Saturday, March 5, 2011

ஆபிரகாம் லிங்கன் வீட்டுக்கு வருகிறார்


Abraham Lincoln Comes Home

சில வாரங்களின் முன்பு நூலகத்தில் சில புத்தகங்கள் பிள்ளைகளுக்காக எடுத்தேன். அதில் ஒன்று தான் ஆபிரகாம் லிங்கன் வீட்டுக்கு வருகிறார் என்ற புத்தகம். என் மகனுக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். புத்தகத்தை கண்ட உடனே படிக்க ஆரம்பித்து விட்டார். முதலில் எனக்கு அந்தப் புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. படங்கள் அழகா இருந்தமையால் புரட்ட ஆரம்பித்தேன்.

ஒரு பொடியன், அவன் தந்தை இருவரும் குதிரை வண்டியில் போகிறார்கள். கும்மிருட்டு. வண்டியில் கொழுவப்பட்டிருந்த லாந்தர் மட்டுமே ஒரே ஒரு வெளிச்சம். வானம் எங்கே தொடங்குகிறது நிலம் எங்கே முடிகிறது என்று தெரியாத இருள். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை பார்க்க சென்று கொண்டிருந்தனர் இருவரும். சிறுவனுக்கு லிங்கனை மிகவும் பிடிக்கும். அவரோடு பேச விருப்பம்.

சிறிது நேரத்தில் புகையிரத நிலையத்தினை அடைகிறார்கள். அங்கே வேறு பல மக்களும் காத்திருக்கிறார்கள். தூரத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் புகையிரத வண்டி வருவது தெரிகிறது. கூடியிருந்த மக்கள் நெருப்பு மூட்டி, தீப்பந்தங்கள் ஏந்தியபடி காத்திருக்கின்றார்கள். புகையிரத வண்டி அருகில் வருகிறது. தீயின் ஜுவாலையினால் அந்த இடம் ஜொலிக்கிறது.

லிங்கன் கடைசி பெட்டிக்கு முன்னாடி இருக்கும் பெட்டியில் வருவதாக ஊரார் பேசிக் கொண்டார்கள். புகையிரத வண்டியின் முன்பு ஜனாதிபதியின் படம் மாட்டியிருந்தார்கள். பொடியன் ஆவலாக காத்திருந்தான். புகையிரத வண்டி சில நொடிகள் நின்று, கடந்து செல்கிறது. பொடியனின் அப்பாவின் கன்னங்களில் கண்ணீரினை முதன் முறையாக காண்கிறான். ஆபிரகாம் லிங்கனின் உடல் அடங்கிய பேழையினை சுமந்து சென்ற அந்த வண்டி பல ஊர்கள் வழியாக சென்று இறுதியில் அவரின் சொந்த ஊருக்கு சென்றடைகிறது.

கதை தொடங்கும் போது அந்தச் சிறுவன் ஆபிரகாம் லிங்கனை சந்திக்க போவது போல தொடங்கி இறுதியில் அவரின் இறுதி ஊர்வலம் என்று முடித்திருந்தார்கள். படித்து முடித்த பின்னர் கொஞ்ச நேரம் கவலையாக இருந்தது.

என் மகன் படித்து முடித்த பின்னர் ஒரு பேப்பர் எடுத்து லிங்கனை வரைய ஆரம்பித்து விட்டார். வரைந்து முடித்த பின்னர் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. முறையான வரைதல் பயிற்சி இல்லாமல் என் மகன் வரைந்த ஓவியம் இது தான்.

என் மகனை ( 7 வயது ) திரும்ப வரைய வைத்து, வீடியோ எடுத்து, YouTube இல் போட்டேன். முதல் முறை வரைந்த படத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டுமே அழகு தான்.

23 comments:

  1. //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்...வ்வ்வ்வ்வ்..வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. //என் மகனுக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். //

    ஏன் எதுக்குன்னு சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் . எனக்கும் இவரை பிடிக்கும் :-))


    அங்கேயே பார்த்துட்டேன் ...!! சூப்பரா வரைவதை.. இதைதான் நூலைப்போல சேலைன்னு தமிழ்ல சொல்றது :-)) நீங்க துணியில வரையிறீங்க .அவர் வெள்ளை பேப்பரில்....>> :-)

    ReplyDelete
  3. சூப்பர், மிக அழகாக வரைந்திருக்கிறார்... என் வாழ்த்தைச் சொல்லிடுங்க.

    ஆஆஆ... ஜெய் க்கும் லிங்ஸைப் பிடிக்குமாமே?.. ஏன் ஜெய்?:))

    ReplyDelete
  4. பார்த்தீங்களோ.. இம்முறை ஜெய் க்கும் தலைப்பு உடனேயே தெரிஞ்சுபோச்சு... எனக்கும் உடனேயே கண்ணில பட்டிட்டுதே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. விவரித்த விதமும் அருமை.உங்கள் மகன் வரைந்த ஓவியமும் அருமை.மகனுக்கு வாழ்த்துக்களைச்சொல்லுங்கள் வானதி.

    ReplyDelete
  6. நல்லா வரைந்திருக்கிறார் மகர் வாழ்த்துக்கள் சொல்லுங்க வான்ஸ்!!

    ReplyDelete
  7. அருமையாக வரைந்திருக்கிறார்,கதையும் மனதை தொட்டது.மகனுக்கு வாழ்த்துக்கள்.சூப்பர் பகிர்வு.

    ReplyDelete
  8. வான்ஸ்.. மகன் தீட்டு தீட்டென்று தீட்டுகிறார்.. அவுட்லைன் கூடப் போடாமல் ஒரு நம்பிக்கையோட வரைவது ஆச்சர்யமாக இருக்கு!! ஊக்கப்படுத்தி விடுங்கோ.. நல்லா வந்திருக்கு..

    எனக்கும் நான் அறிந்திருக்கும் வரையில் லிங்கனைப் பிடிக்கும்..

    ReplyDelete
  9. புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். உங்கள் மகன் விஷயத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

    ReplyDelete
  10. நைஸ்! எல்போர்ட் சொன்ன மாதிரி அவுட் லைன் போடாம கான்பிடென்ட்டா வரைகிறார்! வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  11. உண்மையில் எனக்கும் அவரை மிக மிகப் பிடிக்கும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

    ReplyDelete
  12. அருமையாக வரைந்திருக்கிறார்..மகனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. பொதுவா மனிதர்களை வரைய ஆரம்பிக்கும்போது, அவுட்லைன் போட்டுத்தான் ஆரம்பிப்பாங்க. இப்படி உங்க மகன் நேராவே வரைய ஆரம்பிக்கிறது ரொம்பவே ஆச்சர்யம். இதை நிறைய பேர் நோட் பண்ணியும் இருக்காங்க பாருங்க. (என்னைப் போலவே) நான் 2 பார்ட்தான் பார்த்தேன். ரொம்பச் சின்னவர்னு நினைச்சேன், கொஞ்சம் பெரியவரா இருப்பார் போல. வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //கதை தொடங்கும் போது அந்தச் சிறுவன் ஆபிரகாம் லிங்கனை சந்திக்க போவது போல தொடங்கி இறுதியில் அவரின் இறுதி ஊர்வலம் என்று முடித்திருந்தார்கள். படித்து முடித்த பின்னர் கொஞ்ச நேரம் கவலையாக இருந்தது.//

    நீங்களும் சிறுபிள்ளை ஆகிட்டீங்க சரிதானே...

    ReplyDelete
  16. சூப்பரா வரைகிறார் வானதி! எனக்கும் ட்ராயிங்குக்கும் வெகுதூரம். வரைந்த படங்களை ட்ரேஸ் பண்ணவே கஷ்டப்படுவேன். :)

    இந்த வயதிலேயே இவ்வளவு ஆர்வமா வரைவது ரொம்ப சந்தோஷம்.வீடியோக்களும் பார்த்தேன்.நன்றாக இருக்கிறது.இதேபோல உற்சாகப்படுத்துங்க!

    சஞ்சய்க்கு பாராட்டுக்கள்!இன்னும் உயரங்களைத்தொட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ஏழு வயதில் மகன் வரைந்தது என
    நீங்கள் சொல்லாதிருந்தால்
    உண்மையில் யாரோ ஓவியர்
    வரைந்தது எனத்தான்
    எல்லோரும் நினைத்திருப்போம்
    அபாரத்திறமை
    தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு

    ReplyDelete
  18. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  19. மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மிககவும் அருமையான கதை..

    உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துகள்..எவ்வளவு அழகாக வரைக்கின்றார்..

    யூடியிபில் எல்லா லிங்கும் பார்த்தேன்..வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. ஜெய், எதுக்கு அழுவுறீங்க? சொல்லிட்டு அழுங்க இல்லாட்டி ஓரமா போய் அழுதுட்டு வந்து சொல்லுங்க??
    லிங்கன் மிகவும் உயரம் அதனால் பிடிக்குமாம்.
    மிக்க நன்றி, ஜெய்.

    அதீஸ், ஒரு வேளை லிங்கனின் ஆவி வேலை செய்யுதோ? என்னவோ?
    மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    நாட்டாமை, மிக்க நன்றி.

    ReplyDelete
  22. சந்தூ, எனக்கும் ஆச்சரியம் தான். பார்த்த எல்லோரும் இதையே தான் சொல்கிறாங்க.
    மிக்க நன்றி, சந்தூ.


    எல்கே, மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.
    சுதா, மிக்க நன்றி.

    மாதவி, மிக்க நன்றி.
    ஹூசைனம்மா, 7 வயது மகனுக்கு.
    மிக்க நன்றி.

    நாஞ்சிலார், மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.

    ரமணி அண்ணா, எங்கள் உறவினர்கள் பலரும் இப்படி தான் சொன்னார்கள்.
    எப்போதும் பேப்பரும், பென்சிலுமாவே இருப்பார்.
    மிக்க நன்றி.

    பாரத் பாரதி, மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    கீதா, எல்லா லிங்குகளும் பார்த்தீங்களா. மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  23. ரொம்ப நல்லா வரையறாருங்க.. உங்க மாதிரியே உங்க பையனுக்கும் கலையார்வம் அதிகம் போல :-)

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!