Friday, November 4, 2011

குறட்டைப் புலி


இதில் வரும் கதை நாயகன் பெயர் தான் குறட்டைப் புலி. அவனுக்கு அவன் பெற்றோர் ஆசையாக வைத்த பெயர் குணசீலன். இவன் விடும் குறட்டையால் மனைவி வைத்த பெயர் " குறட்டைப் புலி ". மனைவி ரோகிணிக்கு இவனின் பட்டப்பெயர் சொல்லி அழைப்பது என்றால் கொள்ளை விருப்பம். அதுவும் மிகவும் கோபமாக இருக்கும் நேரத்தில் வரும் குறட்டைப் புலி என்ற பெயருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் போது அழைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை அறிய முடியும்.

ஐயா, குறட்டைப் புலியே, என்ன யோசனை என்று குரல் வந்ததும் விளங்கியது ஏதோ அர்ச்சனை நடக்கப்போகிறது என்பது.

என்ன சொல்லுங்க மேடம்?, என்றான் குணசீலன்.

ராத்திரி முழுக்க உங்க குறட்டையால் படுக்க முடியவில்லை. எழுந்து போய் டீ போடுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்கணும், என்று உத்தரவு வந்தது. இவன் புரண்டு படுத்தான்.

என் அப்பாவுக்கு கல்யாணம் பேசும் போதே கண்டிஷனா சொன்னேன் குறட்டை விடும் மாப்பிள்ளை வேண்டாம் என்று. அவர் கேட்டாத்தானே. இப்ப பாரு ஒவ்வொரு நாளும் நான் படும் பாடு, என்று தொடர்ந்த ரோகிணியை இடைமறித்தான் குணசீலன்.

மாப்பிளையை தூங்க வைச்சு, பக்கத்தில் இருந்து பார்த்திருக்க வேணும் என்று சொல்கிறாயா? என்றுவிட்டு பெருங்குரலில் சிரித்தான்.
இங்கை பாரு ரோகிணி, குறட்டை ஒரு வியாதி. குறைட்டை விடுபவர்கள் நிம்மதியாக படுப்பதில்லை. அவர்களுக்கு ஆயுளும் குறைவாம், என்று காரணங்கள் சொன்னான்.

இதையே எவ்வளவு நாட்களுக்குத் தான் சொல்வீங்க. second hand snoring
என்ற நோயால் நான் பாதிச்சுப் போய் இருக்கிறேன். இந்த மருத்துவ உலகம் இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணவே மாட்டார்களா? என்றாள் ரோகிணி.

ம்ம்... கண்டு பிடிச்சு உன் பெயரையே வைக்கப் போறாங்களாம் என்று இடை மறித்தவனை முறைத்தபடி தொடர்ந்தாள். என் பாட்டிக்கு 95 வயசு. இப்பவும் குறட்டை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிறார்கள். ஆனால், எங்க தாத்தா பாருங்க 40 வருடத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டார்.

ஓ! அப்படியா, என்றான் குணசீலன்.

என்ன நொப்படியா? எத்தனை முறை சொல்றது மருத்துவரிடம் போய் ஏதாவது தீர்வு கேட்கச் சொல்லி. நீங்க கேட்டாத் தானே, என்று அலுத்துக் கொண்டாள்.

தாயே! அது மட்டும் முடியவே முடியாது. போன வாரம் தொலைக் காட்சியில் ஒரு பொருள் காட்டினார்களே அதை வாங்கலாமா என்று யோசனை சொன்னான்.

போன மாசம் ஒரு பொருள் வாங்கினோமே அதுக்கு என்ன ஆச்சு?, என்று கேட்டாள் ரோகிணி.

ஓ! பந்து போல ஒரு பொருளை முதுகில் ஒரு பை தைச்சு, அதனுள் பந்தை வைச்சு படுக்கச் சொன்னாங்களே? அந்தப் பொருளா? , என்றான் குணா. எங்க வீட்டு டாமி போன வாரம் வைச்சு விளையாடிட்டு இருந்திச்சே என்றான்.

அதுக்கு 30 டாலர்கள் தண்டமாக அழுதோமே. அதை டாமிக்கு குடுத்துட்டு பேச்சைப் பாரு என்றாள்.
இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகிறது. உங்களை வைச்சுட்டு நான் என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை என்று நொந்து கொண்டாள். என்னை மட்டும் இல்லை பிறக்க போகிற குழந்தையைக் கூட உங்கள் குறட்டை பாதிக்கத் தான் போகிறது என்றாள் ரோகிணி.

அந்த நாளும் வந்தது....

( தொடரும் )

பின்குறிப்பு: இந்தக் கதை இன்னும் முடியவில்லை. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்க முணு முணுப்பது விளங்குது. நான் கொஞ்சம் அவசர வேலையாகப் போவதால் கதையினை முடிக்க நேரம் இல்லை. எனவே நீங்க இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்தால் பரிசெல்லாம் கொடுக்கமாட்டேன். ஆனால், கண்டிப்பாக பாராட்டு மழை உண்டு. குறட்டைப் புலி திருந்தினாரா? மருத்துவரைப் பார்க்கப் போனாரா? முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குறட்டைப் புலியை கொல்லவோ அல்லது சித்ரவதை செய்வதாகவோ கண்டிப்பாக முடிவு இருக்கப்படாது. உங்கள் வீட்டில் கூட ஒரு குறட்டைப் புலி இருக்கலாம். அல்லது நீங்கள் கூட ஒரு குறட்டைப் புலியாக இருக்கலாம். உங்கள் கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று ஓட விடுங்கள் பார்க்கலாம்.





******************************************************

இது நான் தைச்ச Honey Comb Smocking . கொஞ்சம் கடுப்பு பிடிச்ச வேலை தான். ஆனால், அழகோ! அழகு!!!!

23 comments:

  1. குறட்டைப்புலிக்கு ஒரு நான்கு தலையணை வச்சு சாஞ்சு படுக்க சொல்லுங்க குறட்டை வராது...!!!

    ReplyDelete
  2. குறட்டை நல்லது ஹி ஹி நான் அதிகாலை லேசாக குறட்டை விடுவேனாம் என் வீட்டம்மா சொன்னாங்க...!!!

    ReplyDelete
  3. அங்கிள், haha....சும்மா இப்படியெல்லாம் யோசனை சொல்லப்படாது.

    ReplyDelete
  4. . நான் கொஞ்சம் அவசர வேலையாகப் போவதால் கதையினை முடிக்க நேரம் இல்லை. karrrrrrrrrrrr

    ReplyDelete
  5. //உங்கள் வீட்டில் கூட ஒரு குறட்டைப் புலி இருக்கலாம். //
    அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் .எல்லா உண்மையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க

    ReplyDelete
  6. குட்டி குறட்டைப்புலி வந்ததும் பெரிய கு.புலிக்கு தூக்கம் கெட்டுப்போயிடும், நைட்டெல்லாம் விழிச்சிருந்து குட்டியப் பாத்துக்கணும்! தூக்கமே வராதே..அப்புறம் குறட்டை எப்புடி வரும்?! ஹாஹஹா! இது எப்பூடி இருக்கு??!

    ReplyDelete
  7. honey comb smocking அழகா இருக்குது. எப்படி செய்தீங்கன்னும் சொல்லிருக்கலாம்.

    நானும் அடுத்த எம்ப்ராய்டரிய ஆரம்பிக்கவேணும் என்று நினைச்சுட்டேஏஏஏஏஏஏஏ இருக்கிறேன், இன்ட்ரஸ்ட்தான் வரமாட்டேன்னுது. ஒரு மாசம் முன்னே ட்ரேஸ் பண்ணிய படம் அப்படியே ஒரு மூலையில் கிடக்கு. ஆரம்பிக்கணும்!

    ReplyDelete
  8. //Honey Comb Smocking -அழகோ அழகு//

    அடடா,எனக்கு தூக்கம் வருது,கதைக்கு முடிவு காலையில் வந்து சொல்றேனே!கொர்ர்ர்...

    ReplyDelete
  9. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete
  10. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //என் பாட்டிக்கு 95 வயசு. இப்பவும் குறட்டை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிறார்கள். ஆனால், எங்க தாத்தா பாருங்க 40 வருடத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டார்.

    ஓ! அப்படியா, என்றான் குணசீலன்//. குறட்டை விடுரவங்களுக்கு ஆயூள் கூடையா? பக்கத்தில் தூங்கும் சாரி படுக்கும் ஆசாமி தான் பாவும்...

    ReplyDelete
  12. honey comb smocking அழகா இருக்குது. எப்படி செய்வதுனு கொஞ்சம் சொல்லி கொடுங்க.. அப்பறம் நான் இப்ப தான் நானாக வே தையல் தைக்க (குழந்தைகளின் டிரெஸ்)ஏதோ எனக்கு தெரிந்த வரை தைக்கிறேன்.. தையல் பற்றி உங்களுக்கு தெரிந்தாலோ அல்லது மற்ற வெப்சைட் முகவரி தெரிந்தாலோ கொஞ்சம் எனக்கு சொல்றிங்களா..

    ReplyDelete
  13. என்னுடன் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் விருந்தினர் ஒருவரின் பலத்த குறட்டை ஒலியினால் திடுக்கிட்டு எழுந்து தூக்கமிழந்த நான் அகஸ்மாத்தாக தங்களின் வலைப்பூவுக்கு, இன்று இப்போது முதன் முதலாக வருகை தந்தால், இங்கு அதைவிட பெரிய குறட்டைப்புலி பற்றியச் செய்தியாக உள்ளதே!

    இதற்கு முடிவு தெரியாமல் முடியைப் பிய்த்துக் கொண்டு உங்களை போலவே நானும் இன்று.

    vgk

    ReplyDelete
  14. ஸாதிகா அக்கா, கர்ர்ர்... சொல்லக் கூடாது. முடிவு சொல்லணும் ஓக்கை.
    மிக்க நன்றி.

    ஏஞ்சலின், வீட்டுக்கு வீடு வாசல்படி தானே.
    மிக்க நன்றி.

    மகி, நீங்க கொஞ்சம் நெருங்கி வந்துட்டீங்க. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறேன்.
    ஹனி ஹோம்ப் - மேரி ஆன்டி பக்கம் இருந்து சுட்டது. முடியும் போது விளக்கமாக போடுவேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. ஆசியா அக்கா, கொர்... க் கு கர்ர்ர்ர்ர்ர்...
    மிக்க நன்றி.
    மை கிச்சன், மிக்க நன்றி.
    ஈகோஸ், ( உங்க பெயர் என்ன? )
    மிக்க நன்றி.
    மாய உலகம், மிக்க நன்றி.

    ReplyDelete
  16. சிநேகிதி, கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது போடுவேன்.
    மிக்க நன்றி.
    சரவணன், மிக்க நன்றி.
    திரு. கோபாலகிருஷ்ணன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    கதையின் முடிவுப் பகுதி நாளைக்கு டைப் பண்ணனும். விரைவில் இறுதிப் பகுதி வரும்

    ( யப்பா! என்னா ஒரு பில்டப்னு யாரும் முணு முணுக்க கூடாது )

    ReplyDelete
  17. யப்பா! என்னா ஒரு பில்டப்!

    ReplyDelete
  18. கர்ர்..
    ஓ! சொல்லக்கூடாதோ!! ;)

    ReplyDelete
  19. மகி... அதெப்படி நான் சொல்லவந்ததைச் சொல்லலாம்!! கர்ர்..

    அதற்கும் மேலே சொல்லவேண்டுமோ!!

    இருங்க திரும்ப வாசிச்சுப்போட்டு வாறன்.

    ReplyDelete
  20. ம்... அந்த நாளும் வந்தது.... கு.கு.புலி பிறந்தது.

    கு.கு.பு பிறந்த பின்னும் சில நாட்கள் குணசீலன் குறைட்டை தொடர்ந்தது.

    குறட்டைப்புலியொலி + கு.கு.பு. குறட்டையொலி & இரவிரவாகக் கண்விழித்து கு.கு.புலியைப் பராமரித்த களைப்பில் ரோகிணி பகலில் அடித்துப் போட்டது போல் தூங்க ஆரம்பித்தார்.

    குணசீலன்!
    காலையில் ஒருவிதமாக சீரியலும் பாலும் என்று ஆகாரத்தை முடித்துக் கொண்டார்.
    மதியம் வேறுவழியின்றி வெளியே எடுத்துக்கொண்டார். (takeaway!!)

    வேலை முடிந்து களைத்துப் போய் வீட்டிற்கு வந்தால் எல்லாம் போட்டது போட்டபடி கிடந்தது. இவரே வீட்டை ஒதுக்கவேண்டியதாக இருந்தது. ஒருவிதமாக இரவுணவுக்கும் ஏதாவது சமைதுவிடுவார்.

    ஆனால்.... இப்போது பகலிலேயே எப்போதும் விடாமல் "கொர் கொர்" என நாராசமாக வீட்டைக் குறட்டையொலி நிரப்பிக் கொண்டிருந்தது; இது ரோகிணியின் குறட்டையொலி. ;( கஷ்டப்பட்டுச் சமைத்ததை நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியவில்லை. ;(((

    சமயத்தில் கு.கு.பு வேறு அம்மா குறட்டையால் தூக்கமிழந்து கத்தும். அதை நிறுத்தும் வழி தெரியாமல் ஏதேதோ செய்து சமாளிப்பார். பிறகு... இரவில் களைத்துப் போய் அடித்துப் போட்டமாதிரி (இப்போ பயத்தில் சப்தமில்லாமல்) தூங்குவார்.

    இது தொடர்கதையாக, கு.கு.பு இரவில் நிம்மதியாகத் தூங்கிற்று. ரோகிணியும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தார். சிரமமில்லாமல் பகலில் எல்லா வேலையையும் பார்க்க முடிந்தது. நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    பிறகு பயத்தில் ஒரு போதும் குணசீலன் குறட்டையே விடுவதில்லையாம்.

    கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது `O`O`O

    பி.கு
    பரிசுப் பொதியை அனுப்பவேண்டிய விலாசம்...
    Imma Chris,
    Imma's World,
    Auckland,
    New Zealand.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!