Sunday, January 22, 2012

பில்ட் இன் ஜிபிஎஸ்

கனடா வந்த புதிதில் எனக்கு இடம், வலம் தெரியாது. அதாவது ஏதாவது புது இடங்களுக்கு போய், வரத் தெரியாது. எப்ப பார்த்தாலும் கணிணியில் கார்ட்ஸ் கேம் தான் கதி. இதைப் பார்த்து கடுப்பான என் அண்ணா என்னை இங்கிலீசு பேசிப் பழக ஒரு வகுப்பில் சேர்த்து விட்டார். முதல் நாள் என்னைக் காரில் கொண்டு போய் ரோட்டின் ஓரத்தில் இறக்கிவிட்டார். நான் பில்டிங்கை நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பி பார்க்க என் அண்ணாவும், காரும் மாயமாகி இருந்தார்கள்.
அடப்பாவி! இப்படியா நட்டாற்றில் விட்டுட்டு போறது என்று அழுகை வந்தது.
ஒரு வழியா எலிவேட்டரை கண்டு பிடிச்சு, 5 வது தளத்திற்கு சென்றேன்.
அங்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் நிரப்பிக் கொடுத்த பின்னர் பெண்மணி சொன்னார், இங்கிருந்து வெளியே போய் வலது புறம் திரும்பி, மீண்டும் இடது புறம் திரும்பி, ஒரு அரை மைல் தூரம் நடக்க ஒரு கட்டிடம் வரும். அங்கே தான் இன்று உங்களுக்கு வகுப்புகள் ஆரம்பம், என்றார்.
இப்படி வலது, இடது என்று சொன்னால் நான் என்ன செய்வேன், என்று கறுவியபடி அவர் கொடுத்த அட்ரஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
இப்ப மீண்டும் குழப்பம். எனக்கு வலது புறம் என்று சொன்னாரா? அல்லது அவருக்கு வலது புறம் என்று சொன்னாரா? ஏதோ ஒரு முடிவுடன் இடது புறம் நடந்தேன் . ஆனால் அவர் சொன்ன ஒரு லான்ட் மார்க்கும் வரவில்லை. மழையும், அழுகையும் தான் வந்தது.

அங்கு கண்ணில் பட்ட கனடியனிடம் இந்த அட்ரஸ் தெரியுமா என்று கேட்டேன். அவர் நல்ல டிப்டாப்பாக உடுத்தி இருந்தார். மழைக்கு குடையும் பிடித்தபடி வந்தவர். என் அட்ரஸ் பேப்பரைப் பார்த்துவிட்டு, வா நான் எங்கே என்று காட்டுகிறேன் என்றார். குடையினை எனக்கு பிடித்தபடி வந்தார்.

குடை எனக்கு வேண்டாம். உங்க ஆடை எல்லாம் நனையுதே என்றேன்.
பரவாயில்லை. நீ வா என்றார்.
ரோட்டின் தலைப்பு வரை வந்தவர். அங்கிருந்தே நான் போக வேண்டிய திசையினைக் காட்டி, விளக்கமாக அட்ரஸ் சொன்னார்.
நான் ஒரு தடவைக்கு நூறு தடவை கேட்டு சரி பார்த்த பின்னர், அவருக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டேன். நாட்டில் இப்படி நல்லவர்கள் இருப்பதால் தான் மழை, ஸ்நோ எல்லாம் பெய்யுதாம் ஆங்.


சில வாரங்களின் முன்பு எனக்கு ஒரு புது இடத்திற்கு போக வேண்டி இருந்தது. கூகிள் போய் தேவையான எல்லாம் பிரின்ட் பண்ணியாச்சு. ஆனால், குழப்பமாக இருந்தது. என் ஆ.காரரிடம் கேட்டேன். அவர் என் அண்ணாவோடு போனில் பேசியபடி எனக்கு அட்ரஸ் சொன்னார். சில லான்ட் மார்க் சொல்லி, இங்கே திரும்பினால் அது வரும், அங்கே திரும்பினால் இது வரும் ....
நான் ஙேஙே ....

நீங்க அட்ரஸ் சொல்றீங்களா. அது போனாலும் போயிடும், என்று என் அண்ணா போனில் சொல்ல, இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

கர்ர்ர்ர்.....என்று மனதில் உறுமிக் கொண்டேன்.

என் கணவர் சொன்னார், ஆண்களுக்கு தலையினுள் பில்ட்-இன் ஜிபிஎஸ் இருக்காம். அவர்களுக்கு திசைகள் கண்டு பிடிப்பது, புது இடங்களுக்கு போவது, தொலையாமல் திரும்பி வருவது எல்லாம் சும்மா அல்வா சாப்பிடுவது போலவாம்.
உதாரணமாக, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிச்சது. கடலில் எப்படி தொலையாமல் வந்தார்??!!
நட்சத்திரங்களின் உதவியோடு பல மீனவர்கள், கடல் வாணிபம் செய்பவர்கள் திசையினை அறிவார்கள் என்று ஊரில் என் பாட்டா சொல்வார்.

ஒரே பெருமைதான் போங்கள்.

ஒரு வழியா என் அண்ணாவோடு உரையாடல் முடிஞ்சு போனை வைத்த பின்னர் சமையல் அறைக்குப் போனார் என் கணவர். எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
என்ன தேடுறீங்க?, இது நான்.
சீரியல் சாப்பிட பௌல் எங்கே?, என்றார்.

அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா? செயற்கை கோளிலிருந்து சமிக்கைகள் கிடைக்கவில்லையா? என்று நினைத்தபடி வழக்கமாக சட்டிகள் அடுக்கி வைக்கும் இடத்தினைக் காட்டினேன்.

41 comments:

 1. கடைசிலயாவதுஆத்துக்காரருக்கு பல்ப் குடுப்பீங்கன்னு எதிர்பார்த்த என் நினைப்பில் மண்.

  ReplyDelete
 2. அழகான கட்டுரைதான். நயமாகவும் எழுதியிருக்கீங்க

  ReplyDelete
 3. கடைசியில் இப்படி முடிச்சிட்டீங்களே! நம்மால் அது தான் முடியும் ?!..

  ReplyDelete
 4. //அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா?//

  ஹா..ஹா..ஹா... நல்ல ஒரு கேள்வியைக் கேட்டு, ஒட்டுமொத்த பெண்களுக்குமே பெருமை சேர்த்திட்டீங்க வான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... சூப்பர....ஆஆஅப்பூஊ:)).

  ஆண்கள் மொடல் பொம்மைகளாமே.. பெண்கள்தான் ஒரிஜினலாமே:)).. அப்போ மொடலுக்கு வைத்த ஜிபிஎஸ் ஐ, ஒரிஜினல் பொம்மைக்கு வைக்க மறந்திட்டாரோ ஹோட்:))))))))))..

  ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
 5. ராஜி, கடைசி வரி. பல்ப் ...பெரிசா குடுத்திருக்கிறேனே.
  மிக்க நன்றி.

  நன்றி, குணசேகரன்.

  ReplyDelete
 6. ஆசியா அக்கா, மிக்க நன்றி.

  அதிரா, இப்பெல்லாம் ரஜினி படம் போல பஞ்ச் லைனில் முடிச்சா தான் மக்களுக்கு ஒரு சந்தோஷம்.
  எங்க பெருமையை நாங்க தானே சொல்லோணும்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. ஆயிரம் வாட்ஸ் பல்ப் வைச்ச மாதிரி ஒளிமயமா இருக்கு
  men really do use just half their brainS.where as we women use our whole brain LOL!!!

  ReplyDelete
 8. அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா? செயற்கை கோளிலிருந்து சமிக்கைகள் கிடைக்கவில்லையா? என்று நினைத்தபடி//வான்ஸ்,நினைக்க மட்டு ஏன் செய்தீர்கள்?கேட்டுவிட வேண்டியதுதானே?:)

  ReplyDelete
 9. :)
  That gps will work only outside their corresponding residence vanathy!

  My hubby will search for anything n everything, having all the stuff around him. :) but I've to admit, he has much more direction sense than me! hehe!

  ReplyDelete
 10. ரசித்து அழகா எழுதி இருக்கீங்க. ஆனாலும் பெண்களுக்கு இன்னும் வழிகண்டு பிடிப்பதில் குழப்பம் இருக்கத்தானே செய்யுது?

  ReplyDelete
 11. //ராஜி said...

  கடைசிலயாவதுஆத்துக்காரருக்கு பல்ப் குடுப்பீங்கன்னு எதிர்பார்த்த என் நினைப்பில் மண்.
  January 22, 2012 9:41 AM
  //

  அவுங்க ரொம்ப நல்லவங்க

  ReplyDelete
 12. " லான்ட் மார்க்கும் வரவில்லை. மழையும், அழுகையும் தான் வந்தது" என்ற வரிகளைப்படித்த போது சிரிப்பு வந்தது.
  "அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா?" நகைச்சுவை ததும்ப உங்கள் அனுபவங்களை எழுடதியிருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்

  ReplyDelete
 13. //பில்ட் -இன் ஜிபிஎஸ்//

  ஹய்யோ... அது நீங்க சொன்னமாதிரி வீட்டுக்குள்ளால வந்தா ஷ்ட்-டவுன் ஆகிடும். ஏனா, வீட்டிலதாம் ரோபாவா நாமளும், பிள்ளைகளும் இடுக்கோமே கண்டுபிடிச்சு கொடுக்க?!! :-)))))

  எப்போ பார் வீட்டில, மொபைல் எங்கே, கார் சாவி எங்கே, பர்ஸ் எங்கே, கண்ணாடி எங்கே, அம்மா(நான்) எங்கே.... எங்கே எங்கே எங்கேதான் எப்பவும்!! :-((((((

  //என்று நினைத்தபடி//
  நல்ல சான்ஸை விட்டுட்டீங்களே வானதி!! உடனே சொல்லிருக்கணும்....

  ReplyDelete
 14. //அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா? செயற்கை கோளிலிருந்து சமிக்கைகள் கிடைக்கவில்லையா? //

  வான்ஸ்.....கரெக்டான(லாஜிக் ) பதிலை நீங்களே சொல்லிட்டீங்க .நோ கமெண்ட்ஸ் ஹி...ஹி.... :-))

  ReplyDelete
 15. வரும் போது எப்படி வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே... நடை ராஜா சர்வீஸா..?????? :-)))))

  ReplyDelete
 16. //ஹா..ஹா..ஹா... நல்ல ஒரு கேள்வியைக் கேட்டு, ஒட்டுமொத்த பெண்களுக்குமே பெருமை சேர்த்திட்டீங்க வான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... சூப்பர....ஆஆஅப்பூஊ:)). //


  வீட்டுல எலி வெளியில புலி..!!! :-)))))))))))))).

  ReplyDelete
 17. வான்ஸ் சொன்னாலும் சொன்னீங்க நெத்தி அடி! எங்க வீட்டுலயும் இதே கதைதான். திருமணத்திற்கு முன்னே தனியா இருந்து சமைச்சு சாபிட்டவருக்கு இப்போ எங்க கிச்சென் ல எது எங்கே இருக்குன்னு தெரியாது. நான் வீட்டுல இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ரெண்டு பெரும் ன்னு கேட்டா நீ ஏன் வீட்டுல இல்லாம போறே அப்புடின்னு அப்பாவும் புள்ளையும் என்ன திருப்பி கேக்குறாங்க !

  ReplyDelete
 18. //எங்க பெருமையை நாங்க தானே சொல்லோணும்// கரீக்டா சொன்னீங்க

  //men really do use just half their brainS.where as we women use our whole brain// இத ஆட்டோ பின்னாடியே எழுதி வெக்கலாம் போல இருக்கே :))

  //வீட்டுல எலி வெளியில புலி..!!! // வீட்டுல புலியா இருந்தாங்கன்னா அவங்க நிம்மதிக்கு நாங்க கியாரண்டி கெடையாது !!!

  ReplyDelete
 19. //வீட்டுல எலி வெளியில புலி..!!! // வீட்டுல புலியா இருந்தாங்கன்னா அவங்க நிம்மதிக்கு நாங்க கியாரண்டி கெடையாது !!!//

  அதே பயம்தான்...என்னோட முதல் .கடைசி கமெண்டும் :-)))))))

  ReplyDelete
 20. //. நான் வீட்டுல இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ரெண்டு பெரும் ன்னு கேட்டா நீ ஏன் வீட்டுல இல்லாம போறே அப்புடின்னு அப்பாவும் புள்ளையும் என்ன திருப்பி கேக்குறாங்க !//

  :-) X 12546589

  ReplyDelete
 21. //:-) :-) X 12546589// ஜெய் இதுக்கு என்ன அர்த்தம்ன்னு விளக்கம் சொல்லிடுங்க ஆமா!! நான் ஏற்க்கனவே காஞ்சனாவ பார்க்க சொன்ன உங்க மேல செம கடுப்புல திரியுறேன். டெய்லி நைட் சரத்குமார் தலைய விரிச்சு போட்டுக்கிட்டு வர்ற கனவுதேன்::))

  ReplyDelete
 22. என்னத்தைச் சொல்ல!! எனக்குக் கொஞ்சமா வந்த நித்திரையும் போச். ;))
  ////அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா?//// ;)))) அது... சரியான இடத்துக்குப் போக முதல்... take a u turn எண்டு கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கும். ;))

  ReplyDelete
 23. ஏஞ்சலின், அப்படீங்கறீங்களா??
  மிக்க நன்றி.

  ரத்னவேல், மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, கேட்கவில்லை. ஆனால் படிச்சு பார்த்துட்டு சிரிச்சார்.
  மிக்க நன்றி.

  மகி, உங்க வீட்டிலையுமா?
  என் ஆ.காரர் சில சமயம் கண்ணாடியை போட்டுட்டே அதைக் காணவில்லை என்று தேடுவார்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 24. லஷ்மி ஆன்டி, உண்மை தான். சில பெண்கள் விதிவிலக்கா இருக்கிறார்கள்.
  மிக்க நன்றி.

  ராசா, நான் நல்லவங்க தான்!!!
  மிக்க நன்றி.

  வியபதி, மிக்க நன்றி.

  ReplyDelete
 25. ஹூசைனம்மா, இந்த முறை அவரே என் போஸ்ட் படிச்சார். படிச்சுட்டு ஒரே சிரிப்பு தான் போங்கள்.
  மிக்க நன்றி.

  ஜெய், வரும்போது என் அப்பா வந்தார் கூட்டிச் செல்ல. அவரும் வராவிட்டால் இந்தப் பதிவுலகம் நல்ல ஒரு பதிவரை இழந்திருக்கு.
  நாங்க எப்பவும் புலி தான். ஆனா வீட்டிலை புலித்தோல் போர்த்திய எலி.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 26. கிரிசா, என் ஆ.காரரும் இப்ப இப்படித்தான் அப்படி ஒரு அப்பாவி போஸ்/முகம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்வேன்.
  நானும் இதே டயலாக் விடுவேன். ஆங்! நீங்க சொல்வீங்க ஆனால் எங்கேயும் போகமாட்டீங்க என்பார்கள்.
  மிக்க நன்றி.

  ஜெய் சொல்லி நீங்க காஞ்சனா பார்த்தீங்களா??? அப்படியே முனி படம் பாருங்களேன்.

  ReplyDelete
 27. இமா, ஏன் நீங்களும் காஞ்சனா படம் பார்த்தனீங்களோ???
  அது யு டேர்ன் இல்லை ரிவர்ஸில் போக சொல்லும்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 28. //
  ஜெய் சொல்லி நீங்க காஞ்சனா பார்த்தீங்களா??? அப்படியே முனி படம் பாருங்களேன்.//

  வான்ஸ்...நீங்க ரெடின்னு சொன்னா ‘நச்சுபுரம் ’ லிங்க் தரேன் , பயப்படாம பாக்குறீங்களா...ஹி..ஹி... :-)))

  ReplyDelete
 29. அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா??? பேய் படம் என்றாலே ஆரம்பத்திலேயே ஒரு முசீக்( music) வரும் கண்டு பிடிச்சிடலாம். இல்லாவிட்டால் ஒரு அம்மா கண் வெளியே விழுறாப்போல பார்த்துக் கொண்டே இருப்பார்கள். "ப" வரியில் என்ன வந்தாலும் நம்மளுக்கு பயம் தான். கிரிசாக்கு அந்த லிங்கை அனுப்பிடுங்கோ.

  ReplyDelete
 30. http://www.youtube.com/watch?v=dyBtILuGLJM&feature=related


  http://www.youtube.com/watch?v=QIGjNJUNUpk&feature=related

  அப்படியே பிடிச்சு பார்த்துகிட்டே போங்க :-))) திரில் ஃபிலிம் :-))

  ReplyDelete
 31. //அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா???//

  இது ’படம்’எடுக்கிற படம் ஹி...ஹி... :-))))

  ReplyDelete
 32. அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

  மகன் :"லிப்ஸ்டிக் எடுத்து தர சொன்னாங்க. தெரியாம Fevistick எடுத்து தந்துட்டேன்"

  அப்பா "நீ என் மகன் இல்லடா. நண்பேன்டா!!"

  ReplyDelete
 33. ;) இதாரு சம்பந்தம் இல்லாம வந்து ஜோக்கு விடுறது!! ;))

  ReplyDelete
 34. ஜெய்லானி said...
  அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

  மகன் :"லிப்ஸ்டிக் எடுத்து தர சொன்னாங்க. தெரியாம Fevistick எடுத்து தந்துட்டேன்"

  அப்பா "நீ என் மகன் இல்லடா. நண்பேன்டா!!////


  haa....haa...haa...... :)))

  ReplyDelete
 35. ஜெய்லானி said...
  //வீட்டுல எலி வெளியில புலி..!!! // //

  றீச்சர்: ஆடு போல உள்ளே வரும் ..
  சிங்கம்போல வெளியே போகும்..

  அது என்ன?

  மாணவன் :அது எங்க அப்பா றீச்சர்:)

  ReplyDelete
 36. படிச்சிட்டு ஒரே சிரிப்பு ;-)

  அதெல்லாம் ஒண்ணுமில்ல. எங்க ஆ.கார்ருக்கு ஜிபிஎஸ் எங்கேயும் கிடையாது. ஒரே குழப்பம் தான்.

  ReplyDelete
 37. //றீச்சர்: ஆடு போல உள்ளே வரும் ..
  சிங்கம்போல வெளியே போகும்..

  அது என்ன?

  மாணவன் :அது எங்க அப்பா றீச்சர்:)//

  றீச்சர் :மகனே ...நீயும் அப்பாவாகும் போது எப்படியோ.?? யாருக்கு தெரியும் ...!! :-))))))))))))))))

  ReplyDelete
 38. என்னங்க இப்படி சொல்றீங்க? கொலம்பஸ் தொலைஞ்சு போனதுனால தானே (இந்தியான்னு நெனைச்சி) அமெரிக்கா வந்தாரு? பில்ட் இன் ஜி பி எஸ் எல்லாமே அப்படி தான்!

  ReplyDelete
 39. ஜெய், உங்க வீட்டு ஜோக் எல்லாமே சூப்பரோ சூப்பர்.

  வெற்றிமகள், ஜிபிஎஸ் இல்லையா? உண்மையாவா?
  என் நண்பி ஒருவர் செம கில்லாடி. அவருக்கு தெரியாத இடம் இல்லை. அமேசன் காட்டுக்குள் விட்டுட்டு வந்தாலும் பஸ்ஸோ, ட்ரெயினோ பிடிச்சு வந்திடுவார்.
  மிக்க நன்றி.

  பூர்ணா, அவர் எதைக் கண்டு பிடிச்சார் என்பதைவிட அந்தக் காலத்தில் எப்படி கடல் வழியா பயணம் செய்தார் என்பதே பெரிய ஆச்சரியம்.
  எனக்கு கடல் பார்த்தாலே கலக்கமாக இருக்கு. அதுவும் சூறாவளி, புயல் நேரங்களில் கடல் அலை... யப்ப்பா நினைக்கவே குலைநடுங்குது.
  மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!