Monday, July 18, 2011

ஆங்! இது தான் ஸ்டைலாம்

( Image : Google. Thanks )

ஆங்! இது தான் ஸ்டைலாம்

கனடாவில் நிறைய துணிக் கடைகள் இந்த முறை கண்டேன். கடைகள் அங்கு தான் முன்பும் இருந்தன. நான் இந்த முறை தான் உள்ளே போனேன். கண்ணாடி வளையல்கள், புடவைகள், சல்வார் கமீஸ், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள். புடவைகள் எல்லாம் மினு மினுங்கும் லேட்டஸ்ட் வகைகள். உறவினர் புடவைக்கு ப்ளவுஸ் தைக்கச் சென்றார். அங்கே வேலை செய்த பெண் சொன்னார், இப்பெல்லாம் குட்டியூண்டு ப்ளவுஸ் கைகள் தான் ஸ்டைலாம். அதோடு புடவை எவ்வளவு மினு மினுங்குதோ அவ்வளவு டிமான்டாம். ஒரு முறை திருமணம் போன்ற விழாக்களுக்கு உடுத்திய ஆடைகளை மீண்டும் அணிய மாட்டார்கள் என்றும் சொன்னார். திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குறைந்தது 500 டாலர்களாவது செலவு செய்தால் தான் பெண்களுக்கு நிம்மதியாக இருக்குமாம். இப்படி ஏகப்பட்ட நியூஸ்கள் அவரின் மூலம் அறிந்து கொண்டேன்.
ஷோ கேஸில் இருந்த கண்ணாடி வளையல்கள் புது விதமாக இருந்தன. முத்துக்கள் தொங்கியபடி பல விதமான நிறங்களில் வளையல்கள். கடைப் பெண்மணி வளையல்களை வெளியே எடுத்தார். முத்துக்கள் சரமாக கோர்க்கப்பட்டிருந்தன. அதோடு இரண்டு வளையல்களையும் இணைத்து பாலம் போல முடிச்சுப் போட்டிருந்தார்கள். எப்படி அணிவது ஒரே குழப்பமாக இருந்தது. முதலில் முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஒரு வளையலை அணிந்து, பிறகு ப்ளையின் கண்ணாடி வளையல்கள் குறைஞ்சது 15 அணிந்து, இறுதியாக மற்றைய முத்துக் கோர்க்கப்பட்ட வளையலை அணிய வேண்டுமாம். சிலர் முழங்கை வரை இருக்குமாறு அணிவார்களாம். அடேங்கப்பா! இதெல்லாம் அணிய எவ்வளவு பொறுமை வேண்டும் என்று வியந்து தான் போனேன்.
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ என்ன பட்டிக்காட்டிலா இருக்கிறாய் என்று யாரும் நினைத்தாலும் காரியமில்லை. இந்த லேட்டஸ்ட், ஃபாஷான்( Fashion ) என்று வகை வகையாக உடைகள், வலையல்கள், சல்வார்கள் என்று புது ட்ரென்ட் கொண்டு வருபவர்கள் யார்???

உறவினர் பெண்ணுக்கு திருமணம். என்னிடம் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த பட்டுப் புடவைகளுக்கு ( அன்பளிப்பாக கிடைத்தவை ) ப்ளவுஸ் துணி எடுக்க ( இருக்கும் ப்ளவுஸ் எல்லாமே இத்துப் போயிருச்சு ) வேணும் துணிகள் காட்ட முடியுமா என்று கேட்டேன். கடைப் பெண்மணி என்னையும், என் புடவைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்பாக சில துணிகளை எடுத்து முன்னாடி போட்டார். நீயெல்லாம் சுத்த வேஸ்ட் என்று சொல்லாமல் சொல்கிறாரோ!!!


******************************
வேறு கல்யாணம்!
இந்த முறை விடுமுறையில் போன போது என் உறவினர்கள் சிலரை பார்க்க போயிருந்தேன். நாங்கள் போகும் போது ஒவ்வொரு முறையும் பார்க்க வருவார்கள். இந்த முறையாவது நாங்கள் போயே ஆக வேண்டும் என்று நினைத்துப் போனோம். இந்தியாவில் இருந்த போது பாம்புகள் நிறைய வலம் வந்தன. பாம்புகள் பற்றிய பேச்சு வந்தது.
நாங்கள் இருந்த வீட்டுப் பக்கம் கொஞ்சம் அல்ல நிறையவே திரியும் பாம்புகள். அதுவும் நாக பாம்புகள் அதிகம். வேப்ப மர நிழலினை அதிகம் விரும்பும் போல தெரிந்தன.
ஒரு முறை ஒரு பாம்பு எங்கள் வீட்டில் குடியிருக்கவும் ஆரம்பித்து விட்டது. குட்டி போடவோ அல்லது வேறு என்ன அவசரமோ தெரியவில்லை சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்தது.
அக்கம் பக்கம் போய் டெரர் குடுத்து விட்டு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விடும். வாண்டுகள் அதிகம் நடமாடும் இடத்தில் பெற்றோர்கள் கவலையுடனே இருந்தார்கள். விரட்டிப் பார்த்தும் பயனில்லை.
கடுப்பான எங்கள் அயலார் எல்லோரும் ஒன்று கூடி பாம்பினை நையப்புடைத்து கொன்று விட்டார்கள். காலியாக இருந்த இடத்தில் அதை புதைத்தார்கள். எனக்கு கனவில், நினைவில் எல்லா நேரமும் பாம்பு தான். நீயா படத்தில் வரும் பாம்பு போல பழி வாங்கப் போகிறது என்று நினைச்சு உதறல் தான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாக பாம்பு. ஆனால், அது எங்கள் வீட்டிற்குள் வராமல் வெளியே சுற்றித் திரிந்தது. முன்பு பாம்பினை அடித்து புதைத்த இடத்தில் அடிக்கடி காணப்பட்டதாக அயலார்கள் கூறினார்கள்.

நாக பாம்புகள் ஜோடியாகவே இருக்கும் என்று சொல்வார்கள். அதன் துணையைப் புதைத்த இடத்தில் இதனைக் கண்டதும் பயந்து, இந்தப் பாம்பினையும் அடித்துக் கொன்று விட்டார்களாம்.
அடப்பாவமே! பிறகு என்ன நடந்தது? அதனை எங்கே புதைத்தார்கள் என்று நான் கேள்வி எழுப்பினேன்.
அதன் துணைக்கு பக்கத்திலேயே புதைத்து விட்டதாக அயலார்கள் சொன்னார்களாம்.
( சே! அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி அநியாயமா செத்திருக்காதே என்று புலம்பியபடியே வீடு வந்து சேர்ந்தேன். )
******************************

20 comments:

  1. எனக்கு வளையல்கள பார்த்தா டெரர் ஆக இருக்கு .
    இதையெல்லாம் போட்டுக்கிட்டு for instance கண்ல விழுந்த தூசிய துடைக்க முடியுமா ?????

    ReplyDelete
  2. காப்பு வடிவா இருக்கு. இப்பிடி எல்லாம் நான் போட்டதில்லை. ஆனால் பிடிக்கும்.
    //அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி...// ;))))))))
    //10 வருடங்களுக்கு முன்னர் இருந்த பட்டுப் புடவைகளுக்கு// நான் வாங்குறதே இல்ல. எப்ப தேவையோ அப்ப கட்டாயம் எண்டால் வாங்குவன். ஆனால்... யாராவது அன்பாகக் கொடுத்தால் என்ன செய்யுறது எண்டு தெரியிற இல்ல. அதை இன்னொரு ஆளுக்கும் கொடுக்க விருப்பமில்லாமல் இருக்கும். ஆனால் உடுத்த சந்தர்ப்பமும் வராது. வரேக்க அவுட் ஒஃப் ஃபஷன் ஆகி இருக்கும்.

    ReplyDelete
  3. /இதையெல்லாம் போட்டுக்கிட்டு for instance கண்ல விழுந்த தூசிய துடைக்க முடியுமா ????? /:))))))))) ஏஞ்சலின் அநியாயத்துக்கும் பயப்புடறீங்கங்க நீங்க! கண்ல விழுந்த தூசிய கைவிரலாலதானே துடைப்போம்..இந்த டெரர் வளையல்லாம் மணிக்கட்டுக்கு மேலேதான இருக்கும்?? ஸோ,தைரியமா போடுங்க. :))) BTW நானும் இந்த டிஸைன் வளையலை எல்லாம் இப்பத்தான் பாக்கிறேன்!

    வானதி இதென்ன காம்பினேஷன்..வளையலும் பாம்பும்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!! ஓ..ரெண்டுக்கும் பொதுவா கல்யாணம் இருக்குதா..எப்படியெல்லாம் மேட்ச் பண்ராங்கப்பா! ;)

    பாம்புக்கதை எல்லாம் ஊரில் இருக்கைல கேட்டது.
    நல்லா இருக்கு..லேட்டஸ்ட் பாஷன் & கதை!

    ReplyDelete
  4. வளையல் பார்க்க அழகா இருக்கு வானதி! ஆனா போட்டுக்கதான் முடியாத மாதிரி உள்ளது.

    //சே! அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி அநியாயமா செத்திருக்காதே //

    அடேயப்பா... கவலையைப் பாருங்களேன் :)) கனவில், நினைவில் எல்லா நேரமும் பயந்துவிட்டு.. இப்படி கவலைப்படுற மாதிரி ஷோ காட்டினாலும் நம்மை பயமுறுத்தாட்டி பாம்புக்கு பொழுபோகாதாம் வான்ஸ் :)))

    ReplyDelete
  5. அசாதாரணம் இல்லாத நிகழ்வுகளை சொன்னாலும்
    அதில் மனமொன்றி மொழியை இயல்பாகக் கையாளும் முறையில்
    அதை மிகச் சிறப்பான பதிவாக்கி விட முடியும்
    அது உங்களுக்கு இயல்பாக இருக்கிறது என்பதற்கு
    இந்தப் பதிவே சாட்சி எனவே அடிக்கடி பதிவுகள்
    குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையேனும் தரவேனுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  6. ஹாய் வானதி

    இப்பலாம் நாம்ம பேஷன்ங்குற பேர்ல ஆதிவாசிகாலத்துக்கே போறோம்ங்குறத காமிக்குறதுக்கு தான் முழங்கை அளவு வளையல்களோ?:)

    கல்யாணத்துக்கு எடுத்த பட்டுபுடவையை பத்திரமாக வச்சு விஷேஷங்களுக்கு போட சொன்னார் என் மாமியார். ஒரு விஷேஷத்துக்கு போட்டு அடுத்த விஷேஷத்துக்கு போட்டால் “உன்கிட்ட வேற சேலையே இல்லையா?”ன்னு கிண்டல். அதுக்காகவே யூஸ் அண்ட் த்ரோ மாடல் எனக்கு பிடிச்சுருக்கு :)

    ReplyDelete
  7. இப்பொழுது சென்னையில் இந்த வகை வளையல்தான் ஹாட் ஃபாஷன்.அழகாக இருந்தாலும் அணிவதற்கு இடைஞ்சல் உள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  8. ஃஃஃஃஃ திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குறைந்தது 500 டாலர்களாவது செலவு செய்தால் தான் பெண்களுக்கு நிம்மதியாக இருக்குமாம்ஃஃஃஃ

    அக்கா அப்புறம் பழமொழில மட்டும் ஒரு நாள் கூத்துக்கு மீசை வழிக்கிறத என்ற எங்களைக் கடிப்பதில் என்ன நியாயம்... ஹ..ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  9. பாம்புக்கதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. எனக்கு வலையல்னா ரொம்ப புடிக்கும் வானதி. எப்போ புது புடவை வாங்கினாலும் கூடவே புதுசா வளையல் வாங்கிடுவேன். இந்த வளையல் ரொம்ப அழகா இருக்கு...... பகிர்வுக்கு நன்றி..... :)

    ReplyDelete
  11. இந்த வளையல் எல்லா கலர்களிலும் சென்னை ரங்கநாதன் தெருவில் ஒரு ஜோடி 40 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

    ReplyDelete
  12. வானதி..வளையல்கள் கொள்ளை அழகு.
    அந்த பாம்பு ஏக பத்தினி விரதனா இருக்குமோ வானதி.:))

    ReplyDelete
  13. ஆமாம் வானதி...இப்ப இந்த பேஷனும் வந்து போய்விட்டது...அம்மா ஊரில் இருந்து எனக்கு வாங்கி அனுப்பி இருந்தாங்க..அக்‌ஷ்தாவின் இரண்டவது BDayயிற்கு அவங்களுக்கும் அனுப்பி இருந்தாங்க...அவளுக்கே இப்பொழுது நாலு வயது ஆகுது...

    எனக்கும் இது மாதிரி நிறைய விஷயங்களில் இருக்கும்...காலம் நிறைய மாறிவிட்டது..

    நொடிக்கு நொடி மாறுகிறது பேஷன்...

    இரண்டாவது பதிவு பாம்பினை எல்லாம் இப்படி போட்டு எங்களை பயபடுத்த கூடாது...

    ReplyDelete
  14. //( சே! அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி அநியாயமா செத்திருக்காதே என்று புலம்பியபடியே வீடு வந்து சேர்ந்தேன். )//

    ஒரு வேலை நல்லா புதைச்சாங்களான்னு செக் பண்ண வந்திருக்கும் அதையும் அவங்க விட்டு வைக்காம கொன்னுட்டாங்க :-)

    ReplyDelete
  15. புது மாடல்ன்னு சொல்லிகிட்டு வரும் பல டிஸைன் வலையல்கள் கையை கீறி விடுகிரது ..(நா சொன்னது குழந்தைகள் ))...டெம்பரவரியா எப்பவாவது யூஸ் செய்யலாம் ...!! :-))

    ReplyDelete
  16. ஏஞ்சலின், துடைச்சு தானே ஆகணும். இதுக்காக ஒருத்தரை கூடவே கூட்டிட்டு அலைய முடியுமா???
    மிக்க நன்றி.

    இமா, நானும் பட்டுப்புடவைகள், சல்வார் வாங்குவதில்லை. காப்பு பிடிக்கும் போடுவதில்லை ( தங்கம் உட்பட )
    மிக்க நன்றி.

    ஏஞ்சலின்னுக்கு மகி ஒரு தீர்வு சொல்லிட்டாங்க. பயப்படாம போடுங்க. ஓக்கை.
    காம்பினேஷன் - கல்யாணம் தான் ஹிஹி...
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. அஸ்மா, எனக்கும் வளையல்கள் பார்க்க கொஞ்சம் டெரரா தான் இருந்திச்சு. திரும்பி பார்க்காம ஓடி வந்துட்டேன்.
    பாம்புக்கு நம்மை பயமுறுத்தனும் என்று எண்ணம் இருக்காதாம். நாங்க அதை ஏதாவது செய்தால் தான் ஆபத்தாம். இதெல்லாம் தெரிஞ்சாலும் இந்த பாழும் மனம் கேட்குதில்லை.
    மிக்க நன்றி.

    சிவா, நன்றி.

    ரமணி அண்ணா, நான் சும்மாவே கதை சொன்னா சுத்தி இருந்து கேட்பாங்க. எழுத விட்டா கேட்கவே வேண்டாம்.
    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஆமி, நான் மற்றவர்கள் சொன்னாலும் பழசையே தான் ( இருப்பதை தான் ) கட்டுவேன். இது திருந்தாத கேஸ்ன்னு நினைச்சு விட்டுடுவாங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வளையல் பாம்பு பகிர்வு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. //கடைப் பெண்மணி என்னையும், என் புடவைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்பாக சில துணிகளை எடுத்து முன்னாடி போட்டார். நீயெல்லாம் சுத்த வேஸ்ட் என்று சொல்லாமல் சொல்கிறாரோ!!!//

    ச்சே...ச்சே... அப்படியெல்லாம் நினைச்சுருக்கமாட்டருங்க...

    ReplyDelete
  20. முத்தான மூன்று முடிச்சு என்ற தொடர் பதிவுக்கு
    உங்களை அழைத்துள்ளேன்.
    தொடர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!