Saturday, November 3, 2012

அற்பனுக்கு பவுசு..


இந்த Tide என்று ஒரு பொருள் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா? அதாவது துணிகள்  தோய்க்க பயன்படும் சோப்பு. இது திரவ வடிவிலும், பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இது தவிர கலர் கொடுக்க பயன்படும் மார்க்கர்ஸ் போன்றும் கடைகளில் கிடைக்கிறது. நீங்கள் நல்லா மெனக்கெட்டு ட்ரெஸ் பண்ணி பார்ட்டிக்கு போறீங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், போகும் வழியில் ஆடையில்  கறை அல்லது அழுக்கு பட்டா எரிச்சல் வரும். அப்போ இந்த டைட் மார்க்கரை மேலே லேசாக பூசினால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதெல்லாம் டிவியில் பார்த்த விளம்பரம். மற்றும்படி நான் இதெல்லாம் வாங்கியதில்லை. பார்ட்டிக்கு போகும் போது அழுக்குபட்டாலும் கலங்காத பரம்பரை எங்களுடையது. இந்த டைட் சோப்பு பிரபலம் ஆக காரணம். அதன் தரம். இதில் தோய்த்தால் ஆடைகள் பளிச் தான்.

ஊரில் இருந்த போது சன்லைட் சோப்போ அல்லது மூன்லைட்டோ ஏதோ ஒரு சோப்பினை ஆடையினை விரித்து வைத்து, சோப்புக் கட்டியினை இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஒரு இழுவை இழுத்து, தண்ணியில் அலசி, கொடியில் காயப்போட்டால் வேலை முடிந்தது.
இந்தியாவில் தண்ணீர் வித்யாசம் காரணமாக எந்த சோப்பும் வேலைக்கு ஆகவில்லை. அப்போது தான் என் அப்பா முதன் முறையாக டைட் பொடி வாங்கி வந்தார்கள். சூப்பரான மணம், தரம். அதன் பிறகு டைட் எங்கள் குடும்ப அங்கத்தினர் போல ஆகிப்போனார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் டைட் தான் எப்போதும் வாங்குவோம்.
அமெரிக்கா வந்த பிறகு டைட் திரவ வடிவில் வாங்கினாலும், எகிறும் அதன் விலை கண்டு வேறு ப்ராண்டுகள் வாங்கி ஆடைகள் தோய்ப்பதுண்டு. அதுவும் ஒரு குட்டி ( 8 தடவை தான் ஆடைகள் தோய்க்க முடியும் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தாலும் ) காலனின் விலை பத்து டாலர்களுக்கு மேல். இப்படி வாங்கி, ஆடைகள் தோய்க்க கட்டுபடியாகுமா? எனவே  வேறு பக்கம் திரும்ப வேண்டியதாகிவிட்டது.
எல்லோரும் என்னைப்போல் மனதை சமாதானப்படுத்தி வேறு பக்கம் திரும்பவில்லையாம். எப்படி என்கிறீர்களா? கடைகளில் களவு போகும் பொருட்களில் இது முன்னணியில் இருக்கும் பொருளாம். இதை திருடி வெளியில் குறைந்த விலைக்கு விற்கிறார்களாம் சிலர். கடைகளில் உஷாராகி, இந்தப் பொருட்களை ஷோகேஸில் வைச்சு பூட்டி இருக்கிறார்கள். சவரம் செய்யப்பயன்படும் ஷேவிங்செட் வரிசையில் இதுவும் இப்ப ஷோகேஸில். உங்களுக்கு கட்டாயம் வாங்கி ஆகவேண்டும் எனில் கடையில் வேலை செய்பவர்களிடம் போய் கேட்க வேண்டும்.
போன கிழமை நான் கடைக்கு போனபோது இந்த பொருள் சேல் போட்டிருந்தார்கள். 50% தள்ளுபடி. வாங்கலாமா வேண்டாமா? என்று கொஞ்ச நேரம் யோசனை செய்த பின்னர் கடையில் வேலை செய்யும் அக்காவிடம், அதை எடுத்து தாங்கள் ப்ளீஸ், என்றேன். இடுப்பில் பத்திரமாக இருந்த சாவியை எடுத்து, கவனமாக திறந்து,கைகளை நீட்டிக் கொண்டு நின்ற என்னிடம் கொடுக்காமல், ஒரு கையால் பிடித்துக் கொண்டே, மறு கையால் ஷோகேஸினை பூட்டி, அதனை இரண்டு தரம் இழுத்துப் பார்த்துவிட்டு, ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்தார். சரி, அதைக் இப்படிக் கொடுங்கள் என்றேன்.
இல்லை பரவாயில்லை. நானே கவுன்டர் வரை கொண்டு வருகிறேன், என்று சொன்னதோடு நில்லாமல் கவுன்டர் வரை கொண்டு வந்து, அவரே பில்லும் போட்டு, ரசீதை என் கையில் கொடுத்த பிறகு தான் டைட் பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நான் அதற்கு கொடுத்த விலை $5. ஆனால், ஒபாமா ரேஞ்சுக்கு அவ்வளவு பாதுகாப்பு இந்தப் பொருளுக்கு.

எங்க அம்மாச்சி சொல்வார்கள், அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம், என்று.

இப்படி Tide திருடி ஆடைகள் சுத்தமாக போட வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்படி சுத்தமாக ஆடைகள் போட்டு என்ன வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கா போக போகிறார்கள். வெள்ளை மாளிகையின் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி   சல்யூட் அடிச்சு உள்ளே கூப்பிடவா போறார். அந்த வேலியோரம் நின்று ஒரு போட்டோ பிடிச்சுட்டு வீட்டுக்கு வரவேண்டியது தான்.


*************************
அந்தரத்தில் காற்சட்டை



சமீபத்தில் ஒருவர் சொன்னார், ஒரு பள்ளியில் பழைய பெல்ட்களை ( இடுப்பு பட்டி - சரியான தமிழா தெரியவில்லை ) தானமாக/இலவசமாக வழங்கும்படி கோரிக்கை வைத்தார்களாம். அதான்பா இந்த டவுசர், காற்சட்டை கீழே விழாமல் உறுதியாக இடுப்புடன் கட்டி வைத்திருக்க பயன்படுமே அதே தான். எனக்குத் தான் காது மந்தமோ என்று நினைத்து அருகில் நின்ற என் தோழியிடம் கேட்டேன். அவரும் என்னைப் போல ஙே ஙே தான். அந்த நபர் சொன்னார், அட! பெல்ட்டேதான், என்று..
சிலரை பார்த்திருப்பீர்கள் பான்ட், டவுசர் இடுப்பில் நிற்காது (saggy pants ). மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காமல் எங்கோ அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும். அட என்ன கொடுமை, என்று நாட்டுக்கு வந்த புதிதில் நினைத்திருக்கிறேன்.
அந்த நபர் தொடர்ந்தார், உங்களுக்கு தெரியுமா இந்த பெல்ட் அணியாமல் காற்சட்டை, நீள டவுசர் போடும் பழக்கம் எங்கே தோன்றியது என்று?, கேட்டார்.
இதுக்கெல்லாம் ஒரு வரலாறா? நல்ல டமாஷா இருக்கே, என்று சிரிப்பு வந்தது.
பெல்ட் அணியாமல் பான்ட்(pants) போடும் பழக்கம் முதன் முதலில் தோன்றியது சிறைச்சாலைகளில் தானாம். காரணம்: இந்த பெல்டை  கொழுவி கைதிகள் தற்கொலை செய்யாமல் தடுக்க இந்த ஏற்பாடாம். அது போல ஷூக்களுக்கு லேஸ்களும் வழங்கப்படுவதில்லையாம்.

இந்தப் பழக்கமே பின்நாளில் ஸ்டைல்/பாஷன் என்று உருவாகிவிட்டதாம். இதைக் கடைப்பிடித்து பள்ளிகளுக்கு தொங்கும் பான்ட்ஸுகளுடன் வந்த விடலைகளுக்கு பள்ளி நிர்வாகமே பெல்ட்கள் வழங்க முடிவு செய்துள்ளதாம். நல்ல முடிவு தான். சரி. இதனைப் பார்த்து மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய பெல்ட்களை கொண்டு போய் கொடுத்தாலும் மாணவர்கள் இதை ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அணிந்து வருவார்கள் என்பது எவ்வளவு நிச்சயம். ஒரு பெல்ட் வாங்கி  கொடுக்ககூட முடியாமல் பெற்றோர்கள் இருப்பார்களா? அவர்கள் பெல்ட் வாங்கி கொடுத்து, இவர்கள் கட்டாமல் இப்படி சுத்தினால் யார் என்ன செய்ய முடியும்?  இதென்னவோ வேண்டாத வேலை என்றே எனக்கு படுகிறது.



































16 comments:

  1. இதோ இப்போதே Tide வாங்கி வந்து விடுகிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. will come tomorrow for the comments! Nice write up as always... :)

    ReplyDelete
  3. tide க்கு மாறுவோமான்னு யோசிக்க வச்சிட்டீங்க வாணி..

    ReplyDelete
  4. ஆஹா.. ஹா...ஹ..ஹா.. ரைட் சோப்பிலே இப்படி ஒரு வரலாறோ?:) இங்கெல்லாம் ஓபினாகத்தான் இருக்கு... இங்கு கமெராதான் எங்கும் அதிகம்.. அதனால் களவென்பது கஸ்டமே.

    ReplyDelete
    Replies
    1. அதுசரி, நீங்க வாங்கினனீஇங்களெல்லோ? எப்பூடி கறுப்பு பிளவுஸ் எல்லாம் வைட் பிளவுசாக வருகுதோ?:) வராட்டில் வழக்குப் போட்டிடுங்கோ.. மீ சாட்சிக்கு வாறேன்:).

      Delete
    2. தனபாலன், மிக்க நன்றி.

      ராதாராணி, மிக்க நன்றி.

      அதீஸ், இங்கேயும் கமரா இருக்கு. ஆனால் எப்படி களவு போகுதோ தெரியவில்லை. நான் காசு கொடுத்து வாங்கினாலும் பயந்து பயந்து தான் வெளியே கொண்டு போவேன். களவுக்கு எவ்வளவு திறமை வேண்டும்.
      ஒரு வேளை கறுப்பு காக்கா தான் அப்படி பிளாஸ்டிக் சேர்ஜரி செய்தது போல வெள்ளையாக மாறுமோ? என்னவோ?
      மிக்க நன்றி

      Delete
  5. பாருங்கோ... நாமெல்லாம் ஏதேதுக்கோ கவலைப்பட வான்ஸ்க்கோ.. காற்சட்டை கீழ விழுகுதே எனும் கவலை...:)) ஹையோ முறைக்கப்பூடா:) நீங்க சரியாத்தான் ஜொள்ளி இருக்கிறீங்க:)...


    இப்படியான பழக்கம் அதிகம் கறுப்பின போயிஸிலதான் கண்டேன்ன்ன்ன்ன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், கவலையெல்லாம் இல்லைங்கோ. சும்மா ஒரு பதிவு அம்புட்டுதேன். இங்கேயும் அந்த இன மக்கள் தான் இப்படி அரையும் குறையுமாக திரிவார்கள்.

      Delete
  6. த//ல//வி போல வருமா வருமா :))சூப்பர் வான்ஸ்

    டைடுக்கு இவ்ளோ பாதுகாப்பபா :))
    இங்கெல்லாம் காமேராதான் ... பூனை கூட :))) cctv யில் மாட்டுபட்டுடும்


    saggy trousers இக்கு இப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கா ...
    நானும் ஆரம்பத்தில் இந்த உடை அணிந்தவர்களை பார்த்து பயந்து போயிருக்கேன் ..baggy போய் saggy வந்தது இனி இது போய் வேறொன்று வரும்
    எல்லாம் fashion தான்

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு, காமரா இங்கேயும் இருக்கு. ஆனால் திருடுறவர்கள் எப்படியும் திருடிவிடுவார்கள். அதை ரோட்டில் விற்று, அந்தக் காசில் போதை மருந்து வாங்குவார்களாம். என்ன கொடுமைப்பா!
      மிக்க நன்றி.

      Delete
  7. கண்டிப்பா இனி Tide தான்........

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  8. tide-க்கு இப்படி ஒரு ராஜமரியாதையா!!?? அதுவும் அம்ம்ம்மேரிக்காவில்!!

    டைட் அதிகம் வாங்குவதில்லை. பயன்படுத்தும்போது, உடைகள் சீக்கிரம் வெளுத்துவிடுவதுபோல உணர்கிறேன். நம்ம ஊரில், “காரம்” அதிகம் என்று சொல்வார்கள். சில துணிகளைக் கையால் துவைப்பதற்கு டைட் பயன்படுத்தினால், கையெல்லாம் பொத்துவிடும். இன்னொரு ப்ராண்ட் உண்டு, அதுவும் இதுபோல்தான். அதனால் விலைகுறைந்த சோப்புகளையே வாங்குகீறேன்.

    டைட் மார்க்கர் - புது தகவல். உடனே கறை காணாமல் போகவேண்டுமென்றால், அது எவ்வளவு ஸ்ட்ராங்கக்காக இருக்கவேண்டும்??!! உடை சீக்கிரம் இத்துப் போய்விடும்.

    ReplyDelete
    Replies
    1. மலர், நன்றி.
      ஹூசைனம்மா, ப்ளீச் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். மார்க்கர் நானும் நினைத்ததுண்டு. வாங்கி எதுக்கு ஆடைகளை பாழடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.
      மிக்க நன்றி.

      Delete
  9. Tide-ஐ சிலபேர் திருடிப் போவது பற்றி சில காலங்கள் முன்பு நியூஸில் பார்த்த ஞாபகம் இருக்கு வானதி! :) இங்க நான் கவனிச்சதில்லையே.,tide-க்கு நிலவரம் எப்படி இருக்குன்னு பார்க்க ஒரு நடை கடைக்குப் போயிட்டு வரணும் போலயே! ;) :)

    BTW, நான் வாஷிங் லிக்விட் வாங்குவது காஸ்ட்கோலதான்! ப்ராண்ட் எல்லாம் எதுவும் கவனிச்சதில்லை இதுவரை! ஹிஹி!

    மார்க்கர் விளம்பரமும் டிவி-யில் பார்த்திருக்கேன்,அதை வாங்கும் ஆட்களும் இருக்காங்கங்கறீங்களா? அவ்வ்வ்வ்வ்....

    அந்தரத்தில் காற்சட்டை!! :))) யு.எஸ். வந்த புதிதில் நானும் இதையெல்லாம் பார்த்து டென்ஷனானேன், இப்பல்லாம் பார்த்து பழகிப்போச்சு! பின்னணிக் கதைக்கு நன்றி! :)

    ReplyDelete
  10. மகி, ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்து ஒரு பதிவு போடுங்க. அப்ப தான் இந்தப் பதிவுலகம் நம்பும்.
    ப்ராண்ட் கவனிக்காமல் வாங்குவீங்களா???
    தொங்கும் காற்சட்டை - நான் ஆரம்பத்தில் அடப்பாவமே காற்சட்டை கீழே விழுறது கூடத் தெரியாமல் இப்படி ஜென்மங்களா என்று நினைத்தேன். என் அண்ணா சொன்னார், அது விழவில்லை அப்படித் தான் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது, என்று.
    மிக்க நன்றி, மகி.

    ReplyDelete
  11. மேஜிக் சோப் .. மேஜிக் கால்சட்டை ...

    எல்லாம் மேஜிக் தானா ..??

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!