Wednesday, December 29, 2010

டைனிங் மேசை!

டைனிங் மேசை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் ( படத்தினை பாருங்கள் ). தூசி, குப்பை இல்லாமல், எப்போதும் பளிச்சென்று பார்க்கவே ( பசி இல்லாவிட்டாலும் ) சாப்பிட வேண்டும் என்று உணர்வு எழ வேண்டும். நடுவில் அழகான பூச்சாடி, சாப்பிடத் தேவையான டேபிள் மேட்ஸ் .......இப்படி இருந்தா தான் அதன் பெயர் டைனிங் டேபிள்.
படத்தில் இருப்பது யார் வீட்டு மேசைன்னு நினைக்கிறீங்க???


இப்படி என் வீட்டு மேசையும் இருந்தா எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அதற்கெல்லாம் குடுப்பினை வேணும்.
என் கணவருக்கு டைனிங் மேசை மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை....

டைனிங் டேபிளின் இடது புறம் கடந்த 2 வருடங்களாக வந்த மெயில்கள் ஒரு மலை போல ( முன்பு சிறு குன்றாக இருந்தது இப்ப மலையாக மாறி விட்டது ), மறு புறம் வேலை சம்பந்தமான பைஃல்கள், பேப்பர், செல்போன், கார் சாவி, பேனாக்கள். பேனாக்கள்.....
பேனாக்கள் என்று நான் சொல்வது 2, 3 பேனாக்கள் அல்ல. ஒரு கடை வைக்கும் அளவிற்கு அவ்வளவு பேனாக்கள். அதில் ஒரு பேனா தொலைந்தாலும் என் ஆ.காரருக்கு மூக்கின் மீது வியர்த்துவிடும்.

முன்புறம் மடிகணிணி ( இது மட்டுமே நான் பாவிப்பது ).

மேசையில் இருக்கும் மெயில்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்;
வங்கியிலிருந்து வந்தவை
கிரெடிட் கார்ட் ( pre approved or pre denied )
எங்காவது தர்மம் பண்ண நினைச்சு பணம் அனுப்பினா வரிசையா வரும் மெயில்கள் ( புற்றுநோய், அமெரிக்கன் இந்தியன் பவுன்டேஷன் ( இது நம்ம ஆளுங்க இல்லை. இங்கிருக்கும் பூர்வகுடிகள் ) ). ஒரு முறை சிறுவர்களுக்கான மருத்துவமனைக்கு பணம் அனுப்பினார் என் கணவர் ( இது நடந்து 4 வருடங்கள் இருக்கும் ). அதிலிருந்து வரிசையாக வரும் மெயில்களை நிப்பாட்ட முடியவில்லை.

கேபிள், போன், கரண்ட் பில்லுகள்
பிறந்தநாள், அரங்கேற்றம் இவற்றுக்கான வாழ்த்து, இன்விடேஷன் அட்டைகள்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதையெல்லாம் கிளீன் பண்ணி, கீழே அண்டர் கிரவுன்ட் அறையில் கொண்டு போய் வைச்சு, ஆட்கள் போனதும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி.....

அண்டர் கிரவுன்ட் அறையில் மேசைகள், நாற்காலி எல்லாமே இருக்கு. அதோடு முக்கியமா இன்னொன்றும் இருக்கு "குளிர்". ஏற்கனவே வின்டர், காற்று, மைனஸ் டெம்பரேச்சர்.

குளிரை விரட்ட ஹீட்டர் இருந்தாலும் கீழே போகவே என் ஆ.காரருக்கு தயக்கம்.

இப்ப எதற்காக சும்மா புலம்பிட்டு இருக்கிறாய் என்று கேட்கிறீங்களா?? சமீபகாலமாக என் ஆ.காரர் மேசையில் எக்ஸ்ட்ராவாக மேலும் இரண்டு பொருட்களை வைச்சிருக்கிறார். அதை எப்படி என் வாயால் சொல்றது.
அட! இருங்கப்பா. எழுதிக் காட்றேன்.
இரண்டு குறடுகள் ( (தமிழ் விளங்காதவர்களுக்கு) pliers ).
அதை ஏன் அங்கே வைச்சார் என்று எனக்கு விளங்கவேயில்லை. கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்வதில்லை.
இதைப் படிக்கும் யாராவது மேசையில் இப்படி " பயங்கரமான " ஆயுதங்களை வைச்சிருந்தா அதை எடுத்து கண்காணாத இடத்தில் வைச்சிட்டு, எனக்கு பதில் போடுங்க.

35 comments:

  1. வானதி எங்க வீடு கொஞ்சம் பரவாயில்லை போல,எல்லாவற்றயும் நான் ஒளித்து வைப்பதாய் சத்தம் தான்,ஒதுங்க வைத்தால் ஒளித்து வைப்பதாய் அர்த்தம்.எல்லா அறைகளிலும் பொருட்கள் வெளியே தெரியும் படி தான் இருக்க வேண்டும் என்று ஆர்டர் ஆர்டர் தான்.

    ReplyDelete
  2. I think same story everywhere; The simple and elegant dining table is too good to be real.
    Kurinji

    ReplyDelete
  3. ஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்.சமைத்து வச்சிட்டு அப்படியே லேப்டாப்பே சரணம் என்று இருப்பதற்கா?ஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே?

    ReplyDelete
  4. :))

    ஆக்கிரமிப்பு பண்ணிட்டாரு போல :)) அவருக்கு அதுக்கு பக்கத்துலேயே தனியா ஒரு டேபிள வாங்கி வச்சுடுங்க.

    எங்க வீட்டுல பேருக்கு ஒரு குட்டி மேசை. ஆனா அதுல அமர்ந்து சாப்பிடறது குறைவு.. சோபா தான் எல்லாத்துக்கும்..

    ReplyDelete
  5. ஆசியா அக்கா, உங்க வீட்டிலும் அதே கதை தானா?
    மிக்க நன்றி.

    குறிஞ்சி, உண்மை தான்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ஸாதிகா அக்கா, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் ஆ.காரருக்கு என் ப்ளாக்கில் சப்போர்ட் கூடிட்டே வருது ஆங்!!!
    நான் எத்தனை தடவை க்ளீன் பண்ணினாலும் கோழி போல கிளறிட்டு தான் மறு வேலை பார்க்கிறார்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. சந்தூ, ஏற்கனவே பிள்ளைகளுக்கு ஒரு மேசை இருக்கு. லிவ்விங் ரூம் முழுவதும் அடைச்சாப் போல மேசைகள் இருந்தா நல்லாவே இருக்காது.
    எங்க வீட்டிலும் சோபாவில் தான் எல்லாமே நடக்கும். பிள்ளைகள் அவர்களின் மேசையில் அமர்ந்து சாப்பிட பழகி விட்டார்கள். பெருசுகள் தான் ...ம்ம் திருந்துவது கஷ்டம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. நீங்க அதிகம் பேசினா பல்லை கழற்றிடுவேன்னு சிம்பலிக்கா காட்டதான் அந்த பிளையர்..போதுமா ஹா..ஹா.. :-))

    ஒன்னு போதுமே ரெண்டு எதுக்கு ..?ஹி..ஹி..(( ஒருவேளை சம உரிமையா ))

    ReplyDelete
  9. குறடுக்கே இவ்வளவு பயமா? யாருக்கு தெரியும் உங்க ஆத்துக்காரரிடம் கேட்டா தான் உண்மை தெரியம். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

    ReplyDelete
  10. எங்க வீட்டு டைனிங் டேபிள் எப்பவுமே காலியாதான் இருக்கும்.சாப்பாடு எப்பவுமே ஹாலில்தான்!அதுவும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.ஆனால் என் ஆ.காரர் வீடு முழுக்க நிறைய குப்பை(!!) சேர்த்துவைத்திருக்கார்..எடுத்து போடலாம்னாலும் விடமாட்டாரு!கர்ர்ர்ர்ர்ர்!

    எதுக்கும் அந்த குறடுகள்கிட்ட ஜாக்கிரதையாவே இருங்கோ!! :)))))

    ReplyDelete
  11. பச்சைப் பறவையும் ப்ளாக் கலரின் இளம்பச்சையும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!

    ReplyDelete
  12. கோவம் இல்லை//
    நல்ல சாப்பாடு கிடைக்க வில்லை அப்பரம் எதுக்கு
    எந்த dining டேபிள் வேற.. அப்படி என்று மாமா நினைத்து இருக்கலாம்

    நல்ல நகைச்சுவை...
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. //குறடு //
    நீங்க செய்யுற எதாவது பதார்த்தத்தை வெட்டவோ இல்ல ஒடைக்கவோ வச்சிருப்பாரு.. ஹி ஹி ;)
    புத்தாண்டு மகிழ்ச்சியாய் அமைய என் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. உங்க வீட்டுலையாவது சோபால சாப்பிடுறீங்க. மகனுக்கு பெட்ல குடுத்தா தான் சாப்பாடு இறங்கும். ஏன்னா லிவிங் ரூமில் தான் டீவுக்கு முன் பெட் இருக்கு... கொட்டிட்டா கூடுதல் வேலைக்கு எப்பவும் தயாரா இருக்கணூம். டைனிங் டேபிள் சும்மா அழகுக்கும் காய்கறி நறுக்க துணி போட தான் யூஸ் ஆகுது ;(

    ReplyDelete
  15. Yenga veetil medical,dry fruits-shop& water tank, avaroda,office bag.

    ReplyDelete
  16. Yen paian computer munnadi thaan sappiduvan,naan sofavil thaan,avar mattum thaan dinning table use pannuvar.

    ReplyDelete
  17. http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
    உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  18. உங்க வீட்லயும் இதே கதைதானா? வாங்க, சேந்து உக்காந்து புலம்புவோம்!!

    ஆமா, ரெண்டே ரெண்டு பிளையருக்கே இப்படி நடுங்குறீங்களே? எங்க வீட்டில தடுக்கி விழுந்தா ஒரு ஸ்பானர், ஹாமர், நட்டு, ஸ்க்ரூ, போல்ட், ஸ்க்ரூ டிரைவர், டேப், ட்ரில்லிங் மெஷின் இப்படித்தான் எங்கெங்கு காணினும்.. எங்கூட்டுக்கார் “மெக்கானிக்கல் இஞ்சிநீர்’னு வீட்டைப் பாத்தாலே தெரிஞ்சிடும்!! தனியா ஒரு முழு ரூமையே “டூல்ஸ் ரூம்”னு கொடுத்தப்புறமும் இது தொடருது!! யார்கிட்ட சொல்லியழ??

    //ஸாதிகா said...
    ஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்... ஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே?//

    இது நல்ல கதையா இருக்கே? எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன? ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்..

    ReplyDelete
  19. தளத்தின் டெம்ப்ளேட் படம் அருமை வானதி
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. @ ஸாதிகா said...

    // ஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்.சமைத்து வச்சிட்டு அப்படியே லேப்டாப்பே சரணம் என்று இருப்பதற்கா?ஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே? //

    அதானே... ஏஏஏஏ.. யாப்பா எங்களுக்கு சப்போட்டுக்கு ஆள் கெடச்சாச்சு..வாழ்க ஸாதிகாக்கா

    (1)வானதி கூறியது...

    //ஸாதிகா அக்கா, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் ஆ.காரருக்கு என் ப்ளாக்கில் சப்போர்ட் கூடிட்டே வருது ஆங்!!! //

    ஆஹா காதுல புகை வர்ற மாதிரி தெரியுதே .. ஹா ஹா ..

    (2)ஹுசைனம்மா கூறியது...

    //இது நல்ல கதையா இருக்கே? எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன? ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்.. //

    இன்னும் யாரும் பாக்கி வர வேண்டி இருக்கா?? ..மீ எஸ் ஆயிடுறேன்!! :-)))

    ReplyDelete
  21. // இதைப் படிக்கும் யாராவது மேசையில் இப்படி
    "பயங்கரமான" ஆயுதங்களை வைச்சிருந்தா அதை எடுத்து கண்காணாத இடத்தில் வைச்சிட்டு, எனக்கு பதில் போடுங்க.//

    நீங்க நண்டு அடிக்கடி ஆக்குவீங்களோ அதான் 'கொரடு' மேசையிலேயே பர்மனென்ட் ஆயிடுச்சோ வான்ஸ். அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  22. //வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதையெல்லாம் கிளீன் பண்ணி, கீழே அண்டர் கிரவுன்ட் அறையில் கொண்டு போய் வைச்சு, ஆட்கள் போனதும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி//

    Basement னு ஒண்ணு இல்லாம போன நம்ம நிலைமை என்னனு நானும் நினைப்பேன் வாணி... ரெம்ப கொடுமை தான்... யாராச்சும் வர்றப்ப சட்டுன்னு வீடு கிளீன் ஆகுமோ...அதுக்கே அடிக்கடி யாரையாச்சும் கூப்பிடலாம்னு தோணும்... ஹா ஹா ஹா... உணவு மேஜைனு இல்ல... அசையாம எது இருந்தாலும் அதுல குப்பை விழும்... சில சமயம் தோணும்... நாம அசையாம நின்னா கூட இதே நிலைமை தானோன்னு.. ஹா ஹா ஹா

    வீட்டுக்கு வீடு வாசப்படி... என்ஜாய்..................

    ReplyDelete
  23. அருட்பேராற்றலின் கருணையினால்

    தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

    இப் புத்தாண்டு முதல்

    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்

    பெற்று வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  24. என்னபா இது இப்படி எல்லாம்...படிக்கவே கொஞ்சம் பயம் வருது...இந்த மாதிரி ஆயுதம் எல்லாம் வச்சிருந்தா நான் எந்த தைரியத்தில சாப்பிட வருவேன்...

    ஒருவேளை அப்படி யாரும் வந்து மேஜை பக்கம் போய்ட கூடாதுன்னு தான் உங்க வீட்டுகாரர் வச்சிருக்கார் போல...(உங்க சாப்பிட்டில் இருந்து எங்களை காப்பாத்துகிறார் என்று நினைக்கிறேன்...!) ஹி ஹி

    புத்தாண்டு வாழ்த்துக்கள் வாணி.

    ReplyDelete
  25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்

    ReplyDelete
  26. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வானதி!

    ReplyDelete
  27. கக்கு மாணிக்கம், நன்றி.

    ஜெய், என்ன சம உரிமையோ போங்கள்.

    எனக்கு பல் கழட்ட வேண்டிய அவசியமே இல்லை. நான் மிகவும் அமைதியான டைப், சுபாவம்.... இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம். ஆனா, இதோட நிறுத்திகிறேன்.
    மிக்க நன்றி.

    குமார், உங்க வீட்டிலையுமா???
    மிக்க நன்றி.

    இளம் தூயவன், பயம் எல்லாம் இல்லை. சும்மா ஒரு முன்னெச்சரிக்கை தான்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. மகி, எங்க வீடு போல தான் உங்க வீட்டிலையுமா???
    ஆனா பாருங்க எனக்கு ஏதாச்சும் தப்பி தவறி ஒரு மெயில் வந்தா அதை தூக்கி குப்பையில் போடாவிட்டா என் ஆ.காரருக்கு தூக்கமே வராது.
    என் ஆ.காரர் தான் இந்த டெம்ளெட், பறவை உபயம்.

    மிக்க நன்றி.

    சிவா, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
    வேறு என்னத்தை சொல்றது. எல்லாம் என் நேரம்.
    மிக்க நன்றி, அம்பி.

    பாலாஜி, நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்.
    நீங்க குறடால் உடைச்சு தான் சாப்பிடுவீங்களா?? பார்த்தா அப்படி ஒன்றும் வயசான லுக் தெரியவில்லையே?????

    மிக்க நன்றி.

    ஆமி, ஒவ்வொரு வீட்டிலை ஒவ்வொரு விதம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  29. காயத்ரி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    எங்க வீட்டிலும் சோஃபா தான்.

    ஆசியா அக்கா, எழுதிட்டே இருக்கிறேன். கொஞ்சம் டைம் தாங்க.
    அமைதி அக்கா, மிக்க நன்றி.

    ஹூசைனம்மா, செய்யும் தொழிலை உங்கள் ஆ.காரர் மறக்க விரும்புவதில்லை போலும்.
    எங்க வீடு பரவாயில்லைன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்.
    //தெரியாத சின்னக் குழந்தையா என்ன? ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்..//
    அப்படிக் கேளுங்க??? என் மகன் கூட நான் சொல்றதை கேட்டு, சமர்த்தா இருக்கும் போது பெருசுங்க தான் திருந்தவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  30. நாட்டாமை, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. சொல்லிட்டேன்.
    கத்தரிக்காய் பதிவு போட்டதிலிருந்து என் ஆ.காரரின் ரேட்டிங் மேலே போய்ட்டே இருக்கு.
    ஏதாச்சும் செஞ்சு நான் இழந்த இடத்தை பிடிக்கணும்.

    நண்டு..... ஐயோ! இது நண்டு பிடிக்கும்/உடைக்கும் கொரடு அல்ல, தல.
    ஆணி புடுங்க யூஸ் பண்ணுவாங்களே அதே தான்.
    மிக்க நன்றி.


    சரவணன், மிக்க நன்றி.

    அப்பாவி, நானும் அடிக்கடி புலம்புவேன். நான் ஆடாம, அசையாமா நின்னா டைனிங் டேபிள் போல ஆயிடுவேன்னு.
    அதானாடி எப்பவும் கையை காலையாவது அசைச்சுட்டே இருப்பேன். எல்லாம் ஒரு சேஃப்டிக்கா தான்.

    மிக்க நன்றி.

    ஹைஷ் அண்ணா, நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. கௌஸ், பயப்படாமல், தைரியமா வாங்க. அதெல்லாம் மறைச்சு வைச்சுடுவேன்.
    மிக்க நன்றி.

    மாணவன், மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சிவகுமாரன், அழகா கவிதை சொல்லிட்டீங்க. எனக்கு அதெல்லாம் துப்பாக்கி முனையில் வைச்சு மிரட்டினா கூட வரவே வராது.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. ஹ ஹ...வாணி...வாணி...என்ன சொல்லன்னு தெரில...ஒரு டேபிள் மேட்டர்..அழகாய் நிகழும் சம்பவங்களை செம சுவாரச்யாமாய் கோர்த்து கொடுத்துட்டிங்க...அற்புதம் ...

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!