Tuesday, November 9, 2010
பம்கின் றோல் ( Pumpkin Roll )
தேவையானவை
மா - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
சினமன் தூள் - 1/2 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
முட்டை - 3
சீனி - 1 கப்
பம்கின் கூழ் ( pumpkin puree ) - 2/3 கப்
ஃபில்லிங் ( Filling )
க்ரீம் சீஸ் - 1 கப் ( 8 oz )
ஐஸிங் சுகர் - 1 கப்
பட்டர் - 6 டேபிள் ஸ்பூன்
வனிலா - 1/2 டீஸ்பூன்
அவனை 375 F க்கு முற்சூடு செய்யவும்.
15 * 10 ட்ரேயில் வாக்ஸ் பேப்பர் போட்டு, மேலே பட்டர் பூசி, மாத்தூவி வைக்கவும்.
சுத்தமான கிச்சன் டவலில் ஐஸிங் சுகர் தூவி வைத்துக் கொள்ளவும்.
மா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சினமன் தூள், கிராம்பு தூள் எல்லாவற்றினையும் ஒன்றாக கலக்கவும்.
முட்டை, சீனி இரண்டையும் எலக்ட்ரிக் மிக்ஸரால் நன்கு அடிக்கவும். பின்னர் பம்கின் கூழ் சேர்த்து, நன்கு அடிக்கவும்.
இறுதியில் மா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையினை ட்ரேயில் ஊற்றி, 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
கேக் வெந்ததும், கிச்சன் டவலை மேலே விரித்து, ட்ரேயினை கவிழ்த்து வைக்கவும். மேலே லேயராக இருக்கும் பேப்பரினை மெதுவாக உரித்து எடுக்கவும்.
கிச்சன் டவலோடு சேர்த்து ( ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும் ), பம்கின் றோலினை சுற்றி அப்படியே 30 நிமிடங்கள் விடவும்.
சூடு ஆறியதும் கிச்சன் டவலை எடுத்து விட்டு, ஒரு தட்டையான பலகையில் பம்கின் றோலினை விரித்து வைத்து, ஃபில்லிங்கில் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி, இந்த றோலின் மீது பூசவும்.
ஐஸிங் பூசி முடிந்ததும் மீண்டும் மெதுவாக சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வரை வைத்து, பிறகு பரிமாறவும்.
கவனிக்க வேண்டியவை:
இந்த ரெசிப்பி சத்தியமா என்னுடையது இல்லை. தாங்ஸ் கிவ்விங் ( Thanks Giving ) நேரம் கடையில் வாங்கிய பம்கின் கூழ் டின்னில் இருந்த ரெசிப்பி. பம்கின் என்றால் எனக்கு கொள்ளை விருப்பம். பம்கின் பை, பம்கின் டாப், பம்கின் குக்கி இப்படி பம்கினில் என்ன ரெசிப்பியாக இருந்தாலும் கொள்ளை விருப்பம். இந்த ரெசிப்பி பார்க்கவே நல்லா இருந்தது. உடனே செய்து பார்த்து விட்டேன். சுவையும் அபாரம்.
சாப்பிட்டு முடிஞ்சதும் கடவுளேன்னு இருக்க முடியாது. கொஞ்ச கலோரிகளாச்சும் burn பண்ணினா தான் குற்ற உணர்வு இருக்காது. எங்கே எல்லோரும் 2 மைல் தூரம் நடந்திட்டு வாங்க பார்க்கலாம். ம்ம்.. வெரி குட்.
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு கப் க்ரீம் சீஸ்--பட்டர்--சுகர்--ஐசிங் சுகர்..இதெல்லாம் கணக்குப்பாத்தா 2 மைல் போதாது வானதி!!3 மைல் நடக்கோணும்! இந்த ஆட்டத்துக்கு நான் வரலை!
ReplyDeleteகலோரி கணக்கு பாக்காம குலாப்ஜாமூன் சாப்ட்டு சந்தோஷமா இருக்கேன்.ஆள விடுங்க!!ஹிஹி!
பம்கின் ரோல் பார்க்கவே சூப்பரா இருக்கு. :P :P
வித்தியாசமா அருமையான ரெஸிப்பி வானதி.பம்ப்கின் பியூரி சேர்த்து சேர்த்து ரோல்..ம்ம்..இப்பவே பம்ப்கின் வாசனை தூக்குது.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteபம்கின் ரோல் ரொம்ப விதியாசமாகபார்க்கவே எடுத்து சாப்பிடனும் போல் நல்லா இருக்கு
ReplyDeleteசூப்பரான் ரோல் இப்ப தான் ஆரம்பம், முதலே பெயரை நடுவில் போட்டு ஆரம்பிங்க
ReplyDeleteதிருடர்கள் நிரைய இருக்கிறார்கள்
நல்ல ஹெவியானது, குழந்தைகளுக்கு ஒகே நாமெல்லாம் வாசனைய தான் மோந்து கொள்ளனும் மகி வேனுமுன்னா கொஞ்சூண்டு சாப்பிட்டுக்கலாம்
ஓட்டு மட்டும் போட்டாச்சு....
ReplyDeleteபம்கின் ரோல் பார்க்க சூப்பரா இருக்கு, செய்யத் தெரியாதுங்கிற உண்மையை சொல்லி விலகிக்கிறேன்.
Pumpkin Rolls and your template - everything is set for the fall season! Awesome!
ReplyDeleteஆசையா இருந்தாலும் எனக்கும் பயமா இருக்கு. ;)
ReplyDelete//( ட்ரேயினை எடுத்திட்டு தான் சுற்றணும் )// அப்பிடியா? ;)
//கலோரி கணக்கு பாக்காம குலாப்ஜாமூன் சாப்ட்டு சந்தோஷமா இருக்கேன்.ஆள விடுங்க!!ஹிஹி!// ம். ;))
சொல்ல மறந்துட்டேன், பார்க்க வடிவா இருக்கு வான்ஸ்.
ReplyDeleteசூப்பராயிருக்கு...
ReplyDeleteபார்க்க ரொம்ப அழகா இருக்கு வான்ஸ்.. யம்மி.. சுவையும் சிறப்பா இருக்கும்ன்னு தோணுது..
ReplyDeleteஒரு சந்தேகம் - வானதியோட ப்ளாக்ல இதைப் பார்த்ததுக்கும் ரெண்டு மைல் தூரம் நாங்க நடக்கணுமா? :))
//எங்கே எல்லோரும் 2 மைல் தூரம் நடந்திட்டு வாங்க பார்க்கலாம். ம்ம்.. வெரி குட்.. //
ReplyDeleteபார்ஸல் அனுப்பாம தானே சாப்பிட்டுட்டு இப்படி நடக்க சொல்றதுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வேலை அதிகமுன்னுதான் தோனுது..!! :-))
என்னது ரெண்டு மைல் தூரமா?? அதெல்லாம் வேலைக்காவது. ஒரு மணி நேரம் என்று சொல்லுங்க டாக்டர் வாணி! அப்ப தான் வடிவா சரியா வரும். என்ன நான் சொல்றது!! ஆமா நீங்க எத்தன பீஸ் சாப்ப்டீங்க வான்ஸ்..!!
ReplyDeletesuper
ReplyDelete/நாமெல்லாம் வாசனைய தான் மோந்து கொள்ளனும் மகி வேனுமுன்னா கொஞ்சூண்டு சாப்பிட்டுக்கலாம் //
ReplyDeleteஅப்ப நான் நிறைய சாப்பிடல்லாம் உங்களை எல்லாரையும் விட சிறியவன் :)
பார்க்கும் பொழுதே தின்னத் தோன்றுகிறது
வான்ஸ்!சூப்பர்.. எனக்கும் இப்படி பேக்கிங் ஐட்டங்கள் பிடிக்கும்...பாத்ததுக்கே அரை பவுண்டு ஏறிடுச்சு வான்ஸ்
ReplyDelete:)
ReplyDeleteஅப்படீய பார்சல் பண்ணி அனுப்பிடுங்க..(நல்ல பக்கிங் பண்ணி அனுப்பனும் )...
ம் நல்ல இருக்கு ..
செய்து குடுத்த நல்ல சாப்பிடுவேன்..
//எங்கே எல்லோரும் 2 மைல் தூரம் நடந்திட்டு வாங்க பார்க்கலாம்// ஓ! அப்ப 'பம்கின் ரோல்' பண்ணுறது தெரியுமோ! ;) நான் வரேல்ல இந்த விளையாட்டுக்கு. ;)
ReplyDeleteVanathy,check this link for a sweet award! :)
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html
வாழ்த்துக்கள் வான்ஸ். ;)
ReplyDeleteநன்றாக இருந்தது பார்க்க படிக்க சாப்பிடவும்?
ReplyDeleteYum yum Vanathy
ReplyDelete