Monday, December 6, 2010

அரண்டவன் கண்ணுக்கு

இலங்கையில் போரினால் இந்தியா சென்ற நேரம்.. எல்லாமே புதுமையாக இருந்த நாட்கள். ஆட்டோ சங்கர் மிகவும் பிரபலமாக இருந்த நாட்கள். எந்த பெட்டிக் கடையிலும் இவர் தான் நியூஸாக தொங்கியபடி. என் பாட்டி எல்லா பத்திரிகைகளிலும் ஆட்டோ சங்கரைப் பற்றி படித்து, எங்களுக்கு பீதி கிளப்புவதை ஒரு முழு நேர வேலையாக/பொழுது போக்காக கொண்டிருந்தார்.

வாழ்க்கையில் முதன் முதலாக தெப்பக்குளம் பார்த்த என் கஸின் ஒருத்தி, வாழ்க்கையில் ஒரு போதும் தெப்பக்குளம் பார்க்காத 4 பேர் என புறப்பட்டோம். கிளம்பும் நேரம் என் பாட்டியும் வந்து, அடம் பிடித்து ஆட்டோவில் ஏறிக் கொண்டார். என் அத்தை பையன் தான் ஒரே ஒரு ஆண் துணை. அவன் முன்னாடி ஓட்டுநருடன் ஒட்டிக் கொள்ள. நாங்கள் பின்னாடி 5 பேர் அடைபட்டுக் கொண்டோம். ஆட்டோ வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. என் நினைப்பு முழுக்க எடுக்கப் போகும் புது சல்வாரை சுற்றி வந்தது.
( தெப்பக்குளம் பார்த்த ) என் கஸின் மெதுவாக என்னைச் சுரண்டினாள்.

" ஆட்டோ வலப்பக்கம் திரும்பணும். ஆனால், ஏன் இடது பக்கம் திரும்புது ?", என்றாள்.

என் பாட்டிக்கு மிகவும் கூர்மையான காது.

" என்னது இந்தப் பக்கம் தெப்பக்குளம் இல்லையா.... ?", என்று முடிக்கும் முன்பே.
என் இன்னொரு கஸின் ஆட்டோகாரரின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டார். ஒரு கணம் தடுமாறிய ஆட்டோக்காரர் சுதாகரித்து, ரோட்டின் ஓரத்தில் ஆட்டோவை நிப்பாட்டினார்.

" முதலில் சட்டையை விடும்மா. எதுக்கு என் சட்டையை பிடிச்சே ", என்று சண்டைக்கு ஆயத்தமாகிவிட்டார்.

" ஆகா! எங்களுக்கு தெரியாதாக்கும். என் பேத்திகளை எங்கேயோ கொண்டு போய் விற்கப்போகிறாயா? பாவிப் பயலே ", என்று கத்திய பாட்டியை நக்கலாக ஒரு பார்வை விட்டார்.
" ஹையோ! இதுங்களா. ஒரு பைசா கூட தேறாது. இதுங்க மூஞ்சியும் ..... சரி! நீ ஏம்மா என் சட்டையை பிடிச்சே?", என்று என் கஸினை நோக்கி எகிறினார்.
" தெப்பக்குளம் அப்படிக்கா இருக்கு. ஏன் இந்தப் பக்கம் திருப்பினே?" , என்றாள் என் கஸின்.

" ஆங். எங்களுக்கு தெரியாதாக்கும். உறையூர் போய் போனா சுருக்கா போயிடலான்னு திருப்பினேன். பாலக்கரை பக்கம் ட்ராஃபிக் ஜாம்... இதுங்களுக்கு போய் உதவ நினைச்சேனே என் புத்தியை செருப்பாலை இல்லை விளக்குமாற்றிலை அடிக்கணும்." , என்று புலம்பிக் கொண்டே போனார்."

" சரி தம்பி. ஆட்டோவை எடு ", என்றார் என் பாட்டி.

" என்னது ஆட்டோவை எடுக்கவா? என்னை விட்டுடுங்க நான் ஓடிப் போயிர்றேன். இதுக்கு மேலேயும் இங்கே நின்னா போலீஸ் பிடிச்சு உள்ளே போட்டாலும்...இல்லை இந்த பாட்டியே பிடிச்சுக் குடுத்துடுவாங்க போல இருக்கே. "

இந்தாப்பா பணத்தை வாங்கிக்க.

" எனக்கு பணமே வேண்டாம் தாயி. ஏதோ 5 பிச்சைக்காரங்களை ஏத்தியதா நினைச்சுக்கறேன்.", என்று விட்டு, ஒரே ஓட்டமா ஓடிவிட்டார்.
என் சல்வார் கனவில் மண் விழ, அங்கு நின்றவர்களை கேட்டு, ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, இறங்கி வீடு போய் சேர்ந்தோம்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சும்மாவா சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியின் பிறகு அந்த ஆட்டோக்காரர் எங்களின் தெருவில் ஆட்டோ ஸ்டான்டில் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். தொடக்கத்தில் எங்களைக் கண்டால் முறைத்தவர், பிறகு ஸ்நேகமாக புன்னகைக்க தொடங்கினார். சில மாதங்களின் பின்னர் என் பாட்டியின் "ஆஸ்தான" ஆட்டோ ஓட்டுநர் ஆனார்.

28 comments:

 1. ஹஹஅஹா பாவம் அந்த ஆட்டோக்காரர்

  ReplyDelete
 2. மீ தி பிரஸ்ட்
  வடை எனக்கே

  ReplyDelete
 3. ஏம்பா பாதை மாறிப் போகிறாய் என்று கேட்பதை விட்டுவிட்டு?

  எப்படி இப்படிக் கமென்ட் போடலாம்னு உங்க கசின் சண்டைக்கு வருவதற்குள் மீ த எஸ்கேப்:)

  ReplyDelete
 4. திருச்சி பாலக்கரை
  தெப்பகுளம்
  எல்லாம் நம்ம ஏரியா போல,....

  உறையூர் எங்கே
  தெப்பகுளம்...?

  நல்ல பகிர்வு

  ReplyDelete
 5. கலக்கலா இருக்குங்க!

  ReplyDelete
 6. //ஹையோ! இதுங்களா. ஒரு பைசா கூட தேறாது. இதுங்க மூஞ்சியும் ..... //
  ஹா ஹா! ;)
  //சில மாதங்களின் பின்னர் என் பாட்டியின் "ஆஸ்தான" ஆட்டோ ஓட்டுநர் ஆனார் //
  இல்லைனா உங்க பாட்டி போலீஸ்ல மாடி விட்டுட்டா என்ன பண்றதுன்னு தெரியாம பிரெண்ட் ஆயிருப்பார் ;)

  ReplyDelete
 7. சுவாரசியமா இருக்கு வாணி...எதற்கு உசாரா இருக்கிறது நல்லது தான்...ஆனா நீங்க எல்லாரும் பண்ணின கலாட்டா கொஞ்சம் ஓவர் தான்...! :)

  //என் பாட்டியின் "ஆஸ்தான" ஆட்டோ ஓட்டுநர்//

  இது சூப்பர்...

  ReplyDelete
 8. எனக்கும் இப்பிடி ஒரு அனுபவம் இருக்கு.. அந்த ஆட்டோக்காரர் என்கிட்டே புலம்பவே ஆரம்பிச்சிட்டார்.. என்னம்மா என்னையப் போயி தப்பா நினைச்சிட்டீங்களே ன்னு :) ஆனா காலரைப் பிடிச்சேன்னான்னு நினைவில்லை :))

  ReplyDelete
 9. கொசுவத்தி அருமை.

  ReplyDelete
 10. ஹா,ஹா,ஹா,.... நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. ஹா ஹா! கலக்கலா இருக்குங்க!

  ReplyDelete
 12. நல்லா இருக்குங்க!

  ReplyDelete
 13. // என் நினைப்பு முழுக்க எடுக்கப் போகும் புது சல்வாரை சுற்றி வந்தது.//

  பார்ரா.. இந்த குழந்த மனச!!
  ----------
  // என் சல்வார் கனவில் மண் விழ..//

  அப்புறம் ...??
  -----------
  பாவம் அந்த ஆட்டோகார் ரொம்ப தான் சிரமப்பட்டுட்டாரோ வான்ஸ் :)))

  ReplyDelete
 14. சூப்பர் பாட்டி வானதி! கடைசில தெப்பக்குளம் பாத்தீங்களா,இல்லையா?

  நான் கோவைல ஆட்டோல போனதே இல்ல,,பெங்களூர்ல ஒருமுறை போயிருக்கேன்னு நினைக்கிறேன்.அப்பவும் சண்டைதான்,எதுக்குன்னா எங்க வீடு இருக்க ஏரியாக்கு வரமாட்டேன்னு ஸ்டேண்ட்ல இருக்க எல்லா ஆட்டோக்காரரும் சொல்றாங்க. எல்லாரும் இப்படி சொன்னா எப்படின்னு கொஞ்சம் சத்தமா பேசினதும்(!!) ஒரு ஆட்டோக்காரர் வந்தார்.:)

  ReplyDelete
 15. ஹ ஹா...பாட்டி காமடி சூப்பர்..ஆட்டோ காரர் ஊரை விட்டே போயிருப்பாரே...ஹ..ஹா..:))

  ReplyDelete
 16. ///" எனக்கு பணமே வேண்டாம் தாயி. ஏதோ 5 பிச்சைக்காரங்களை ஏத்தியதா நினைச்சுக்கறேன்//

  ஹா...ஹா...ஹா....

  எல்லா ட்ரைவர்க்கு பின்னும் எதாவது கதை இருக்கும் போல. :)

  ReplyDelete
 17. வேடிக்கையான பதிவு வானதி!

  நிச்சயமாய் உங்கள் பாட்டியின் முன்னெச்செரிக்கைத்தனத்துக்கு ஒரு அவார்ட் தான் கொடுக்கணும்!!

  ReplyDelete
 18. நல்ல வேடிக்கை,திருச்சியில் எங்கிருந்தீங்க,நாங்க டோல்கேட்,சுப்ரமணியபுரம்,சுந்தராஜ் நகரில் இருந்தோம்,உறையூர் மெத்தடிஸ்டில் ப்ளஸ் 2.திருச்சியை நினைவு படுத்தி விட்டுட்டீங்களே!

  ReplyDelete
 19. ஹா ஹா...ஆட்டோகாரரையும் விடலயா வானதி...ஹா ஹா

  ReplyDelete
 20. அருமையான பகிர்வு.....
  சிரித்து மகிழ்ந்தேன்...
  இதுதான் ஃபர்ஸ்ட் விசிட்... அருமையான பதிவு...
  இனி தொடர்கிறேன் :)

  ReplyDelete
 21. எல்கே, என்ன ஆட்டோக்காரர் கட்சியா நீங்க??
  மிக்க நன்றி.

  சிவா, என் ப்ளாக்கில் வடை இல்லை.
  மிக்க நன்றி.

  கோபி, என் கஸின் ரொம்ப நல்லவ. சண்டைக்கு வரமாட்டா.
  மிக்க நன்றி.

  சிவா, நீங்கள் திருச்சியா???
  மிக்க நன்றி.

  யாதவன், நன்றி.

  பாலாஜி, என்ன சிரிப்பு?? அப்படி ஒன்றும் கொடூரமான மூஞ்சி இல்லை எனக்கு!!
  மிக்க நன்றி.

  ReplyDelete
 22. கௌஸ், மிக்க நன்றி. கொஞ்சம் பயத்தில் ஓவர் ரியாக்ஸன் தான்.
  மிக்க நன்றி.

  சந்தூ, நீங்களும் சண்டைக்கு போனீங்களா?? அதெப்படி சட்டையை பிடிச்சது மட்டும் மறந்திடுச்சு???
  மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, நன்றி.

  குறிஞ்சி, மிக்க நன்றி.

  சித்ரா, நன்றி.

  குமார், நன்றி.

  தேவன் மாயம், மிக்க நன்றி.

  ReplyDelete
 23. நாட்டாமை, என்ன இந்த ஆண்கள் எல்லோருமே சொல்லி வைச்சாப் போல ஆட்டோக்காரருக்கு சப்போர்ட்???
  மிக்க நன்றி.

  மகி, தெப்பக்குளம் அந்த தடவை பார்க்கவில்லை. ஆனால், பிறகு போனோம். காலேஜ் படிக்கும் போது தினமும் தெப்பக்குளம் கடந்தே பஸ்ஸில் போவேன். இப்ப நிறைய மக்கள் கூட்டம் போல ஒரு பீலிங் வந்திச்சு கடைசியா தெப்பக்குளம் போன போது.
  ஏன் உங்க ஏரியாவில் பேய் பிசாசுகள் கூட்டமா இருக்குமா???
  மிக்க நன்றி.

  ஆனந்தி, ஆட்டோக்காரர் எங்கேயும் போகலை. அவர்கள் தான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் ஆச்சே!!
  மிக்க நன்றி.

  மனோ அக்கா, பாட்டிக்கு அவார்டா?? குடுத்திட்டா போச்சு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 24. ஆசியா அக்கா, நான் கருமண்டபம்/ ஆர்.எம். எஸ் காலனி ஏரியா?
  டோல்கேட் பக்கம் ஸ்கூல் பஸ்ஸில் தினமும் ஊர்வலம் வந்ததுண்டு.
  மிக்க நன்றி.

  தங்ஸ், மிக்க நன்றி.

  பிரபு, மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க.
  மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 25. //ஏன் உங்க ஏரியாவில் பேய் பிசாசுகள் கூட்டமா இருக்குமா?? //

  ஒன்னுதான் இருக்குமுன்னு நினைக்கிறேன் ஹா..ஹா..
  அருமையான கொசுவர்த்தி :-)

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!