Sunday, March 13, 2011

பனி விழும் இரவு

அமெரிக்காவின், வெர்ஜீனியா மாநிலத்தில் ஒரு உணவகம். வின்டர் நேரமாகையால் 4 மணிக்கே இருள் சூழ்ந்திருந்தது. உணவகத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. ஒரு சில வெள்ளையர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். சிலர் புகைப்பிடித்தபடி, சிலர் மது அருந்தியபடி காணப்பட்டனர். கேத்தரின் அந்த உணவகத்தில் கடந்த 15 வருடங்களாக வேலை செய்பவர். சில நேரங்களில் மேற்பார்வையாளராகவும், சில நேரங்களில் உணவு பரிமாறுபவராகவும், மேசைகளை சுத்தம் செய்பவராகவும் பல அவதாரங்கள் எடுப்பார். வயது 40 களின் இறுதிப் பகுதி. உணவகத்தின் உரிமையாளர் வெள்ளையர். பெயர் ஸ்டீவ். கறுப்பர்களுக்கு உரிமைகள் இல்லாத காலம் அது. கறுப்பர்கள் அங்கு வருவதையே விரும்பாதவர். உணவகத்தின் முன் வாயிலில் வெள்ளை இனத்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் என்று கொட்டை எழுத்துகளில் எழுதி வைத்திருந்தார்.

வீட்டில் தாய், தந்தை, குறிப்பாக பாட்டி ஆகியோருக்கு கறுப்பர்களை கண்டாலே வெறுப்பு.
தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். சின்ன வயதிலிருந்து இந்த அறிவுரைகளைக் கேட்டு வளர்ந்தமையால் கேத்தரினின் மனதில் ஓரத்தில் இனவெறி சின்ன வயதில் இருந்தது உண்மை. ஆனால், வளர வளர அவர் அதிலிருந்து வெளியே வந்து விட்டார் என்பதும் உண்மை. இந்த உண்மை அவருக்கு மட்டும் தெரியும். வெளியே சொன்னால் எங்கே தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேன் என்று நினைத்துக் கொண்டார். கறுப்பர்களை காணும் போது மனம் முழுவதும் இரக்கம், பச்சாதாபம் ஏற்படும். இதெல்லாம் முதலாளி ஸ்டீவுக்கு தெரிந்தால் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார் என்பதால் வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்.

முதலாளி எங்கோ சென்று விட அன்று கேத்தரின் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. மாலை 6 மணியளவில் ஒரு வெள்ளை மனிதர் உள்ளே வந்தார். வந்தவரின் கண்களில் ஒரு இனம் புரியாத பதட்டம் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி நின்றார். பேசலாமா வேண்டாமா என்று ஒரு போராட்டம் அவரின் மனதில் இருந்ததை அவரின் செய்கைகள் உணர்த்தின. கேத்தரின் மேசைகளை சுத்தம் செய்தபடி மெதுவாக புன்னகைத்தார். அந்த மனிதரும் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தவர் போல கேத்தரின் பக்கம் வந்தார். அவரின் ஜாக்கட், தொப்பி, சப்பாத்துகள் அவர் வசதியானவர் என்று விளம்பரம் செய்தன. நன்கு கல்வி கற்றவர் போல ஒரு பணிவு, கணிவு கண்களில் தெரிந்தன.
"நான் உங்களுக்கு எப்படி உதவி செய்ய ? ", என்று கேட்டார் கேத்தரின்.

அவர் நாலா புறமும் பார்வையினை ஓட்டியபடி மீண்டும் தயங்கி நின்றார்.
" மிகவும் பசியாக இருக்கு. இங்கே சாப்பிடலாமா ? " என்றார் அந்த மனிதர்.
" அதுக்காக தானே இந்தக் கடையே இருக்கு. தாராளமா சாப்பிடலாம்", என்றார் கேத்.
" என் மனைவி காரில் இருக்கிறார் அவரை அழைத்து வரலாமா?", என்று தொடர்ந்தார்.
" கண்டிப்பா ", இது கேத்தரின்.
" இல்லை....அவர் கறுப்பர் இனப் பெண்மணி. நாங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகிறோம். எல்லா உணவகங்களிலும் கறுப்பர்களை உள்ளே விடமாட்டேன் என்று சண்டைக்கே வந்து விட்டார்கள். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை. ரொம்ப பசியா இருக்கு. ", என்றார் தயங்கியபடி.
" உள்ளே கூட்டிட்டு வாங்க. தாராளமா சாப்பிடலாம்", என்றார் கேத்.
அந்த மனிதரின் கண்கள் பனித்ததை கேத்தரின் கவனித்தார்.
இருவருக்கும் சுவையான உணவு இவரே பரிமாறினார்.
கோபம் கொண்ட சில வெள்ளையர்கள் உணவகத்தை விட்டு வெளியேறினார்கள்.


எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவர்களை உபசரிப்பதில் கவனத்தை செலுத்தினார்.
சாப்பிட்டு முடிந்ததும் அதற்குரிய பணத்தை செலுத்தி விட்டு எழுந்தார்கள் இருவரும்.
அந்த மனிதர் கேத்தரினின் கையை பற்றிக் குலுக்கினார். அதில் ஒரு அழுத்தம், நன்றி உணர்வு எல்லாமே இருந்தது.
கேத்தரினின் கண்களில் ஈரம் கசிந்தது. கறுப்பர் இனப் பெண்மணியை கட்டியணைத்து கன்னத்தில் மெதுவாக முத்தம் இட்டார். வெண்மை நிறப் பற்கள் பளிச்சிட சிரித்தார் அந்தப் பெண்மணி.
வாசலில் சிலர் கும்பலாக கூடி நின்று ஆரவாரம் செய்தனர். அந்த ஆடவரும் பெண்ணும் வாசலில் இறங்கி நடக்க, முதலாளி உள்ளே வந்தார். சில நொடிகளில் என்ன நடந்திருக்கும் என்று அனுமாணித்துக் கொண்டார். கண்களில் கோபம் தாண்டவமாட, கேத்தரினை நோக்கி ஓடினார்.

கேத்தரின் தானாகவே உணவு விடுதியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இனிமேல் இங்கு வேலை செய்வது மடத்தனம் என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.

கும்பலில் நின்ற யாரோ ஒரு வெள்ளை இளைஞன் வீசிய பொருள் கேத்தரினின் தலையில் பட்டு குருதி வடிந்தது. வழிந்தோடிய குருதியை துடைத்தபடி நடக்க ஆரம்பித்தார். பூத் துவாலைகளாக பனி விழத் தொடங்கியது. இருட்டின் பின்னணியில் அந்தக் கறுப்பின பெண்ணின் சிரிப்பு போலவே அழகாக இருந்தது பனி.

30 comments:

 1. இந்த மாதிரி பேதங்கள் இன்னும் சில இடங்களில் இருக்கிறதே வாணி :(

  ReplyDelete
 2. உண்மையை அழகா சொல்லிருக்கீங்க...

  ReplyDelete
 3. நல்ல கதை, சில இடங்களில் இப்பவும் நிறத் துவேஷம் இருப்பதாக அறிகிறேன், நான் கண்டதில்லை.

  ReplyDelete
 4. நிறைய நேரம் குறுக்க நிக்கிறது நிறம் இல்ல.. மனம் தான், சில நேரம் பணம். நீங்கள் சொன்ன மாதிரி மற்றவங்களுக்காக ஒதுங்கி இருக்க நினைக்கிற ஆட்கள் எப்பவாவது வெளிய வந்துருவினம்.
  இப்ப எல்லாம் மாறிக் கொண்டு வருது, சின்னவங்கள் சரியாக யோசிக்கிறாங்கள். இது எல்லாம் காணாமல் போயிரும்.

  ReplyDelete
 5. ஆஆஆஆஆஆ.... என்னாபெரிசு....:)))). என்ன எது என ஆரும் குறுக்க கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ம்ம்.. இதெல்லாம் ஒரு காலத்துல நிஜமாகவே நடந்திருக்கும்.. நம்ம ஊருலயும் இதே கதை தான்..

  ReplyDelete
 8. ஆஆஆஆஆஆ.... என்னாபெரிசு....:)))). என்ன எது என ஆரும் குறுக்க கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  அதிரா.. ரீச்சர் பாவம் விட்டுடுவோம்.. :))

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. சொன்ன விஷயமும் சொன்ன விதமும் மிக அருமை
  மன நிறைவைத் தந்த நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இங்க 'பனி விழும் இரவு'க்கு மட்டும்தான் கொமண்ட் போட வேணும் குழப்படிக் கூட்டமே. ;)

  ReplyDelete
 12. எல்லா இடங்கள்லேயும் ஒவ்வொரு விதமான பேதங்கள் இருக்கத்தான் செய்யுது.. அழகா சொல்லியிருக்கீங்க வானதி.

  ReplyDelete
 13. ஜாதி இன வேறுபாடுகள் எங்கிருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவை.
  நல்ல இடுகை!

  ReplyDelete
 14. அழகா சொல்லிருக்கீங்க...

  ReplyDelete
 15. ஆ,,, நான் பெயிண்ட் பண்ணிடுவன்போல இருக்கே...:)).. 2ம் தடவையும் பெரிசூஊஊஊஊஉ... ஆனா முன்பைவிடச் சின்னதூஊஊ:)).... என்னை ஆரும் கேள்வி கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

  ஊசிக்குறிப்பு:
  ஜெய்லானி said...
  எச் யூ மி ..அப்புறமா வரேன் :-)///

  என் பதிவுக்கு கீழ இதைப் பார்த்ததும் பயந்திட்டாரோ என நினைத்து விழுந்தூஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊஊஉ சிரித்தேன்...

  கவனிக்கவும் இப்ப சிரிக்கவில்லை:)))))).

  எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  ஆஆஆஆஆஆ.... என்னாபெரிசு....:)))). என்ன எது என ஆரும் குறுக்க கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  அதிரா.. ரீச்சர் பாவம் விட்டுடுவோம்.. :))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சந்து நான் எப்போ பிடிச்சேன் விடுறதுக்கு?:))))).

  பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ் ரொக்கெட்டில...:).

  ReplyDelete
 16. இது இன்றளவும் நிஜமான ஒன்றுதான்.

  ReplyDelete
 17. எல்லா இடங்களிலும் நடப்பதுதான்.அழகிய விவரிப்பு.

  ReplyDelete
 18. நிற பேதங்கள் தாண்டிய மனிதாபிமானம் இழையோடுது வானதி! :)

  ReplyDelete
 19. கார்த்திக், உண்மை தான். மிக்க நன்றி.

  மேனகா, மிக்க நன்றி.

  அதீஸ், நான் நிறைய கண்டிருக்கிறேன். மிக்க நன்றி.

  இம்மி, மனம், பணம் எல்லாம் நிறத்தின் பிறகு தான் வரும். எனக்கு தெரிந்த கறுப்பின ஆண் ஒருவர் சொன்னார் நிறத்துவேஷத்தால் பாதிக்கப்பட்ட கதை. அவர் நல்ல வசதியானவரும் கூட. மற்ற நாடுகளில் எப்படியோ தெரியாது இங்கு இன்னும் நிறைய இடங்களில் கலர் ஒரு முக்கியமான விடயம்.
  மிக்க நன்றி.

  சந்தூ, உண்மை தான்.
  மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, மிக்க நன்றி.

  ReplyDelete
 20. அமைதி அக்கா, சரியா சொன்னீங்க. நன்றி.

  மாதவி, நன்றி.

  குமார், நன்றி.

  சரவணன், நன்றி.

  பலே பிரபு, நன்றி.
  ஸாதிகா அக்கா, நன்றி.

  பிரஷா, நன்றி.
  பாலாஜி, நன்றி.

  ReplyDelete
 21. படித்து முடித்ததும் george washington carverஇன் கதையை சில வருடங்களுக்கு முன் readers digestஇல் படித்த நினைவு வந்தது. இன்று சகல விதத்திலும் அமெரிக்காவை வெறும் ஒரு நிலக்கடலை industry முன்னேற்றி வைத்திருக்கிறதென்றால அதற்கான credit அனைத்தும் திரு.கார்வருக்கே!! ஆனால் இதனை எத்தனை அமெரிக்கர் மனதார மகிழ்ந்து ஏற்றுக் கொள்வர் என்பதுதான் ரகசியம்!!

  ReplyDelete
 22. நிச்சயமாய் இது மனதை நெருடும் கதையாகத் தானிருக்கு வான்ஸ்!! ஹேட்ஸ் ஆஃப்.

  ReplyDelete
 23. என்ன ஆச்சு 'தல'ய என்ன சொன்னீங்க வான்ஸ்!!

  ReplyDelete
 24. நான் இதுவரை இத்தகைய நிகழ்வுகளை இங்கே பார்க்கலை வானதி! ஊரில் நடந்த தீண்டாமை கொடுமைகள்தான் நினைவுக்கு வருது. எல்லாம் மாறிக்கொண்டு வருது,வருங்காலத்தில் கதைகளில்மட்டுமே படிக்கும்படி இருக்கும் என்று நம்புகிறேன்.

  முடிவுவரிகள் 'நச்'னு இருக்கு,பாராட்டுக்கள்! :)

  ReplyDelete
 25. அன்னுக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  நாட்டாமை, மிக்க நன்றி.
  தல - யூ மீன் அஜித் குமார் - அவரை நான் என்ன சொல்றது??

  மகி, இங்கு சில இடங்களில் இருக்கு.
  மிக்க நன்றி பாராட்டிற்கு.

  ReplyDelete
 26. மிக நல்ல கதை,இப்ப இது மாதிரி இல்லாவிடினும்,எழுதிய விதம் மனதை தொட்டது,அருமை வானதி.கதைகள் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 27. வானதி உங்களை அன்பாக தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.
  நிச்ச்யம் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்.
  http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!