குழி பறித்து, அதனுள் முட்டை, ஈஸ்ட் கலவை, பட்டர், உப்பு சேர்த்து பிசையவும். கொஞ்சம் கைகளில் ஒட்டும் பதமாக இருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கைகளினால் மிருதுவாக பிசையும் போது ஒட்டும் தன்மை போய்விடும். மிகவும் தண்ணீராக இருந்தால் மா தூவி பிசையவும். ஒரு சட்டியினுள் வைத்து, மேலே எண்ணெய் பூசி, ஈரத்துணியால் ( தண்ணீர் சொட்டச் சொட்ட இல்லாமல் பிழிந்து போடுங்கள் ) மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரத்தின் பிறகு மாவினை திறந்து பார்த்தால் பொங்கி வந்திருக்கும். ஒரு சிறந்த மல்யுத்த வீரன் போல மாவின் மேல் ஒரு குத்து விடுங்கள். மா அடங்கிவிடும். இப்ப மீண்டும் லேசாக பிசைந்து ஒரு 10 நிமிடங்கள் வையுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கவும். உங்களுக்கு பெரிய சைஸ் கறி பண் வேண்டும் எனில் பெரிய உருண்டைகளாகவும், சின்ன சைஸ் வேண்டும் எனில் ... மீண்டும் மூடி ஒரு பத்து நிமிடங்கள் வையுங்கள். இந்த இடைவெளியில் பேக்கிங் ட்ரேயில் ஷீட் விரித்து ரெடியாக வைக்கவும். உங்கள் அவனில் ஏதாவது பண்டம், பாத்திரம் இருந்தால் ( என்னைப் போல ) இருந்தால் வெளியே வைத்து, பேக் செய்வதற்கு ரெடியாக்குங்கள். 
 இப்ப மாவினை எடுத்து, 6 இஞ்ச் ஆரம்( அதான்பா டயாமீட்டர்) இருக்கும் வட்டங்களாக உருட்டி, நடுவில் கறி வைத்து, முக்கோண சேப்பில் மடித்து வைக்கவும். மடித்த பண்களை ட்ரேயில் அடுக்கி, மேலே இன்னொரு முட்டை இருக்கு அல்லவா? அதனை அடித்து, பிரஸ் உதவியினால் மேலே பூசிக் கொள்ளவும். இப்ப அவனை 375 ஃபாரனைட் வெப்பத்துக்கு ப்ரீஹீட் செய்து, பண்களை வைத்து, 20- 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பண்களை அவனில் இருந்து வெளியே எடுத்ததும் மேலே கொஞ்சமாக பட்டர்/மாஜரீன் பூசிக் கொண்டால் இப்படி மினுப்மினுப்பாக இருக்கும்.

குறிப்பு: நான் இங்கே பாருங்கள் என்று குறிப்பிட்டதில் எதுவும் வரவில்லை. ஏன் என்று விளங்கவில்லை? லிங்க் சேர்க்கும் ஆப்ஸன் வேலை செய்யவில்லை. எனவே சோம்பல் படாமல் " சீனிச் சம்பல் " என்பதை தேடுக- வில் போட்டால் என் ரெசிப்பி கிடைக்கும். வீடியோ லிங்க் இருக்கு விரும்பினால் போய் பாருங்கள். ஈஸ்ட் நான் எப்போதும் ப்ரீஸரில் தான் வைப்பேன். வெளியில் வைத்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். 
( http://www.youtube.com/watch?v=t-byUSegIAY) 

12 comments:

 1. :) varen, innum konja neram kazhichu! :)

  ReplyDelete
 2. நல்லா இருக்குங்க... செய்து பார்ப்போம்...

  குறிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 3. ரெசிபிக்கு நன்றி தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. //ஒரு சிறந்த மல்யுத்த வீரன் போல மாவின் மேல் ஒரு குத்து விடுங்கள். மா அடங்கிவிடும்.//


  தாங்க்ஸ் வான்ஸ் .இப்படி விளக்கமா சொன்னா நாங்களும் ஈசியா செய்வோமே
  சீக்கிரமே கறி பன் செய்யறேன் :)))

  ReplyDelete
 5. வான்ஸ் வாங்கோ வாங்கோ ரொம்ப நாள் கழிச்சு கறி பண்ணோட வந்து இருக்கீங்க. பூஸ் இன்னும் வரலே. மகி அப்புறம் வரேன்னு போய் இருக்காங்க சோ எனக்கும் அஞ்சுவுக்கும் தான் பன் . அஞ்சு சொன்னது போல ரொம்ப அழகா செய்முறை சொல்லி இருக்கீங்க. நான் ரெண்டு மூணு தடவை இந்த மாதிரி பண் பண்ணினேன் ஆனா soft ஆ வரலே உங்க மெதட் படி செஞ்சு பார்க்குறேன்.

  கோர்ஸ் எல்லாம் முடிச்சிட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. நோ நேக்கு வாணாம்ம்:) மீ 40 நாள் விரதமாக்கும்:)).. பிஸ் ஆப்புட மாட்டேன் ஜொள்ளிட்டேன்ன் ஆரும் ஃபோஸ் பண்ணப்பூடா என்னை:))

   Delete
 6. அருமையான ரெசிபியை
  பகிர்வாகத் தந்தமைக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்லா வந்திருக்கு வான்ஸ்ஸ்:).

  ReplyDelete
 8. கறி பன் சூப்பர் .பகிர்வுக்கு நன்றி வான்ஸ்.

  ReplyDelete
 9. I saw the video also...nice recipe! Thanks for sharing the recipe Vanathy! Yours look perfect! :) shall try with some veggie stuffing!

  ReplyDelete
 10. mika arumai
  http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  ReplyDelete
 11. Kari bun... paarkavae supera irukku..:)
  Reva

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!