Thursday, November 3, 2011

மூழ்காத கப்பலே....எனக்கு நண்பிகள் தான் இருந்தார்கள். நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை. 3 ஆம் வகுப்பு தொடக்கம் 5 வரை மட்டுமே ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயிலும் பள்ளியில் கல்வி கற்றேன். பெரிதாக யார் முகமும் ஞாபகம் இல்லை. ஒரே ஒரு பொடியன் மட்டும் பிள்ளையார் ஸைஸில் இருந்தான். அவன் முகம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. காரணம், ஊரில் அம்மன் கோயில் திருவிழாவின் போது பிள்ளையாரின் தேரில் அவனும் ஏறி ( அவன் அப்பா ஐயர் ) அமர்ந்திருப்பான். மோதகம், கொழுக்கட்டை என்று உள்ளே தள்ளியபடி இருப்பான். இடைக்கிடையில் சாமிக்கு தீபமும் காட்டுவான்.
நண்பிகள் என்றால் எனக்கு நிறைய இருந்தார்கள். பள்ளியில் ஒரு கூட்டம், ட்யூசனில் இன்னொரு கூட்டம். என்னை விட வயசு குறைந்த, கூடிய வகுப்புகளிலும் நண்பிகள் என்று ஏகப்பட்ட நண்பிகள்.
ட்யூசனில் ஆண்களும் இருந்தார்கள். அநேகம் பேர் இரட்டை வால்கள் தான். என் நெருங்கிய தோழியின் ஒன்றுவிட்ட அண்ணனும் எங்களோடு படித்தார். அவரின் குரல் சிம்மக்குரல் சிவாஜி கணேசன் போல அவ்வளவு கூர்மை. காது இரண்டும் டமால் ஆகி விடும் அளவுக்கு இருக்கும் அவரின் குரல். அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர், வீரையா சூரையா. இந்தப் பெயர் இலங்கை கடற்படையின் அதிவேக படகின் பெயர். கடலில் நின்றால் பல மைல்கள் தாண்டியும் அதன் இரைச்சல் காதுகளில் விழும்.

பெண் நண்பிகள் நிறைய இருந்தாலும் எல்லோரும் வீட்டுக்கு வருவதோ அல்லது நான் அவர்களின் வீடுகளுக்குப் போவதோ இல்லை. என் அப்பா இதில் மிகவும் கண்டிப்பானவர். அப்படியே போவதெனிலும் என் பாட்டியோடு தான் அனுப்புவார். பாட்டியோடு வருவதை விட நீ வராமல் இருப்பது மேல் என்று என் நண்பிகள் சொல்வார்கள்.

இந்தியாவில் இருந்த போது தோழிகள் அதிகம். குறிப்பிடத்தக்கவர்கள் மஞ்சுளா, ஜெயசிறீ இருவருமே. ஜெயசிறீ - இவர் நல்ல வசதியான குடும்ப பெண். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நான் கொண்டு போகும் சாப்பாட்டினை அவரும், அவருடைய சாப்பாட்டினை நானும் சாப்பிடுவதுண்டு. அவருக்கு நான் கொண்டு போகும் வாழைப்பழ தோசை என்றால் கொள்ளை விருப்பம். லஞ்ச் நேரம் வருவதற்கு முன்பே பெட்டி காலியாகி விடும். ஏன்டி! இப்படி பறக்கிறே. நான் ரெசிப்பி சொல்றேன் உங்க அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டியது தானே, என்பேன்.


இல்லைடி. உங்க அம்மா செய்யுறது சூப்பரோ சூப்பர் என்பாள். ஒன்றாக சேர்ந்து படிப்பது, கடலை போடுவது என்று நன்றாகவே போனது. கல்லூரிக்கு போன பின்னர் இவரை நான் பார்க்கவே இல்லை. போன் நம்பர் வாங்கி வைத்திருக்கலாம் என்று இப்ப அடிக்கடி நினைப்பதுண்டு.
அடுத்தவர் மஞ்சுளா. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் நன்றாக படிப்பார். பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். அவரின் அம்மா ஊரிலிருந்து கொண்டு வரும் நொறுக்குத் தீனிகள் எதுவாக இருந்தாலும் எனக்கும் கொண்டு வந்து தருவார். நான் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். காரணம் - பள்ளி விடுதியில் சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று நண்பிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மஞ்சுளாவே என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அம்மா கொண்டு வரும் உணவுகளை அவரே வைத்து உண்ணச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். சில நேரங்களில் கைகளை பொத்தியபடி வேகமாக வருவார். மூடிய கையினுள் மைசூர் பாகு இருக்கும். என் மேசையில் வைத்து விட்டு, வேகமாக ஓடி விடுவார்.

இப்ப நினைத்தாலும் மனது நிறைவது போல இருக்கும் மஞ்சுளாவின் நட்பு. பள்ளிப் படிப்பினை முடித்த பின்னர் இவரின் தாய்மாமனுக்கு இவரை கட்டாயமாக திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கல்லூரியில் சேர்ந்திருக்கலாமே என்று ஒரு நாள் அவரிடம் கேட்டேன். வாணீ, நான் எங்கே போவேன் பணத்திற்கு என்றார் கண்கள் குளமாக. என் கைகளை சிறிது நேரம் பிடித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார். அதன் பிறகு நான் அவரை சந்திக்கவேயில்லை.

கனடா, அமெரிக்கா வந்த பிறகு எந்த நட்பும் நிலையாக இருக்கவில்லை. அமெரிக்கா வந்த புதிதில் ஃபர்கானா என்ற பங்களாதேஷ் தோழி இருந்தார். இவரைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு கூட இங்கே இருக்கு. அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லை. மற்றும்படி அறுசுவையின் மூலம் அறிமுகமான அதிரா, இமா, மகி ஆகியோரை நேரில் பார்த்ததே இல்லை. எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
அதிரா சில மாதங்களின் முன்னர் எழுதச் சொன்ன பதிவு. எழுதி முடிச்சுட்டோம்ல்ல.

( மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட் ஷிப் என்பதை தமிழ் படுத்தி தலைப்பு போட்டிருக்கிறேன். )

24 comments:

 1. தலைப்பும் சூப்பர் ,உங்க எழுத்து நடையும் அருமையான பகிர்வு

  ReplyDelete
 2. அட..வானதி உங்கள் ஃபிரண்ட் ஷிப் அனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது.நிறைய பிரண்ட்ஸ் இப்போதைக்கு இல்லை என்பதினை விசனப்பட்டு எழுதி இருக்கிங்க.உங்கள் அருகிலேயே நிறைய நட்புக்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 4. நட்பின் உன்னதம் குறித்தும்
  அது இல்லையெனில் ஏற்படும் வெறுமை குறித்தும்
  படிப்பவர்களே உணர்ந்து கொள்ளும்விதம்
  மிக அழகாகச் சொல்லிப்போகும் உங்கள் பதிவு
  அருமையிலும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
 5. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்,இனி யாரும் கணீர் என்று காதை துளைக்கிற மாதிரி பேசினால் வீரையா சூரையா தான் நினைவிற்கு வருவார்.அதிரா,இமா,மகியை நான் புகைப்படத்திலே பார்த்திருக்கிறேனே!..:)
  நல்ல பகிர்வு..

  ReplyDelete
 6. பழைய நண்பர்களின் நினைவுகள் பசுமையாக இருப்பது மனதுக்கு இதம், அதே வேளை பிரிவுகளை நினைக்கும் போதுதான் மனது வேதனை கொள்கிறது, இனி எப்போது அவர்களை சந்திப்பது என்பதை நினைக்கும் போது வேதனையே மிச்சம்....!!! எல்லார் வாழ்க்கையிலும் இப்படி சோகம் அப்பிகிடக்குறது ஆச்சர்யமே...!!!

  ReplyDelete
 7. என் அக்காவின் கல்லூரி உயிர் தோழி, இப்போ எங்கே இருக்கார்னே தெரியலை, எவ்வளவோ தேடிப்பார்த்தோம் கிடைக்கவே இல்லை என் அக்கா சில பல நேரம் அந்த தோழியை நினைத்து அழுவாள் சத்தமாக, அக்காவை தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், பின்னே நட்புன்னா சும்மாவா...!!!???

  ReplyDelete
 8. பசுமை நிறைந்த நினைவுகளை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வான்ஸ்ஸ்..

  பதிவைப்படிக்கும்போது நட்புத்தொடர் மாதிரி இருக்கே என நினைத்தேன்... அதே தான்.... ஆனா நான் கூப்பிட்டதை மறந்தே போயிட்டேன், நீங்க மறக்காமல் எழுதியிருக்கிறீங்க...

  நட்புக்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவையே..

  //எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை./// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 10. என்ன நடந்தது வியாழ மாற்றமோ? எல்லா இடத்திலயும் லொக் எடுத்திட்டாங்கோஓஓஓஓ:)))))

  ReplyDelete
 11. கடவுளே ஸ்பெல்லிங்கு மிசுரேக்கூஊஊஊஊ:))). கண்டுபிடிச்சிட்டமில்ல:))

  ReplyDelete
 12. உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
  http://manasaali.blogspot.com/2011/11/03.html

  ReplyDelete
 13. பசுமை நினைவுகள் அருமை வாணி.வாழ்க்கை சுற்றில் அனைவரும் எங்கேயோ பயணிக்கிறோம்..காலத்தின் மாற்றம் ஒரு சிலருக்கு பழைய தோழமை திரும்ப கிடைக்கிறது.பதிவு நல்லாயிருக்கு வாணி..

  ReplyDelete
 14. மறந்துபோன நினைவுகளை தூசிதட்டி எடுத்து எழுதியிருக்கீங்க வானதி! வீரையா-சூரையா சூப்பர்!:)


  /அறுசுவையின் மூலம் அறிமுகமான அதிரா, இமா, மகி ஆகியோரை நேரில் பார்த்ததே இல்லை. எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை./ ம்ஹும்..எனக்கும் இந்த ஆசை..இல்லைல்ல, பேராசை உண்டு! ;) பின்னே என்ன?? ஆளுக்கொரு மூலைல உட்கார்ந்திருக்கோம், எங்கே மீட் பண்ண?!!

  சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க கடவுளை ப்ரார்த்திப்போம்!
  ~~
  ஆசியாக்கா,வானதியும் என் போட்டோவைப் பார்த்திருக்காங்க. என்னதான் நம்ம போட்டோல பார்த்துகிட்டாலும் நேர்ல பார்க்கிறமாதிரி வருமா?? அதனாலயே இன்னும் நான் 2-3 பேரைத் தவிர யாரிடமும் போன்ல கூட பேசினதில்ல! ;)

  வானதி-இமா-அதிரா எல்லாரின் தமிழ் எப்படி இருக்கும்னு கேட்க ஆவலா இருக்கும்,ஈவன் தென்தமிழ் நாட்டுத்தமிழுமே எனக்குப் புதுசு! ஆளுக்கு ஆள் பேச்சுவழக்கே வித்யாசப்படுமில்ல? எல்லாரையும் நேரில் சந்திச்சா...ஹும்! ஆங்காங்கே ப்ளாக்ல மீட்டிங் பதிவு போட்டாங்களே அது மாதிரியே இருக்குமோ??! :))))))))

  அவ்வ்வ்வ்வ்..கமென்ட் எக்ஸீடிங் தி லிமிட்..மீ எஸ்கேப்பூ! ;)

  ReplyDelete
 15. ஏஞ்சலின், மிக்க நன்றி.
  ஸாதிகா அக்கா, அருகில் நட்புகளா? நல்லா சொன்னீங்க போங்க. இந்த ஏரியா வரும் யாரும் இங்கே இருக்க விரும்புவதில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரே ஓட்டமா ஓடுறாங்க. நானும் எப்படா ஓடலாம்ன்னு காத்து இருக்கிறேன். மிக்க நன்றி.

  லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
  ரமணி அண்ணா, மிக்க நன்றி.
  மனோ, நட்பு- நினைச்சு அழுவதில்லை நான். பக்கத்தில் இருந்தா எப்படி இருக்கும் என்று நினைப்பதுண்டு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 16. இராஜராஜேஸ்வரி, மிக்க நன்றி.

  அதீஸ், ஏன் அழுகை???
  வியாழன் மாறவில்லை. சில நேரங்களில் கமன்ட்ஸ் அப்படியே பெட்டியில் தூங்கிட்டு இருக்குது. போட்டவர்களுக்கு மனக் கஷ்டமாக இருக்க கூடாது என்பதால் எடுத்து விட்டேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 17. ராதாராணி, மிக்க நன்றி.

  ஆசியா அக்கா, நான் இமா, மகி, இலா, ஆகியோரை படத்தில் பார்த்திருக்கிறேன்.
  ஃபேஸ் புக்கில் வேறு சிலரின் படங்கள் பார்த்திருக்கிறேன். என் படமும் போட்டிருந்தேன் பிறகு நீக்கிவிட்டேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 18. மகி, வீரையா சூரையா - என் தோழிக்கு தெரியாமல்தான் சங்கேத பாஷையில் பேச உதவியாக இருந்தது. ஏன் என்றால் அவர் வீட்டுக்கு போய் அவரின் கஸினிடம் போட்டுக் கொடுத்தால். ஏற்கனவே அது ஒரு லூஸ் போல தான் பிகேவ் பண்ணும். ஒரு நாள் தோழி கண்டு பிடித்து விட்டார். அவரின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆயிற்று. வீட்டில் போய் சொல்லி, எங்களை மாட்டிவிடவில்லை.
  நான் உங்கள் போட்டோ நிறையப் பார்த்திருக்கிறேன். என் போட்டோ சொல்லிக் கொள்றாப் போல இருக்காது. ஏதோ ஒரு போட்டோ அனுப்பிய ஞாபகம்.
  போனில் - இமா, இலா, விஜி ஆகியோருடன் பேசி இருக்கிறேன்.
  மிக்க நன்றி, மகி.

  ReplyDelete
 19. ஹா!! //நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை.// !!?? அப்ப டொமார்!!!

  ReplyDelete
 20. //நண்பிகள் என்றால் எனக்கு நிறைய இருந்தார்கள்.// க்ர்ர்.. இதென்ன இறந்தகாலத்தில சொல்லுறீங்கள்!! 'இருக்கிறார்கள்' எண்டு சரியாச் சொல்லுங்கோ. ம்.

  ReplyDelete
 21. //மற்றும்படி அறுசுவையின் மூலம் அறிமுகமான அதிரா, இமா, மகி ஆகியோரை..// அதுதானே பார்த்தேன். வாணி நல்லபிள்ளை.

  //...நேரில் பார்த்ததே இல்லை. எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.// என்னைப் பார்க்க விருப்பம் என்று சொன்னது உண்மையாகவே சந்தோஷமாக இருக்கு வாணி. நிறைவேற்ற இமா ரெடி. இப்ப லீவுதான். ஸ்கைப்ல வாறீங்களோ! கிட்டத்தட்ட நேரில பார்த்த மாதிரியே இருக்கும். (மயில் ID கொண்டுவரும். இல்லாட்டில் gtalk!)

  ReplyDelete
 22. //அதிரா,இமா,மகியை நான் புகைப்படத்திலே பார்த்திருக்கிறேனே!..:)// ஆஹா! பின்புலத்தில கனக்க விஷயம் நடக்குதுபோல. ம். ;)) நடத்துங்கோ நடத்துங்கோ.
  (புகைப்படம் எண்டால்!! ஓ!! விளங்குது, விளங்குது. அந்த 1969ல எடுத்த மணிமுடி வச்சதைச் சொல்லுறியள்! ம்.)

  அதிராவை நானும் டெய்லி பாக்கிறனான்; இங்க பக்கத்து வீட்டிலதான் இருக்கிறா; நல்ல வடிவா 'பு(பூ)ஸ்ஸ்ஸ்' என்று இருப்பா. ;))

  ReplyDelete
 23. //ம்ஹும்..எனக்கும் இந்த ஆசை..இல்லைல்ல, பேராசை உண்டு! // //எங்கே மீட் பண்ண?!!// நானே அங்க வாறன் மகி. மல்லிகை இட்லி வேணும். ;)

  //சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க கடவுளை ப்ரார்த்திப்போம்!// நிச்சயம் கிடைக்கும்.

  //நான் 2-3 பேரைத் தவிர யாரிடமும் போன்ல கூட பேசினதில்ல!// ஹும்!! ;)

  நான் ஸாதிகா அக்கா வீட்ட போயே பார்த்திருக்கிறன்!

  //வானதி-இமா-அதிரா எல்லாரின் தமிழ் எப்படி இருக்கும்னு கேட்க ஆவலா இருக்கும்// ;)) முதல் எனக்கு கோவைத்தமிழ் டிக்க்ஷனரி ஒண்டு வாங்கி வைங்க மகி. ;)

  //ஆளுக்கு ஆள் பேச்சுவழக்கே வித்யாசப்படுமில்ல?// வாணியும் அதிராவும் நானுமே வேறவேற மாதிரித்தான் கதைப்போம். //எல்லாரையும் நேரில் சந்திச்சா...// ஐடியா சுப்பர்ப். ;)

  //கமென்ட் எக்ஸீடிங் தி லிமிட்.// இன்ஸ்டால்மெண்ட்ல போட்டுருங்க மகி. ;)

  ReplyDelete
 24. டொமார் - ஹிஹி... நீங்க இன்னும் டொமாரை மறக்கவில்லையா?????
  வீடியோவிலை ( ஸ்கைப் ) பார்க்க நான் கொடுமையா இருப்பேன்.
  1969 இல் எடுத்த படம் இல்லை. சமீபத்தில் எடுத்த படங்கள். படங்களை அனுப்பியும் போட்டு கேள்வியைப் பாருங்கப்பா கர்ர்ர்ர்ர்ர்....
  கோவைத் தமிழ் - கோவை சரளா படம் பாருங்கோ. சதிலீலாவதி படம் பார்த்தா தமிழ் பழகிடும்.
  என் தமிழ் - நான் கொஞ்சம் வித்யாசமா கதைப்பேன். இமா கொஞ்சம் பொறுமையா, ஆற அமர கதைப்பார்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!