Wednesday, July 13, 2011

Fondant Icing


எங்கள் திருமண நாள் அன்று உறவினர் ஐஸிங் கேக் செய்து தந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அதன் பிறகு கடைகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த வகை ஐஸிங் கேக் ( செய்முறை அல்ல ) பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன். சமீபத்தில் யாரோ இந்த வகை ஐஸிங் கேக் பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள். அப்படி என்ன பெரிய வேலையா இருக்கப் போகிறது என்று ரெசிப்பி தேடினேன். யுடியூப்பில் வீடியோ போட்டிருந்தார்கள். மலையை குடைந்து எலி பிடிக்கும் வேலை போலத் தெரிந்தது. இங்கு நான் செய்த பெரிய தவறு என் மகளையும் மடியில் வைத்துக் கொண்டு வீடியோ பார்த்தது தான். நான் மறக்க நினைத்தாலும் மகள் செய்து தான் ஆக வேண்டும் என்று ஒரே பிடியாக நிற்க,கடைக்குப் போய் மார்ஸ்மலோஸ், வெயிடபிள் ஸோர்ட்னிங், பொடித்த சீனி வாங்கி, மார்ஸ்மலோஸ்யை மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் ( 30 செக்கன்ட்ஸூக்கு ஒரு முறை எடுத்துக் கிளறி ) உருக வைத்து, பொடித்த சீனி, ஸோர்ட்னிங் சேர்த்து.... கைகளில் நன்கு எண்ணெய் பூச வேண்டும். இது மட்டும் அல்ல. வேலை செய்யும் பலகையிலும் எண்ணெய் பூசிக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் இந்தக் கலவை அடங்காத குதிரை போல சொன்ன பேச்சுக் கேட்காது. ஐஸிங் சுகரை நன்கு தூவி பிசைய வேண்டும்.

அம்மா! எனக்கு இந்த ஐஸிங் வேண்டாம் என்று மகள் நழுவிக் கொள்ள எனக்கு எரிச்சல் வந்தது. எடுத்துக் குப்பையில் எறியலாமா என்ற எண்ணத்தை அடக்கிக் கொண்டே கலவையுடன் போராடினேன். 10- 15 நிமிடங்களின் பின்னர் சப்பாத்தி மா போன்று பதத்திற்கு வந்தது. இப்போது ஐஸிங் சொன்ன பேச்சுக் கேட்டது. இழுத்த பக்கம் எல்லாம் வந்தது. ஸிப் லாக் பையில் போட்டு குளிரூட்டியில் வைத்தேன்.

சில மணி நேரங்களின் பின்னர் சப்பாத்தி போல உருட்டி, கேக் மேல் வைத்து அழுத்தி, மேலே சில ரோஜாப் பூக்களும் செய்து வைத்தேன். சும்மா சொல்லக் கூடாது சுவை நல்லாத் தான் இருந்தது. ஆனால், அடிக்கடி செய்து சாப்பிட முடியாது காரணம், அதிக கலோரி, அதிக வேலை.

14 comments:

  1. கேக் பார்க்க சூப்பர் ஆக இருக்கு

    ReplyDelete
  2. செய்முறையும் சொல்லி இருக்கலாமே..

    ReplyDelete
  3. ஆஹா..வெண்மை நிறத்தில் ஐஸிங்க் படு அசத்தலாக உள்ளது வான்ஸ்.

    ReplyDelete
  4. சூப்பரா இருக்கு வானதி. Fondant கேக் நான் இன்னும் சாப்பிட்டதில்லை. ஸ்மூத்தா செய்திருக்கீங்க. நேரமெடுத்தாலும் அதுக்கேத்த லுக் வந்திருக்கு! அடுத்தமுறை கலரெல்லாம் போட்டு செய்யுங்க.;)

    ReplyDelete
  5. கேக் நல்ல இருக்கு ஒரு ஐந்து கிலோ இருக்குமா :-))

    ReplyDelete
  6. பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கிறது
    நன்றாகவும் இருப்பதாகச் சொல்லிவிட்டீர்கள்
    பக்கத்தில் இருந்தால் பங்குக்கு வந்திருக்கலாம்
    இது போல அங்குள்ள சிறப்பான ரெசிபிகள் குறித்து
    அடிக்கடி எழுதவும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல வடிவா இருக்கு வானதி. @}->--

    ஓடர் எடுப்பீங்களோ! எனக்கு கெதியா ஒன்று தேவைப்படும்.

    ReplyDelete
  8. பலத்த முயற்சியின் பின்னர், ஒரு சுவையான கேக்கை தயாரித்து வெற்றி கண்டிருக்கிறீங்க. எனக்கும் ஒரு கேக் அனுப்ப முடியுமா;-)))

    ReplyDelete
  9. வானதி,பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன்..கேக் அருமையாக இருக்கு.

    ReplyDelete
  10. சரவணன், மிக்க நன்றி.
    அமுதா, செய்முறை - என் ரெசிப்பி இல்லையே. ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து பார்த்து செய்தது. அந்த ரெசிப்பியை எங்கோ வைத்து விட்டேன்.
    மற்றவர்களின் ரெசிப்பியை போட்டால் கீழே லிங்க் குடுப்பது என் பாலிஸி. பேப்பர் கிடைச்சதும் விபரமாக போடுவேன்.
    மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    மகி, சூப்பர் மார்க்கெட்டில் வெண்மை நிற மார்ஸ்மலோஸ் மட்டுமே இருக்கு.
    அடுத்த முறை ஃபுட் கலரிங் கலந்து செய்ய வேன்டும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. ஜெய், கேக் 5 கிலோ இருக்குமா??? ஏன்ன்ன்ன்ன்ன்???
    குறைவாத் தான் இருந்தது. ஐஸிங் தான் 5 கிலோ இருந்தது.
    மிக்க நன்றி.

    சிவா, நன்றி.

    ரமணி அண்ணா, மிக்க நன்றி.

    இமா, ஓடர் எல்லாம் எடுக்கப்படும். எத்தனை வேணும்???
    மிக்க நன்றி.

    நிரூ, உங்க கல்யாணத்துக்கு செய்து தாறன். ஓக்கை.
    மிக்க நன்றி.
    ராதாராணி, மிக்க நன்றி.

    ReplyDelete
  12. Awww !!!!!!!!! கேக் பார்க்கவே அழகா ரிச் லுக்கோடு அருமையா வந்திருக்கு .
    (perfect for weddings) எனக்கு சுட்டு போட்டாலும் இதெல்லாம் செய்ய வராது .

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!