Saturday, November 27, 2010

குஷன் கவர்



பறவை உருவத்தினை துணியில் வரைந்து கொள்ளவும்.

சங்கிலித் தையல், ஹெர்ரிங் போன், அடைப்பு தையல் ஆகியவற்றால் உருவான பறவை.








நடுவில் ஹார்ட் ஷேப் க்ராஸ் ஸ்டிச், சங்கிலி தையல் பயன்படுத்தினேன்.


மகி கொடுத்த விருது. மிக்க நன்றி, மகி.




இந்த விருதினை ( பறவை ) பாலாஜி, ஆமி, எல்கே, அப்துல்காதர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எல்லோரும் வரிசையா வந்து என் கைகளால் இந்த விருதினை வாங்கிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

43 comments:

  1. அழகான எம்ப்ராய்டரி, அழகான விருது!

    ReplyDelete
  2. very nice work.

    Congratulations for the award!

    ReplyDelete
  3. வான்ஸ் ! சூப்பர் ! எப்படி ஆரம்பிக்கறது??!! வெறுமே பிளெயின் துணில ஆரம்பிக்கணுமா?? இந்த ஊசிகள் எல்லாம் தனியா இருக்கே ... கலர் கலரா நூல் இருக்கு ... ரொம்ப டைட்டா வளையத்தில வச்சிக்கணுமா??

    ReplyDelete
  4. தையல் வேலை அழகு வாணி.

    விருது பெற்றமைக்கு வாணிக்கும், வாணி கையால் விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான விருதும் எம்பிராய்டரி ஒர்க்கும் சூப்பர்,உங்கள் எம்பிராய்டரி வேலை என் பள்ளி நாட்களில் செய்த ஒர்க்கை நினைவு படுத்தி விட்டது.6,7,8,ஆகிய வகுப்புகளில் இதனை போதித்த தையல் டீச்சர் நினைவிற்கு வருகிறார்.

    ReplyDelete
  6. வாவ் ரொம்ப அழகா இருக்கு வானதி! எப்படி கொஞ்சம் கூட சுருக்கமே இல்லாம தையல் போடறீங்க. நான் தைத்தால் எல்லாவற்றையும் சுருக்கி வைத்து விடுவேன் :(. அதனாலேயே எம்ப்ராய்டரி பக்கமே வருவதில்லை. இதைப் பார்க்க ஆசையா இருக்கு கத்துக்கணும்னு :)

    ReplyDelete
  7. வானதி ரொம்ப அழகா இருக்கு..இப்படியெல்லாம் கைவேலை செய்வீங்கன்னு எனக்கு தெரியாது.சூப்பர்

    ReplyDelete
  8. விருது பெற்றமைக்கும், விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    அழகான எம்ப்ராய்டரி.

    ReplyDelete
  9. வானதி சூப்பர்மா. நிரைய கைவேலைகள் சூப்பரா
    ப்ண்ரே. வாழ்த்துக்கள்.பாக்க ஆசையாதான் இருக்கு.
    வயசாச்சு இல்லியா ஊசி, நூல் வேலை பண்ணமுடியலை.

    ReplyDelete
  10. தையலில் உங்களின் கைவண்ணம் அருமை அழகாக செய்துள்ளீர்கள்,

    விருது வாங்கிய உங்களுக்கும் விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. ரொம்ப நல்ல கைவேல வானதி.பேஷ்,பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

    ReplyDelete
  12. //இமா said...

    தையல் வேலை அழகு வாணி.

    விருது பெற்றமைக்கு வாணிக்கும், வாணி கையால் விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  13. ரொம்ப சூப்பரான எம்ப்ராய்டரி எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு,
    விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. எம்பிராய்டரி வெகு அழகு.

    ReplyDelete
  15. அழகான தையல் வானதி..
    நீங்க வாங்கினதுக்கு வாழ்த்துக்கள் எனக்கு கொடுத்ததற்கு நன்றி :)

    ReplyDelete
  16. வானதி விருதுக்கு மிக்க நன்றி. எனக்கு கிடைத்த முதல் அவார்ட் :))!!

    நீங்கள் பெற்றதற்கும் என்னோட சேர்த்து வாங்கிக்கொள்ளவிருக்கும் பாலாஜி, எல்கே, அப்துல்காதர் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. ரொம்பவே அழகு தான்.....உங்கள் பொறுமைக்கு மகிழ்கிறேன் வாணி....விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. // பறவை உருவத்தினை துணியில் வரைந்து கொள்ளவும் //

    இந்த துணியில் வரைந்த பறவை ரொம்ப அழகா இருக்கு வான்ஸ். இதிலே கூட ஒரு மூலையில் வானதி என்று போட்டு ஒரு அவார்ட்
    கொடுத்திருக்கலாமோ. சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன்.

    ReplyDelete
  19. விருதுக்கு நன்றி வாணி! வந்து உங்க கையால வாங்குறதுக்கு பிளைட் டிக்கட்!!

    ReplyDelete
  20. டிக்கெட் எல்லாம் வேஸ்ட். சின்ன சாட்டர்ட் ஃபிளைட் அரேன்ஜ் பண்ணிடுங்க (பாலாஜி, ஆமி, எல்கே, அப்துல்காதர்) நாங்க எல்லோரும் வரிசையா வந்து உங்க கைகளால் இந்த விருதினை வாங்கிக் கொள்கிறோம். அவ்வவ்...

    விருது கொடுத்த உங்களுக்கும், அதை பெற்றுக் கொள்ளும் அனைவர்களுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. வாணி...உங்களுக்கு இத்தனை திறமையா...ம்ம்...keep it up...:))

    ReplyDelete
  22. நாட்டாமை, மிக்க நன்றி ஐடியா சூப்பர். மாத்தியாச்சு.

    ReplyDelete
  23. //சின்ன சாட்டர்ட் ஃபிளைட் அரேன்ஜ் பண்ணிடுங்க (பாலாஜி, ஆமி, எல்கே, அப்துல்காதர்) நாங்க எல்லோரும் வரிசையா வந்து உங்க கைகளால் இந்த விருதினை வாங்கிக் கொள்கிறோம்//

    இந்த ஐடியா எனக்கு ஏன் தோணாம போச்சு..

    அப்துல் சொல்வது போல செய்ங்க வானதி! நாங்களும் எப்ப தான் ப்ளைட் பக்கத்துல நிக்க வச்சு பாக்குறது,பறக்குறது :)

    ReplyDelete
  24. ஆமாம் வாணி. ஒரு விமானம் ஏற்ப்பாடு பண்ணுங்கள். வந்து நேரில் வாங்கிக் கொள்கிறோம்...

    விருதுக்கு நன்றி வாணி. விருது வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. எஸ். கே, மிக்க நன்றி.

    சித்ரா, மிக்க நன்றி.

    இலா, எம்ராய்டரி வளையத்தில் துணியை மிகவும் டைட்டா போடணும். அப்ப தான் தையல் அழகா வரும்.
    தையல் வகைகளை தெளிவா படம் எடுப்பது மிகவும் கஷ்டமா இருக்கு. முடியும் போது விளக்கமாக படங்கள் போடுகிறேன்.
    மைக்கேல்ஸ் ஆர்ட்ஸ் & க்ராப்ட் கடையில் பல விதமான நூல்கள், ஊசி, எம்ப்ராய்டரி வளையம் வாங்கலாம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. இமா, நன்றி.
    வெறும்பய, நன்றி.
    ஆசியா அக்கா, நான் சின்ன வயசில் பழகியது தான் இந்த தையல்கள் எல்லாம். முறையாக தையல் கற்றதில்லை.
    நன்றி.

    கவி, எம்ப்ராய்டரி வளையம் யூஸ் பண்ணுங்க. அழகா வரும்.
    மிக்க நன்றி.

    தளி, எல்லாம் சும்மா பார்த்து கற்றுக் கொண்டது தான்.
    நன்றி.

    குமார், நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.

    மாணவன், மிக்க நன்றி.
    கோமு மாமி, மிக்க நன்றி.
    ஜெய், நன்றி.
    ஜலீலா அக்கா, மிக்க நன்றி.
    கோபி, நன்றி.
    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
    நிது, நன்றி.
    மேனகா, நன்றி.
    பாலாஜி, மிக்க நன்றி.
    ஆமி, நன்றி.
    கௌஸ், நன்றி.
    நாட்டாமை, போயிங் பிளேன் வரும். வாசலில் நின்னு ஏறி வந்திடுங்க. சரியா?
    வாசலில் நிற்காவிட்டால் நான் பொறுப்பல்ல.
    மிக்க நன்றி.
    ஆனந்தி, மிக்க நன்றி.
    ஆமி, கமராவையும் மறக்காம ஒரு மஞ்சள் பையில் கொண்டு வாங்க.
    எல்கே, போயிங் விமானம் மறக்க வேண்டாம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

    http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

    ReplyDelete
  28. ஹாய் வாணி.... எப்படி இருக்கீங்க பா?
    குஷன் டிசைன் சூபரா இருக்கு.. சங்கிலி தையலில் கலக்குறீங்க.. வாணி.. :-))

    (இடையில் வர முடியல... மன்னிக்கவும்)

    ReplyDelete
  29. அழகான எம்ப்ராய்டரி

    ReplyDelete
  30. தையல் அழகாயிருக்குப்பா..

    ReplyDelete
  31. தையல் வேலை ரொம்பவும் அழகு வானதி!

    ReplyDelete
  32. அழகா இருக்கு வானதி!நானும் உங்களோட ஓரொரு பதிவு வரும்போதும் எம்ம்ப்ராய்டரி செய்யணும்னு நினைப்பேன்,ஆனா முடிய மாட்டேன்னுது. :-|

    மைக்கேல்ஸ்-ல நூல்-வளையம் இதெல்லாம் கிடைக்கும்னு சொல்லிட்டீங்க.இந்த காட்டன் துணி எங்கே வாங்குவீங்க? அதுலே இந்த குஷன் கவர்-டேபிள் க்ளாத் எல்லாம் நீங்க கட் பண்ணி தைச்சதா?

    விருதுக்கு வாழ்த்துக்கள்! எல்கே கொடுத்த விருதுக்கும் சேர்த்துதான்! இன்னும் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. ரொம்ப அழகாக இருக்கு.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  34. எல்கே, மிக்க நன்றி.

    ஆனந்தி, நேரம் கிடைக்கும் போது வாங்க.
    மிக்க நன்றி.

    அமைதிச்சாரல், நன்றி.

    மனோ அக்கா, மிக்க நன்றி.

    மகி, துணி walmart இல் வாங்கியது. ஆரம்பத்தில் உங்கள் கணவரின் பழைய ( புதுசா இருந்தாலும் பரவாயில்லை ) shirt ல் முதுகுப் பக்கம் போட்டு பழகுங்க (ஹிஹி ). நன்கு பழகிய பிறகு கடையில் துணி வாங்கி பழகலாம். நானும் பழைய துணியில் தான் பழகினேன். walmart ல் ஒரு yard( 0.9 m ) $1.97 இலிருந்து கிடைக்கும். நிறைய வெரைட்டியா இருக்கு.
    மிக்க நன்றி

    சிநேகிதி, மிக்க நன்றி.

    ReplyDelete
  35. எனக்கும் பார்க்க ஆசையாத் தான் இருக்கிறது ஆனால் செய்ய முடியலியே... என் தள வருகைக்கும் கருத்து மற்றும் வாக்கு இட்டமைக்கும் மிக்க நன்றி....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  36. சுதா, மிக்க நன்றி.

    முயற்சி திருவினை ஆக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

    எங்கே நனையப் போறீங்க??

    ReplyDelete
  37. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  38. அழகு! வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய ராஜிக்கு நன்றி!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  39. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!