பிள்ளைகளை கூட்டிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த போது, எக்ஸ்கியூஸ் மீ என்ற குரல். குரல் வந்த திசையில் ஒடிசலாக ஒரு இளைஞன். டை, சேர்ட் என்று அமர்க்களமாக நின்றான். மிஞ்சிப் போனால் 17 வயதிருக்கும். கையில் ஃபைல் வைத்திருந்தான். நான் பெரும்பாலும் இந்த மாதிரி ஆசாமிகளை தவிர்த்து விடுவேன். வீட்டினுள் இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே தப்ப முடியவில்லை. எதையாவது தலையில் கட்டிய பின்னர் தான் நகருவார்கள். இல்லாவிட்டால் பேசியே கொலை செய்வார்கள்.
ஹா....ய் என்று இழுத்தேன். இப்ப அவசரமாக பிள்ளைகளின் பள்ளியில் புரோகிராமிற்கு செல்ல வேண்டும். பிறகு பார்க்கலாம் என்றேன்.
கண்டிப்பா பிறகு மீட் பண்ணலாம் என்றான்.
என் நெஞ்சினுள் பாதி தண்ணீர் ஏற்கனவே காலியாகியிருந்தது. நான் சும்மா பேச்சுக்கு சொல்லி தவிர்க்க பார்த்தா பொடியன் விபரமாகவே இருக்கிறானே என்று நினைத்தேன்.
என் பள்ளியில் இந்த வேலை செய்தா அதிக மதிப்பெண்கள் தருவார்கள். காலையிலிருந்து அலைகிறேன் ஒரு பயலும் கதவையே திறக்க மாட்டேன் என்கிறான்.
( நானும் வீட்டுக்குள் இருந்திருந்தா அப்படித் தான் நடந்திருக்கும் என்று நினைத்தபடி) எல்லோரும் வேலைக்கு போயிருப்பார்கள் என்று சமாதானம் சொன்னேன்.
நீ எப்போ திரும்பி வருவாய், என்றான் இளைஞன்.
ம்ம்ம்.. தெரியவில்லை. சில வேளைகளில் 8 மணிக்கு வந்துவிடுவேன். சில வேளைகளில் 11 மணி கூட ஆகலாம்.. என்று சமாளித்தேன்.
அந்த இளைஞனை எப்படியாவது விரட்டி விடுவதில் குறியாக இருந்தேன்.
வரட்டா. மீண்டும் பார்க்கலாம் என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி ஓடினான்.
நானும் அப்பாடா விட்டது தொல்லை என்று ஓட்டம் எடுத்தேன்.
பள்ளியில் இந்த இளைஞன் பற்றி சுத்தமாக மறந்தே போய்விட்டது. கிட்டத்தட்ட 8.30 அளவில் திரும்பி வந்த போது, எங்கள் வீட்டுப் படியில் குத்த வைச்சது போல இருந்தான். திரும்பி ஓடலாமா என்று யோசிப்பதற்குள் என்னைப் பார்த்துவிட்டான்.
நான் ( நீ இன்னும் போகலையா? ) மீண்டும் ஹாய் என்றேன்.
இளைஞன் ( நீ இப்ப தான் வர்றியா என்று மனதினுள் நினைத்திருப்பான் போல. கை கடிகாரத்தை பார்த்தபடி வந்தான் ) ஃபைலை விரித்தான்.
கலவரமாகிய நான். இருப்பா! எங்க வூட்டுக்காரர் வரட்டும். அவர் தான் இந்த மாதிரி விடயங்களில் சூரப்புலி என்றேன்.
இல்லை மேம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இப்ப முடிஞ்சுடும் ஜெஸ்ட் 10 மினிட்ஸ் தான் என்றான்.
அவன் பாவி சொன்னதை நானும் நம்பினேன். உங்க வீட்டு ஜன்னல் எல்லாம் பழசு போல இருக்கே மாத்தவில்லையா, என்று தொடங்கினான்.
இல்லை. பிறகு பார்க்கலாம். பிள்ளைகளுக்கு இரவு சாப்பாடு குடுக்கணும் வரட்டா என்று நழுவப்பார்த்தேன்.
இரு வரேன் என்றபடி செல் போனில் நம்பரை குத்த தொடங்கினான். நான் அவனின் அம்மாவோடு பேசப் போகிறான் போல இருக்கு என்று நினைத்தபடி ஓரமாக நின்றேன்.
சில நொடிகள் பேசியவன் என்னிடம் போனை தந்தான். நீயும் கட்டாயம் பேச வேண்டும் என்று என் பக்கம் தந்தான்.
யாரு உங்க அம்மாவா? என்னத்தை பேசுறது என்று விரக்தியாக சொன்னேன். வழக்கமாக 7 மணி அளவில் வரும் ஆ.காரர் இவ்வளவு நேரமாகியும் வராத எரிச்சல் ஒரு புறம். மறுபுறம் இந்த ஆசாமி தொல்லை.
எங்க அம்மா இல்லை. இது வேறு ஒரு நபர் என்றான்.
தொடரும்.
ஆஹா..நீங்க வரவரைக்கும் வாசல்லையே காத்திருந்து கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டாங்க போல இருக்கே! ;)
ReplyDeleteஇப்படி போன்ல மாட்டினம்னா அம்புட்டுதான், பேசியே ஒரு நாளாக்கிருவாங்க! :) அப்புறம் என்னாச்சு..ஜன்னல் மாத்தியாச்சா இல்லையா?
>>அந்த இளைஞனை எப்படியாவது விரட்டி விடுவதில் குறியாக இருந்தேன்.
ReplyDeleteஹா ஹா நல்ல எண்ணம்
மகி, ம்ம்... இருட்டினில் அந்த இளைஞன் இருந்தது பக்கத்தில் வந்த பிறகு தான் தெரிஞ்சுது. ஜன்னல்..... ( காதை கிட்ட கொண்டு வாங்க பூஸார் பார்க்கிறார் ).
ReplyDeleteமிக்க நன்றி.
சி.பி. செந்தில்குமார், மாட்டினா தான் இதெல்லாம் புரியும் ஹாஹா..
மிக்க நன்றி.
இவர்களிடமிருந்து தப்பிக்க வீட்டையே மாற்ற வேண்டியிருக்கும்.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமான பதிவாக
ReplyDeleteஇருக்கும் போல இருக்கே
தொடர வாழ்த்துக்கள்
நல்லா இருக்கே..யாரது ...
ReplyDeleteவான்ஸ்,பதிவை இப்படி குட்டியூண்டு போட்டு சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே நியாயமா?
ReplyDeleteகுடுக்கணும்// கொடுக்கணுமா...:)
ReplyDeleteஎதாவது கண்டு பிடிக்க வில்லை என்றால்
பதிவை படிக்காமல் கமெண்ட் போடுவார்கள் என்று கூற கேட்டு இருக்கின்றேன்.:)
நல்ல இருக்கு தொடருங்கள்..
Suspense is killing and kolling.... :-)))
ReplyDeleteஅருமையான பதிவி
ReplyDeleteஏ யப்பா தொடரெல்லாம் எழுதி அசத்துராங்களே வானதி....!!!
ReplyDeleteபையன் ஏதோ நல்லது செய்திருப்பான்னு நினைக்கிறேன், இல்லைன்னா வானதி சரியான மெகா பல்பு வாங்கி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் ஹி ஹி பார்ப்போம்....
ReplyDelete//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
>>அந்த இளைஞனை எப்படியாவது விரட்டி விடுவதில் குறியாக இருந்தேன்.
ஹா ஹா நல்ல எண்ணம்
//
உங்களை போல
அது சரி...
ReplyDeleteதொடரா?
சன்னலே வேண்டாம்ப்பான்னு சொல்லியிருக்கலாமோ?
சே.குமார்
http://vayalaan.blogspot.com
//என் நெஞ்சினுள் பாதி தண்ணீர் ஏற்கனவே காலியாகியிருந்தது. நான் சும்மா பேச்சுக்கு சொல்லி தவிர்க்க பார்த்தா பொடியன் விபரமாகவே இருக்கிறானே//
ReplyDeleteஹா...ஹா..ஹா...
வானதியே விவரமா இருந்தா பொடியன் எம்மாத்திரம்? :)
சூப்பர் பதிவு வான்ஸ். இந்த மாதிரி ஒரு ஆள் கிட்ட மாட்டி தான் எங்க வீட்டு conservatory போட்டோம்.. ஆனா நல்ல டீல் கிடைத்தது சோ சில சமயம் நமக்கு useful ஆவும் இருக்கும்.. போன் ல கொடைச்சல் கொடுக்கரவங்கள தான் என்ன பண்ணுறது ன்னு தெரியாம பல சமயங்களில் போன் துண்டிப்பது உண்டு..
ReplyDelete// நானும் வீட்டுக்குள் இருந்திருந்தா அப்படித் தான் நடந்திருக்கும் என்று நினைத்தபடி)// ஹா ஹா நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் மாடி ஜன்னல் இல் இருந்து பார்த்து விட்டு உள்ளே போய் விடுவேன் ( அவிங்க வாச கதவ பார்த்துகிட்டு நிப்பாங்க)
ReplyDelete//இப்ப முடிஞ்சுடும் ஜெஸ்ட் 10 மினிட்ஸ் தான் என்றான்.// ஆகா குறைஞ்சது அரை நாள் ஆயிருக்குமே?? சரி மகி கேட்ட மாதிரி ஜன்னல் மாத்தியாச்சா இல்லையா ??
ReplyDelete//காதை கிட்ட கொண்டு வாங்க பூஸார் பார்க்கிறார் ).
ReplyDeleteமிக்க நன்றி.// இந்த மாதிரி எப்பவும் பூஸ் நெனைப்புலையே பொழுது போகுது போல இருக்கு??
//
எதாவது கண்டு பிடிக்க வில்லை என்றால்
பதிவை படிக்காமல் கமெண்ட் போடுவார்கள் என்று கூற கேட்டு இருக்கின்றேன்.:)// பாருங்க உங்களுக்கு பயந்து சிவா உங்க பதிவ படிச்சி குத்தம் வேற கண்டு பிடிச்சு இருக்காரு... அவர சும்மாவே விட்டிருக்கலாமோ ?? :)
அப்புறம் வரேன்.. மகி ப்ளோக்ல போய் ப்ரெசென்ட் மிஸ் சொல்லணும். இந்த மாதிரி எல்லாரும் ஒரே நாளில் பதிவு போட்டா பாவம் நான் என்னதான் பண்ணுறது சொல்லுங்க ??
////என் நெஞ்சினுள் பாதி தண்ணீர் ஏற்கனவே காலியாகியிருந்தது. நான் சும்மா பேச்சுக்கு சொல்லி தவிர்க்க பார்த்தா பொடியன் விபரமாகவே இருக்கிறானே//
ReplyDeleteவான்ஸ் நீங்க என்ன அவ்வளவு டெரராவா இருக்கீங்க ..ஹா..ஹா..
ஜன்னல் மாத்தினீங்களா இல்லையா?? அதுக்குள்ள தொடரும்னு போட்டுட்டீங்களே...
ReplyDeleteஅடடா.... 17 வயதுத் தம்பி... வான்ஸ்ஸ்க்காக அவ்ளோ நேரம் அதுவும் கோட்டு, சூட்டோடு படியில வெயிட்டிங்கா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) நீங்க எங்கேயோ போயிட்டீங்க வான்ஸ்ஸ்ஸ்ஸ்:)).(இப்பூடி மாத்தி யோசிக்கவேணுமாம்:)).
ReplyDeleteதொடர்ந்து சொல்லுங்க.. நான் ரீ போட்டிட்டு வாறேன் படிக்க(என்னோட அவஸ்தை உங்களுக்கு விளையாட்டாக இருக்கோ என அடிக்கப்பூடா:))).
//vanathy said...
ReplyDeleteமகி, ம்ம்... இருட்டினில் அந்த இளைஞன் இருந்தது பக்கத்தில் வந்த பிறகு தான் தெரிஞ்சுது. //
ஹையோ...ஹையோஓஓஓஒ.. நான் இப்போ இதுக்கு ஒண்டுமே சொல்ல மாட்டேன், அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....:)).
கலாநேசன், இதுக்கெல்லாம் பயந்தா எப்பூடி. இப்படி எத்தனை பேருக்கு வீட்டுக்குள்ளே இருந்துட்டே இல்லைன்னு சொல்லியிருக்கோம்.
ReplyDeleteமிக்க நன்றி.
ரமணி அண்ணா, மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, வாசகர்கள் நாற்காலி நுனிக்கு வரணும் என்று தான் இப்பூடி தொடரும் போட்டேன்.
மிக்க நன்றி.
சிவா, சும்மா விளையாட்டுக்கு சொன்னா இப்படியா குற்றம் கண்டு பிடிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்....
ReplyDeleteமிக்க நன்றி, தம்பி.
சித்ரா, மிக்க நன்றி.
கவி அழகன், மிக்க நன்றி.
//தொடர்ந்து சொல்லுங்க.. நான் ரீ போட்டிட்டு வாறேன் படிக்க(என்னோட அவஸ்தை உங்களுக்கு விளையாட்டாக இருக்கோ என அடிக்கப்பூடா:))). // பூஸ் டீ போட்டு கிட்டு வந்திட்டாங்க வான்ஸ் சீக்கிரம் என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க
ReplyDeleteஆஹா... இதுல சஸ்பென்ஸ் வேறயா? ஒரு வேள உங்க ரகளை தாங்காம உங்கூரு போலீஸ் அர்ரெஸ்ட் வார்ரன்ட் அனுப்பி இருக்குமோ... சும்மா ஒரு டவுட்...:)))
ReplyDeleteஆஹா, மாடிக்கிட்டீங்களா? அப்புரம் என்னாச்சு?
ReplyDeleteதொடர்கதையா!!!!.. நல்லது... அடுத்த பாகங்களையும் படித்துவிட்டு கருத்து சொல்லுகிறேன்..
ReplyDeleteஅங்கிள், ஏனுங்க நான் தொடர் எழுதியதை நீங்க முன்னாடி பார்த்ததில்லையா??? அவ்வ்வ்வ்.
ReplyDeleteபல்பு வாங்குற பரம்பரையா எங்க பரம்பரை!!!
மிக்க நன்றி, அங்கிள்.
ராசா, நன்றிகள் பாராட்டியமைக்கு.
மிக்க நன்றி.
குமார், சொன்னாலும் சிலதுகள் கேட்கவே கேட்காதுங்க.
மிக்க நன்றி.
ஆமி, ம்ம்ம்... ஏதோ உள்குத்தா இருக்கும் போல இருக்கே!!!
மிக்க நன்றி.
கிரிசா, போன்ல எல்லாம் சூப்பரா சமாளிச்சிடுவோம்ல. பட்ஜெட் இல்லை, வீட்டுக்காரங்க வெளியே போயிருக்காங்க..இப்படி ஏதாவது புளுகு மூட்டையை அவித்து விடுவேன்.
ReplyDeleteநானும் எங்க வீட்டு மாடி ஜன்னல் வழியா பார்ப்பேன். கடைசி வரை கதவுப் பக்கம் போகவே மாட்டேன். குட்டீஸ் மிட்டாய் விற்க வந்தால் திறந்து வாங்குவதுண்டு.
பூஸாருக்கு பயமா? எனக்கா? நாங்க ஓடுற பாம்பை விரட்டுற பரம்பரை இந்தபூஸார் சும்மா ஜூஜூபி.
அட! எங்க சி... என் பதிவை படிச்சிட்டார். படிச்சிட்டார்.......
மகி ப்ளாக்கில்/// உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். எப்படிங்க அம்மணி வேலையும் செய்து, கமன்ட்டும் போட்டு, எப்பவும் கம்யூட்டரும் கையுமாவே இருப்பீங்களா???
மிக்க நன்றி.
ஜெய், நான் டெரரா எல்லாம் இருக்க மாட்டேன். இன்னும் பால் வடியும் முகந்தேன் நேக்கு.
ReplyDeleteமிக்க நன்றி.
மேனகா, ஜன்னல்....
மிக்க நன்றி.
அதீஸூ, நானும் 17 வயசுக்காரி போல தான் இருப்பேன் என்று சொல்லாம சொல்றீங்க போல இருக்கே. சரி நோ டென்ஷன்.
டீ ரெடியா?
இருட்டிலை பக்கத்திலை....// என் கண்கள் ஷார்ப்போ ஷார்ப். கண் டாக்குத்தர் கூட அதிசயமா கேட்டார், அப்படி என்ன தான் தின்பியோ இப்படி கண்கள் கூர்மையா இருக்கே என்று. அது வெளியே சொல்லப்படாது.
மிக்க நன்றி.
//உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். எப்படிங்க அம்மணி வேலையும் செய்து, கமன்ட்டும் போட்டு, எப்பவும் கம்யூட்டரும் கையுமாவே இருப்பீங்களா???// டாங்க்ஸ் டாங்க்ஸ் ஊ ரொம்ப புகழ்றீங்க என்னைய :)) ஆமா டெஸ்க் ஜாப் தான் சோ அப்புடியே எல்லாருக்கும் சம்பளம் கரெக்டா போட்டு கிட்டே லஞ்ச் உல அப்புறம் காலையில போய் ப்லோக்சையும் ஒரு கண்ணோட்டம் விடுறேன் இப்பெல்லாம்.. இல்லேன்னா எல்லாரும் கொச்சுக்கிராங்களே :)) இப்போ வீட்டுக்கு வந்திட்டேன் டைம் இஸ் 16.03 .. ஒரு அரை மணி நேரம் கம்ப்யூட்டர் இல் ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறம் வேலை வெட்டிய வீட்டுல பார்க்கணும் ஹும்ம்
ReplyDeleteஆஹா யாருக்குங்க போன் போட்டான் சொல்லுங்க.. அட சொல்லுங்க.... தலையே வெடிச்சுடும் போலருக்குதே தலையே வெடிச்சுடும் போலருக்குதே...
ReplyDeleteநீங்க விடாக்கண்டனா இருந்தா அவன் கொடா கண்டனா இருப்பான் போலருக்குதே.. ஹா ஹா ஹா
ReplyDeleteவணக்கம் அக்காச்சி,
ReplyDeleteஎன் எப்படி இருக்கிறீங்க?
மார்க்கட்டிங் விற்பனர்களால் நீங்கள் படும் அவலத்தினைப் பதிவாக்குவீங்க என்று நினைத்தால்....இறுதியில் போன் அழைப்பின் மூலம்...சஸ்பென்ஸ் வைத்து, ஏதோ ஒரு விவகாரமான பிரச்சினையினைக் கூறப் போகின்றீர்கள் என எண்ணும் வகையில் கதையினை நகர்த்தியிருக்கிறீங்க.
அடுத்த பாகத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.