Monday, June 25, 2012

குழப்பவாதிகளா? சிந்தனைவாதிகளா?

காரினை எங்காவது பார்க்கிங்கில் விட்டுட்டு போய் இருக்கிறீங்களா?.பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது & இது என்ன கேள்வி என்று முறைக்கப்படாது.  இப்ப இது பற்றி தான் நான் சொல்லப்போகிறேன்.

 சில மாதங்களின் முன்னர் கடைக்கு சென்றபோது என் ஆ.காரர் எங்கள் காரினை குறிப்பிட்ட இடத்தில் நிற்பாட்டிய பிறகு உள்ளே குரோசரி வாங்கச் சென்றுவிட்டார். நான் கொஞ்சம் தலைவலி காரணமாக காரில் இருந்துவிட்டேன். வின்டர் மற்றும் நான் எடுத்த டாப்லட்டின் வீரியத்தினால்  ஒரு குட்டி தூக்கம் போட நினைத்து... அப்படியே தூங்கியும்விட்டேன்.
ஏதோ  சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. ஒரு ஆசாமி எங்கள் கார் கதவினை திறக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பயத்தில் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு , நாக்கு வறண்டு போனது. செல் போனை தேடினால் கையில் அகப்படவில்லை. என் ஆ.காரர் எப்போதும் திட்டுவார் செல் போனை மறக்காமல் கையில் வைத்திருங்கோ என்று. இப்ப தான் அவரின் அறிவுரை மூளைக்கு எட்டியது. ஆசாமி இன்னும் வேகமாக கதவினை திறக்க முயற்சி செய்தார். வின்டர் நேரமாகையால் வெள்ளனவே இருட்டிக் கொண்டுவிடும். பாஸஞ்சர் சீட்டில் நான் இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே. சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது. அவர் காரைத் தான் கடத்தப்போகிறார் போல என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்.


இப்ப வேகமாக நான் இருந்த பக்கம் வந்தார் அந்த ஆசாமி. பெரிய ஆஃபிஸர் போல கோட், சூட், டை எல்லாம் போட்டிருந்தார் அந்த அமெரிக்கர்.
அடச்சே இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகுது என்று நினைத்துக் கொண்டேன்.
இப்ப  என் பக்க கதவினை பலம் கொண்ட மட்டும்  திறந்தார். காரின் கதவினை லாக் செய்து இருந்தாலும் நான் கதவினை திறக்காமல்  கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவர் கையில் இருந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்துவதும், பிறகு டென்ஷன் ஆவதுமாக இருந்தார்.
திடீரென்று அவரின் செய்கைகள் ஒரு முடிவுக்கு வந்தது. என்னை அப்போது தான் முதன்முறையாக பார்த்தவர் கொஞ்சம் மிரண்டு பின் வாங்கினார். என் காரினுள் இவள் எப்படி என்று அவரும்? இவர் மட்டும் என் கையில் மாட்டினால், மகனே! சட்னிதான் என்று நானும் நினைத்துக் கொண்டோம்!!!!.

திரும்பி பக்கத்தில் இருந்த காரினை பார்த்தார். நானும் அப்போது தான் கவனித்தேன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் எங்கள் காரினைப் போல அதே கலர், அதே நிறுவனம்... இப்படி பல ஒற்றுமைகள். இப்ப தான் எனக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணீர் வந்தது. ஆனால், ஆசாமி எங்கும் போகாமல் அங்கேயே நின்றார். என்னிடம் மன்னிப்பு கேட்க நிற்கிறாராம் அவர். அவர் பம்மிய பம்மில் நான் அறிந்து கொண்டாலும் கதவினை திறக்கும் தைரியம் வரவில்லை. பரவாயில்லை என்று கைகளினால் சைகை செய்தேன்.  குலதெய்வத்தினை கும்பிடுவது போல என்னை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
நான் எப்பவும் பார்க்கிங்கில் காரை நிப்பாட்டினால் இடத்தினை மனதினுள் குறித்துக் கொள்வேன். அதோடு காரின் நம்பர் எப்பவும் மனப்பாடமாக வைத்திருப்பேன். நேற்றுக்கூட குரோசரிக் கடையினுள் இருந்து வேகமாக வந்த ஒருவர் ரிமோட்டினை கையில் எடுத்து, பொத்தானை அழுத்தியபடி 2 தரம் சுற்றி வந்தார்.  நான் காரின் பக்கம் போனதும் அவரின் காரினை நோக்கி வேகமாக நடந்தார். அதே கோல்ட் கலரில் அவரின் கார் தெரிந்தது. 

இப்படி இவ்வளவு குழப்பவாதிகளா இந்த நாட்டில் என்று வியந்து போனேன். ஆனால், பாருங்கள் இப்ப என் ஆ.காரரும் இந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார். கையில் ரிமோட்டினை வைத்து அது கதறும் வரை அழுத்துவது அல்லது ஏதோ ஒரு கட்டத்தின் பின்னர் இது நம்முடைய பொருள் இல்லை என்று விலகிப்போவது. குழப்பவாதிகள் அல்ல சிந்தனைவாதிகள் என்று இப்ப நினைத்துக் கொள்வேன். அதாவது சதா சர்வகாலமும் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தான் இவர்கள் இப்படி ( குழப்பவாதிகளாக) இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 


இதுக்கு ஒத்துப் போறாப்போல என் மகன் வரைந்து தந்த படம். கலர் கொடுத்தது என் மகள்.

60 comments:

  1. :)))
    எல்லாரும் "ஒரே" (மாடல்) மாதிரி கார் வைத்திருந்தா இதெல்லாம் சகஜமப்பா! :)

    ஆனால் காருக்குள் உட்கார்ந்திருந்த உங்க நிலைமையும், காரைத் திறக்க முயற்சித்து பேஸ்தடிச்சுப் போன அந்த ஆள் நிலைமையையும் நினைக்க...நினைக்க!! :) :) இப்ப சிரிப்பா இருக்கு, ஆனா அந்நேரம் எவ்வளவு டென்ஷனா இருந்திருக்கும் இல்ல வானதி?

    நாங்க காரைத் தேடுவது பொதுவா பெரிய மால்கள்/ மல்ட்டிபிள் லெவல் பார்க்கிங் லாட்ஸ்-ல நிறுத்தி, எந்த ஃப்ளோர் என்று நோட் பண்ண மறக்கையில்! மற்றபடி இவ்வளவு குழப்பம்/சிந்தனை இன்னும் எங்காளுக்கு வரலை! ;)

    காரும், குழம்பும் மனுஷரும்;) ஜூப்பரா இருக்காங்க. Good job S & A !!

    ReplyDelete
    Replies
    1. மகி, இந்த ஊரில் நிறைய குழப்பவாதிகள் இருப்பாங்கள் போலிருக்கு.
      மிக்க நன்றி.

      Delete
  2. எல்லா காருமே H-ஆ??! எங்களுதும் H-தான்! ;))) ஆனா ரெண்டே கதவு, அதனால மிஸ் ஆகாது,ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. மகி, எங்க கார் காம்ரி. ஆனால் என் மகன் ஏனோ "H" என்று எழுதியிருக்கிறார்.

      Delete
  3. நானும் வண்டியை நிறுத்திவிட்டு எங்க நிறுத்தினேன் என்று தேடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. கார்த்தி, வயசாடுச்சு இல்லையா?
      மிக்க நன்றி.

      Delete
  4. Replies
    1. கவி அழகன், மிக்க நன்றி.

      Delete
  5. ஹா ஹா ஒரே கலரில் கார் வைத்திருந்தால் இப்படியெல்லாம் அவதிகளை சந்திக்கனும்போல இருக்கே. சொல்லியவிதம் சுவாரசியமாஇருக்கு.

    ReplyDelete
    Replies
    1. லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.

      Delete
  6. அருமையான நகைச்சுவை விருந்து
    முதலில் கொஞ்ச நேறம்
    எங்களையும் பதற வைத்துவிட்டீர்கள்
    ஒரு விஷயம் மிகச் சரி
    நம்மைச் சார்ந்தவர்கள் எல்லாம்
    சிந்தனாவாதிகள்தான்
    மற்றவர்கள்தான் குழப்பவாதிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி அண்ணா, நாங்கள். எங்க ஆட்கள் என்றால் எப்பவும் கொஞ்சம் ஸ்பெஷல் இல்லையா?
      மிக்க நன்றி

      Delete
  7. வான்ஸ் ரொம்ப அழகா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க. இப்போ படிக்கும் போது சிரிப்பா இருக்கு. ஆனா இந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டு இருந்தால் நானே கதவை தொறந்து ஓஓஒ டி இருப்பேன் :)) இனிமே தலை வலி இருந்தாலும் வீ.காரர் கூடவே கடைக்குள்ளே போயிடுங்க என்ன ????

    ReplyDelete
    Replies
    1. கிரி, நாங்கெல்லாம் சிங்கம் இல்லை. பயந்தாலும் நாலு சுவருக்குள்ளே இருந்து பயப்படுவமோ தவிர வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டோம்.
      இறங்கி ஓடினால் விரட்டிக் கொண்டு வருவாரோ என்ற பயம் அவ்வ்வ்வ்வ்...

      பூஸார் லட்டை விட்டுட்டு வேறு எங்கோ பராக்குப் பார்க்குது.

      Delete
    2. இல்லையே கீழே பொயிங்கி எழுந்து இப்போ தேம்சில் ரெஸ்ட் எடுக்குறாங்களாம்:))

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது //

    நாங்க எல்லாம் இப்புடி எடக்கு மடக்கா கேள்வி கேக்க மாட்டோம். ஆனா இருங்க பூசார் வந்து கச்சேரிய வெச்சுக்குவாங்க:))


    //சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது//

    ஐயோ வான்ஸ் இந்த மாதிரி லட்டு லட்டா பூசுக்கு எடுத்து கொடுக்குறீங்களே ???

    ReplyDelete
    Replies
    1. லட்டு மட்டுமோ கீழ பாருங்கோ எரிமலையா பொயிங்குறா.. பூஸ் எஸ்கேப்ப்ப்ப்:))

      Delete
  10. கார் படங்கள் எல்லாம் அருமையா அழகா இருக்கு. பசங்களுக்கு வெல் டன் சொல்லிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. கிரி, மிக்க நன்றி. என் பிள்ளைகளுக்கு படித்துக் காட்டினேன். சந்தோஷப்பட்டார்கள்.

      Delete
  11. அந்தக் காட்சியை கற்பனைசெய்து பார்க்கையில்... சிப்பு சிப்பா வருது...

    இங்கே அவ்வப்போது யாராவது காரைக் காணாக்கி விட்டார்கள் என்று செய்தித்தாளில் வரும். நிறுத்திய இடம் மறந்துவிடுவார்கள், அல்லது சிலசமயம் போதையிலும்!! :-))

    சிகப்புக் கார்கள் அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஹூசைனம்மா, செய்தியில் வருமா??? அடேங்கப்பா. இங்கே இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். சிலதுகள் வேண்டுமென்றே காரினை தொலைத்துவிட்டு, நியூசில் வரலாம் என்று கணக்குப்போடுவார்கள்.
      மிக்க நன்றி.

      Delete
  12. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உள்ளுக்குள் இருந்து ஆரோ தன்னைக் கடத்தப் போகினம் என நினைச்சுக்:)) கதவை இழுத்துப் பிடிச்ச நேரம், சடாரெனத் திறந்திருந்தால், பாவம் அந்த கோட் சூட் போட்டிருந்த அப்பாவிக்கு:) பிரச்சனை வந்திருக்காதே:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    நாங்கள் முன்பு குவாடேர்சில் இருந்த சமயம் எல்லா வீடுகளும் அருகருகே ஒரே மாதிரி, கணவர் வேலையால் வரும் நேரம் நான் உள்ளே இருந்து பார்த்து கதவு தி/ரப்பது வழக்கம், ஒருநாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன் பக்கத்து வீட்டைப் போய் தட்டுகிறார் எனக்குப் புரிஞ்சு போச்சு... கதவைத் திறந்தேன்... அப்போதான் அவருக்கு தெரிஞ்சுது அது பக்கத்து வீடென, களைப்போடு வீட்டுக்கு வரும்போது சில நேரம் எதுவும் தெரியாதுதான்.

    இப்படி எம் வீடையும் சிலர் தட்டி திறந்து பத்துமுறை சொறி சொல்லிய சம்பவங்களும் இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. பூஸார், பக்கத்து வீட்டு கதவா?? என்னவோ போங்கள். இந்த விடயத்தில் என் ஆ.காரர் தெளிவாத் தான் இருக்கிறார். கண்களை கட்டி விட்டாலும் நேரே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவார்.
      மிக்க நன்றி.

      Delete
    2. //கதவு தி/ரப்பது// என்ன்னன்ன்ன்னது இப்போ ற ர விலையும் கொயப்பமா ??? மருதமலை முருகா அப்புடியே மயில் இல் இருந்து ட்ராப் பண்ணிடுங்க பூஸ:))

      Delete
    3. ஒரு படத்துல ரஜினி வீடு மாறி அலப்பறை செய்வது மாதிரியா ஹா..ஹா... :-)

      Delete
  13. மகனின் கைவண்ணமும் மகளின் கலரிங்கும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், உங்கள் எல்லோர் பாராட்டுக்களையும் அவர்களுக்கு படித்துக் காட்டினேன். தாங்ஸ் என்று சொல்லச் சொன்னார்கள்.
      மிக்க நன்றி.

      Delete
  14. பாவம் அந்த கோட் சூட் போட்டிருந்த அப்பாவிக்கு:) பிரச்சனை வந்திருக்காதே///ஒரு சகபதிவர் இப்படி புலம்பும்போது அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கோட், சூட் போட்ட ஆசாமி பாவம் என்று சொன்ன அதீஸூக்கு என் கண்டனங்கள்.

    ReplyDelete
    Replies
    1. டிட்டோ ,டிட்டோ எனது கண்டங்களும்

      Delete
    2. அஞ்சு, தாங்ஸ். இல்லாவிட்டால் பூஸார் இப்பூடி இடக்கு முடக்கா ஏதாவது சொல்லும்.

      Delete
    3. நானும் கண்டனத்தை தெரிவிக்குறேன் இல்லேன்னா வான்ஸ் & அஞ்சு கனவுல வந்து மெரட்டுவாங்க :))

      Delete
  15. சே..சே... இப்போவெல்லாம் நன்மைக்கே காலமில்லை:)))).. நான் அப்பூடிச் சொல்லாட்டில் நாளைக்கு மகியும், கீரியும் இப்பூடித்தான் கதவை இழுத்துப் பிடிப்பினம், இப்போ நான் சொன்னதால பாருங்கோ எல்லோரும் திறக்கப் போகினம் தெகிரியமா:))) உஸ்ஸ்ஸ் வழிவிடுங்கப்பா.. நான் போகோணும்:))))

    ReplyDelete
    Replies
    1. ஒரு அக்கா சின்ன தங்கைகளுக்கு இப்படியா டெரர் ஐடியாஸ் தருவது :????கர்ர்ரர்ர்ர் .
      பூஸ் பூஸ் மியாவ் டோன்ட் ரன் டோன்ட் ரன் :)))))))))) நடந்தே போங்க தேம்ஸ் பக்கம் தானே இருக்கு :)))))

      Delete
    2. அவிங்க ரண்டு பேரும் நல்ல தைரியமானவங்க தான். நான் தான் கொஞ்சம் வெகுளி. மகி நீங்க சொல்லிக் குடுத்ததை அப்படியே இங்கே சொல்லிட்டேன். ஓக்கேவா!!???

      Delete
    3. //அவிங்க ரண்டு பேரும் நல்ல தைரியமானவங்க தான்// ஐயோ இத படிச்ச ஒடனே உச்சி குளிர்ந்து போச்சு வான்ஸ். எங்க ரெண்டு பேரையும் ஜான்சி ராணி ரேஞ்சுல வெச்சு இருக்கீங்க:))

      //நடந்தே போங்க தேம்ஸ் பக்கம் தானே இருக்கு :)))))// கிக் கிக் அஞ்சுஸ் இப்போ அலேர்ஜி சரி ஆகி இருக்குமே நம்ம லா பூசார அடிச்சு விளையாடினதுல :)))

      Delete
  16. அது சரி...
    குழப்பவாதிகளை சிந்தனைவாதிகளாக்கி விட்டீர்கள்...
    படம் நல்லா வரச்சிருக்காங்க மாப்பிள்ளையும்... மருமகளும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, குமார்.

      Delete
  17. /நாளைக்கு மகியும், கீரியும் இப்பூடித்தான் / avvvvvv! ஏனிந்த கொல வெறி பூஸ்? எங்கூர்ல இப்புடி குயப்பமெல்லாம் கிடையாதூஊஊஊ! ;))

    /நான் போகோணும்:))))/ ஸ்ரெய்ட் டு தேம்ஸ் கரை, ரைட்? :)))

    ReplyDelete
  18. வானதி உண்மையில் உள்ளே உக்காந்திருந்த உங்க நிலைமை ரொம்பவே பாவம் ..
    உங்க குட்டீஸின் கைவண்ணம் அருமை .
    காரை பார்க் பண்ணிட்டு தேடுவார்னு தெரிஞ்சுதான் நான் ஒரு சூப்பர் ஐடிய செய்திருக்கேன் .கார் ஏர் ஃப்ரஷ்னர் மாட்டுமிடத்தில் அது கூடவே ஒரு handmade hanging thingy மாட்டி வச்சிருக்கேன் பல்லவன் பஸ்ல டிரைவர் சீட் முன்னாடி குடும்ப போட்டோ இல்ல குலதெய்வம் படமிருக்குமே அது மாதிரி :)))).விரைவில் ஒரு பதிவு போடறேன் கண்டிப்பா பயன்படும் .
    என் கணவர் காரை ஓரிடத்தில் பார்க் பண்ணிட்டு இந்நூற் இடத்தில தேடுவார் .இப்பெல்லாம் என் மகள் ஹெல்ப் செய்றா :)))

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் அக்கா, எங்க காரில் ஒரு குட்டி வினாயகர் இருக்கார்! ;) ;) வானதி நீங்களும் அது மாதிரி ஏதாவது ஃபிக்ஸ் பண்ணி வைங்களேன்! :)

      Delete
    2. அஞ்சு, நல்ல ஐடியா தான். ஆனால், எனக்கு எந்தவிதமான மணங்களும் ( செயற்கை மணங்கள் ) ஒத்துக் கொள்வதில்லை. தலைவலி வரும். வேறு ஏதாவது முத்து மாலை ( நிஜ முத்து அல்ல ) போட்டு வைக்கப் போறேன். என் ஆ.காரர் எடுத்து கடாசி விடாமல் இருந்தா சரிதான்.
      மகி, ஐடியாக்கு மிக்க நன்றி.

      Delete
  19. ஜூனியர் வானதின்னா சுமம்மாவா?

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா அக்கா, ஜூனியர் வானதிகள் என்றல்லவா இருக்கணும்.
      மிக்க நன்றி.

      Delete
  20. //ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே.///

    அப்போ ஆத்துக்காரர் வந்தபின் கடத்தினால் பறவாயில்லையோ?:)) ஆஆஆஆஆஆ எல்லோரும் கூட்டமா வந்து தேம்ஸ்ல தள்ளப்பார்க்கினமே:)))... மருதமலை முருகா... மீயும் மயில்ல கம்மிங்யா:))

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், என் ஆ.காரரை ஒரு முறை பார்த்த பின்னர் கடத்தினால் பரவாயில்லை என்று சொல்லவந்தேன் அவ்வ்வ்வ்... டீச்சரையும் காணவில்லை. tissue பெட்டியையும் காணவில்லை. சோதனை மேல் சோதனை...

      Delete
    2. Me 50

      //டீச்சரையும் காணவில்லை. tissue பெட்டியையும் காணவில்லை. சோதனை மேல் சோதனை//

      கரீக்டு டீச்சர் மன்டே ரிசல்ட் வர போகுதுன்னு சொல்லிட்டு ஆளையே காணோம் ஐ ஹோப் யு ஆர் ஓகே இமா ?? எங்கிருந்தாலும் வாங்க நீங்க இந்த பக்கம் வராம பூஸ் ரொம்ம்ம்ப துளிர் விட்டு வான்ஸ் எ அழ வெக்குறாங்க பாருங்க டீச்சர் :))

      Delete
  21. தூரத்தில பார்த்தாலே, என் ஜீப் பக்கம் ஆரும் வரமாட்டினம்:)) ஒரே பூஸ் மயம்:)))..

    ஏன் அஞ்சு ஒரு குட்டி தங்க மீன் போடலாமெல்லோ.. சே..சே... எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சேஏஏஏஏஏஏஏஏஎ:)))

    ReplyDelete
    Replies
    1. எனக்கு காரில் எதுவும் ஒட்டுவது அறவே பிடிக்காது.

      Delete
    2. நானும் ஒட்டவே மாட்டன்ன் எல்லாம் பொம்மைகள்தான்:)))

      Delete
  22. அக்கா அதென்னது ஆ.காரர் என்றொரு புது செல்லப் பெயர் உருவாகக்கிட்டிங்க போல....

    பரவாயில்லையே இனி நீங்க கூகுலில் படம் தேட வேண்டிய அவசியம் இல்லை போல...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
  23. வணக்கம் உறவே...
    என்ன செய்ய எப்பிடி குழப்பத்தோட பலபேர்...கவனம் கவனம்.சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்

    அன்புடன் அதிசயா
    காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

    ReplyDelete
  24. ஹ ஹ ஹா ஹா ...வான்ஸ் அக்கா ...மாமா பிளான் பண்ணி தான் உங்களை கார் குள்ளேயே விட்டுட்டு போயிருக்கங்கன்னு நினைக்கேன் ...

    ReplyDelete
  25. அக்கா உங்களோடு ஒருப் பதிவை விருதை பகிர்ந்துள்ளேன் ...நேரமயுக்கும் போது வந்து வாங்கிக் கொள்ளுன்களே அக்கா

    ReplyDelete
  26. மறக்க முடியாத அனுபவம்தான் வானதி!

    ஒரு முறை என் கணவர் ஒரு கடைக்கு முன் எனக்காக காரை பார்க் செய்து காத்திருந்தபோது, திடீரென்று வேறு ஒரு பெண் ஏறிக்கொண்டு விட்டது. என் கணவர் 'தப்பாக வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்' என்றதும் தான் திரும்பிப்பார்த்து, தன் காரோ, கணவரோ அங்கில்லை என்று புரிந்து, ' ஸாரி, ஸாரி!' என்று சொல்லிக்கொன்டே அவசரம் அவசரமாக இறங்கிச் சென்றது!

    ReplyDelete
  27. Vanity nalla nakaisuvaiyodu oru kuzapamum seerthu nalla irukku. Unga maganin drawing and coloring very nice.

    Enakku. Ithe pool enga vanan Neruda ninaithu Vera etho van pakathil poi nirkum potty enga arum en kuttisum seerthu ore siriuppu

    ReplyDelete
  28. லேட்டாகினாலும் பரவாயில்லை எண்டு வந்தது நல்லாதா போச்சுது. மிஸ் பண்னியிருப்பன். ம்.. வாசிச்சுக் கொண்டே சீனை மனசில ஓட விட்டன்.
    ஹாஹாஹா!!!
    சூ...ப்பர் வான்ஸ். ;)

    ரசிச்சு! பகிர்ந்திருக்கிறீங்கள். சின்னாக்கள் தத்ரூபமா கீறியிருக்கினம். வான்ஸைத்தான் உள்ளே காணேல்ல. பயந்தில சீட்டுக்குக் கீழயா! ;)

    ஒருக்கா ஊரில ஒருவர் கடை வாசல்ல இருந்த எங்கட பைக்கை தன் சாவியைப் போட்டு குடைஞ்சு கொண்டு இருந்தார். நல்ல வேளை போய்ச் சேர்ந்தோம்.

    நிச்சயம் சிந்தனைவாதிகள்தான். ;)

    ReplyDelete
  29. இமா, இந்த படத்தை வரைய சொல்லி கேட்டு, கெஞ்சி, போனா போகுது என்று கீறித் தந்தார் என் மகன். இதுக்குள்ளே அம்மா எங்கை ராசா என்று கேட்டிருந்தா... நான் கேட்கவில்லை. ஒரு வேளை நீங்க சொன்னது போல சீட்டுக்கு கீழே தானோ??? எதுக்கும் இன்று ஸ்கூல் முடிஞ்சு வர கேட்டுப் பார்க்கிறேன்.
    நன்றி, இமா.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!