Wednesday, January 18, 2012

நானும் தயிர் செய்திட்டேனே!!!

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தின் தலையை சதக் என்று வெட்டினான்... இது நான் சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த கதை. இப்ப அதுக்கென்ன என்கிறீர்களா? நான் தயிர் செய்த கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான்.

ஊரில் இருந்தபோது என் அம்மா தயிர் செய்வார்கள். பாலைக் காய்ச்சி, உறை ஊற்றி வைப்பார்கள் அடுத்த நாள் நல்ல சுவையான தயிர் கிடைக்கும். எனக்கு பருப்புக் குழம்பு, வெந்தயக் குழம்பு, உள்ளி மிளகு சொதி... இப்படி என்ன கறி என்றாலும் தயிர் வேணும். அமெரிக்கா வந்ததிலிருந்து தயிர் எப்போதும் கடையில் வாங்குவதோடு சரி.


ஒரு நாள் என் உறவினர் சொன்னார், " நான் எப்போதும் வீட்டில் தயிர் போடுவேன். கடையில் வாங்குவதில்லை", என்றார்.

சரி ரெசிப்பி சொல்லுங்கள் என்றேன். அவரும் சொன்னார்.
பாலை நன்கு காய்ச்ச வேண்டும். அதாவது 4 தரமாவது பால் பொங்கி வர வேண்டும். மீண்டும் கரண்டியால் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மரில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, இறக்கி வைத்து, நகச்சூடு வந்ததும் சட்டியில் ஊற்றி, உறை போட்டு, சமையல் அறையில் கொஞ்சம் வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும்.

சரி நானும் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்தேன். பாலை காய்ச்சி, பிள்ளைகளையும் கவனித்து, ஒரு வழியா தயிரை உறை ஊற்றி வைத்தால் ... தயிர் வரவேயில்லை. பால் தான் அப்படியே இருந்தது. எங்கே பிழை விட்டேன். பாலை 3, 4 தரம் பொங்கி வர விட வேண்டும்... நான் 5,6 தரம் பொங்க விட்டிருப்பனோ தெரியவில்லை. இனிமேல் நான் தயிர் செய்யும் போது யாரும் என்னைக் கூப்பிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மீண்டும் தயிர் செய்யும் முயற்சியில் இறங்கினேன்.
பாலை சட்டியில் ஊற்றவும் போன் மணி அடித்தது. என் கஸின் கனடாவிலிருந்து.
என்னப்பா சுகமா?, என்றார்.
ம்ம்... நான் கொஞ்சம் பிஸி. 10 நிமிடங்கள் கழித்து நானே உன்னை அழைக்கிறேன், என்றேன்.
அப்படி என்னத்தை வெட்டி முறிக்கிறியோ தெரியவில்லை, என்று அலுத்துக் கொண்டார் கஸின்.
நான் தயிர் செய்யப் போகிறேன், என்றேன்.
ஓ! எப்படி செய்யுறது என்று எனக்கும் சொல்லு பார்க்கலாம், என்றார்.
எல்லாம் விலாவாரியாக சொல்லிய பின்னர் போனை வைத்துவிட்டு, என் வேலையில் மூழ்கிப் போனேன்.
இந்த முறை கண்டிப்பாக 4 முறை பாலைப் பொங்க விட்டு.... எல்லா ப்ரோசிஜரும் சரியாக ஃபாலோ செய்து பாலினுள் உறையினை சேர்த்து மூடி வைத்தேன்.
அடுத்த நாள் காலையில் சட்டியை திறந்து பார்த்தால் ... தயிர் வரவில்லை. இதில் என் பிள்ளைகள் வேறு அம்மா தயிர் செய்கிறாங்க என்று ஒரே சந்தோஷத்தில் இருந்தார்கள். என் கஸின் அவரின் தயிர் சூப்பராக வந்தது என்று சொன்னபோது எனக்கு என் மீது எரிச்சல் வந்தது. அதெப்படி நீங்க சொல்லி உங்க கஸின் செய்கிற போது உங்களுக்கு எப்படி பிழைக்கும் என்று என் ஆ.காரர் வேறு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டு...

இதன் பிறகு விக்ரமாதித்தன் கொஞ்ச நாட்கள் முருங்கை மரம் ஏறாமல் அமைதி காத்தான்.
ஒரு ஆறு மாசங்கள் போனதும் மீண்டும் தயிர் செய்யும் ஆசை வந்தது. இந்த முறை வலு கவனமாக எல்லாம் செய்து.... மீண்டும் பால் தான். ஆனால் இந்த முறை பாக்டீரியா கொஞ்சம் பல்கி பெருகி இருந்தது தெரிந்தது.
சோபாவில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு யோசனை மின்னல் போல வந்தது. அதாவது சூடான/வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும் என்று சொன்னது நினைவில் வந்தது. நான் வைச்ச இடத்தில் சூடு போதவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் வீட்டு அவன் எப்போதும் சில்லென்று இருக்கும். என் பிள்ளைகளுக்கு ப்ரெட் டோஸ்ட் செய்த பின்னர் அந்த டோஸ்டர் சூட்டில் வைத்தேன். பான் கேக் டோஸ்டரில் போட வந்த என் ஆ.காரர் பால் சட்டியை எடுத்து கவுன்டரில் வைக்க, நான் சட்டியை சன் பாத் ( சூரிய குளியல் ) எடுக்க ஜன்னல் ஓரம் வைத்தேன். என் பிள்ளைகள் ஓடித் திரியும் இடம் என்பதால் சட்டியின் பக்கத்தில் நானும் காவல் இருந்தேன். பால் நான் தயிர் ஆகவே மாட்டேன் என்று அடம் பிடித்தது.
இப்படி ஏன் கஷ்டப்படுவான் என்று என் ஆ.காரர் ஓடிப் போய் தயிர் வாங்கி வந்தார். நானும் லேசாக் திக்காக இருந்த பால்/தயிர் சட்டியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறந்தும் போய்விட்டேன்.

ஒரு வாரம் கழித்து சட்டியை திறந்து பார்த்தால் தயிராக மாறி இருந்தது. நானும் தயிர் செய்திட்டேனே!!!!
தயிரில் மேப்பில் சிரப் விட்டு சாப்பிட்டால் யம்ம்ம்ம்ம்ம்ம்.

42 comments:

  1. வாழ்த்துக்கள் விக்கிரமாதித்தி. ;)

    என்ன பால்ல ட்ரை பண்ணினனீங்கள் வான்ஸ்? 1. fat free கக்ஷ்டம். 2. வாங்கி வந்த பாலை ஃப்ரிஜ்ல வைக்காமல் வெளியவே வைக்கலாம். 3. எங்கயாவது மிதமான சூட்டில (warmer cupboard or behind the fridge) வைச்சுப் போட்டு... பொறுமை இல்லாமல் ஒரே ஒரே திறந்து பார்க்காமல் அதை அதன் பாட்டில செட் பண்ண விட்டுருங்க. ஆனாலும்... உங்கட ஊருக்கு 2 நாள் விடத்தான் வேணும் போல.

    ReplyDelete
  2. ஹையா! தயிர் எனக்கா!! ;)))

    எப்பிடி முயன்றாலும் எனக்கு மெல்சிரிபுர ஃபாம்ல விக்கிற எ.த மாதிரி வாறதில்லை. ;(

    ReplyDelete
  3. தேங்காய்த்தயிர் சாப்பிட்டிருக்கிறீங்களோ வான்ஸ்! தேங்காய் கண்ணுக்குள்ளால பாலை விட்டு உறை போட்டு cork போட்டு வைப்பாங்கள். பிறகு அந்தத் தேங்காயையும் சேர்த்துச் சுரண்டிச் சாப்பிடவேணும்.

    நினைத்தாலே இனிக்கிறதே!! ;P

    ReplyDelete
  4. இமா, கொழுப்பு ஃப்ரீயா?? எனக்கு அந்தப் பாலைக் கண்டாலே வெறுப்பு. இது 2% பால் தான். ஆர்வக்கோளாறிலை திறந்து பார்த்தது முதல் தரம் மட்டுமே. பிறகு கண்ணாடி சட்டிக்கு வெளியே நின்றுதான் பார்த்தேன். என் அடுப்பு கரன்ட் அல்ல gas அடுப்பு. வெப்பம் அவ்வளவு இருக்காது.

    எருமைத் தயிர் எனக்கும் பிடிக்கும். இந்தியாவில் இருந்தபோது அடிக்கடி சாப்பிடதுண்டு.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நானும் பலமுறை செய்து படு கேவலமா புளிச்சு மஞ்சளா எல்லாம் வரவும் கைவிட்டுட்டேன் .பத்து கண்டெய்னர் ஒரு பவுண்டுக்கே சில சமையம் கிடைக்கும் .நான் சம்மரில விப்பார் ப்ளேட் போட்டு மோராக்கி குடிப்பேன் .

    ReplyDelete
  6. //தயிரில் மேப்பில் சிரப்// ம்..ஹும்! எனக்கு கித்துள் பாணி.

    ReplyDelete
  7. இமா, நான் கேள்விப்பட்டதே இல்லை. தேங்காயை சுரண்டி சாப்பிடுவதா???? ம்ம்ம்... ய்ம்ம்ம்.
    இப்ப டயட் என்ற பெயரில் எல்லாத்துக்கும் தடா தான். ஒரு நாளைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று எல்லாத்தையும் தின்று ஆசையை தணிச்சுக் கொள்ள வேணும்.

    ReplyDelete
  8. ஏஞ்சலின், எனக்கும் அதே கேவலமான கலர் தான் வந்தது. அதுக்கு பிறகு சட்டியை பார்க்கவே அருவருப்பாக இருக்கும்.
    நான் எப்போதும் தயிர் தான். சில சமயம் பட்டர் மில்க் தாளித்துக் கொட்டி குடிப்பதுண்டு.
    மிக்க நன்றி.

    இமா, கித்துள் பாணிக்கு நான் எங்கனை போவன்.
    இப்படியெல்லாம் ஆசையை கிளறக்கூடாது.

    ReplyDelete
  9. //கித்துள் பாணி// ம்.. இங்க MD brand கிடைக்குது.

    ReplyDelete
  10. ஓ அப்படியா? அடுத்த முறை கனடாவில் வாங்கி வந்துடுவேன். தகவலுக்கு மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  11. mmm..Inge kacheri nadakkuthaa? :)

    Don't make any attempts in winter..BTW,when this experiment happened vanathy?

    ReplyDelete
  12. மகி, கச்சேரி இங்கே தான்.
    நான் சமரிலை நடந்த கொடுமையை தான் எழுதினேன்.
    வின்டரிலை மனிதனே ஃப்ரீஸ் ( தயிர் மட்டும் சரி வரவே வராது ) பண்ணிடுவான் போலை இருக்கே.
    ஆனால் பாருங்கள் என் அம்மாக்கு வின்டரிலும் தயிர் சரியா வரும் ( அவரும் இதே மெதேட் தான் ).

    உங்களுக்கு இன்று இரவு மெயில் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  13. அட கடவுளே தயிர்பண்ண இவ்வளவு கஷ்ட்டப்பட்டீங்களா? ஓ, நீங்க இருக்கும் இடம் குளிர் பிரதேசமோ? அதான்..

    ReplyDelete
  14. தயிர் செய்வதில் இவ்வளவு கதையா!நான் செய்து ரொம்ப நாள் ஆச்சு.வாங்கி காலத்தை ஒட்டுகிறேன்.நல்ல சுவாரசியம்.

    ReplyDelete
  15. நான் வீட்ல தான் தயிர் பண்றேன். காஸ் அடுப்புக்கு கீழ இருக்கிற ஓவென 350 degeree சூடு பண்ணி ஆப் பண்ணிட்டு காயிச்சின பால ஆற வைத்து அதுல 1-2 teaspoon தயிர் விட்டு வைச்சுட்டு காலைல பார்த்த நல்ல கெட்டியான தயிர் கிடைக்கும் . விண்டேர்ல கூட தயிர் பண்ணலாம்

    ReplyDelete
  16. ஹப்பா..வான்ஸுக்கு வெற்றிகரமாக தயிர் தயாரித்ததற்கு ”தயிர் ராணி” என்ற அரிய பட்டத்தை இந்த நல்ல நேரத்தில் வழங்கி கவுரவிக்கின்றேன்..டொட்டட்ய்ங்....

    ReplyDelete
  17. இமாஆஆஆஆஆஆஆஅ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  18. வாணி..தயிருக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிங்களா! பால் உறையவில்லை என்றால் ஒரு சொட்டு லெமன் ஜூஸ் போட்டு உறைய விடலாம்.

    இமா.. தேங்காய் தயிர் கேள்வி பட்டதேயில்லை.. ஒருமுறை முயன்று விடவேண்டியதுதான்.:)

    ReplyDelete
  19. //தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ///
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எதில வேணுமெண்டாலும் கை வையுங்க, ஆனா என் முருங்கையில மட்டும் டோண்ட் டச்:)) சொல்லிட்டேன் ஆமா:)).

    ReplyDelete
  20. எனக்கும் ஆசை, தயிர் செய்யோணும், ரோஃபு செய்யோணும் எண்டெல்லாம்... ஊரில் அம்மா செய்வா, பழப்புளி அல்லது தேசிக்காய் சேப்பது வழக்கம்.

    இங்கதான் நல்ல அளவான புளிப்போடு சுவைபட, விதம்விதமாக கிடைக்குதென்பதால மினக்கெடுவதில்லை.

    உங்கட தயிர்க்கதை, என் தோசை புளிக்க வைக்கும் சமாச்சாரம்போலவே இருக்கு.

    தயிர் வந்துது ஆனா வழமையான புளிப்பு இருந்திருக்காதே? என்ன வான்ஸ்? இருந்திச்சோ?:).

    ReplyDelete
  21. நான் ஒரு தடவை சூப்பர் மார்கட் போன இடத்தில, கொஞ்சம் பால் கான், கூட வாங்கி வந்திட்டன். இருக்கட்டுமே என, பிறகு பார்த்தால் டேட்டைக் கவனிக்கவில்லை, டேட் முடியப்போகுது, அப்போ தயிர் வாங்கி கொஞ்சம் மிச்சம் இருந்துது, அம்மா அப்போ நின்றவ.

    அவவோடு கதைச்சால், ஏன் தேவையில்லாத வேலை எனச் சொல்லிடுவா என நினைத்து:), அவவுக்குச் சொல்லாமல், டக்கென ஒரு கான் (2lit.) பாலை ஊத்தி அந்த மிச்சத் தயிரையும் போட்டு ஃபிரிஜ்ஜிலயே ஒளிச்சு வச்சிட்டேன், கெட்டித்தனமாக தயிர் செய்து காட்டுவோம் என, 2,3 நாளால ஒருவித மணம், அம்மா கேட்டா என்ன செய்து வைத்திருக்கிறாய் என, அது தயிர் அம்மா, பாருங்கோ நல்லா வந்திருக்கும் என்றேன்.....

    அம்மா சொன்னா, பாலைக் காய்ச்சாமலோ தயிருக்கு வைத்தாய் என....ஙேஙேஙேஙேஙேஙே... :))))..

    அப்பூடியே கொட்டியாச்சு, ஆசையும் போயே போச்ச்:)).

    ReplyDelete
  22. //எ.த மாதிரி வாறதில்லை. ;//

    எ.தயிர் மாதிரி எங்கேயும் சுவை கிடைக்காது,, அது தொதல் கட்டி மாதிரி இருக்கும்... புட்டு, இடியப்பம், ரைஸ் + தயிர்+ சீனி...= சூப்ப்ப்ப்ப்ப்பர்:)).

    ஆனா என்னமோ இங்கு என்னைத்தவிர யாரும் தயிர் தொடாயினம்... ரெடிமேட்.. விதம் விதமான யோக்கட்ஸ் சாப்பிடுவினம், ஆனா உணவோடு பிளேன் யோக்கட் ம்ஹூம்ம்ம்:)).

    ReplyDelete
  23. //
    இமா said...
    ஸாதிகா அக்கா!!! ;)))
    January 19, 2012 12:30 AM
    ஸாதிகா said...
    இமாஆஆஆஆஆஆஆஅ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
    January 19, 2012 1:19 AM//

    ஸாதிகா அக்கா உந்தக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போதாது:))).. இன்னும் சத்தமா... சொல்லோணும், முளையிலயே கிள்ளிடோணும், இல்லையெனில் இமேஜ்ஜை டமேஜ் ஆக்கிடுவினம் ஸாதிகா அக்கா>>>>:)))

    அவ்வ்வ்வ்வ் இனியும் நிண்டால் ஆபத்து.... உஸ்ஸ்ஸ்ஸ் பூஸ் எஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  24. லஷ்மி ஆன்டி, கஷ்டம் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டேன்.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, நானும் இப்ப வாங்குவதோடு சரி.
    மிக்க நன்றி

    ReplyDelete
  25. லக் ஷா, தகவலுக்கு நன்றி. நான் அவனில் வைச்சது இல்லை.
    மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, பட்டம் குடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க நல்ல பெயரா குடுக்க கூடாதா??
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. இமா, நீங்க எதுக்கு வீணா டென்ஷம் ஆவுறீங்க. இந்தப் பட்டத்தை நானே உங்களுக்கு மனமுவந்து விட்டுத் தாறேன்.

    ReplyDelete
  27. //தயிர் வந்துது ஆனா வழமையான புளிப்பு இருந்திருக்காதே? என்ன வான்ஸ்? இருந்திச்சோ?://
    வந்திடுவாங்கப்பா வரிசையா ஃபைல்களை தூக்கிட்டு இன்வெஸ்டிகேட் பண்ண?!!!
    தோசை மா எனக்கு எப்போதும் சூப்பரா வரும் ( அதீஸூக்கு நல்லா எரியட்டும் ).
    ஏன் முருங்கை மரத்தில் ஜெய் இருக்கிறாரோ????? நான் அவரை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.
    பாலை காய்ச்சாமால் தயிரா??? ஹையோ! கிக்க்க்க்க்க்க்..ஹா... சிரிச்சு முடியலை.

    எங்க வீட்டிலும் same ஸ்டோரி தான். ப்ளேயின் தயிர் எனில் தொடமாட்டார்கள். எனக்கு அது தான் பிடிக்கும். இல்லாவிட்டால் தேன் கலந்த தயிர் விருப்பம்.

    அது வேறொன்றுமில்லை அதீஸ் இமாக்கு பொறாமை. அது தான் இப்படி ரியாக்ட் செய்கிறா.

    ReplyDelete
  28. //அது வேறொன்றுமில்லை அதீஸ் இமாக்கு பொறாமை. அது தான் இப்படி ரியாக்ட் செய்கிறா.//

    றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!! பொறுத்தது போதும் பொயிங்கி எழுங்க:)))).

    ReplyDelete
  29. பொய்ங்கி எழ ரீச்சருக்கு கொஞ்ச டைம் குடுங்கோ அதீஸ். இமா, இப்படி அடிக்கடி கோபப்படுறது உடம்புக்கு நல்லதில்லை. சொல்லிட்டன்.

    ReplyDelete
  30. //ஏன் முருங்கை மரத்தில் ஜெய் இருக்கிறாரோ????? நான் அவரை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.
    பாலை காய்ச்சாமால் தயிரா??? ஹையோ! கிக்க்க்க்க்க்க்..ஹா... சிரிச்சு முடியலை.//

    புளிய மரம் , முருங்கை பேட்டண்ட்டுக்கு அப்ளை செய்திருக்கேன் :-))))

    ReplyDelete
  31. இண்டிரஸ்டிங்கான சப்ஜக்ட் ஒரு வரியில பதில் போடுவதை விட ஒரு பதிவா போட்டுடரேன் :-)))

    ReplyDelete
  32. //இமா said...

    வாழ்த்துக்கள் விக்கிரமாதித்தி. ;)//

    இங்கேயும் வடையும் , ஆயாவுமா ..?? ஹி..ஹி... , நல்லாயிருங்கோ ..ச்சோ... பத்திரமா கூட்டிப்போங்கோ ஹா..ஹா... :-))))

    ReplyDelete
  33. அம்மாடியோ எப்படியோ ஒரு வாரம் கழித்தாவது பால் திரியாமல் தயிர் ஆனுச்சே... அப்பறம் அந்த தயிரை என்ன செய்திங்க >

    ReplyDelete
  34. //ஜெய்லானி said...
    //இமா said...

    வாழ்த்துக்கள் விக்கிரமாதித்தி. ;)//

    இங்கேயும் வடையும் , ஆயாவுமா ..?? ஹி..ஹி... , நல்லாயிருங்கோ ..ச்சோ... பத்திரமா கூட்டிப்போங்கோ ஹா..ஹா... :-))))//

    haa..haa..haa.. என்னா ஒரு சந்தோசம்... தான் தப்பிட்டேன் என:))))

    ReplyDelete
  35. உங்க தயிர் செய்யும் அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. நானும் பூஸாரை போல கடையில் தான் வாங்குவது வீட்டுல செய்ய பொறுமை இல்லை.

    பால் நெறைய்ய மீந்திடுச்சுன்னா நான் பால் கோவா கிண்டிடுவேன். சின்ன பசங்களுக்கு ரொம்ப புடிச்ச ஸ்வீட்.

    ReplyDelete
  36. டீச்சர் சொன்ன தேங்காய் தயிர் நான் கேள்வி பட்டதில்ல ஆனா ரொம்ப ருசியா இருக்கும் போல் தெரியுது.


    //ஆனா உணவோடு பிளேன் யோக்கட் ம்ஹூம்ம்ம்:)).// எங்க வீட்டுல அப்புடியே opposite தயிர் இல்லாம சாப்பாடு என் பையனுக்கு எறங்காது . சப்பாத்திக்கும் தயிர் !!

    ReplyDelete
  37. ஜெய், பேட்டண்ட் வெகுவிரைவில் எடுத்திடுங்கோ. இங்கே அமெரிக்காவில் வீடுகளில் தான் பேய், பிசாசு இருக்குமாம். மரங்களில் அல்ல. இந்தக் குளிர் வெதர் அதுகளுக்கும் சரி வராது போல. வேணுமென்றால் சொல்லுங்கள் பேய், பிசாசுகள் இருக்கும் வீடுகளையும் வாங்கிடலாம்.
    //இண்டிரஸ்டிங்கான சப்ஜக்ட் ஒரு வரியில பதில் போடுவதை விட ஒரு பதிவா போட்டுடரேன்//
    ஏன் என்ன செய்யப் போறீங்க??? ஆண்டவா காப்பாத்து. கடை தயிரை வாங்கி வைச்சு, படம் பிடிச்சு போட்டுட்டு நீங்க செய்ததா புளுகப்படாது.

    ReplyDelete
  38. சிநேகிதி, கடைசி வரி பாருங்க.
    மிக்க நன்றி.

    கிரிசா, பால் கோவா நல்ல ஐடியா தான். என் பிள்ளைகளுக்கு இனிப்பு பிடிக்காது.
    மிக்க நன்றி, கிரி.

    ReplyDelete
  39. எங்களுக்கு இங்கு பிரச்சனையே
    பால் தயிராகிவிடாமல் பிரிட்ஜில் வைத்து
    மெனக்கெடுவதுதான்
    ஊருக்கு ஊர் எப்படி பிரச்சனை
    தலைகீழாக மாறுகிறது பாருங்களேன்
    சுவாரஸ்யமான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. இட்லிமாவு புளிப்பதுதான் கஷ்டம்னு படிச்சிருக்கேன். ஆஃப்டர் ஆல் தயிர் செய்வதுகூட இவ்ளோ கஷ்டமா?? :-((( நல்லவேளை நான் கனடா வரவில்லை!!

    //vanathy said...
    பொய்ங்கி எழ ரீச்சருக்கு கொஞ்ச டைம் குடுங்கோ //

    4 தரம் பொங்கினாப் போதுமா? அல்லது 5,6 தடவை பொங்கலாமா? :-))))

    ReplyDelete
  41. என்னை நித்திரையாக்கிப் போட்டு... இங்க என்னை வைச்சுப் பொய்ங்கி இருக்கிறீங்கள், பொல்லாத சனம். ஒருவரையும் நம்பப்படாது இமா. ஹும்!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!