அத்துவான காடு போன்ற இடம், இதில் போலீஸ் வேறு. கன்னாபின்னாவென்று ரோஷம் வந்ததன் விளைவு எவ்வளவு டாலர்களோ தெரியாது. அப்படியே பூமி இரண்டாக பிளந்து இந்தக் காரை விழுங்கி விடக்கூடாதா என்று பலவாறாக புலம்பியபடி காரை மெதுவாக ரோட்டின் ஓரத்திற்கு ஓட்டிப் போனேன். போலீஸ் அவர் பாட்டுக்கு போய் விட்டார். என்னை விட பெரிய கேடிகள் ஊரில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியுதல்லவா? போகும் போது கையால் ஏதோ சைகை செய்தார். நன்றின்னு சொன்னாரா இல்லை வேறொரு நாளில் உன்னைக் கவனிக்கிறேன் என்று சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
ஒரு வழியா நான் போக வேண்டிய இடம் வந்தது. அந்த இடத்தினைக் கண்ட பரவசத்தில் நான் மெய்மறந்து சுற்றிச் சுற்றி வந்தேன். பார்க்கிங் கிடைக்கலைன்னா வேறு என்ன செய்வதாம். ஒருவர் காரை ரிவேர்சில் எடுக்க, வலது பக்கம் 2 கார்கள், இடது பக்கம் 2 கார்கள் காத்திருந்தன. சில இடங்களில் பனி மலை போல குவித்திருந்தார்கள். இரண்டு தடவை சுற்றிய பிறகு வாழ்க்கை வெறுத்து வீடு திரும்பினேன்.
நான் போய், தொலைந்து போகாமல் மீண்டு வந்த கதையை என் ஆ.காரர் நம்பவேயில்லை. இதுக்காக நான் போன இடத்திலிருந்து 2 எவிடென்ஸை கூட்டிட்டு வரமுடியுமா?
கூகிளாண்டவரின் மேப் பேப்பரில் நான் விட்ட பிழைகள், எங்கே திரும்ப வேண்டும் என்று விலாவாரியா எழுதி வைச்சு இருக்கிறது மட்டுமே சாட்சி. அதை எல்லாம் என் ஆ.காரரிடம் காட்டி, ஏன் சும்மா வெறும் வாய்க்கு அவல் குடுக்கணும் என்று எண்ணத்தில் அப்படியே விட்டுட்டேன்.
அமெரிக்கா வந்த புதிதில் இப்படி நானே புது இடங்களுக்கு போய் வருவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. பார்மஸியில் என் ஆ.காரர் ஏதாவது பொருளுக்கு காசு குடுக்கச் சொன்னாலே கண்ணீர் அருவியா கொட்டும்.
இன்று இப்படி வீரமான ஆளாக (!!) மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
எல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்.
Vada
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்?! :)
ReplyDelete//பார்க்கிங் கிடைக்கலைன்னா வேறு என்ன செய்வதாம்.//
ReplyDeleteஹா ஹா! :)
//எல்லாப் புகழும் என் கணவருக்கே என சொல்லி//
ஃபினிஷிங் டச், டாப்புங்கோவ்! :)
வட போச்சே!
ReplyDeleteஇன்று இப்படி வீரமான ஆளாக (!!) மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
ReplyDeleteஎல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்.
ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பது போல உங்களது வெற்றிக்குப் பின்னால் உங்களது கணவர் இருக்கிறார்! எனது வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கே!
2 நாளைக்கு முன்னமே இதை பகிர்ந்நிருக்கலாமோ என என் உள்மனம் சொல்லுது அக்கா....
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
ReplyDelete..... Independence and confidence.... The essentials for an American living... :-)
good post.
Super . . Super by www.kingraja.co.nr
ReplyDeletekarrrrrrrrr இதுவோ மற்றர்? நானும் ஏதோ என்னவோ ஆச்சாக்கும் என வாயைப் பிளந்தபடி படித்தால்.... வீடு வந்து சேர்ந்திட்டாவாமே....அவ்வ்வ்வ்வ்வ்வ்:).
ReplyDelete//போகும் போது கையால் ஏதோ சைகை செய்தார். நன்றின்னு சொன்னாரா இல்லை வேறொரு நாளில் உன்னைக் கவனிக்கிறேன் என்று சொன்னாரா // எனக்குப் புரிஞ்சுபோச்சு...:).. வாணாம் இங்க வாணாம்... பிறகு ஆரிட்டத் தப்பினாலும் ஆசனம் செய்வோரிடம் தப்பவே முடியாது:).
என்ன வானதி,தொடர்கதையா எழுதப்போறீங்கன்னு பாத்தா பொசுக்குன்னு முடிச்சுட்டீங்க?! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ReplyDeleteஇடத்தைப் பாத்து பரவசமாகி சுத்தி சுத்தி வந்தீங்களோன்னு நினைச்சேன்.பார்க்கிங் கிடைக்கலையா?!!ஹாஹா!!
//இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக//சிலர் அந்த கம்ஃபர்ட் ஸோனுக்குள்ளே இருந்து வெளியே வரவிரும்புவதே இல்லை வானதி!அவர்களின் கணவர்களும் கண்டுக்கறதில்ல.இங்கே நண்பர் வீட்டில் இந்த நிகழ்வை கண்கூடாகப் பார்க்கிறேன்.
என் கணவரும் உங்க ஆ.காரர் மாதிரிதான்,எனக்கு வீரத்தை ஸ்பூன்-ஸ்பூனா ஊட்டிகிட்டு இருக்கார்.:)
This comment has been removed by the author.
ReplyDeleteநீரில் இறங்காமல் நீச்சல் பழகுதல் என்பது
ReplyDeleteஎன்றைக்குமே சத்தியமில்லை
என்பதை மிக அழகாக விளக்கிப்போகும்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஓட்ட வட, உங்கள் பெயரில் வடை இருப்பதால் பாலாஜிக்கு வடையை குடுங்கோ.
ReplyDeleteபாலாஜி, ஏதாச்சும் பஞ்ச் டயலாக் அடிக்கணும் போல இருந்துச்சு. அதான் எடுத்து விட்டேன்.
மிக்க நன்றி.
ஓட்ட வட, என்னது ஆ.காரருக்கு வாழ்த்துக்களா?? ம்ம்ம்... சொல்லிடுறேன்.
மிக்க நன்றி.
தம்பி சுதா, உண்மை தான்.
மிக்க நன்றி.
சித்ரா, 100 வீதம் உண்மை தானுங்கோ.
மிக்க நன்றி.
ராஜா, என்ன பெயர்?
மிக்க நன்றி.
அதீஸ், ஒரு சக பதிவர் இவ்வளவு கஷ்டப்பட்டு, தொலைஞ்சு போய், மீண்டு வந்த கதை சொன்னா என்ன இது??? கர்ர்ர்ர்....
ReplyDeleteகிழவி எப்ப போகும் திண்ணை எப்ப காலியாகும் என்ற கதையா இருக்கே.
ஆசனம் செய்பவர் இந்தப் பக்கம் வர்றதில்லையே. பப்ளிக்ல சொல்லிடுங்கோ????
மகி, தொடர் கதையா??? என்ன இது ஆளாளுக்கு வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சிக் கொண்டு.
கனடாவில் இருக்கும் போது என் சகோதரனிடம் வாங்கி கட்டிக் கொள்வேன். இங்கே வந்தா என் ஆ. காரர். ஒரு மனுஷன் எம்பூட்டு திட்டு, எத்தனை பேரிடம் வாங்குறதாம். அதான் துணிஞ்சு காரியத்தில் இறங்கிட்டேன்.
கம்ஃப்ர்ட் சோன் - பழகினா அதுவே பழக்கமாயிடும். மாத்துவது கஷ்டம்.
ஸ்பூனால் ஊட்டுகிறாரா.....நல்ல பொறுமை தான்.
மிக்க நன்றி.
ஜெய், உங்க கமன்ட் காணவில்லை. இங்கே தான் போட்டனீங்களோ??? சும்மா ஒரு விளக்கத்துக்காக கேட்டேன்.
யார் அந்த நாற்காலி செய்பவர்???
மிக்க நன்றி.
ரமணி அண்ணா, உண்மை தான்.
மிக்க நன்றி.
ஒரு சந்தேகம் வான்ஸ் - பார்க் செய்தீங்களா இல்லையா? அந்த வேலையை முடித்தீங்களா இல்லை வெறுமனே போய் திரும்பி வந்தீங்களா?
ReplyDelete//இன்று இப்படி வீரமான ஆளாக (!!) மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
எல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்//
இம்புட்டு டச்சிங்கா முடிச்சுப் போட்டீங்களே வான்ஸ்.. பக்கத்துல டிஷ்யூ கூட இல்ல.. என்ன பண்ணுவேன்.. :)
வான்ஸ்.. எங்க வீட்டுலயும் இப்படித்தான்.. ஆனால் அப்பப்போ ரிவர்சும் நடக்கும் - அதாவது நான் தெகிரியம் ஊட்டுற மாதிரி :)
/இன்று இப்படி வீரமான ஆளாக (!!) மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
ReplyDeleteஎல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்.//
சூப்பர் வாணி...உங்கள் கணவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்..நீங்களும் பத்தாம் பசலி பொண்ணாய் இல்லாமல் ஆர்வமாய் கத்துகிட்ட உங்கள் முயற்ச்சிக்கும் என் பூங்கொத்துக்கள்...இப்படி தான் வாணி இருக்கணும்...வெரி குட் பாமிலி...(சுத்தி போட்ருங்க இன்னைக்கு வீட்டில்..:)) )
nice :)
ReplyDeleteபெண்கள் என்றால் தன்னம்பிக்கையோடு உங்களை மாதிரி தான் இருக்கனும்,என் கணவர் என்னை இந்தியாவில் விட்டு விட்டு யு.ஏ.இ க்கு வரும் பொழுது,முதலில் செய்த வேலை கார் லைசன்ஸ் எடுத்து தந்து ஒரு காரும் வாங்கி தந்து உன் வேலையை நீ பார்க்க பழகிக்கொள் என்று சொன்னது தான்,எங்க ஊர் ஒரு பட்டிக்காடா பட்ட்ணமா மாதிரி தான்,முதலில் கார் ஊரில் ஓட்டிய பெண்மணிங்கிற பெருமை கூட நமக்கு உண்டு வானதி,நான் தெருவில் வந்தால் பிள்ளைங்க கூட்டம் பின்னாடி ஓடி வருவாங்க,வீட்டு வாசலில் பெண்கள் மூக்கில் விரலை வைத்து பார்ப்பாங்க,ஏன் கேட்கறீங்க அது பெரிய கதை.ஆனால் இங்கு லைசன்ஸ் எனக்கு எடுக்கலை,சிரமமும் செலவும் கூட.அதனாலயே எல்லாப்புகழும் கணவருக்கேன்னு அவரைச் சார்ந்து இருக்கிறேன்.நல்ல இடுகை.
ReplyDeleteshort and sweet!
ReplyDeletevanathy said...
ReplyDeleteஆசனம் செய்பவர் இந்தப் பக்கம் வர்றதில்லையே. பப்ளிக்ல சொல்லிடுங்கோ????
///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆரது உப்பூடிச் சொன்னது.... ஓடி ஓடி எல்லோருக்கும் கொமென்ட்ஸ் போட்டு துரும்பா இளைச்சிட்டார் அவரைப் போய் ஏடாகூடமா ஏதும் சொல்லி திரும்ப மலைக்கு/கடலுக்கு அனுப்பிடக்கூடாது... நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).(நல்லாக் கேளுங்க வான்ஸ்ஸ்ஸ்:))
/// நான் போட்ட கமெண்டையே கானோம்???????????? //
ஜெய் விடாதீங்க.... திரும்ப திரும்ப கேளுங்க... கண்டுபிடிக்கும்வரை கேளுங்க... போட்டதைக் காணாட்டில் அது எப்பூடி விடமுடியும்...
உஸ் அப்பாடா.... தேம்ஸ்ஸ்ஸ்ஸ் ஐ ஆம் கமிங்யா..:))))).
உங்கள் ஆத்துக்காரருக்கு ஒரு ராயல் சல்யூட்.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல வேளை பத்திரமா வந்துட்டீங்க . இல்லாட்டி உங்க ஆத்துக்காரர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்.
ReplyDelete//நல்ல வேளை பத்திரமா வந்துட்டீங்க . இல்லாட்டி உங்க ஆத்துக்காரர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்.// ஒருவேளை சந்தோஷப்பட்டுருப்பாறோ???:-))!!
ReplyDeleteகாலையில் கருத்து எழுதிய நினைவு,காணோமே! என்றாலும் உங்க டெம்ப்லேட்டில் உள்ள மலரை வந்ததுக்கு ரசித்து விட்டு செல்கிறேன்.இதுவரை இப்படி ஒரு அழகிய புகைப்படம் பார்த்ததில்லை.
ReplyDelete// பப்லிஸ செய்து மூனாவதா போட்ட ஓட்டு மட்டுமே என் சாட்சி..அவ்வ்வ்வ்வ்வ்வ்..
ReplyDeleteமம்மீஈஈஈஈஈஈஈஈஈஈஈ //
தல, இதுக்கு முந்திய பதிவுக்கு போட்டிருக்கப் போறீங்க. அவ்வ்வ்வவ்...
// ஆசனம் செய்பவர் இந்தப் பக்கம் வர்றதில்லையே. பப்ளிக்ல சொல்லிடுங்கோ????//
ReplyDelete// யார் அந்த நாற்காலி செய்பவர்??? //
// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆரது உப்பூடிச் சொன்னது.... ஓடி ஓடி எல்லோருக்கும் கொமென்ட்ஸ் போட்டு துரும்பா இளைச்சிட்டார் அவரைப் போய் ஏடாகூடமா ஏதும் சொல்லி திரும்ப மலைக்கு/கடலுக்கு அனுப்பிடக்கூடாது... நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).(நல்லாக் கேளுங்க வான்ஸ்ஸ்ஸ்:))//
இப்படியெல்லாம் கூட்டம் போட்டு எங்க 'தல'ய உணர்ச்சி பொங்க வச்சிடாதிங்க. பாருங்க....
//விடுங்க...எவரெஸ்ட் தான் என் அடுத்த இலக்கு //
என்று போய்டப் போறார். அவ்வ்வ்வவ்
// எல்லாப் புகழும் என் கணவருக்கே//
ReplyDeleteஇதையே இந்த கதைக்கு தலைப்பாக வைக்கும்படி கணம் வான்ஸ் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஹாஹா!!
//பார்மஸியில் என் ஆ.காரர் ஏதாவது பொருளுக்கு காசு குடுக்கச் சொன்னாலே கண்ணீர் அருவியா கொட்டும்.//
ReplyDeleteஅது எப்படி சகோதரி, எல்லாரும் இந்த விசயத்தில் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள்.
உங்கள் தன்னம்பிக்கையையும் தங்களின் அன்பான கணவரையும் பாராட்டுகிறேன்
ReplyDeleteஎனது வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கே!
ReplyDeleteஉங்கள் தளம் வந்து ரொம்ப நாள் ஆச்சு வாணி.
ReplyDeleteநலமா??
மனதை தொடும்படியான ஒரு பதிவு...இரண்டு பகுதியும் படித்தேன்...கணவர் உங்களை ஒரு வீராங்கனையாக மாற்றி இருக்கிறார்...
உங்களின் தன்னம்பிக்கையை உங்கள் கணவர் நினைவு படுத்தி இருக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது...! :))
உங்களின் அன்பான கணவரையும் உங்களையும் வாழ்த்துகிறேன்.
சந்தூஸ், என்ன அப்படி கேட்கிறீங்க??
ReplyDeleteஅதன் பிறகு 2 தடவை போய் வந்தாச்சு. ஏன் நியூஸி ஆன்டி டிஸ்யூ தரமாட்டாங்களா???
ரிவர்ஸா - நல்லா ஊட்டுங்க தைரியத்தை.
மிக்க நன்றி, சந்தூஸ்.
ஆனந்தி, இங்கே எல்லா வேலைகளையும் தனியே சமாளிக்க பழகணும். திடீரென்று மகனின் ஸ்கூலிருந்து போன் பண்ணுவார்கள் அல்லது மருத்துவரிடம் போக வேண்டி இருந்தால் கஷ்டம் தான்.
ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
மாணவன், நன்றி.
ஆசியா அக்கா, இங்கு ட்ரைவிங் செலவு குறைவு ஆனால் கார் தான் பயங்கர செலவு வைக்கும். குளிர்காலங்களில் கார் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்.
மிக்க நன்றி, அக்கா.
மாதவி, மிக்க நன்றி.
ReplyDeleteஅதீஸ், ஓ! இவர் தான் ஆசனம் செய்பவரா??
நான் பைலட் அண்ணாவை நினைச்சு... ஏதோ சொல்லிட்டேன்.
ஜெய்யின் கமன்ட் - அவர் எங்காவது வேறு பக்கம் மறதியா போட்டிருப்பார்.
நாஞ்சிலார், சரி நானே உங்க சார்பில் அவருக்கு ஒரு சல்யூட் அடிச்சு விடுறேன்.
சும்மாவே என் ஆ.காரரை கையில் பிடிக்க முடியாது. இது வேறா???
மிக்க நன்றி.
ஜெய், என்ன இது? அல்லாத்தையும் எழுதிப் போட்டு, அழிச்சு வைச்சிருக்கிறீங்க??
அதீஸை திட்டி ஏதாவது கமன்ட் ஆஆஆ???
எல்கே, ஏதோ உள்குத்து போல தெரியுதே?
மிக்க நன்றி.
சுகந்தி, அவர் கவலைப்பட்டாலும் விட மாட்டீங்க போலிருக்கே அவ்வ்வ்வ்.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, என் வீட்டு தோட்டத்தில் இருக்கும் செடி.
ReplyDeleteரசித்தற்கு மிக்க நன்றி.
நாட்டாமை, ஏற்கனவே என் ஆ.காரருக்கு இங்கு அதிக விசிறிகள். இப்படியெல்லாம் தலைப்பு போட்டா நான் அம்பேல் தான்.
உங்க தல - இமயமலை உச்சிக்கு ஏறுமா??? அங்கே குளிர் சாஸ்தியாமே???
மிக்க நன்றி, நாட்டாமை.
இளம் தூயவன், தெரியலையே!!!
மிக்க நன்றி.
சிவகுமாரன், மிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
கௌஸ், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.