Saturday, July 23, 2011

கடலைப் பருப்பு ( பால் ) கறி
கடலைப்பருப்பு - 1/2 கப். தண்ணீரில் குறைந்தது 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும். இதை அடி கனமான சட்டியில் போட்டு, மூழ்கும்படி நீர் விட்டு, வெங்காயம் ( 1 டேபிள் ஸ்பூன் ), பச்சை மிளகாய் ( 4, அல்லது விரும்பிய அளவு ), பூண்டு ( 5 பல் ), உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் பால் ( விரும்பினால் தேங்காய்ப் பால் ) விடவும். கரண்டியால் சிறிது மசித்து விடவும். பால் ஓரளவுக்கு வற்றியது ( நன்கு வற்ற விட வேண்டாம் ) இஞ்சி ஒரு துண்டு பொடியாக அரிந்து போடவும். 2 நிமிடங்களின் பின்னர் வெந்தயம், பெருஞ்சீரகம் பொடி, சிறிதளவு நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்து ( வெங்காயம், கறிவேப்பிலை ( நிசமா கறிவேப்பிலை தான் ), காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் ) போடவும். சுவையான கடலைப் பருப்பு கறி தயார். இது சப்பாத்தி, சோறு, புட்டு, இடியப்பத்திற்கு ஏற்ற பக்க உணவாகும்.

நான் எப்போதும் Evaporated பால் தான் பாவிப்பேன். விரும்பியவர்கள் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. ஊரில் அம்மன் கோயில் திருவிழா சமயங்களில் 15 நாட்களுக்கு மாமிசம், மீன் வீட்டில் சமைக்க மாட்டோம். கடலைப்பருப்பு கறி, வெந்தயக் குழம்பு, அப்பளம், வடகம், சொதி, பால் பழம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். 15 நாட்களும் கோயிலுக்கு போய்ட்டு வந்து ஒரு வெட்டு வெட்டுவோம்.
*****************************************
2. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் ஒரு விநோதமான கடல் வாழ் உயிரினத்தினை மீனவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்களாம். குறைந்தது 20 அடி நீளம், பெரிய கண்கள், குதிரை போன்ற கழுத்துடன் காணப்பட்டதாம். அதை வீடியோவில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போலவே வீடியோ தெளிவாக இல்லாமல் பழைய கால த்ரில்லர் படங்களில் ( கறுப்பு வெள்ளை ) வரும் உருவம் போலவே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்த நூற்றாண்டில் செல் போன் கமராக்களில் கூட அழகா, தெளிவா படங்கள் வரும் போது இவர்களுக்கு எங்கிருந்து இந்தக் காமரா கிடைச்சதோ தெரியவில்லை.

இந்த மாதிரி நியூஸ்களில் கீழே வரும் வாசகர்கள் கருத்துக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். பல கமன்ட்கள் சிரிப்பை வரவழைத்தன. அதில் சில

வாசகர் 1 : இதை விட பயங்கரமான மிருகங்களை wal mart aisle களில் பார்த்திருக்கிறேன்.
வாசகர் 2 : பெரிய கண்கள், குதிரை போன்ற நீண்ட கழுத்து.... என் மாமியாராக இருக்கலாம் ( It sounds like my mother in-law ).

33 comments:

 1. நான் சமைக்கும் முறைக்கு வேறு பட்டுள்ளது.அவசியம் சமைத்துப்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 2. ரொம்பவே வித்தியாசமா இருக்கு வானதி. செஞ்சுப் பார்க்கணும்.

  //கீழே வரும் வாசகர்கள் கருத்துக்கள்//
  பதிவுகளில் பின்னூட்டம் போல, இவையும் படுசுவையாக இருக்கும்.

  ReplyDelete
 3. ஆஆஆஆஆ கறீஈஈஈஈஈஈஈ பால் கறீஈஈஈஈஈஈ... நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு நல்ல குறிப்பு போட்டிருக்கிறீங்க வான்...ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 4. ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.வாணி..பொருத்தமான குறிப்பாதான் கொடுத்திருக்கீங்க.

  ReplyDelete
 5. இது இலங்கை ரெசிபியும் இந்திய ரெசிபியும் சேர்த்துக் கலக்கி ஒரு குறிப்பாகத் தெரியுதே வாணி. நல்லாத்தான் இருக்கும் போல இருக்கு. ட்ரை பண்ணிட்டு நாளைக்கு வந்து சொல்லுறன்.

  ReplyDelete
 6. சூப்பர் குறிப்பு வானதி

  அப்படியே எனக்கு பார்சல் அனுப்பிடுங்க!!!

  ReplyDelete
 7. ஸாதிகா அக்கா, செய்து பாருங்கள். மிக்க நன்றி.

  ஹூசைனம்மா, நல்லா இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
  மிக்க நன்றி.

  அதீஸ், என்னவோ நான் கெட்ட குறிப்பு போடுறது போல பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்...
  மிக்க நன்றி.

  ReplyDelete
 8. ராதா ராணி, மிக்க நன்றி.

  இம்மி, இது இலங்கை குறிப்பு தான். Finishing touch ( adding parsely and ghee ) மட்டும் இந்தியன் குறிப்பு.
  மிக்க நன்றி.

  ஆமி, பார்சலா?? வீட்டுக்கு வாங்க சமைச்சே தருகிறேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 9. //அதீஸ், என்னவோ நான் கெட்ட குறிப்பு போடுறது போல பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்...//

  வான்ஸ்ஸ்ஸ்... என் தமிழைத் தப்பாகப் புரிந்து விட்டீர்கள்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  நான் சொன்னது.. நீண்ட நாளைக்குப் பிறகென்றால்... கொஞ்ச நாட்களாக சமையல் குறிப்பு போடவில்லையல்லவா அதைத்தான்.... நீண்ட நாட்களுக்குப் பின்பு சமையல் குறிப்பு வெளிவந்திருக்கு.

  அப்பூஊஊஊஊஊஉறம்... மிக நல்ல குறிப்பு போட்டிருக்கிறீங்க... அது இப் பால் கறிக்குச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  வடிவாப் பாருங்கோ என் வசனத்தில கொமாப் போட்டெல்லோ எழுதியிருக்கிறேன்...

  உஸ் அப்பாடா புரிய வைப்பதற்கே ஒரு அ.கோ.முட்டை சாப்பிடோணும்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 10. //குறைந்தது 20 அடி நீளம், பெரிய கண்கள், குதிரை போன்ற கழுத்துடன் காணப்பட்டதாம்.//

  உண்மையாகவோ வான்ஸ்ஸ்.. தண்ணிக்கு அடியிலயோ? இன்னொருக்கால் எனக்காகக் கேட்டுச் சொல்ல முடியுமோ, தலைகீழாகவோ நேராகவோ இருந்ததென:))))... இது எனக்கென்னமோ கன்போமாக அவிங்க போலவே தெரியுதே....

  கடவுளே... மீஈஈஈஈஈ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 11. சமையல் குறிப்புக்கு நன்றி
  எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

  ReplyDelete
 12. அக்கா அலஸ்காவில் பார்த்ததை அறிய நானும் ரொம்ப ஆவலாயிரக்கிறேன்..

  ReplyDelete
 13. சமையல் குறிப்பு - புதுசா எதையாவது செய்தா போடுவேன். எப்பவும் வழக்கம் போல தான் சமையல். அதெல்லாம் போட்டா சிலர் காறித் துப்பினாலும் துப்புவார்கள் என்று நினைக்கிறேன். நீங்க தெளிவாத் தான் கமன்ட் போட்டீங்க நான் தான் சும்மா வம்பிழுத்தேன் . ஓக்கை.

  அவிங்களோ அல்லது இவிங்களோ தெரியாது. நான் என்ன அலாஸ்காவில் மீன் பிடிக்கும் தொழிலா செய்யுறன். ஏதோ யாஹூவில் போட்ட செய்தியை எல்லோருக்கும் சொன்னேன். அலாஸ்கா பக்கம் எனக்கு ஒரு வாச (கி/கர் ) இருக்கிறார். அவரிடம் தான் கேட்க வேண்டும். அது வரை பொறுமை அவசியம்.

  நன்றி, அதீஸ்.

  ReplyDelete
 14. சரவணன், மிக்க நன்றி.

  மதி, ஏதோ என் வீட்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல கேட்கிறீங்க.
  வீடியோ லிங்க் இருந்தா போடுறன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 15. கலக்குறிங்க...கடலைபருப்பு கறி ரொம்ப நல்லா இருக்கு வானதி..

  இரண்டாவது தொகுப்பில் உள்ள இரண்டாவது கமெண்ட் நல்லா இருக்கு...

  ReplyDelete
 16. //அதீஸ், என்னவோ நான் கெட்ட குறிப்பு போடுறது போல பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்...// நான் தட்டிப் போட்டு.. எடுத்துக் குடுப்பானேன் எண்டு விட்டிட்டன். பிடிச்சிட்டீங்கள் வான்ஸ். ;)))

  ReplyDelete
 17. கீதா, சுவையும் நல்லா இருக்கும்.
  இரண்டாவது கருத்து சூப்பரோ சூப்பர். நான் அடிக்கடி நினைத்து சிரிப்பதுண்டு.
  மிக்க நன்றி.

  இமா, very very BAD . உடனை போட்டுக் குடுக்கணும். அது தான் உண்மையான நட்பு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 18. வான்ஸ்.... லஞ்ச் சாப்பிட்டுட்டு வாறன். இதே க.ப.பா.கறி. யம் ;P

  //நிசமா கறிவேப்பிலை // போட்டன். நெய்க்குப் பதில் மாஜரீன் போட்டன். ஆனால்... பயத்தில சில விஷயங்கள் போடேல்ல... 1 டேபிள் ஸ்பூன், 5 பல்... போட்டால் இருக்கிற பல்லுக் கொட்டிப் போனாலும் எண்டு பயமாக் கிடந்துது. ;))

  சாப்பிட்டது தயிர் சேமியாவோட. குறிப்புக்கு நன்றி. சமைச்சு முடிய வரிசையா எல்லாரும் லஞ்ச் ப்ரேக் எண்டு வரவும் படம் எடுக்க முதல் எல்லாம் முடிஞ்சுது.

  ReplyDelete
 19. இமா, செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.
  உள்ளி - Gas பிரச்சனை வராம இருக்க சேர்ப்பது. நெய் - பிள்ளைகளுக்காக போடுவது.
  கிறிஸ் அண்ணாச்சி, பிள்ளைகளுக்கு பிடிச்சிருப்பது மகிழ்ச்சி.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 20. இமா said...

  //அதீஸ், என்னவோ நான் கெட்ட குறிப்பு போடுறது போல பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்...// நான் தட்டிப் போட்டு.. எடுத்துக் குடுப்பானேன் எண்டு விட்டிட்டன். பிடிச்சிட்டீங்கள் வான்ஸ். ;)))
  //

  ஆஆஆஆஆஆஆ தனியே தாக்கினால் அதிரா தாக்குப் பிடிச்சிடுவா எண்டு:), இப்போ கூட்டுச் சதி நடக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). இதைக் கேட்க ஆருமே இல்லையோ?:)).

  நான் தேம்ஸ்க்குப் போறேன்..

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குதிக்கப் போறாவாக்கும் எனக் கனவிலயும் நினைச்சுச் சந்தோசப்பட்டிடாதையுங்கோ:))).. யோகா பண்ணி:) என் ஸ்ரெந்தை பில்டப்:)) பண்ணப்போறேன்:))))).

  ReplyDelete
 21. //சமைச்சு முடிய வரிசையா எல்லாரும் லஞ்ச் ப்ரேக் எண்டு வரவும் படம் எடுக்க முதல் எல்லாம் முடிஞ்சுது. //

  வான்ஸ்ஸ்ஸ் இதை நம்புங்கோ:)))).... நான் ஆரையும் போட்டுக்கொடுக்கவேஏஏஏஏஏஏஏஏஏ மாட்டன்..:)))) ஆஆஆஆஆஆ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:)).

  ReplyDelete
 22. கடலைப்பருப்பு நல்ல அழகான கலர்லே இருக்கு வானதி!

  யாஹூல வர கமென்ட்டைப் படித்து சிரிப்பது என்னவரின் வாடிக்கை. :)

  ReplyDelete
 23. /ஆஆஆஆஆஆ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))./ ம்யாவ்,ம்யாவ்! பை,பை சொன்னேன். :)

  ReplyDelete
 24. ப்ச்! //உள்ளி - Gas பிரச்சனை வராம இருக்க சேர்ப்பது. நெய் - பிள்ளைகளுக்காக போடுவது.// நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணின வரி வான்ஸுக்கு விளங்காமல் போச்சே! ;(

  ReplyDelete
 25. ///ஆஆஆஆஆஆ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))./ ம்யாவ்,ம்யாவ்! பை,பை சொன்னேன். :)// நானும். ;)

  0--
  வான்ஸ் கோபிக்காமல் இருக்கக் கடவாராக. ;)

  ReplyDelete
 26. ஆஹா பாக்கும்போதே சாப்பிடனும் போலருக்கே....

  ReplyDelete
 27. அதீஸ், நான் தேம்ஸூக்கு போறேன் போறேன் என்று தான் சொல்றீங்க போன பாட்டைத் தான் காணாம். எப்பதான் போறீங்க????
  இமா சமைக்காம, சாப்பிடாம சொல்ல மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கு சரியாவே படவில்லை. இமாவையும் என்னையும் பிரிக்க சதி வேலை நடக்குது. இமா, ஸ்டெடியா நில்லுங்கோ.

  மகி, நன்றி. நானும் படிப்பதுண்டு. மனது லேசாகி விடும்.
  இமா, சரி சரி விடுங்கோ. நான் கொஞ்சம் ட்யூப் லைட் தான். இங்கை சிலர் ப்ளேனிலை பறந்து திரிகினமாம். மேலை இருந்து பார்த்தா எல்லா நாடும் நியூ மாதிரி தான் தெரியுமாம்.
  கோபமா? எனக்கா? இதை டைப் பண்ணும் போது கூட சிரிச்ச முகமாவே டைப் பண்ணுறேன்.
  மிக்க நன்றி.

  மாய உலகம், மிக்க நன்றி.

  ReplyDelete
 28. /கோபமா? எனக்கா? இதை டைப் பண்ணும் போது கூட சிரிச்ச முகமாவே டைப் பண்ணுறேன்./ :))))))))

  ReplyDelete
 29. /கடலை பருப்பு கறி நல்லா இருக்குங்க வானதி . நான் இது மாதிரி முட்டை கோஸ் சேர்த்து செய்வேங்க.

  //அதீஸ், நான் தேம்ஸூக்கு போறேன் போறேன் என்று தான் சொல்றீங்க போன பாட்டைத் தான் காணாம். எப்பதான் போறீங்க????//

  ///ஆஆஆஆஆஆ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))./ ம்யாவ்,ம்யாவ்! பை,பை சொன்னேன்.//

  ஐயோ பாவம் இந்த பூனைய போட்டு இப்புடி பிராண்டுறான்களே? எங்க பாட்டி அப்பாகிட்டே கோச்சுக்கிட்டு தக்காக்கு போறேன் தக்காக்கு போறேன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். இது அது போலே இருக்குதே ?? தேம்ச்க்கு போறதுக்கு முன்னாடி அந்த பாட்டு எல்லாத்தையும் இமாவுக்கு சொல்லி கொடுத்திட்டு போங்க. அவங்களுக்கு பாட்டு கத்துக்கனும்முன்னு ரொம்ப நாள் ஆசையாம்:):)

  ReplyDelete
 30. மகி, நன்றி.

  என் சமையல் ( உங்க பெயர் என்னங்க அம்மிணி? ), ரெசிப்பி போடுங்க நானும் தெரிஞ்சுக்கறேன். ஓக்கை.
  நீண்ட நாளா சொல்லிட்டே இருந்தா சரியா? தேம்ஸ் என்ன ஆப்ரிக்காவிலா இருக்கு. பக்கத்தில் தானே இருக்கு.
  என்ன பாட்டு அது? கடவுளே! ஒரு பாட்டும் யாருக்கும் சொல்லிக் குடுக்க வேண்டாம். அந்தப் பாட்டும் பூஸாரோடு தேம்ஸில் போகட்டும்.
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  இம்மி, நன்றி.

  ReplyDelete
 31. தளத்தின் தகவல்கள் அருமையாக உள்ளது . நன்றி சகோதரி பகிர்வுக்கு

  ReplyDelete
 32. ரொமப் அருமயான் காம்பினேஷன்.

  இங்கு பாக்கிஸ்தானிகள் தால் தர்கா என்றூ செய்வார்கள்

  நாங்க கீமா, வெந்த ய கீரையுடன் செய்வோம் ரொட்டி சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!