Thursday, November 18, 2010

என் கேள்விகென்ன பதில்?

எனக்கு 7, 8 வயசாக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது. வேகமாக ஓடிய போது கீழே விழுந்து, காலில் நல்ல சிராய்ப்பு. பாய்ந்து ஓடிய இரத்தத்தினை கட்டுப்படுத்த அம்மா பிளாஸ்டர் போட்டு விட்டார். போட்ட நாளிலிருந்து நானும் பிளாஸ்டரும் உடன் பிறப்புகள் போலாகிப் போனோம். அதைக் கழட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ அல்லது தானகவே விழுந்து தொலைக்க வேண்டும் என்ற நினைப்பு அதற்கோ இருந்தது போல தெரியவில்லை. என் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. பிளாஸ்திரியை உரிக்கும் போது ஒரு வலி வருமே அந்த வலிக்கு இணையாக வேறு எந்த வலியும் உலகில் இல்லை என்று நம்பினேன்.

பிளாஸ்டர் என் காலில் தங்கிவிட்டது. என்ன பசை போட்டு செய்தார்களோ தெரியவில்லை என்று என் அம்மா பக்கத்து வீட்டு மாமியிடம் புலம்பியது என் காதுகளில் விழுந்தது. பக்கத்து வீட்டு மாமி, எதிர் வீட்டு ஆன்டி என்று ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஆனால், எந்த பாச்சாவும் என்னிடம் பலிக்கவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களின் பின்னர் ஒரு வித நெடி வந்த பின்னர் இந்த கருமத்தை எப்படியாவது கழட்டிவிட வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.


மெதுவா இழுத்தா வந்திட்டு போவுது - இது அப்பா.

கண்னை மூடிட்டு இழுத்திடும்மா - இது அம்மா.

முடியவே முடியாது - இது நான்.

என்னவோ பண்ணுங்க என்று சொல்லிட்டு அப்பா வெளியே கிளம்பி விட்டார்.

அம்மாவும் எவ்வளவு நேரம் தான் எனக்கு ஆறுதல், தேறுதல் சொல்வது. பழைய இத்துப்போன பிளாஷ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, அம்மாவும் எங்கோ கண் காணாத இடத்தில் போய் மறைந்து கொண்டார்.

என் அலறல் சத்தம் கேட்டு ரசிக்க என் உடன் பிறப்புகள் சூழ்ந்து கொண்டார்கள்.

நான் வாளியிலிருந்த தண்ணீரில் ப்ளாஸ்டர் போட்ட காலினை மூழ்கும்படி வைத்துக் கொண்டேன். இடையில் ப்ளாஸ்டர் மீது தண்ணீரை கைகளால் ஊற்றிக் கொண்டே இருந்தேன். ப்ளாஸ்டர் கொஞ்சம் நெகிழ்ந்து, மேல் ஓரத்தில் லேசாக பசைத் தன்மை குறைந்து இருந்தது போல ஒரு மாயை உண்டானது. பிடித்து இழுத்த போது ஒரு அதிசயமும் நடக்கவில்லை என்று விளங்கியது.
என் உடன்பிறப்புகளும் எவ்வளவு நேரம் தான் பொறுமை காப்பார்கள். எல்லோரும் விளையாட்டில் மூழ்கிவிட, நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். மிகவும் வெறுத்துப் போன என் 4 வயசு சகோதரி மட்டும் வாளியின் பக்கம் படுத்து குட்டித் தூக்கம் போட ஆரம்பித்து விட்டார்.

ஒரு அரை மணிநேரம் கடந்து, திடுக்கிட்டு எழும்பிய என் தங்கை வாளியினையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்.
பிறகு ஏதோ தோன்றியவராக என் பிளாஸ்டரை பிடித்து ஒரு இழுவை இழுத்தார். இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்து போனது.
நான் அலறிய அலறலில் வீட்டில் எல்லோரும் கூடி விட்டார்கள். வெற்றிச் சிரிப்பு சிரித்த தங்கையை அம்மா தூக்கி முத்தங்கள் கொடுத்தார்.

இந்த சம்பவத்தின் பிறகு வீட்டில் ப்ளாஸ்டர் போடவே எனக்கு யோசனை. ப்ளாஸ்டர் போட்டாலும் என் சகோதரியிடமிருந்து அதை கட்டிக் காப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இப்ப என் பிள்ளைகளின் முறை போலும். அவர்களுக்கு கை, கால்களில் சிராய்ப்பு வந்தால் இதே கதை தான். சும்மாவா சொன்னார்கள் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 பாயும் என்று.
ஆனால், நான் ஒரு சூப்பர் டெக்னிக் புத்தகத்தில் அறிந்து கொண்டேன். அது என்னவா?

யாராச்சும் சரியான பதில் சொன்னா அவர்களுக்கு ஒரு ப்ளாஸ்டர் பெட்டி பரிசாக வழங்கப்படும்.

44 comments:

  1. வானதி, எனக்கும் அந்த டெக்னிக் சொல்லுங்கப்பா! என் பொன்னோட தொல்லை தாங்க முடியல.

    ReplyDelete
  2. நல்ல வர்ணணை வானதி! என்னமோ என் காலிலிருந்தே ப்ளாஸ்டரை கழட்டினாமாதிரி ஆகிடுச்சு! :) இந்த ப்ரச்சனைக்கு பயந்துதான் நான் ப்ளாஸ்டரே போட்டுக்கமாட்டேன்.காயம் சும்மாவே ஆறட்டும்னு விட்டுடுவேன்.

    என்ன டெக்னிக் படிச்சீங்க?எனக்கு நோ ஐடியா!!

    ReplyDelete
  3. ஆஹா..
    ப்ளாஸ்டர்ல இவ்ளோ இருக்கா அவ்..
    நாங்கள்லாம் விழுப்புண்ல வெயில் மழை படுற மாதிரில திரிவோம்.. :)
    அது என்னன்னு எனக்கு தெரியல :(

    ReplyDelete
  4. எனக்கு இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா! போடுவதும் கழட்டுவதும் இப்பவும் வெற்றிகரமாக செய்துட்டு தான் இருக்கேன்.எனக்கு தான். பிள்ளைங்க ரொம்ப உஷார்.

    ReplyDelete
  5. வானதி நீங்க சொன்னது மாதிரி தான். எனக்கும் போட புடிக்கும். ஆனா அதை எடுக்கும் போது பயங்கரமா வலிக்கும் பாருங்க. அதுக்காகவே இப்பல்லாம் விட்டுட்டேன்.

    அழகான வர்னணை!

    ReplyDelete
  6. ஆமாங்க, அந்த பிளாஸ்டரை வலிக்காம உரிக்கிறதுதான் பெரிய கவலை எனக்கு. கண்டிப்பாச் சொல்லிடுங்க எப்படின்னு.

    ReplyDelete
  7. அந்த சீனை நெனைக்கவே காமெடியா இருக்கு வானதி..ரொம்ப அழகா எழுதுறீங்க
    அது என்ன டெக்னிக் தெரியலையே..சுடு தண்ணியை நனைச்சு எடுப்பதா.உங்களுக்கு நேரெதிர் என் மகள்..தோலே உரிஞ்சாலும் பரவால எனக்கு ப்லாஸ்டரை கழட்டனும்ம் என்று இழுத்துடுவாள்

    ReplyDelete
  8. பிளாஸ்டர் கதை சுவராஸ்யமா இருக்கே... டெக்னிக்கை சொன்னா நாங்களும் பயன்படுத்துவோமுல்ல...

    ReplyDelete
  9. தினமும் குளித்தாலே பிளாஸ்டர் தானா கழண்டுவிடுமே !

    காயம் பட்டுள்ளது என்ற சாக்கில் பல நாட்கள் குளிக்காமல் இருந்தால் இந்த அவஸ்தை தான் :))))

    ReplyDelete
  10. நோ ஐடியா வானதி

    ReplyDelete
  11. அஹா, வானதி சுப்பர்மா, ஒரு ப்ளாஸ்டர் விஷயத்தை
    இவ்வளவு சுவைபடக்கூறியிருக்கீங்களே. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு,.

    ReplyDelete
  12. இதனாலே சிறுகாயம் வந்தாலும் பிளாஸ்டர் போடுவதில்லை..என்ன ஐடியான்னு சொல்லுங்க..

    ReplyDelete
  13. நான் ரொம்ப யோசிப்பேன் பிளாஸ்டர் போட. சிறு வயதில் கட்டுதான் போடுவோம். (அடிபடரப்ப எல்லாம் பெருசா பட்டா ?)

    இப்ப நான் பிளாஸ்டர் போட்ட , என் பொண்ணு அவளுக்கும் போடணும்னு நிக்கறா

    ReplyDelete
  14. ஹா,ஹா,ஹா,ஹா.... கஷ்டம் தான். என்ன செய்ய போறீங்க?

    ReplyDelete
  15. காயம் பட்ட இடத்தில் சுற்றி முடி இருந்தால் அந்த இடத்தை ஷேவ் செய்து விட்டு, பிளாஸ்டரை ஒட்டினாலே வலி இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் வான்ஸ். சரி சரி பார்சலை அங்கேயே வச்சுங்க ஹா.. ஹா..

    ReplyDelete
  16. அதென்னா இந்த பதிவு தேதி Thursday, November 18, 2010 என்று உங்க சிஸ்டத்தில் காட்டுது அதெல்லாம் கவனிக்கிறதில்லையா??

    ReplyDelete
  17. //மிகவும் வெறுத்துப் போன என் 4 வயசு சகோதரி மட்டும் வாளியின் பக்கம் படுத்து குட்டித் தூக்கம் போட ஆரம்பித்து விட்டார்.

    ஒரு அரை மணிநேரம் கடந்து, திடுக்கிட்டு எழும்பிய என் தங்கை வாளியினையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்.
    பிறகு ஏதோ தோன்றியவராக என் பிளாஸ்டரை பிடித்து ஒரு இழுவை இழுத்தார்.//

    இது வானதியோட அனுபவமா? :)))))) சிரிச்சு முடியல..

    இதுக்குன்னு சொலுஷன் இருக்குது வான்ஸ்.. அதைப் போட்டு எடுத்தா எளிதா இருக்கும்.. அப்புறம், ப்லாஸ்தர் உரிக்கும் இடத்துல முடி இருந்தா அதிகம் வலிக்கும்.. போடும் போதே முடியை நீக்கி விட்டுப் போடலாம்..

    பி கு - எனக்கும் இந்த வலி கடுப்பாயிருக்கும்.. ஆனா இந்தளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணினதில்ல :)

    ReplyDelete
  18. இப்ப காலு நன்னா குணமாச்சாஇல்லியா?

    ReplyDelete
  19. சகோ சிராய்ப்புகலுக்கு பிளாஸ்டர் போடுவதை விட சிறிது மஞ்சள் குழைத்து வைக்கலாம் நல்லது அதே போல தாத்தா பூ இலைகளை பறித்து கசக்கி சாறெடுத்து தடவலாம் இன்னும் தோட்டத்திலே நிறைய மூலிகை இருக்கு நமக்கும் அறியாமல் அறிந்து கொண்டால் நலம்

    ReplyDelete
  20. ஒரு பிளாஸ்டரை மையமாய் வைத்து கூட, சுவைபட எழுத முடியும் அப்படின்னு இப்போதான் தெரியுது..மிகவும் நகைசுவை உணர்வுடன் நீங்கள் எழுதி உள்ள உங்கள் அனுபவம் மிகவும் அருமை. பிளாஸ்டர் எடுக்க, சிறிது தேங்காய் எண்ணெய் இல்லை பேபி ஆயிலை, பிளாஸ்டர்-இல் கம் இருக்கும் பகுதியில் அப்ளை பண்ணி அப்படியே கொஞ்ச நேரம் வைத்துவிட்டு, அப்புறம் எடுத்தா வலிகாம ஈஸியா பிளாஸ்டர் வந்துவிடும். நீங்கள் செய்வதும் இதேதானா?

    ReplyDelete
  21. //தினமும் குளித்தாலே பிளாஸ்டர் தானா கழண்டுவிடுமே !

    காயம் பட்டுள்ளது என்ற சாக்கில் பல நாட்கள் குளிக்காமல் இருந்தால் இந்த அவஸ்தை தான் :))))//கரெக்டாக சொன்னீங்க...

    சரி வானதி..அது என்ன டெக்னிக்...

    ReplyDelete
  22. வானதி

    உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க

    http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html
    கண்டிப்பா மறுக்காம மறக்காம வந்துடுங்க

    ReplyDelete
  23. பிளாஸ்டர் கதையை இத்தனை சுவாரஸ்யமாக எழுதியதற்கு உங்களுக்கு ஒரு அழகான பூங்கொத்து!
    சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள்!

    ReplyDelete
  24. இதை வச்சே ஒரு பதிவு ஓட்டலாம்னு நினைச்சேன். ஆனால், நித்யா பாலா பதில் சொல்லிட்டாங்க.
    பதில் விரைவில் வெளிவரும்.

    தெய்வசுகந்தி, இருங்க சொல்றேன்.
    மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி.

    பாலாஜி, என்னவோ போங்கள். பெரிய போர் வீரன் லெவலுக்கு அலுத்துக்கிறீங்க.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, நானும் கொஞ்சம் இப்ப வீரமான ஆளா வந்திட்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  25. ஆமினா, மிக்க நன்றி.
    என்னைப்போல நிறையப் பேர் இருப்பாங்க போல.

    ஹூசைனம்மா, பதில் விரைவில்.
    மிக்க நன்றி.

    தளிகா, சுடுதண்ணியா? போலீஸ் கேஸ் ஆயிடும்.
    மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.
    பொறுமை பொறுமை.

    மாணிக்கம், நாங்கள் குளிக்காத பரம்பரைன்னு யார் சொன்னது.
    காலில் தூசு பட்டாலே 4 தடவை குளிக்கும் பரம்பரை எங்களுது ஹாஹா..
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. ஒஹ்! நான் அப்போ கரெக்டா சொல்லிட்டேன்னா:-))

    ReplyDelete
  27. இமா, மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    கோமு, பாராட்டிற்கு மிக்க நன்றி.

    மேனகா, பதில் நாளை வெளிவரும் ( சும்மா பில்டப் தான் ஹிஹி ).
    மிக்க நன்றி.

    எல்கே, பொண்ணுக்கும் போட்டு விடுங்கோ.
    மிக்க நன்றி.

    சித்ரா, கஷ்டம் தான்... ஒரு தீர்வு இருக்கே.
    மிக்க நன்றி.

    நாட்டாமை, ஏற்கனெவே அடிப்பட்ட இடத்தில் ஷேவிங்கா??? அவ்வ்வ்வ்வ்.
    என் அம்மாவை ஒரு வழி பண்ணியிருப்பேன்.
    // சரி சரி பார்சலை அங்கேயே வச்சுங்க ஹா.. ஹா..//
    உங்களுக்கு பரிசே கிடைக்கலை.
    நவம்பர் 18, 2010 உங்களுக்கு ஆகாதா? ( நான் என்ன செய்ய அப்படியே இருந்துட்டு போகட்டும் )
    மிக்க நன்றி.

    ReplyDelete
  28. சந்தூ, நான் கொஞ்சம் எல்லாத்துக்கும் ஓவரா பில்டப் பண்ணுவேன்னு அம்மா சொல்வாங்க.
    இப்ப எல்லாம் நான் ரொம்ப சமத்தாக்கும் ( அட! நம்புங்கப்பா )
    மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, அவ்வ்வ்...
    நான் என்ன இன்னும் 8 வயசு குழந்தையா?
    மிக்க நன்றி.

    ஆமினா, கண்டிப்பா எழுதுறேன்.
    மிக்க நன்றி.

    மனோ அக்கா, பாராட்டிற்கு மிக்க நன்றி.
    பதில் விரைவில்.

    ReplyDelete
  29. Siva, me the first??? nope. you the last!!!!!

    ReplyDelete
  30. வாணீஸ்... ;) அந்தக் கறுப்புக்கலர் டப்பாவில.. 'மண்டை ஓடு' போட்டிருக்கிறது!!!!!!!!?????????

    ReplyDelete
  31. இவ்வளவு பயமா?
    நாங்கலாம் அடிக்கடி கீழே விழந்து இது மாதிரி நிறைய அனுபவம், பழகி போச்சுல்ல..

    ReplyDelete
  32. என்ன வான்ஸ் இது இத்துபோற பிளாஸ்திரிக்கா இந்த பயம்.. நாங்கல்லாம் ஒரு மினி டிசெக்ஷனே செய்வோம் :))
    சரி சரி போடறது தான் போடறீங்க ஒரு ஸ்மைலி போட்ட பிளாஸ்திரி போடுங்க.. அட்லீஸ்ட் நீங்க சிரிக்காட்டியும் பிளாஸ்திரியாவது சிரிக்கட்டும்.. வர்ட்டா !

    ReplyDelete
  33. இமா! மண்டை ஓடா.. நீங்க என்னைவிட பயங்கரியா இருப்பீங்க போல...

    ReplyDelete
  34. இம்ஸ், எந்த டப்பா? எந்த மண்டை ஓடு?
    இலா என்ன சொல்றீங்க? என் ப்ளாக்கில் எனக்கே தெரியாமல் என்ன நடக்குது???
    யாராச்சும் உதவுங்க ப்ளீஸ்???/

    இசக்கி, பழகினா நல்லது தானே. அடிக்கடி விழுங்க சரியா?
    மிக்க நன்றி.

    இலா, நான் சிரிக்காட்டியும்!!!! அவ்வ்வ்வ்.... எனக்கு எபோதும் சிரிச்ச முகம் தான்.
    ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் மூஞ்சி புத்தகத்தில் என் போட்டோ போட்டு..... சும்மா ஜாலிக்கு சொன்னேன். பயப்படாதீங்க.

    ReplyDelete
  35. பதில் நாளை மறு நாள் வெளிவரும்!!!

    ReplyDelete
  36. இதுக்கு ரிலீஸ் தேதி வேற குறிச்சச்சா.. 'எந்திரன்' படத்த விட பெரிய பில்டப்பா இருக்கே வான்ஸ். காப்பாத்த யாருமே இல்லையா!! o my god....!!

    ReplyDelete
  37. ஐடியா சொல்றதெல்லாம் இருக்கட்டும்...ஆனால் சின்ன விஷயத்தை நீங்கள் narrate பண்ணது நல்லா இருந்தது...சுவாரஸ்யமா வருணிக்கிரதில் தான் ஒரு படைப்பாளி வெற்றி பெறுகிறாங்க...நல்லா இருக்கு வானதி...)))))

    ReplyDelete
  38. ரொம்ப நல்லாயிருக்கே பதிலை நானும் தெரிஞ்சிக்க விரும்புறேன்!

    ReplyDelete
  39. எங்கள் நாட்டாமை மிகவும்டென்ஷனா இருப்பதால் இன்றே பதிலை வெளியிடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

    Nithu's answer.
    //ஒரு பிளாஸ்டரை மையமாய் வைத்து கூட, சுவைபட எழுத முடியும் அப்படின்னு இப்போதான் தெரியுது..மிகவும் நகைசுவை உணர்வுடன் நீங்கள் எழுதி உள்ள உங்கள் அனுபவம் மிகவும் அருமை. பிளாஸ்டர் எடுக்க, சிறிது தேங்காய் எண்ணெய் இல்லை பேபி ஆயிலை, பிளாஸ்டர்-இல் கம் இருக்கும் பகுதியில் அப்ளை பண்ணி அப்படியே கொஞ்ச நேரம் வைத்துவிட்டு, அப்புறம் எடுத்தா வலிகாம ஈஸியா பிளாஸ்டர் வந்துவிடும். நீங்கள் செய்வதும் இதேதானா?//

    ReplyDelete
  40. நினைச்சேங்க!:-)
    எண்ணெய் போட்டு பிளாஸ்டரை எடுக்கலாம்னு ஒரு தடவை எங்க வீட்ல சொன்னாங்க நான்தான் குழம்பிட்டேன்!:-)

    ReplyDelete
  41. எஸ்கே, பரவாயில்லை மனசை தேத்துங்க. அடுத்த முறை பரிசு உங்களுக்குத் தான் !!!

    ReplyDelete
  42. இந்த பதிவினை 2 நாள் முன்னாடி தான் நினைத்து கொண்டேன்...என் கையில் bandaid போட்டு பிக்கும் பொழுது...

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!