Wednesday, September 7, 2011

எல்லோரும் நலமா?

எல்லோரும் நலமா? எங்கை தான் போய் தொலைஞ்சியோ தெரியலைன்னு முணு முணுப்பது கேட்குது!! சில, பல வேலைகள். அன்பாக மெயில் அனுப்பிக் கேட்டவர்களுக்கு பொறுப்பா பதில் அனுப்பினேன். மகள்  இந்த வருடம் கின்டர்கார்டன் போவதால் நிறைய வேலைகள். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய பொருட்கள் வாங்கியது, பல் மருத்துவர், பீடியாட்ரிஷன் என்று அலைந்து திரிந்து, நிரப்ப வேண்டிய படிவங்கள் நிரப்பி, போட வேண்டிய ஊசிகள் போட்டு.... மகள் ஸ்கூல் போகத் தொடங்கியதும் வீட்டில் ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது. நிலநடுக்கம், புயல், தண்ணீர் பிரச்சினை, பவர் கட் என்று பல காரணங்களால் பள்ளி ஒரு வாரம் லேட்டாக ஆரம்பமானது. மகள்   ஆர்வமாக பள்ளி சென்று வர, நான் குழம்பி போய் கிடக்கிறேன்.  இன்று கின்டர்கார்டன்...  நாளை கண் மூடித் திறப்பதற்குள் கல்லூரி. மீண்டும் பிள்ளைகளின் மழலைப் பருவம் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.


இப்ப கொஞ்ச நாட்களாக காலையில் எழுந்ததும் என்னுடைய தினபலன் என்னவென்று பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. சும்மா பார்ப்பேன் பிறகு மறந்தும் விடுவேன். இந்தியாவில் இருந்த போது தோன்றிய பழக்கம். நானும் என் சகோதரியும் விளையாட்டாக பார்க்கத் தொடங்கினோம். தினபலனில் தோல்வி என்று போட்டிருந்தால், அக்கா! இன்று உனக்குத்  தோல்வியாமே. டெஸ்டுக்கு ஒழுங்கா படி என்று என் தங்கை கடுப்படிப்பது பொறுக்காமல் படுக்கைக்கு போகு முன்னர் பார்த்து விட்டு படுப்பேன். அப்பாடா! நாள் முடிஞ்சுது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவேன்.
 நாளடைவில் அந்தப் பழக்கம் மறைந்து விட்டது. இப்ப கொஞ்ச நாட்களாக மீண்டும் ஒரு ஆர்வம்.   ஒரு நாள் எனக்கு " மறதி " என்று போட்டிருந்தார்கள்.


சூப்பர் மார்க்கெட் போய் வந்த பின்னர் காரில் மறதியாக பொருட்களை விட்டுட்டு  வீட்டுக்குள் வந்து விட்டேன்.  என்னவோ மறந்து போனேன் என்பது மட்டும் ஞாபகம் இருந்தது ஆனால் என்னவென்று ஞாபகம் இருக்கவில்லை. மதியம் சாப்பிடுக் கொண்டே இன்று  சூப்பர் மார்க்கெட் போய் பால் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிடுகிறேன். திடீரென ஒரு மின்னல்... அட! கடைக்குப் போய் வந்தாச்சு அல்லவா என்று சிரித்துக் கொள்கிறேன். அப்ப பால் எங்கே, என்று அடுத்து ஒரு கேள்வி தோன்ற குளிர்சாதனப் பெட்டியை திறந்தால் பால் அங்கில்லை. பால் மட்டும் அல்ல  ஜூஸ், பழங்கள் எல்லாமே மிஸ்ஸிங்.  காரில் பொருட்களை வைத்தது ஞாபகம் வர காரினை நோக்கி ஓடினேன்.  லேசான குளிர் வெதர் என்பதால் பொருட்கள் அப்படியே இருந்தன.

எனக்கு கிரகம், கோல்கள்,  நல்ல நேரம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் தினபலனில் மறதி என்று போட்டிருந்ததை  போனா போகுது என்று ஒதுக்க முடியவில்லை.  தினபலனில் மறதி என்று போட்டிருந்ததால் மறதி வந்ததா அல்லது மகள் முதன் முதலாக பள்ளி போன டென்ஷனால் மறதி வந்ததா தெரியவில்லை.  எது எப்படியோ நாளை என்ன பலன் என்று படுக்கைக்கு போகு முன்பு தான் பார்க்க வேண்டும்.


************************************


அமெரிக்காவில் ஒருவர் தோசை சுட்டு விற்பனை செய்கிறார். நல்ல வரவேற்பு அவரின் தோசைக்கு. வட்ட வடிவமான தோசை, நடுவில் மசாலாக் கறி, சட்னி என்று அமர்களமான பிஸ்னஸ். காலை முதல் கடை முன்பு நல்ல கூட்டம். பெரிய தோசைக் கல்லில் லாவகமாக மாவை ஊற்றி, பரவி, எண்ணெய் ஊற்றி, மசாலாக்  கறி பரவி.... இதெல்லாம் ஒரு நியூஸ்? தோசை வட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள்  முணுப்பது காதில் விழுகிறது. தோசை சுடுபவர் ஒரு அமெரிக்கர்.

சில வருடங்களின் முன்னர் இவருக்கு வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் போய் விட்டதாம். சந்நியாசம் செல்ல முடிவு செய்தவர் இந்தியாவுக்கு பிளைட் ஏறினார். அங்கு ஏதோ ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டாராம்.  அங்கிருந்த  " அம்மா " என்ற பெண்மணி இவருக்கு தோசை சுடுவது, அரைப்பது, கிழங்கு மசாலா, சட்னி வைப்பது என்று எல்லாமே சொல்லிக்  கொடுத்தாராம். வாழ்க்கை வெறுத்து இந்தியா  போனவர் மீண்டும் ஒரு புது மனிதராக  அமெரிக்கா வந்து, சொந்தமாக ஒரு தோசைக் கடை திறந்து அமோகமாக வாழ்வதாக சொன்னார்.  வாழ் நாள் வரைக்கும் அம்மாவை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.

32 comments:

 1. ஆ,வந்துட்டீங்களா...மழை என்று செய்தி கேட்டு ஒரு வேளை அதனால்தான் வரவில்லையோ என்றுதான் நினைத்தேன்.


  இந்த தோசை மேட்டரை படிக்கும் போது ஒரு படத்தில் மாதவன் ஆஸ்திரேலியாவில் தோசை சுட்டது நினைவில் வருது :-)

  தினப்பலனில் கொலைன்னு போட்டிருந்தா யாரையாவது கொலை செய்துடுவீங்களா..? அவ்வ்வ்வ்

  ReplyDelete
 2. மழை அல்ல பேய் மழை. என் வாழ்வில் இப்படி மழை பார்த்ததில்லை.
  கொலைன்னு சொன்னா கொலை செய்ய மாட்டேன் ஆனால் கொள்ளைன்னு சொன்னா கொள்ளை அடிப்பேன்.
  நன்றி, ஜெய்.

  ReplyDelete
 3. எம்புட்டு நாளாச்சு...
  வாங்க.... வாங்க...
  ஆரம்பிங்க கச்சேரியை...
  உங்கள் குட்டிக்கு வாழ்த்துக்கள்.

  சே.குமார்
  மனசு

  ReplyDelete
 4. /தோசை வட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் முணுப்பது//

  அதெல்லாம் முணுமுணுக்க மாட்டேன். தோசை வட்டமாக வரவைப்பது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா (எனக்கு)!!

  ஆமா, அப்போ தோசைக்கும் பேடண்ட் வாங்கி வைக்கணும்போல இருக்கே!!

  ReplyDelete
 5. வாங்க வானதி
  எனக்கு எதிர்பாராத சந்தோஷம் எனத்
  தினப் பலன் போட்டிருக்கு
  என்னடா ஒன்னையும் காணோமே எனச்
  சோர்ந்து போய் நெட்டை திறந்தால்
  உங்கள் பதிவு உண்மையில் மிகவும் சந்தோஷம்
  உண்மையில் நீங்கள் ரமணியண்ணா எனப் பதிவில்
  குறிப்பிடுவது நேரடியாக கூப்பிடுவது போல இருக்கும்
  ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த ஒரு பதிவர்
  அப்படிப் போடுவார் .இப்போது ஏனோ அவர் பதிவிடுவதில்லை
  நீங்களும் லாங் லீவ் போட்டுவிட்டீர்களா
  கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது
  இப்போது சந்தோஷம்.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வானதி லேட்டா திரும்ப வந்தாலும் எழுத்தில் நல்ல
  முன்னேற்ம் தெரியுது. கண்டின்யூ பண்ணுங்க.

  ReplyDelete
 7. //மறதி என்று போட்டிருந்ததால் மறதி வந்ததா அல்லது மகள் முதன் முதலாக பள்ளி போன டென்ஷனால் மறதி வந்ததா தெரியவில்லை.// டென்ஷனில வேற யார்டயும் பிள்ளையை மாறி வீட்ட கூட்டிக் கொண்டுவரப் போறியள், பத்திரம். ;))))

  ReplyDelete
 8. "Amma "Hugging Saint/ya i've heard about her.

  ReplyDelete
 9. //. மகள் ஆர்வமாக பள்ளி சென்று வர, நான் குழம்பி போய் கிடக்கிறேன். இன்று கின்டர்கார்டன்... நாளை கண் மூடித் திறப்பதற்குள் கல்லூரி. மீண்டும் பிள்ளைகளின் மழலைப் பருவம் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.
  //

  ம்ஹும்..வராது வானதி.நான் உத்தரவாதம் தருகின்றேன்.:-)

  ReplyDelete
 10. வாணி நலமா .. உங்க பிளாங்க தினம் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் .இனி பதிவுகள் பார்க்கலாம்.

  ReplyDelete
 11. //தினபலனில் மறதி என்று போட்டிருந்ததால் மறதி வந்ததா //

  அப்படிலாம் பார்த்தா உலகத்துல பல கேள்விகள் கேட்க வேண்டி வரும்.
  ஏன் இவன் அடிபட்டு இறந்தான்? ஏன் பிஸினஸ் புட்டுகிட்டு போச்சு? ஏன் அடிவாங்குனான்னு..... எல்லாத்தையும் அதுலையே இருந்தா அப்ப அதையே கதின்னு கெடக்க வேண்டியது தான்

  ReplyDelete
 12. வாங்க வாங்க
  வந்ததுதான் வந்தீங்க
  தோசை பார்சல் கொண்டு வந்து இருக்கலாம்

  உங்களுக்கு ஒன்பது கிரகமும் நன்றாக வேலை செய்கிறது
  அதனால்தான் மறதி

  ReplyDelete
 13. அட காணாமல் போன நம்மட வான்ஸ்ஸ்ஸ்ஸ் வந்திட்டாங்கோஓஓஓஓஒ:)))..

  அதாரது உடனடியாக நியூவுக்கு ஓட்டோ அனுப்பி ரீச்சரைக் கூட்டி வாங்க:), கடவுளே ஓட்டோ என்றதும் பயந்திடப்போறா:)), வாணாம் ஒரு ஏசி போட்ட:) ரக்‌ஷி அனுப்பிக் கூட்டி வாங்கோ ஸ்பெலிங் மிசுரேக்கூஊஊஊஊஊ:)).(வர வர ரீச்சருக்கு கண் தெரியுதே இல்லை, வந்து பார்த்திட்டுத்தான் காக்கா போயிருக்கிறாவோ, அல்ல காணவில்லையோ அவ்வ்வ்வ்)

  //எனக்கு கிரகம், /////கோல்கள்/////.

  ஊசிக்குறிப்பு:
  இப்போ எங்கட கூட்டம்... அதுதான் கெ.கிருமிகளுக்கு:) புதுசா ஒரு வேலை கிடைச்சிருக்கு, ஆரும் எழுத்துப் பிழை விடமுடியாது, காக்கா போயிட மாட்டோம்:))... அதிலேயே ரீச்சரிடம் போட்டுக் கொடுத்திடுவோம்...

  அதுவும் எல்லா இடத்திலும் அல்ல... நம்மட கூட்டத்துள் மட்டும்தேன், சிலருக்குப் புய்க்காதெல்லோ:)).

  ReplyDelete
 14. //தினப்பலனில் கொலைன்னு போட்டிருந்தா யாரையாவது கொலை செய்துடுவீங்களா..? அவ்வ்வ்வ் //

  அதுவும் பச்சை ரோசாப்பூவோட திரிவோரை..... எனப் போட்டிருந்தால் செய்திடுவீங்களா வான்ஸ்ஸ்ஸ்:)), அது ராசிப்பலன் என கோட்ல சொல்லி ஜாமீன் எடுத்திடலாம் ஈசியா:)).

  நான் ஐடியாத் தரவில்லை:) நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வய.....:)))).

  ReplyDelete
 15. குமார், மிக்க நன்றி.

  ஹூசைனம்மா, வட்டமா வருவதே பெரிய விசயம் போல இருக்கே. எனக்கு வட்டம், சதுரம், நட்சத்திர ஷேப் எல்லாமே வரும். என் மகளுக்கு இப்படி ஷேப் எல்லாம் செய்து கொடுப்பதுண்டு.
  மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, எதிர்பாராத சந்தோஷம்// சிரிக்க வைக்கிறீங்க.
  தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  லஷ்மி ஆன்டி, மிக்க நன்றிங்க.

  இமா, என்னை போலீஸில் மாட்டி விட்டுடுவீங்க போலிருக்கே!!!! என் மகளை கூட்டி வருவதற்கே 1000 ரூல்ஸ் படிப்பார்கள். இதில் யாரையும் கையை பிடிச்சு இழுக்க, போலீஸ் வர அவ்வ்வ்வ்வ்வ். மகளின் டீச்சரின் முன்பு போய் பல்லைக் காட்டினால் ( சிரிக்க வேணும் ) தான் விடுவார்கள்.
  மிக்க நன்றி, இம்ஸ்.

  ReplyDelete
 16. Angelin. This person ( amma ) is not the same lady ( I think ). That "Amma" is a very busy lady. She even met with president Clinton. I do not think she has time to teach How to make dosai to any one.
  Thanks for your lovely comment.

  ReplyDelete
 17. ஸாதிகா அக்கா, உங்க அனுபவம் பேசுது. இது நாள் வரை என் கை பிடிச்சு நடந்த மகள் இப்ப கை பிடிக்க வேண்டாம் என்று சொல்றா. இப்ப அவங்க வளர்ந்திட்டாங்களாம். நேற்று என் கணவர் போன போதும் இதே கூத்து தான் நடந்திச்சாம். என் கணவருக்கு சிரிப்பு ஒரு புறம் வந்தாலும் நிறைய மிஸ் பண்ணுவதாக சொன்னார்.
  மிக்க நன்றி, அக்கா.

  ராதா, மிக்க நன்றி.
  முன்பு போல அதிகம் வராது. இன்னும் சில வேலைகள் இருக்கு. இடைக்கிடை காணாமல் போய் விடுவேன்.

  ஆமி, மிக்க நன்றி.

  சிவா, 9 அல்ல 8 கிரகங்கள் தான் இருக்காம். ஓக்கை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 18. ஆரது அதீஸா??? வாங்கோ வாங்கோ வெல்கம். உங்கட பக்கம் மழை, வெய்யில் எல்லாம் இல்லையோ???
  ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா ( யாரு யானையா? நாந்தேன் ). தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
  பச்சை ரோஸ், எப்ப பார்த்தாலும் நொய், நொய்ன்னு சந்தேகம் கேட்பவர்கள் யாரை பார்த்தாலும் போட்டுத் தள்ளிடுவேன் ஹிஹி.
  ஜெய், ஓடாதீங்கோ. நில்லுங்கோ. இன்று என் தினப்பலன் சாந்தம் என்று போட்டிருக்கு.

  ReplyDelete
 19. //அதுவும் பச்சை ரோசாப்பூவோட திரிவோரை..... எனப் போட்டிருந்தால் செய்திடுவீங்களா வான்ஸ்ஸ்ஸ்:)), அது ராசிப்பலன் என கோட்ல சொல்லி ஜாமீன் எடுத்திடலாம் ஈசியா:)).//

  அதிஸ்..., வான்ஸ் லேட்டா வந்தாலும் மறதியோட வந்தது போல தெரியுது...இதுக்கு ஜாமீன் என்ன கேசே கிடையாது தெரியுமா..? அவ்வ்வ்வ்

  ReplyDelete
 20. //ச்சை ரோஸ், எப்ப பார்த்தாலும் நொய், நொய்ன்னு சந்தேகம் கேட்பவர்கள் யாரை பார்த்தாலும் போட்டுத் தள்ளிடுவேன் ஹிஹி.
  ஜெய், ஓடாதீங்கோ. நில்லுங்கோ. இன்று என் தினப்பலன் சாந்தம் என்று போட்டிருக்கு. //

  ஆ...கன்போமா இது டேஞ்சர் சிக்னல்தான் ,
  ஒரு வேளை மறதியா பழைய தின பலனை பாத்துட்டு ஆயுதத்தோடு என்னைய தேடினா என் கதி என்ன ஆகிறது .
  நானும் புளிய மரத்து உச்சிக்கு எஸ் ஆகிட வேண்டியதுதான் அவ்வ்வ்வ் :-))

  ReplyDelete
 21. // நானும் புளிய மரத்து உச்சிக்கு எஸ் ஆகிட வேண்டியதுதான் அவ்வ்வ்வ் :-)) //

  நீங்க புளிய மரத்து உச்சிக்கே போனாலும் அங்கேயும் (வானதி-வானூர்தி) பறந்து வந்து சுடுவோம்ல. அவ்வ்வ்வவ்

  ReplyDelete
 22. குழந்தை கின்டர்கார்டன் போனதுக்கே இப்படி என்றால், கல்யாணம் கட்டி மறுவீடு வீடு அனுப்பும்போது....அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கனும் தாயீ பழகிக்கனும்..(இதை கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் படிக்கணும்)

  ReplyDelete
 23. வணக்கம் அக்காச்சி,
  எப்படி இருக்கிறீங்க?

  ReplyDelete
 24. பதிவின் முதற் பாதி, தினபலன் பார்ப்பது பற்றிய ஆவலைச் சொல்லி நிற்கிறது,.
  எனக்குத் தினபலன் பார்ப்பதில் ஆர்வம் இல்லை...
  அவ்...ஆதலால் நான் ரொம்ப நல்ல பையன்.

  இரண்டாம் பாகம் ஞாபக மறதிக்கும் தினபலனுக்கும் முடிச்சுப் போடுகிறது,

  மூன்றாம் பாகம், வாழ்வியலையும், வாழ்வில் முன்னேறுவதற்கு ஆன்மீக ஈடேற்றமும் துணையாக இருக்கிறது எனும் சேதியினைச் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 25. வித்தியாசமான தொகுப்பாக உங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 26. ஹா... ஹா..ஹா... அந்தப் புளியிலதான் நேற்று ராத்திரி ஏதோ வெள்ளையாகத் தெரிஞ்சதாம்...:))) அதிலயா ஜெய் ஏறப் போறீங்க...All da bestuuuuuu:))))

  ReplyDelete
 27. //ஹா... ஹா..ஹா... அந்தப் புளியிலதான் நேற்று ராத்திரி ஏதோ வெள்ளையாகத் தெரிஞ்சதாம்...:))) அதிலயா ஜெய் ஏறப் போறீங்க...All da bestuuuuuu:)))) //

  ஆவிக்கும் எனக்கும் எப்போதுமே நல்ல ஃபிரென்ஷிப் இருக்கு , ஆனா இந்த மனுஷங்களைதான் நம்பவே முடியறதில்லை ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
 28. //குழந்தை கின்டர்கார்டன் போனதுக்கே இப்படி என்றால், கல்யாணம் கட்டி மறுவீடு வீடு அனுப்பும்போது....அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கனும் தாயீ பழகிக்கனும்..(இதை கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் படிக்கணும்) //

  அடப்பாவிங்களா , இப்பவே கொஞ்சம் மறதி மாதிரின்னு சொல்றவங்களை மொத்தமா மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவீங்க போலிருக்கே ஹி..ஹி... :-)))

  ReplyDelete
 29. புளிய மர உச்சிக்கு போனாலும் விட மாட்டேன். இன்று எனக்கு தினபலன் சினம் என்று போட்டிருக்கு. கெதியா இறங்கி வந்திடுங்கோ கிக்க்க்க்க்...

  நாட்டாமை, என்ன ஒரு கற்பனை!!!!
  என்ன இது மறுவீடு, மறு நாடு என்று சொல்லிகிட்டு.
  நானே நொந்து போயிருக்கேன்.
  மிக்க நன்றி.

  தம்பி நிரூ, வாங்கோ.
  தினபலன் பார்ப்பதெல்லாம் சும்மா லூலாயிக்கு. அதெல்லாம் நம்புவதில்லை.
  மிக்க நன்றி, அம்பி.

  ReplyDelete
 30. ஜெய், அதானே நல்லாக் கேளுங்கோ.

  ReplyDelete
 31. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்
  ,முதல் முதல் பள்ளிக்கு போகும்போது அம்மாக்களுக்கெல்லாம் இப்படி தான் இருக்கும்

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!