Saturday, July 21, 2012

வீட்டினைத் தேடி ஒரு பயணம்


நியூயோர்க் நகரின் பிரதான இடத்தில் இருந்தது தேவாவின் வீடு. அடுக்கு மாடி குடியிருப்பில் 8வது தளத்தில், சகலவசதிகளோடு கூடிய வீடு அவனுடையது. நேரம் அதிகாலை 4 மணி. தூக்கம் வராமல் புரண்டு படுத்தான் தேவா. வயது 35. இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை. எப்போதும் வேலை, வேலை என்று அலைந்து திரிந்து, பங்கு சந்தையில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டான். இந்த வீடு, கார், வசதிகள் எல்லாம் அவன் குறுகிய காலத்தில் ஈட்டியவை. அவனின் அப்பா காலமாகிவிட, அறுபதுகளின் ஆரம்ப பகுதியில் இருக்கும் அம்மா மட்டுமே இவனுக்கு துணை.

எழுந்து வெளியே சென்றான். பால்கனியில் நின்று கொண்டே நகரின் அழகை, பிரமாண்டத்தை பார்த்துக் கொண்டே நின்றான். எதிலும் மனது ஒட்டவில்லை. திரும்ப அறைக்குள் செல்ல நினைத்தவன் தாயின் அறையில் விளக்கின் வெளிச்சம் கண்டு சிறிது நேரம் தயங்கி நின்றான். மென்மையாக கதவினை தட்டினான்.

" தேவா, உள்ளே வா", என்றார் அம்மா.
கட்டிலில் ஒரு பக்கம் ஆடைகள் அடுக்கப்பட்டிருக்க, மறு புறம் சிறு மலை போல ஆடைகள். அம்மா கையில் லிஸ்ட் வைத்துக் கொண்டே வேலையில் முமுமுரமாக இருந்தார். தரையில் சூட்கேஸ்கள் வாயை பிளந்தபடி காத்திருந்தன. ஒரு பழைய துணியினை எடுத்து, சூட்கேஸ்கள் மீதிருந்த தூசியினை சுத்தம் செய்யத் தொடங்கினான் தேவா.
"அம்மா, கட்டாயம் போய் ஆக வேண்டுமா", என்றான்.
"ம்ம்... இப்ப ஏன் இது பற்றி பேச வேண்டும். காலை 11 மணிக்கு ப்ளைட் என்று மறந்துவிட்டாயா. போய் படு. நான் எல்லாவற்றையும் அடுக்கி வைச்சுட்டு வாறேன்", என்றார் அம்மா.
போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான் தேவா. ஆறு மாதங்கள் முன்பு, ஒரு நாள் வேலை முடிந்து வந்தபோது அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது.
"அம்மா, என்னாச்சு? உடம்பு சரியில்லையா", என்று பரிவாக கேட்டான்.
"இல்லை தேவா. ஊரில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கு என்று உனக்குத் தெரியும் அல்லவா", என்றார்.
"இப்ப அதுக்கென்ன அம்மா. அதில் வேறு யாரோ குடியிருப்பதாக நீங்கள் சொன்னீர்களே. மறந்துவிட்டீர்களா?", என்று கேட்டான்.
"இல்லை. மறக்கவில்லை. எனக்கு அந்த வீட்டினை இப்பவே பார்க்க வேண்டும் போலிருக்கு...." என்று தொடர்ந்த தாயை கலவரமாகப் பார்த்தான்.
"அம்மா, நடக்கிறகாரியமா அது. உங்களுக்கு இங்கே வீடு வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன். ஊருக்குப் போய், அங்கே குடியிருப்பவரை எழுப்புவது இயலாத காரியம். அங்கு குடியிருப்பவன் பெரிய ரவுடி என்று நீங்கள் தானே சொன்னீங்கள்", என்றான்.

"ம்ம்.. சொன்னேன் தான். எனக்கு இறுதிக் காலம் விரைவில் வந்து விடும் போல இருக்கு. நான் சாக முன்னர் அல்லது நோய்வாய்ப் பட்டு படுக்கையில் என் இறுதி நாட்களை கழிக்கும் முன்னர் எங்கள் வீட்டினை அதாவது உன் அப்பா ஆசையாக கட்டிய வீட்டினை ஒரு தரம் பார்க்க வேண்டும்", என்றார்.

"அம்மா, உங்களுக்கு ஒன்றும் ஆகாது. ஊருக்கு இப்ப போக முடியாது. வேலை தலைக்கு மேல் இருக்கு", என்று தவிர்க்கப்பார்த்தான்.

"நீ வராவிட்டால் பரவாயில்லை. நான் மட்டும் போய் வருகிறேன்", என்று தனியாக கிளம்பிய அம்மாவை தடுக்க வழி தெரியாமல் கூடவே கிளம்ப வேண்டிய கட்டாயம்.

காலை ஏழு மணியளவில் அளவில் தொலைபேசியில் அவனுக்கு கீழே பணிபுரிபவர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் அனுப்பி பிஸியாக இருந்தான் தேவா.

"தேவா, எத்தனை மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டும்? ஊரில் வேலு மாமாவுக்கு தகவல் சொல்லிவிட்டாயா கண்ணா?", என்று தாயார் கேட்ட பின்னர் தான் அவனுக்கு ஞாபகம் வர தொலைபேசியில் வேலு மாமாவின் நம்பரை அழுத்தினான்.


அடித்துப் பிடித்து விமான நிலையம் போய்ச் சேர நேரம் சரியாக இருந்தது. தாயார் ஏதோ ஒரு புத்தகத்தில் பிஸியாகி விட. இவன் கண்களை மூடிக் கொண்டான்.

"தேவா, வேலு மாமா என்ன சொன்னர்?", என்று வினவினார் தாயார்.

"எங்கள் வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா. உங்களுக்கு ஏதாவது வேணுமா? நான் கொஞ்ச நேரம் படுக்கப் போறேன்", என்றான்.
"இல்லைக் கண்ணா. நீ படு", என்றபடி புத்தகத்தில் மூழ்கிப் போனார் அம்மா.

வேலு மாமா என்று இவன் அழைப்பது இவனின் சொந்த  மாமா அல்ல. அப்பாவின் நண்பர். ஜாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த காலங்களில் அப்பாவுக்கு அறிமுகமானவர் வேலு. அம்மாச்சி மிகவும் கண்டிப்பானவர் ஜாதி விடயங்களில்.  குறைந்த ஜாதி மக்கள் வீட்டினுள் வந்தால் தீட்டு என்பார்.

"என்ன தீட்டோ, இழவோ அதெல்லாம் சும்மா. நீங்க வீட்டுக்குள் வாங்கோ", என்று அவர்களை வரவேற்று, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, அழகு பார்த்தவர் அப்பா. அதே போல அவர்கள் வீட்டுக்கும் சென்று அவர்கள் அன்பாக கொடுக்கும் உணவுகளை ரசித்து சாப்பிடுவார்.


அப்பா வெளிநாடு வந்த பின்னரும் நட்பு தொடர்ந்தது. தொலை பேசி, தபால் என்று நட்பு இன்னும் வலுப்பெற்றது. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமாவின் கடிதங்களை அம்மா இன்னும் கவனமாக பேணிக் காத்து வந்தார்.  ஒவ்வொரு கடிதத்திலும் அன்பினை கரைத்து ஊற்றியிருப்பார் மாமா. மிகவும் கஷ்ட சூழ்நிலையில் இருந்தாலும் அதைப் பற்றி ஒரு நாளும் குறிப்பிடமாட்டார். அப்பாவே இவரின் கஷ்டம் உணர்ந்து இடைக்கிடையில் பணம் உதவி செய்ததுண்டு. அப்பாவின் மறைவின் பின்னர் தொடர்பு சுத்தமாக நின்று போனது.
இப்ப வீட்டினை பார்க்க வேண்டும் என்றதும் எங்கோ கிடந்த தொலைபேசி எண்களை கண்டு பிடித்து, அவரை அழைத்து... நான் எவ்வளவு சுயநலவாதி என்று நினைத்துக் கொண்டான் தேவா. அப்பாவின் மறைவின் பின்னர் வேலு மாமா பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டிருப்பார். ஊர் போய் அவருக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்று தாயாரும் மகனும் முடிவு செய்து கொண்டார்கள்.

தொடரும்..
30 comments:

 1. சுவாரஸ்யமான துவக்கம்
  அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 3. திரும்பவும் 'வானதி'. தொடருங்கோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 4. ஆரம்பமெ சுவாரசியமாக இருக்கு. தொடருங்க. வெயிட்டிங்க்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 5. அருமையான தொடக்கம் வாணி... தொடருங்கோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 6. நல்லா இருக்கு... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 7. ரொம்பநாள் கழிச்சு வந்துருக்கீங்க....ம்ம்ம்ம் வாழ்த்துகள்....!

  கதை சுவாரஸ்யமாக இருக்கு தொடருங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 8. தொடருங்கள் வானதி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 9. திரும்படியும் “வான்ஸ் கதை” தொடருங்கோ நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 10. விறுவிறுப்பான ஆரம்பம.தொடருங்கள் வானதி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 11. /vanathyJuly 24, 2012 5:10 AM

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்./ கதையை விட உங்களோட இந்த Ctrl+C, Ctrl+V ஜூப்பரு! ;))))) என்னோட கருத்துக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லணும், இப்படி "வெட்டி ஒட்டினா" ஒத்துக்க மாட்டேன், ஆமா! ;)))))

  தேவா-நியூயார்க்..பயணம்..ம்ம்ம்..சீக்கிரம் அடுத்த பகுதியைப் போஸ்ட் பண்ணுங்க. நான் வேணா ஐடியா தாரேன்!

  இந்தியாவுக்கு போகும் தேவாவுக்கு வேலு மாமா பொண்ணோட கலியாணம் செய்து வைங்க..தேவா அம்மா, வேலு மாமா உதவியோட இந்தியாவிலயே அவங்க வீட்டில் தங்கிருவாங்க. தேவா-மனைவியுடன் நியூயோர்க் திரும்பிவந்துவிடுவார், என்றாவது ஒருநாள் இந்தியா திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன்!

  :))))) ஹவ் இஸ் இட்?! :)))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்./////

   ஹா..ஹா..ஹா... எங்கிட்டயேவா?:) அவவுக்கு மட்டும் ஸ்பெஷலா வாணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

   Delete
  2. Mahi, வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க வேண்டும். அதான் இப்பூடி. கும்பலா அல்லது பொதுவாக வாங்க என்று சொன்னா நல்ல இருக்காது.

   நீங்க சொன்ன முடிவு காதைக் கொண்டு வாங்கோ....... தப்பு. நன்றீ.

   மிக்க நன்றிகள் மகி & பூஸார்.
   This time not cut and paste.

   Delete
  3. /வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க வேண்டும். அதான் இப்பூடி./ அது சரி, அதுக்காக.... சரி,சரி! நீங்க வசதிப்படி வரவேற்பு குடுங்க, நான் எதும் சொல்லலை! :)

   /காதைக் கொண்டு வாங்கோ......./ நான் எப்பவுமே கை-கால்- கண்ணு-மூக்கு -வாய் இப்படி எல்லா உறுப்புகள் கொண்ட உடலோடு வருவதுதான் வழக்கம். :)))) ஆனாலும் நீங்க கேட்டுட்டீங்க, இருங்க...கம்மலை கழட்டிட்டு காதை கொண்டுவாரேன்! :))))) ;))))

   /தப்பு. நன்றீ./ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எத்தனை டமில்;) படம் பார்த்திருப்போம், அதையெல்லாம் யூஸ் பண்ணினா தப்பூ-னு சொல்லிப் புட்டீக? சரி..அப்ப அடுத்த பார்ட்டை சீக்கிரம் எழுதிருங்க..

   /ஹா..ஹா..ஹா... எங்கிட்டயேவா?:) அவவுக்கு மட்டும் ஸ்பெஷலா வாணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).../ ஹா..ஹா..ஹா... * 100!! This time not cut and paste...கவனிச்சீங்களா பூஸார்?! எனக்கு ஸ்பெஷலாதான் கிடைச்சிருக்கு! :))))

   Delete
 12. தொடர் கதை ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ..

  நான் படித்ததில் ஒரு சின்ன திருத்தம் வேண்டுமா என்று பாருங்கள்

  //"எங்கள் வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா.// இது

  "நம்முடைய வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா" என்று வந்தால் சரியா?..

  ReplyDelete
 13. தொடருங்கள் வானதி ,ஆரம்பமே அருமை .
  (நேரமிருந்த இங்கே வாங்க)
  http://craftyflower.blogspot.co.uk/

  ReplyDelete
 14. சிறுகதை சிற்பி வானதி
  என்கிற பட்டத்தை அளித்து மகிழ்கிறோம்
  வாழ்க வாழ்க வாழ்க

  ReplyDelete
 15. ஸ்டீபன், மிக்க நன்றி.

  ஏஞ்சலின், மிக்க நன்றி.
  நீங்க தந்த லிங்க் போய் பார்த்தேன். சூப்பர்.

  சிவா, நீங்க மட்டும் தானே பட்டம் அளிக்கிறீங்க. பன்மையில் பேசி இருக்கிறீங்க, ஒரு வேளை பின்னாடி ஒரு பெரிய கேங் இருக்கோ என்று நினைச்சு கேட்டேன். பட்டத்துக்கு மிக்க நன்றி.
  மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 16. துவக்கம் சுவாரஸ்யமாகவும் ஆவலைக்கிளப்புவதாகவும் இருக்கிறது வானதி! தொடருங்கள்!

  ReplyDelete
 17. தினமும் உங்க வீட்டுக்கு வரணும் வரணும் ன்னு நெனைச்சுகிட்டே இந்த பூஸ் கூட மல்லு கட்டி மல்லுகட்டி களைச்சு போய் தூங்கிடுறேன்:)) மன்னிச்சுக்கோங்க வான்ஸ் தாமதத்துக்கு.

  அருமையான கதை மகி சொன்ன ஐடியா இல்லேன்னு வேற சொல்லிட்டீங்க. ஸோ சீக்கிரம் தொடருங்கோ ஆவலா இருக்கு.

  எனக்கு ctrl c ctrl v கூட இருக்காது போல இருக்கு :))

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!