Wednesday, November 17, 2010

தப்புக்கணக்கு

அறியாப் பருவத்தில் நடந்த தவறா அல்லது தெரிந்தே நடந்த தவறா என்று விளங்கவில்லை மோகனுக்கு. எல்லோரைப் போலவும் இனிமையான குழந்தைப் பருவத்தை அவனும் கடந்து வந்தான். 4 சகோதரிகள், 3 சகோதரர்கள் என்று பெரிய குடும்பம் அவனுடையது. அப்பா விவசாயி. ஏக்கர் கணக்கான தோட்டத்தை உழுது, விதை விதைத்து, ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதித்தவர். வீட்டில் எப்போதும் தேவைக்கதிகமாகவே பணம், சாப்பாடு எல்லாமே இருக்கும். வீட்டில் மோகன் தான் கடைக்குட்டி. மற்றவர்கள் படிப்பை தொடராமல் அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபட, மோகன் மட்டுமே பள்ளி போய் வந்தான். நல்ல உயரமும், சிவந்த நிறமும் கொண்டவன்.

ஒரு நாள் இவன் பள்ளி சென்று விட, வீட்டின் மீது குண்டுகள் விழுந்து, எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டது. பள்ளியால் வந்தவன் அழக் கூட முடியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டான். ஆதரவற்று நின்றவனை அணைத்துக் கொண்டார் செல்லாயி பாட்டி. பாட்டி இவனுக்கு தூரத்து உறவு. பாட்டிக்கு ஒரு மகள். மகளுக்கு 4 பிள்ளைகள். வருமானத்திற்கு பெரிதாக வழியிருக்கவில்லை. அன்றாடம் காய்ச்சி குடும்பம்.


பாட்டி அப்படி ஒன்றும் அன்னை தெரசா அல்ல. மோகனிடம் இருந்த சொத்துக்களே பாட்டியின் குறியாக இருந்தது. மோகன் இன்னும் மேஜராகவில்லை. அவனிடமிருந்த சொத்துக்களுக்காகவே அவனை அணைத்துக் கொண்டார். இதெல்லாம் விளங்கிக் கொள்ளும் வயசில்லை மோகனுக்கு.
பாட்டியின் பேத்தி பெயர் சுனிதா. பருவத்தின் வாசலில் நின்றாள். சுமாரன அழகி. மிகவும் கர்வம் கொண்டவள். எல்லோரையும் எடுத்தெறிந்தே பேசுவாள். மோகன் பாட்டியின் வீட்டிற்கே குடிவந்தான். வெளி வராந்தாவில் படுத்துக் கொள்வான்.

மோகனின் வீடு குண்டு வீச்சினால் சேதமடைந்து கிடந்தது. அதோடு விவசாயத்தை கவனிக்க வேறு ஆள் இல்லாமல் வயல் வறண்டு போனது. இந்த சொத்துக்களை விற்றாலே பல இலட்சக்கணக்கில் இலாபம் பார்க்கலாம். செல்லாயி பாட்டி தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். நெடு நெடுவென, சிவந்த நிறத்தில் இருந்தவனை பேத்தி சுனிதாவுக்கே பேசி முடித்து விட்டால் அவளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று என்ணினார் பாட்டி.

வீட்டிலே பெரியவர்கள் மட்டும் கூடிப்பேசி நிச்சயம் செய்து விட்டார்கள். மோகனின் பக்கம் யாருமே இல்லை. மோகனுக்கும் சுனிதாவை பிடித்துக் கொண்டது. ஆனால், சுனிதாவுக்கு மோகனைக் கண்டால் ஏனோ பிடிப்பதில்லை. எப்போதும் எரிந்து விழுவாள். எப்போதும் அடக்கமாக இருக்கும் மோகனை விட ரோட்டில் ஸ்டைலாக திரிந்த அரவிந்தை மிகவும் பிடித்துக் கொண்டது.

மோகன் கெஞ்சக் கெஞ்ச சுனிதா மிஞ்சினாள். இப்படியே காலம் கடந்தது. வீட்டில் பெரியவர்களுக்கு இந்த விடயம் தெரிந்தாலும் காலப் போக்கில் சரியாகி விடும் என்று நம்பினார்கள்.
சுனிதா மோகனை அறவே தவிர்த்தாள். மோகன் காரணம் தெரியாமல் தவித்துப் போனான். தானும் குண்டு வீச்சில் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். பெற்றோருடன் இருந்த பசுமையான நாட்கள் மனதில் நிழலாடும். கண்களிலிருந்து அருவி கொட்டும்.

மழை காலம் தொடங்கியது. மழை சட சடவென விழுந்து, சில மணிநேரங்களில் முற்றத்தில் தண்ணீர் தேங்கி, குட்டி குளமாக மாறியது. சுனிதா அவளின் சகோதரர்களோடு மழை வெள்ளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினாள். தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இரைப்பதும், ஓடுவதுமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். மோகனுக்கும் ஆசையாக இருந்தது. அவனும் போய் கலந்து கொண்டான். இவனைக் கணடதும் சுனிதா முறைத்தாள். தயவு செய்து இங்கிருந்து போய் விடு என்றாள். மோகன் அவளின் கையைப் பற்றினான். ஏன் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று சொல் போய் விடுகிறேன் என்று கண்களால் கெஞ்சினான்.
அட! சீ போய்த் தொலை என்று சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா", என்று இவனின் கைகளை வெறுப்புடன் தட்டி விட்டாள். கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து கரைந்து ஓடியது. நடந்து போனவனின் கண்களில் பூச்சி கொல்லி பாட்டில் கண்களில் பட்டது. கைகளில் எடுத்துக் கொண்டான். பாட்டிலை வாயில் வைத்து கவிழ்த்தான். எரியும் நெருப்புக் குழம்பு உள்ளே இறங்கியது போல தவித்துப் போனான். குடல் எரிந்தது. ஓடிப் போய் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து புரண்டான். சுனிதா சிரித்து விட்டு, உள்ளே ஓடிப் போனாள்.

கண்கள் சிவப்பாக மாறியது. எழுந்து அலறிக் கொண்டே ஓடினான். கடைக்குப் போய் விட்டு வந்த பாட்டியும், சுனிதாவின் அம்மாவும் நடந்தது எதுவுமே தெரியாமல் திகைத்துப் போனார்கள். அவனைப் பிடிக்க ஓடினார்கள். எரிச்சல் தாங்காமல் ஓடியவன் கிணற்றினுள் பாய்ந்தான்.
பாட்டியின் கையிலிருந்த குடை காற்றில் மேலெழும்பி கீழே வந்து மல்லாக்காக விழுந்தது.

சில்லென்று ஏதோ உடல் மீது பட விழிப்பு வந்தது மோகனுக்கு. அடச்சே! இவ்வளவு நேரமும் கண்டது கனவா என்று யோசனையாகவும் அதே நேரம் நிம்மதியாகவும் இருந்தது. இந்தப் பெண்ணுக்காக போய் யாராவது உயிரை மாய்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கொண்டான். அறையினுள் போய் தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கினான். பெட்டியை தலையில் வைத்துக் கொண்டே மழையில் இறங்கி நடக்கத்தொடங்கினான்.
தடுக்க ஓடி வந்த பாட்டி, சுனிதாவின் அம்மா எல்லோரையும் தவிர்த்தான். பெய்த மழையினால் அவன் மனம் போல தெருவும் சுத்தமாக இருந்தது.

24 comments:

 1. கடைசியா வச்சீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்... அருமை வாணி...

  ReplyDelete
 2. கனவா! ஹ! இப்போ தான் நிம்மதியா இருக்கு ;)

  ReplyDelete
 3. நிம்மதியா இருக்கு முடிவைப் படிச்சதும்.. தன்னைப் பிடிக்காத பெண்ணை விட்டுத் தள்ளிட்டுப் போனது நல்லாயிருக்கு வான்ஸ்..

  ReplyDelete
 4. ஆஹா..திரும்பவும் ஒரு சூப்பர் கதை .வான்ஸ்..!! :-))

  ReplyDelete
 5. //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//

  வால் போஸ்டில இருக்கிற பூ ஒரு கிலோ பார்ஸல் பிளீஸ்..!! :-))

  ReplyDelete
 6. கனவு கண்டதும் நல்லது தானோ....?! கதை நல்லா இருக்கு வாணி.

  ReplyDelete
 7. ஆஹா...கடைசியில கனவா...சூப்பராக இருந்தது...நல்ல வேலை அவன் தலையில சுனிதாவை கட்டவில்லை...நல்ல திருப்பம்...

  ReplyDelete
 8. முடிவு ரொம்ப நல்லாயிருக்கு...

  ReplyDelete
 9. அருமை அருமை அருமை

  ReplyDelete
 10. அடடா கனவா?
  இப்ப தான் நிம்மதியா இருக்கு!

  நல்ல கதை,நல்ல திருப்பம்...

  ReplyDelete
 11. ரொம்ப நல்லாயிருக்குங்க!

  ReplyDelete
 12. அட கனவா..ம்ம் நல்ல கதை வானதி!!

  ReplyDelete
 13. வடிவா ஒரு கதை!! அம்மாடியோவ் அழகோ அழகு!! எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் இந்த மாதிரி கதையெல்லாம்.. இனி வரிசையாய் ஒவ்வொன்னா எடுத்து விடுங்க பார்ப்போம் வான்ஸ்!! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 14. // வால் போஸ்டில இருக்கிற பூ ஒரு கிலோ பார்ஸல் பிளீஸ்..!! :-)) //

  இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல..!! :-))

  ReplyDelete
 15. செம ட்விஸ்ட்..சூப்பர் கதை.

  ReplyDelete
 16. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 17. நல்ல கதை வானதி!

  ReplyDelete
 18. எதிர்பாரத திருப்பத்துடன் கூடிய கதை. அருமை.

  உங்கள் சமையலறை அதைவிட அருமை.

  என் மனைவியின் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்

  ReplyDelete
 19. மிக நல்லகதை வானதி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. சரியான கருத்து கொண்ட கதை
  தப்பு கணக்கனு
  தலைப்பு வைத்து
  அசத்தி இருக்கீங்க ...

  ஓகே அடுத்த பதிவிருக்கு......

  ReplyDelete
 21. எல்கே, மிக்க நன்றி.
  பாலாஜி, மிக்க நன்றி.
  சந்தூ, மிக்க நன்றி.
  ஜெய், மிக்க நன்றி.
  பூக்கள் தானே??? பக்கத்து வீட்டு லெஸ்லி ( ஆன்டி ) அசந்த நேரம் வேரோடு புடுங்கி பார்சலில் அனுப்புறேன். சரியா??
  கௌஸ், மிக்க நன்றி.
  கீதா, மிக்க நன்றி.
  குமார், மிக்க நன்றி.
  யாதவன், மிக்க நன்றி.
  சரவணன், மிக்க நன்றி.
  ஆமினா, மிக்க நன்றி.
  எஸ்கே, மிக்க நன்றி.
  மேனகா, மிக்க நன்றி.

  ReplyDelete
 22. நாட்டாமை, மிக்க நன்றி.பூக்கள் விற்பனைக்கல்ல. ஓசி தான்.
  ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
  ம.தி. சுதா, மிக்க நன்றி.
  மகி, மிக்க நன்றி.
  சிவகுமாரன், மிக்க நன்றி.
  மனைவியை நெட் பக்கம் விடாதீங்க சரியா?

  லஷ்மி, மிக்க நன்றி.
  சிவா, மிக்க நன்றி.
  போய் பதிவு போடுங்க, அம்பி.

  ReplyDelete
 23. கதை அருமை.முடிவு சூப்பர்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!