சரட்..சரட்.. என்று சத்தம் இரவின் அமைதியை கிழித்துக் கொண்டு காதில் விழுந்தது. என்னவாக இருக்கும் பேயா? அல்லது பிசாசா? என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இது ஏதோ ஒரு ஆவியின் வேலையாக இருக்க வேண்டும். இரண்டு மாதங்களின் முன்பு செத்த சின்னவாளி கிழவியின் ஆவியா இருக்க வேண்டும் என்றார்கள். அது இருக்கும் போதே நகை, நகைன்னு பேயா அலைஞ்சு சொத்து சேர்த்துச்சு, இப்ப செத்த பிறகு அந்த நகைகளை போட்டுக் கொண்டு திரியுதோ என்று திகிலுடன் பேசிக் கொண்டார்கள்.
அந்தக் குக் கிராமத்தில் 30, 40 குடும்பங்கள் இருந்தார்கள். மின்சார வசதி இல்லாத 1950 களின் ஆரம்ப காலம். மண்ணெண்ணை விளக்குகள் தான் ஒரே ஒரு வெளிச்சம். மக்கள் நேரத்தோடு சாப்பிட்டு, உறங்கப் போய் விடுவார்கள். ஆண்கள் மீன் பிடித் தொழிலுக்கு போய் விட, ஊரில் பெரும்பாலான வீடுகளில் பெண்களும், குழந்தைகளுமே இருப்பார்கள்.
ஊர் அடங்கிய பின்னர் வீதியில் சங்கிலிகள் உராயும் சத்தங்கள் கேட்டன. முதலில் அதைப் பெரிதாக யாரும் எடுக்கவில்லை. யாரோ ஒருவர் கொழுத்திப் போட, அது பேய் உருவம் எடுத்தது. இரவில் பேய் உலவியதாக மக்கள் அதன் பிறகு நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உறங்கினர். வயதான பாட்டிகள் காவலுக்கு இருந்தார்கள். யாருக்கும் வெளியே எட்டிப் பார்க்கும் தைரியம் வரவில்லை. நிலவின் ஒளியில் ஒர் உருவம் சங்கிலிகளை இழுத்துப் போவது மட்டும் மங்கலாக தெரியும்.
சங்கிலிப் பேய் என்று நாமகரணம் சூட்டினார்கள். பூசாரி வந்தார். பல பூஜைகள் செய்தார். சின்னவாளிக் கிழவியின் வீட்டிலும் பூஜைகள் செய்யப் பட்டன. ஆனால் பேய் போன பாடு இல்லை. தினமும் இரவில் வந்து போனது. ஆண்கள் தொழிலுக்கு போகாமல் இருட்டில் பதுங்கி இருந்தார்கள்.
பேய்க்கு இந்த விடயம் காதுக்கு எட்டி விட்டது போல. இரண்டு நாட்களாக வரவில்லை.
ஊரின் ஒதுக்குப் புறத்தில் குடி இருந்தான் ஜெகன். களவு தான் அவன் தொழில். இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் தொழிலுக்கு போகவில்லை. மக்கள் தூங்கியதும் இவன் போய் மாடு, யானை தவிர கொல்லைப் புறத்தில் எதை கட்டி இருந்தாலும் ஈரச் சாக்கினை மிருகத்தின் மேலே போட்டு, இழுத்து வந்து விடுவான். போகும் போது ஈரச் சாக்கின் உள்ளே சங்கிலியை சுற்றி வைத்துக் கொள்வான். திருடி முடிந்ததும் சங்கிலியை தோளில் மாட்டிக் கொள்வான். மக்களை பயமுறுத்தவே அவ்வாறு செய்யத் தொடங்கினான்.
ஊரில் ஆண்களின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை தன் வீட்டில் இருந்தபடியே கவனித்தான் ஜெகன்.
வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே நோட்டம் விட்டான்.
என்ன நடக்கிறது? ஏதாவது காணவில்லயா?. என்றான் அப்பாவியாக.
உனக்கு தெரியாதா? ஊரில் உலவும் சங்கிலிப் பேயை மக்கள் பிடிக்கப் போகிறார்கள், என்றார் யாரோ ஒருவர் போகிற போக்கில்.
நல்லது. வாழ்த்துக்கள், என்றான் ஜெகன்.
எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். இரவு நெருங்க நெருங்க பர பரப்பு கூடியது.
நீ போகலையா சங்கிலிப் பேயை பிடிக்க, என்றான் ஜெகனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புக் குட்டி.
இல்லை என்று வேகமாக தலையாட்ட நினைத்தவன் ஏதோயோசனையின் பின்னர் பக்கத்தில் கிடந்த உருட்டுக் கட்டையுடன் கிளம்பினான். மனதுக்குள் சிரிப்பு வந்தது. ஊருடன் ஒத்து வாழ் என்று என் செத்துப் போன ஆயா சும்மாவா சொல்லிச்சு.
ஆண்கள் வேப்பமரத்தடியில் கூடியிருந்தார்கள். நான்கு பிரிவாக பிரிந்து ஒவ்வொரு திசையில் பேயைப் பிடிக்க அனுப்பபட்டார்கள். ஏதோ ஒரு பிரிவில் ஜெகனும் இடம் பெற்றான்.
புதரின் பின்னே மறைந்து இருந்தார்கள்.
ஜெகன் அப்போது தான் கவனித்தான் பக்கத்தில் இருந்தவர்களின் ஆயுதங்களை. சிலரின் கைகளில் கத்திகள், வீச்சரிவாள், ஈட்டி போன்று முனை சீவப்பட்ட கம்புகள், இன்னும் பல.
ஆண்டவா! நல்லவேளை நான் இரண்டு நாட்களா களவுக்கு போகவில்லை. இன்று வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அந்த சங்கிலியை ஆற்றில் தூக்கிப் போட வேண்டும், என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் சிரிப்பும் வந்தது. கெக்கே பிக்கே என்று சிரித்தான்.
டேய் பைத்தியம், சிரிக்கிற நேரமா இது?, என்று யாரோ இவனை அடக்கினார்கள்.
ம்ம்... நான் பைத்தியம்!!!, என்று நினைத்தபடி உருட்டுக் கட்டையினை உறுதியாக பற்றிக் கொண்டான்.
aaaa
ReplyDeletemee thaan firstuuuuuuuuuuuuu
ReplyDeleteகலை, நீங்க தான் பர்ஸ்ட். உங்களுக்கு ஒரு சங்கிலி பரிசு. சும்மா கழுத்தில் போடத் தான்.
ReplyDeleteசுப்பர் கதை அக்கா .....நல்ல இருஞ்சி ..
ReplyDeleteபேய வைதுலாம் கதை எழுதுறிங்க ....பெரிய ஆளுதான் போங்க நீங்க ...
நினைத்தேன் ஜகன் தான் பண்ணை இருப்பாங்க எண்டு ...
பேயை வைச்சு கதை எழுதினா பெரிய ஆளா???? உங்க வாக்கு பலிக்கட்டும் கலை.
ReplyDeleteமிக்க நன்றியக்கோவ்.
:) அப்பவே எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டேன்!
ReplyDeleteநல்லா இருக்கு வானதி, அந்த கிராமத்துக்கே போய் நடந்ததைப் பார்த்துட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைக் கொண்டுவந்துட்டீங்க! ஜூப்பரு! :)
மகி, எட்டிப் பார்த்துட்டு ஓடுறவங்களுக்கு 100 பவுன்ட்ஸ் அபராதம் சொல்லிட்டேன்.
Deleteமிக்க நன்றி.
பேய்க் கதை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
Deleteகதை நல்லாஇருக்கு வானதி .
ReplyDeleteஅந்த காலத்தில் நம்ம மக்கள் எப்படில்லாம் பயந்திருக்காங்க:))).
.
அஞ்சு, மின்சாரம் இல்லாத காலங்களில் என் அம்மாச்சி இப்படி நிறையக் கதைகள் நடந்ததாக சொல்வார்.
Deleteமிக்க நன்றி.
தலைப்பு பார்த்து பயந்துவிட்டேன்
ReplyDeleteமீ அப்பறம் வரேன்
அடடா மீ தீ firstடு போச்சே
ReplyDeleteசிவா, சிங்கம்ல! தைரியமா படிங்க.
Deleteமிக்க நன்றி.
;)))) Good one VaanS.. ;)
ReplyDeleteImma, thanks
Deletenice story..:) Vanathy ungka e mail id venum.
ReplyDeleteThanska, Thenammai akka.
Deleteலேடி பி டி சாமி..:)
ReplyDeleteஸாதிகா அக்கா, அவர் கதைகள் முன்பு வார இதழில் படிச்ச ஞாபகம். அன்று இரவு படுக்க முடியாது. அவ்வளவு கிலி.
Deleteமிக்க நன்றி.
கதை மிக மிக அருமை
ReplyDeleteநாசூக்காக பேய் என்பது பொய் எனச்
சொல்லிப்போனவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.
Deleteஆஹா... வான்ஸ் பிறகு வந்து பின்னூட்டம் போடலாம் எனப் போனதுதான் மறந்தே போனன்:))..
ReplyDelete//சின்னவாளி கிழவியின் //
ஆஆஆ அவ எப்போ இறந்தா?, நான் இன்னும் முந்தின கதையை மறக்கவில்லை:).
அதீஸ், இந்தக் கதையில் சி.வா. கிழவி இறந்துவிட்டா. ஆனால் மீண்டும் உயிர்த்து எழுவா. நான் ஊரில் இருந்த போது எங்கள் தெருவில் இருந்த கிழவி. அவரின் காணி மிகவும் பெரிதாக இருக்கும்நடுவில் ஒரு சின்ன குடிசை ( 5' * 5'). அதில் மங்கலாக எரியும் விளக்கு. எனக்கு அவரைக் கண்டால் ஒரு வித பயம். இப்ப ஏனோ தெரியவில்லை என் ஆதர்ஸ பாட்டி ஆகிவிட்டார்.
Deleteமிக்க நன்றி, அதீஸ்.
கதை நகைச்சுவையாகவும் நன்றாகவும் இருக்கு வான்ஸ்.
ReplyDeleteஎனக்கொரு யெல்ப் தேவை:)) உந்த சின்னவழிக் கிழவியை கொஞ்ச நாளைக்கு வாடகைக்குத் தரேலுமோ?:)) அதே சங்கிலி உரசும் சத்தத்தோடு:))).. நான் கொண்டு போய்ப் புளியமரத்தடியில கட்டி விடப்போறன்:))))
சி.வா.வேணுமா? அவரை நல்லா வைச்சு பார்க்கிறேன். போய் புளியமரத்திலை கட்டி வைக்க போறாவாம். கர்ர்ர்ர்ர்ர்...இதோடை இந்த யோசனையை விட்டுப் போடுங்கோ. சின்ன வாளி உங்கடை குயீனை விட சூப்பர் அழகு.
Deleteநன்றி.
நான் கொண்டு போய்ப் புளியமரத்தடியில கட்டி விடப்போறன்:))))//
Deleteஏன் சும்மாவே ப.பூ எல்லாம் வர மாட்டேங்குறார் உங்க பக்கத்துக்கு ஒரேயடியா எல்லாரையும் வர விடாம தடுக்குறதுக்கு பூஸ் என்னமோ திட்டம் போடுறாங்க:))
//சி.வா.வேணுமா? அவரை நல்லா வைச்சு பார்க்கிறேன்//
வான்ஸ் சி.வா. கிழவியை வெறுமனே வெச்சு பார்த்துகிட்டு மட்டும் தான் இருக்கீங்களா ஏதும் சாப்பாடு கீப்பாடு போடுறது இல்லையா ??? :))
கிரி, என்ன கேள்வி இது??? இன்று தான்permentant hair straightning செய்துவிட்டேன். அதைப் பார்க்கும் விதம் எல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது என்பதால் சொல்லவில்லை. இப்ப சி.வா. பார்த்தா இப்ப அசின் மாதிரியே இருக்கு.
Deleteவான்ஸ் கதை ரொம்ப நல்லா இருக்கு. நெஜமாவே இந்த மாதிரி எல்லாம் ஊரில் பேய் ன்னு கதை கட்டி விடுறது உண்மைதான். அது சரி வான்ஸ் உங்களுக்கு ப்ராம்பூ ....:)) பயமுன்னா எனக்கு இது பயம். காஞ்சனா பார்த்திட்டே கொஞ்ச நாள் சரத்து குமார் கனவுல வந்து வந்தூஊ அதை ஏன் கேக்குறீங்க?? இப்போ உங்க கதைய படிச்சிட்டு கொஞ்ச நாள் தூக்கம் கேட்டுது போங்க
ReplyDeleteகிரி, காஞ்சனா பேய் படம் என்று தெரிஞ்சும் பார்த்தீங்களா?. நாங்கெல்லாம் விபரமுல்ல.
Deleteஇதுலை எங்கை பேய் வந்திச்சு???
மிக்க நன்றி.
அப்பாவி மக்கள், கூட்டத்திலேயே இருந்த கருப்பு ஆடு ஜெகனை கண்டு பிடிக்க முடியலையே!நல்ல கதை.
ReplyDeleteஆசியா அக்கா, கறுப்பு ஆடு தானா திருந்திட்டார் இல்ல.
ReplyDeleteமிக்க நன்றி.
அதானே பாத்தன்..பேய் எல்லாம் பொய்ங்க....!வாழ்த்துக்கள் கதைப்போக்கு அருமை சொந்தமே
ReplyDeletehahaha super
ReplyDeleteஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
ReplyDelete