Thursday, February 17, 2011

நாங்கள் செய்த வாழ்த்து அட்டைகள்



Valentine's day க்கு ( அது தான் முடிஞ்சு போச்சே இப்ப ஏன் இந்தப் பதிவு என்று திட்டாதீங்க ) என் மகன் பள்ளியில் சக மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை, அல்லது வேறு ஏதாவது ( விரும்பினால் ) வாங்கி வரும்படி நோட் அனுப்பியிருந்தார்கள்.

அடப்பாவிங்களா! அனுப்புறது தான் அனுப்பினீங்க ஒரு இரண்டு நாள் முன்னாடி அனுப்பியிருந்தா வசதியா இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
சனிக்கிழமை கழுத்து வரைக்கும் வேலை, ஞாயிற்றுக் கிழமை தலைக்கு மேல் வேலைகள். அதோடு க்ராஃப்ட் ஸ்டோரில் கூட்டம் அலைமோதும். பார்க்கிங் அவ்வளவு சுலபம் அல்ல. பக்கத்தில் புத்தக கடை, சூப்பர் மார்க்கெட், பார்மஸி இப்படி ஏகப்பட்ட கடைகள். மக்களுக்கு ஏதாவது ஒரு கடைக்குள் ஏறி இறங்காவிட்டால் தலை வெடித்து விடும் போல.

ஞாயிற்றுக்கிழமை மதியம் என் மகனிடம் சொன்னேன், " ராசா, இந்த முறை வாங்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பா வாங்கி தர்றேன். "
சரி அம்மா, என்று சொன்னாலும் முகம் வாடிப் போய் இருந்தது.

சிறிது நேரத்தின் பின்னர் தானாகவே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்தார்.
" என்ன பண்றீங்க ? ", என்று நான் கேட்க.
நானே எல்லோருக்கும் கிரீட்டிங் கார்ட் செய்யப்போறேன் என்றார்.
அட! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என்று நினைத்தபடி, சமையல் முடித்த பிறகு 22 கார்டுகள் செய்து முடித்தோம்.
அம்மா! டீச்சருக்கும் ஒரு அட்டை வேணும் என்று சொல்ல, நான் பிள்ளைகள் படுத்த பிறகு செய்த அட்டை தான் இது. அவசரமாக செய்த படியால் நான் எதிர்பார்த்தது போல வரவில்லை.

காலையில் வாழ்த்து அட்டைகளை பையில் போட்டு குடுத்த போது என் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்க கண்கள் கோடி வேணும்.
சிறுவர்களுக்கான அட்டையில் lollipop வைத்தது என் மகனின் ஐடியா. ஆனால், அதை படமெடுக்கவில்லை.


32 comments:

  1. சூப்பர் ஐடியா ..!! நான் சொன்னது கார்டில லாலிபாப் வைக்கிரது :-))

    எவ்வளவு மிச்சம் பிடிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே :-))

    ReplyDelete
  2. ஆஹா...குட்டிஸுற்கு வாழ்த்துகள்..எவ்வளவு பொறுமையாக செய்து இருக்காங்க...என்னது 22 கார்டா...ரொம்ப பொறுமை தேவை...

    ReplyDelete
  3. ஆமாங்க நேற்று நானும் எனது மருமகனுக்க ஒரு வண்டில் சுயு்து குர்டுது்துனு் நுலு்லுர் சுநு்துர்சுபு்புடு்டுர்னு்... ஆனா ஒண்ணங்க இன்று கிளாசுக்க கட் அடிச்சிட்டான்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete
  4. கீதா, பொறுமை ! உங்களுக்கு விளங்குது.
    ஜெய் மாதிரி குறுக்கு விசாரணை பண்ணாமல் சொல்லியிருக்கீங்க.
    மிக்க நன்றி.

    ஜெய், எவ்வளவு மிச்சம் பிடிச்சீங்களா?
    பெயின்ட், கிளிட்டர், லாலிபாப், கிட்டத்தட்ட 2 மணி நேரம் ... இப்படி எல்லாமே கணக்கு பார்த்தா..... இதை விட வாங்கி குடுத்திருந்தா 5 டாலர்கள் தான் முடிஞ்சிருக்கும்.

    ReplyDelete
  5. இரண்டு போட்டு, இழுத்துக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டிருக்கோணும்.
    மிக்க நன்றி, சுதா.

    ReplyDelete
  6. ம் அழகா இருக்கு நல்ல வருவார்
    எங்கட மருமகன்
    வாழ்த்துக்கள்
    பொறுமையை கடைபிடிக்கும்
    உங்களுக்கும்

    ReplyDelete
  7. கம்ப்யூட்டர் இல் இந்த மாதிரி போட்டோ ஷாப் டிசைன் இல் தன் குழந்தைக்கு செஞ்சு கொடுத்ததா ஒரு அமெரிக்கதமிழ் பதிவர் பதிவில் படிச்சேன் வாணி...ஆனால் உண்மையில் அதை விட இதில் எவளவு நிறைவு இருக்கு...சந்தோஷம் இருக்கு...பையனும் இதில் சேர்ந்து வொர்க் பண்ணும்போது அவனும் புதுசாய் கத்துக்கிறான்...ஒரு விஷயத்துக்கு ஆர்வமாய் உழைக்கிறான் இல்லையா..அந்த கோலம் டிசைன் எல்லா கார்டு டிலும் செஞ்சிங்களா வாணி...அந்த லாலி பாப் ஐடியா க்ளாஸ் வாணி...குட்டி பையனுக்கு ஒரு உம்மா .ஆமாம்..என்ன வாணி..இதுக்கு முன்னாடி நானும்,கூகிள் உம் ஒரு போஸ்ட் போட்டு இருந்திங்களா...டாஸ் போர்டு இல் பார்த்துட்டு இங்கே வந்து பார்த்தால் எதுவும் காணோம்...காக்கா தூக்கிங்...?????!!

    ReplyDelete
  8. வான்ஸ்ஸ், நீங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் வேண்டுமென்று ஓடிவராமல் விடுவதில்லை, அதென்னவோ தெரியேல்லை, நீங்கள் புதுத்தலைப்புப் போடும் ஒவ்வொரு தடவையும, பலர் போட்டுவிடுகிறார்கள் என நினைக்கிறேன் அதனால் உங்க தலைப்பு என் பக்கத்தில் கீழே போய்விடுகிறது, என் கண்ணுக்கு தாமதமாகத்தான் தெரியுது, பார்த்துவிட்டு பார்க்காததுபோல என்றைக்குமே நான் இருந்ததில்லை, இதைக்கூட இப்பத்தான் கண்டேன். சரி அது போகட்டும்.

    அழகான அட்டை.. இங்கும் ஒருவர் இருக்கிறார் மிகமிக அழகாக அட்டைகள் செய்வார். முடிந்தால் படமெடுத்து ஒருதடவை போடுகிறேன்.

    அதெப்படி என் மனதில் எழும் கேள்வியே ஜெய் மனதிலும் வருது...

    //ஜெய்லானி said...

    எவ்வளவு மிச்சம் பிடிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே :-))///
    மீ எஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  9. குட்டிஸுற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்!! ரொம்ப அழகா செய்துருக்காங்க.

    ReplyDelete
  11. சிவா, வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
    ஆனந்தி, உண்மை தான். நாங்களே செய்யும் போது இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்.
    கார்டில் இருக்கும் டிசைன் நான் தான் ஒட்டினேன். கொஞ்சம் தலைவலி பிடிச்ச வேலை தான்.
    ஆமாம்! காக்கா தூக்கிட்டு போய், திரும்ப கொண்டு வந்து குடுத்திடுச்சு.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    இம்மி, நன்றி.

    அதீஸ், நீங்கள் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர் இப்படி பல நினைக்கிறேன்.
    அழப்படாது. கண்ணைத் துடையுங்கோ. எல்லோரும் பார்க்கினம்.
    எங்கை சிரியுங்கோ.
    அதீஸ், இதெல்லாம் பெரிய குறை இல்லை. நேரம் கிடைக்கும் போது வாங்கோ.
    தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் ஒரு புறாப்பெட்டி ( property ) வாங்கும் அளவுக்கு மிச்சம் பிடிச்சேன்.

    ReplyDelete
  12. மிக்க நன்றி, அதீஸ்.

    சித்ரா, நன்றி.

    மாத்தி யோசி, நன்றி.

    சரவணன், நன்றி.

    மேனகா, நன்றி.

    ReplyDelete
  13. //தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் ஒரு புறாப்பெட்டி ( property ) வாங்கும் அளவுக்கு மிச்சம் பிடிச்சேன்.//

    அட்டைக்கே புறாபெட்டியா..ஓக்கை.. ஓக்கை.... எதுக்கும் நதிக்கரை நடுவில போகாம பாத்துக்கோங்க :))

    //அதெப்படி என் மனதில் எழும் கேள்வியே ஜெய் மனதிலும் வருது...//

    சங்கத்துல மெம்பரா இருக்கும் போது இதெல்லாம் வரத்தான் செய்யும் ஹி..ஹி...:-)X23489

    ReplyDelete
  14. ரொம்பவே சூப்பரா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஆஹா டீச்சரம்மாவை எல்லாம் இப்படித்தான் கைக்குள்ள போட்டுக்க்ணும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பேனே, ஜஸ்ட்டு மிஸ்ஸூ... :)

    உங்க பையன் ஐடியாவை நீங்க பதிவா போட்டு ஓட்டு வாங்கிடலாம்னு பாக்கறீங்களா... முடியவே முடியாது. நான் போட்ட ஓட்டு பையனுக்குத்தான் சொல்லிடுங்க.. அஆங்.. :)

    ReplyDelete
  16. அருமை,மகனிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாணி , அட்டை அழகு . சரி உங்கள் பய்யன் பண்ண அட்டை எங்க ?? அதை ஏன் போடலை ???

    ReplyDelete
  18. ஆஹா..சூப்பரா இருக்குங்க. குட்டிஸுற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. //காலையில் வாழ்த்து அட்டைகளை பையில் போட்டு குடுத்த போது என் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்க கண்கள் கோடி வேணும்.//


    பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தை பார்க்கும் பொழுது, நம் பிரச்சினைகள் எல்லாம் பறந்து பறந்துவிடும்.

    ReplyDelete
  20. ரொம்ப அருமையான கார்டு, இருவருக்கும் வாழ்த்துகக்ள். எப்படி தான் டைம் எடுத்து செய்கிறீர்களோ

    ReplyDelete
  21. வான்ஸ்... க்யூட்டாகச் செய்திருக்கிறீர்கள் ரெண்டு பேரும்.. இது தைத்ததா இல்லை நூலை ஒட்டியிருக்கிறீர்களா? நண்பர்களுக்கு லாலிபாப் வைத்தது நல்ல ஐடியா..

    ReplyDelete
  22. //வான்ஸ்ஸ், நீங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் வேண்டுமென்று ஓடிவராமல் விடுவதில்லை, அதென்னவோ தெரியேல்லை, நீங்கள் புதுத்தலைப்புப் போடும் ஒவ்வொரு தடவையும, பலர் போட்டுவிடுகிறார்கள் என நினைக்கிறேன் அதனால் உங்க தலைப்பு என் பக்கத்தில் கீழே போய்விடுகிறது, என் கண்ணுக்கு தாமதமாகத்தான் தெரியுது, பார்த்துவிட்டு பார்க்காததுபோல என்றைக்குமே நான் இருந்ததில்லை, இதைக்கூட இப்பத்தான் கண்டேன். சரி அது போகட்டும்.//

    நம்பாதீங்கோ வான்ஸ்.. விடாதீங்கோ பூனையை :))

    நானும் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன், அவன் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்குமென..

    ReplyDelete
  23. புதுமையான வாழ்த்து அட்டை வானதி.உங்களுக்கும்,மகனுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அழகா இருக்கு!கடையில் வாங்கிக்கொடுப்பதை விட நம் நேரத்தை செலவிட்டு செய்த வாழ்த்துஅட்டைகள் விலைமதிப்பில்லாத கிப்ட் வானதி!
    S செய்த அட்டைகளின் போட்டோவையும் போட்டிருக்கலாமே?! :)

    ReplyDelete
  25. நான் ரொம்ப லேட்டோ வான்ஸ். வாழ்த்து அட்டை ஓகே. பெரிய ரகளையே நடந்திருக்கு போல! இருக்கட்டும் அடுத்த கச்சேரியில் வச்சுக்குவோம்.

    ReplyDelete
  26. வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  27. அட்டைக்கு புறாப் பெட்டிதான் வாங்க முடியும். வேறு என்னத்தை வாங்குறதாம்??
    இரண்டு பேருக்கும் ஒரே சந்தேகமா வருதாம்... பெருமையை பாருங்கப்பா! நீங்க சந்தேகத்தை கேட்டுட்டு மறந்திடுவீங்க. ஆனா, நாங்க அப்படியா பொறுப்பா பதில் சொல்லிட்டு இருக்கிறோம்.
    நன்றி, ஜெய்.
    லஷ்மி ஆன்டி, நன்றி.
    அனுக்கா, அப்ப நீங்க ஸ்டேட் 1st இல்லையா? சரி விடுங்க அடுத்த முறை அமெரிக்காவில் முதலாவதா வர வாழ்த்துக்கள்.
    ஏன் இப்படி பிரிச்சு பார்க்கிறீங்க?

    மிக்க நன்றி, அனுக்கா.

    ஆசியா அக்கா, நன்றி.
    எல்கே, அதெல்லாம் இங்கே போடலை. அப்புறம் என் பையனுக்கு நிறைய விசிறிகள் வந்திடுவாங்க.
    நன்றி.

    ஆயிஷா, நன்றி.

    தூயவன், மிக்க நன்றி.
    ஜலீலா அக்கா, மிக்க நன்றி.

    சந்தூ, ஒட்டியது தான்.
    பூனைக்கு அடிக்கடி கோபம் வருமாம். நான் சொன்ன வைத்தியத்தை கேட்டு இப்ப தண்ணியில் இறங்கி நிற்குதாம். ஹிஹி

    மிக்க நன்றி, சந்தூஸ்.

    மகி, உண்மைதான். காலையில் லேட்டாயிடுச்சு. அதான் எடுக்கலை. இதுவும் அரையும் குறையுமா வந்திருக்கு.
    மிக்க நன்றி.

    நாட்டாமை, நீங்க நல்லா நாட்டாமையாச்சே! ரகளை வேண்டாம். ஓக்கை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. கடையில் வாங்குவதை விடவும் இது எத்தனை உயர்வான பரிசு! உங்கள் மகனைத்தான் மனந்திறந்து பாராட்ட வேண்டும்! ஒரு வழி அடைத்தாலும் அவர் மனம் தளராமல் யோசித்து தனக்கு பயன்படும்படியாக இன்னொரு வழியை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக அதை செயல்படுத்தியும் விட்டார்!
    அன்பு பாராட்டுக்கள்! உங்களுக்கும்தான்!!

    ReplyDelete
  29. I visited all over your blog.
    Really I enjoyed well.
    I like you dear.
    viji

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!