ஹலோ! உங்க வீட்டு ஜன்னல் மாத்தப் போறீங்களாமே ? என்றது குரல்.
நான் எப்ப சொன்னேன்?
எரிக் சொன்னாரே என்றது மீண்டும் போன் குரல்.
யாரு எரிக் ?- இது மீண்டும் நான். எதிர் முனையில் இருந்தவருக்கு கடுப்பு வந்திருக்க வேண்டும். சரி போனை எரிக் இடம் குடு, என்றார்.
ஓ! இந்த இளைஞன் பெயர் எரிக் என்று இப்ப விளங்கியது. அதோடு அவன் சேர்ட்லிருந்த பெயர் கொண்ட அடையாள அட்டை இப்பதான் என் கண்களுக்குப் பட்டது.
எரிக் தூரமாக போய் நின்று ஏதோ குசு குசுவென கதைத்து, சிரித்துக் கொண்டு நின்றான். சரியான சாவுக் கிராக்கி என்று திட்டியிருப்பார்களோ???
மீண்டும் என்னிடம் போன் கையளிக்கப்பட்டது. போனைத் தர முன்னர் எதிர் முனையில் என்ன கேட்டாலும் யெஸ் என்றே சொல்லு, நோ சொல்லாதே என்றான் எரிக். எழுந்த கோபத்தினை அடக்கிக் கொண்டே போனை வாங்கினேன்.
ஜன்னல் மாத்தப் போறியா- என்றது குரல்.
ம்ம்...
எப்ப மாத்துவதாக உத்தேசம்? மீண்டும் கேள்வி.
இப்பவே - இது நான்.
எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது.
மேம், அதெல்லாம் உடனை ஆகிற காரியமா? எங்க கம்பெனி ஆள் ஒருத்தர் உங்க வீட்டுக்கு வரணும், அளவுகள் எடுக்கணும்....
கடவுளே! என்ன சோதனை என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன். அப்படியே எரிக் கன்னத்தில் ஒரு அறை விடலாமா என்று எண்ணம் ஏற்பட்டது.
மேம், உங்க வீட்டு ஜன்னல் மரத்தால் செய்யப்பட்டதா அல்லது அலுமினியமா?
தெரியலை. எங்கவூட்டுக் காரரை கேட்க வேண்டும் என்றேன்.
அலுமினியம் என்று சொல்லு என்றான் எரிக்.
மேலும் சில கேள்விகள், பதில்கள் சொன்ன பிறகு இந்த வாரக் கடைசியில் எங்க கம்பெனி ஆள் உங்க வீட்டுக்கு வருவார். நீங்க இரண்டு பேரும் வீட்டிலை இருக்கணும் ஓகேவா என்றது எதிர் முனை.
என்ன இரண்டு பேரையும் கட்டி வைச்சுட்டு கொள்ளை அடிக்கப் போறாங்களா என்று யோசனை ஓடியது.
போனை வைத்த பிறகு கோபம் வந்தது. ஏம்பா எரிக், இது நியாயமா? தர்மமா? நான் பாட்டுக்கு சிவனே என்று இருந்தேன். நீ என் நேரத்தையும் மண்ணாக்கியது பத்தாதா? இப்ப நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒரு கம்பெனி ஆளின் நேரத்தை மண்ணாக்கலாமா , என்று எகிறினேன்.
மேம், இதெல்லாம் அவங்களுக்கு சகஜமான விடயம். நீங்க பார்த்துட்டு பிடிக்கவில்லை, விலை அதிகம், உங்க பொருள் மட்டமா இருக்கு, அந்த ஆளின் மூஞ்சி சரியில்லை, பெரிய கொம்பன் மாதிரி பேசினான் இப்படி ஏதாவது சொல்லிடுங்க. கட்டாயம் ஜன்னல் மாத்த வேண்டிய அவசியம் இல்லை என்றபடி விடைபெற்றான்.
சொன்னது போல வார இறுதியில் அந்த நபர் வந்தே விட்டார்.
ஒரு பெரிய டிரங்குப் பெட்டி சகிதம் வந்தார்.
அந்த டிரங்குப் பெட்டியில் ஒரு கண்ணாடி, சுத்தியல், பன்சன் சுடர் அடுப்பு போன்ற ஒரு அடுப்பு, இன்னும் எதேதோ பொருட்கள்.
எங்க கண்ணாடி போல நீங்க எங்கேயும் கண்ணாடி பார்க்க முடியாது. சுத்தியல், கல்லு இரண்டையும் கண்ணாடி மீது விட்டெறிந்தார். அது உடையவே இல்லை. நாற்காலியை தூக்கி வீசினார் அப்பவும் கண்ணாடி அசையவேயில்லை. சுடர் அடுப்பினால் சூடாக்கினார், கண்ணாடி அப்படியே இருந்தது.
மேம், நீங்கக் கண்ணாடியில் என்னத்தை தூக்கி வீசினாலும் இது உடையவே உடையாது என்றார்.
ஆண்டவா! நாங்கள் என்ன ஜேம்ஸ்பான்ட் படம் சூட்டிங்கா எடுக்கிறோம்? மற்ற வீடுகள் போல எங்கள் வீட்டிலும் சண்டை, சச்சரவுகள் வருவதுண்டு அதுக்காக நான் என் ஆ.காரரையோ அல்லது அவர் என்னையோ தூக்கி ஜன்னலை நோக்கி வீசுவது இல்லையே.
என் மகனுக்கு ஒரே கொண்டாட்டம்.
அம்மா, திஸ் ஹைய் இஸ் சோ கூல் ( This guy is so cool ) என்றார்.
என் ஆ.காரர் ஒரு ஜன்னல், கண்ணாடி டோர் இரண்டையும் அந்த நபருக்கு காட்டி, இரண்டுக்கும் எவ்வளவு செலவாகும் என்றார்.
அந்த நபர் சொன்ன விலையைக் கேட்டதும் மயக்கம் வராத குறைதான்.
கணவர் காட்டிய கதவின் வழியாக வின்டர் நேரங்களில் குளிர் காற்று உள்ளே கசிவதுண்டு. அந்த ஆள் சொன்ன விலையை கேட்டதும் என் ஆ.காரரின் பதில்,
Let the cold air come in.
முற்றும்
ஆண்கள் அனுபவசாலிகள் எவ்வளவு சிம்பிளா
ReplyDeleteமேட்டரை முடிச்சிட்டார் பார்த்தீங்களா ?
பெண்கள்தான் ஒன்றுமில்லாததற்கெல்லாம்
தானும் ரொம்ப டென்சன் ஆகி மற்றவர்களையும்
ரொம்ப டென்சன் ஆக்கிவிடுகிறார்கள்
வித்தியாசமான நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
ஜன்னலை மாத்தலையா 2 எனப் போட்டிருக்கலாமோ
ReplyDeleteநானே இரண்டு மூன்றுமுறை பதிவுக்கு வந்து
பழைய பதிவுதான் என படிக்காது திரும்பிவிட்டேன்
வீட்டின் ஜன்னல் கண்ணாடி மாத்துவது பறி
ReplyDeleteசுவாரசியமா சொல்லி இருக்கிங்க.
Ramani anna, Thanks. I have changed it.
ReplyDelete//படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!! //
ReplyDeleteதம்பி ..இன்னும் டீ வரலை :-))
இது சொந்த கதையா ..? வித்தியாசமா இருக்கே :-))
ReplyDeleteஜன்னல் இப்போ மாத்தலை,விலை அதிகம்,பிடிக்கலை என்று கூறாமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிற மாதிரி அதேசமயம் ரொம்ப கூலா குளிர்காற்று உள்ளே வரட்டும் என்ற பதிலில் படைப்பை முடித்தது அருமை.
ReplyDeleteநான் போனைக்குடுத்து பேசச்சொன்னது க்ரைம் லெவல்ல போச்சேன்னு பதறியடிச்சு ஓடி வந்த என்னை சிரிக்க வைத்துவிட்டீர்களே.... அசத்தல் போங்கள்
ReplyDeleteஆவ்வ்வ் கதைய முடித்து விட்டீங்களா
ReplyDeleteஅனுபவம் அருமை
//சரியான சாவுக் கிராக்கி என்று திட்டியிருப்பார்களோ???//
ReplyDeleteஅதான் அதான் அதேதான்........
//அந்த ஆள் சொன்ன விலையை கேட்டதும் என் ஆ.காரரின் பதில்,
ReplyDeleteLet the cold air come in.//
:)
//Let the cold air come in.// சூப்பர்.
ReplyDeleteதப்பிச்சுட்டீங்களா? சூப்பர்! :)
ReplyDeleteஉங்க ஆ.காரரின் பதில் சும்மா "நச்"னு இருக்குது போங்க! ;)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... வான்ஸ்ஸ்ஸ்ஸ்... பத்துத் தரம் தோப்புக்கரணம் போடுங்க... ஏன் தெரியுமோ? அதே தலைப்பிலேயே போட்டதால நான் பார்த்தேன் உள்ளே வரவில்லை, பழைய தலைப்பென விட்டுவிட்டேன்... பாகம் 2 எனப் போட்டும் எனக்கது தெரியவேயில்லை, இப்போ சும்மா தான் உள்ளே வந்து முடிவைப் பார்த்தேன் முற்றும் என இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteவெளிநாட்டில இதெல்லாம் சகஜமப்பாஆஆஆஆஆஆ.... எங்கட வீட்டிலும் இப்படி ஒரு கூரை மாத்தும் அனுபவம் ஏற்பட்டு, அதுக்குப் பிறகு ஆரும் கதவு தட்டினால் திறக்க மாட்டேன்:)), திறந்தாலும்.. ஆளைப் பர்த்ததும் புரிந்து கொண்டால் சொல்லிப்போடுவன்,,,, நான் வீட்டு ஓனர் இல்லை, விசிட்டர்... இன்று போய் (இன்னொரு)நாளை வாங்க அப்பூடின்னு:))....
ReplyDeleteஉஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் தப்பவாண்டிக் கிடக்கே...
’மாட்டினாண்டா கைப்புள்ள’ ரேஞ்சுக்கு உங்கள வச்சு எரிக்கும், அவன் கூட்டாளியும் வெள்ளாடிருக்காங்க போல!! நீங்க நிஜமாவே இவ்வளவு அப்பாவியா??!! ;-))))))
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமார்க்கட்டிங்கில் தந்திரமாகத் தமது பொருட்களைச் சந்தைப்படுத்துகின்ற,
ReplyDeleteகவர்ச்சிகரமான விளம்பரப் பேச்சால்
நுகர்வோரை ஏமாற்றிப் பிழைப்போர் பற்றிய அருமையான கதையினை உங்களின் அனுபவப் பதிவாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
கடைசி மூன்று பந்திகளும் கலக்கல். ;))
ReplyDeleteஅருமையான அனுபவ பதிவு.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஓய்வு நேரத்தில் என் வலைப்பக்கம் வந்து போங்கள்.பயனுள்ளதாக இருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்