இன்று எனக்கு பிறந்தநாள். என் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. எனக்குப் பிடித்த விளையாட்டு சாமான்கள், உணவுப் பொருட்கள் வாங்கி கொடுப்பார். அம்மா கேக் செய்வார். நான் எனக்கு பிடித்த கலரில் ஐஸிங் போடுவேன். பிறகு எல்லோரும் கேக் சாப்பிடுவோம். அவ்வளவு தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.
இந்த வருடம் நான் ஸ்கூல் போகப்போகிறேன். ஒரே சந்தோஷமாக இருக்கு. அம்மா எனக்கு A, B, C மற்றும் 1,2, 3 என்று நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பிறகு நல்லாவே தேறி விட்டேன். அம்மா எப்ப பார்த்தாலும் படி படி என்று ஒரே தொண தொணப்பு.
" சாம்பு, ஆறுதலாக படிக்கலாம் வா ராசா ", என்று அப்பா என்னைத் தூக்கிக் கொள்வார்.
" அந்தக் காலத்தில் நான் 6 வயசில் தான் பள்ளிக்கே போனேன். இங்கு 4 வயதிலேயே பள்ளிக்கு அனுப்புறார்களே ", என்று என்னிடம் தனிமையில் புலம்பித் தீர்த்து விட்டார்.
எனக்கு இந்த 4 , 6 கணக்கெல்லாம் விளங்கவேயில்லை.
என்னை பள்ளியில் சேர்க்கும் நாளும் வந்தது. அம்மாவின் முகத்தில் கலகலப்பே இல்லை. ஏதோ பறி குடுத்தாப்போல இருந்தார்.
" சாம்பு, குட்டிப் பயலாகவே இருந்திருக்கலாமே. ஏன் இப்படி வளர்ந்தாய்? நீ பள்ளி போன பின் நான் எப்படி உன்னைப் பிரிந்து இருப்பேன் ", என்று அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார்.
( அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட் சரியில்லை. படத்தை பாருங்கள். உங்களுக்கே விளங்கும். )
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே விளங்கவில்லை. இதெல்லாம் என் கையிலா இருக்கு. நீங்களே சொல்லுங்கள்!? நான் படித்து வேலைக்குப் போனால் தானே நான் விரும்பும் விளையாட்டுப் பொருள்கள், சாப்பாடுகள், எல்லாவற்றிக்கும் மேலாக சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாமே வாங்கலாம்.
எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு. காலை 8 மணிக்கே பள்ளிக்கு போய் விட்டோம். பெரிய ஹாலின் நடுவே நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரப்பி வைத்திருந்தார்கள். என்னைப் போல நிறையக் குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும் போய் சேர்ந்து கொண்டேன். அம்மாவும், அப்பாவும் நாற்காலிகளில் எங்களின் முறைக்காக காத்திருந்தார்கள்.
பல விதமான கலர்களில், வடிவங்களில் இருந்த பில்டிங் ப்ளாக்ஸை வைத்து பெரிய டவர் கட்டினேன். பக்கத்தில் ட்ரெயின் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு வாண்டு என் டவர் மீது ட்ரெயினால் மோதி உடைத்தான். எனக்கு அழுகை வந்தது. அம்மாவிடம் ஓடினேன். என் டவரை மோதி உடைத்த பொடியன் வாயினால் புர் புர்.... என்று சத்தம் எழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமா ஓடினான். ஹாலின் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடினான். தரையில் விழுந்து புரண்டான்.
என் அம்மா அவனை மிரட்சியுடன் பார்த்தார்.
" சாம்பு, இந்தப் பொடியனுக்கு அருகில் போகாதே. இவன் ஒருத்தன் போதுமே. பாருங்கள் வாயிலிருந்து என்னமா எச்சில் ஸ்பிரே பண்ணுகிறான். இவன் அம்மா எங்கே? ", என்றபடி சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டார் அம்மா.
அப்பா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் தொண தொணப்பு தாங்காமல் நிமிர்ந்து அந்தப் பொடியனைப் பார்த்து விட்டு, மீண்டும் பேப்பரில் மூழ்கி விட்டார்.
எங்கள் முறை வந்தது. டீச்சர் மிகவும் பொறுமையாக சிரித்த முகத்துடன் பேசினார். நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் என்றேன். வெரிகுட் என்று பாராட்டினார் ஆசிரியை. பிறகு அம்மா, அப்பாவிடம் நிறைய ஏதோ பேசினார்.
" நீங்கள் வீட்டிற்கு போகலாம். பள்ளியிலிருந்து கடிதம் வரும் ", என்றார்.
அம்மாவின் முகத்தில் ஒரே பெருமை.
" அடடா! என் பிள்ளை 10 என்று சொல்லி டீச்சர் வாயை அடைச்சிட்டான் " , என்றார் அம்மா.
" ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப் போல ..", என்று அப்பா அலுத்துக் கொண்டார். அப்பாவின் முகத்திலும் பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.
அங்கிருந்து ஐஸ்கிரீம் கடைக்குப் போனோம்.
எனக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார் அப்பா. பெரிய ஐஸ்கிரீம் கோனின் மீது சாக்லேட் கலவை பூசி, மேலே நட்ஸ் தூவி அலங்கரித்து இருந்தார்கள். வாங்கிய கொஞ்ச நேரத்தில் ஐஸ்கிரீம் எல்லாம் உருகி வழிந்தோடி நான் போட்டிருந்த ட்ரஸ் எல்லாமே நாசமாகி விட்டது.
இனிமேல் அம்மாவின் அர்ச்சனை ஆரம்பமாகி... நான் சொல்லி முடிப்பதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டார். என் ட்ரெஸ் எல்லாமே நச நசவென உடம்போடு ஒட்டி அருவருப்பாக இருக்கு. மீண்டும் சந்திப்போம். வரட்டா!
// அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட் சரியில்லை. படத்தை பாருங்கள். உங்களுக்கே விளங்கும்.//
ReplyDeleteஆமாம்... உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது... உங்க மூட் அவுட்... பார்த்து அடிக்கடி மூட் அவுட் ஆகாதீங்க...
நல்லா இருக்கு வானதி... கலக்குங்க.
உங்க அம்மாகிட்ட சொல்லி பள்ளில சேர்க்க வேண்டாம்னு சொல்றேன் சாம்பு
ReplyDelete/// ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப் போல ..", என்று அப்பா அலுத்துக் கொண்டார். அப்பாவின் முகத்திலும் பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.///
ReplyDeleteஹா ஹா.. ரொம்ப யதார்த்தமா இருக்கு, வானதி..
தொடருங்க. :-))
suuper குழந்தை வயசில் அவன் பேச முடியாத விஷயங்களையெல்லாம் நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க
ReplyDeleteநானும் ஒண்ணு எழுதியிருக்கேன் ஆனா உங்க லெவல்ல இல்ல சாம்புவோட பேச்சு இன்னும் சுவாரஸ்யமா இருக்கு இன்னும் சாம்பு தொடர்ச்சியா தோன்றட்டும்...
http://priyamudanvasanth.blogspot.com/2009/12/blog-post_24.html
ஓ! பரண் ஸ்கூலுக்குப் போக ரெடியாகியாச்சா? ;)
ReplyDeleteசாம்பு நீயாவது பரவாயில்லை என்னை அடிச்சு தரதரன்னு இல்ல இழுத்துகிட்டு போனாங்க
ReplyDeleteகதை நல்ல ஃபுளோவா வருவது அருமையா இருக்கு
ReplyDeleteசாம்பு ஸ்கூலுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா கிளம்பிட்டியா!!!!... வெரிகுட்..
ReplyDeleteநல்ல பதிவு ....வாழ்த்துகள்
ReplyDeleteச்சுவீட்.. சாம்புக்குட்டி, பள்ளிக்கூடத்துக்கு போனாலும், இந்த மாதிரி அடிக்கடி வந்து கதை சொல்லுவியா செல்லம்?
ReplyDeleteஅம்மா ரொம்ப தொணதொணத்தா வாயில மைதா மா காச்சி ஊத்திடலாம்.. என்ன?
நல்லா இருக்கு வானதி
ReplyDeletenallaayirukku
ReplyDeleteஆகா, சாம்பு(பரண்) பள்ளிக்குப் போகத் தொடங்கிற்றாரோ?
ReplyDeleteமேலே இருக்கும் குட்டி, உங்கள் குட்டியோ வாணி?
பி.கு:
எங்கட ஜெய்..லானியை எங்காவது கண்டனீங்களே வாணி? ஒண்டுமில்லை சும்மாதான் கேட்டேன்:)).
நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் என்றேன். வெரிகுட் என்று பாராட்டினார் ஆசிரியை.///
ReplyDeleteநம்பிட்டோம்
குமார், சரி. இனிமேல் மூட் அவுட் ஆகவில்லை.
ReplyDeleteமிக்க நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி.
எல்கே, சீக்கிரம் சொல்லுங்கோ.
மிக்க நன்றி.
வசந்த், மிக நன்றி.
உங்கள் பக்கம் வந்தேன். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீங்க.
இம்ஸ் டீச்சர், ம்ம்.. ஸ்கூல் போக ரெடி.
மிக்க நன்றி.
ஜெய், உங்க வீட்டில் அப்படி செய்தபடியா தான் நீங்கள் இப்படி டாண் டாண் என்று கேள்விகள் கேட்கிறீங்க. உங்கள் நல்லதுக்கு தானே செய்திருப்பாங்க ( ஜெய் அம்மா, ஜெய் சின்ன வயசிலும் இப்படியா ?????? ).
அதீஸ் உங்களை தேடுகிறார். எங்கிருந்தாலும் வரவும்.
மிக்க நன்றி, ஜெய்.
ஸ்டீபன், மிக்க நன்றி.
ReplyDeleteகுரு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சசி குமார், மிக்க நன்றி.
சரவணன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அதீஸ், ம்ம்ம்...என் குட்டியே தான்.
ஜெய்...லானி தன்னுடைய ஆள், அம்பு, பரிவாரங்களுடன் பக்கிங்காம் மாளிகையின் பக்கத்தில் ரூம் போட்டு, அடுத்து என்ன கேள்வி கேட்பது என்று யோசிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் தொண்டரடிப் பொடிகள் சூழ இங்கு வருவார்.
மிக்க நன்றி.
மங்கு, அட! நம்புங்க! அது 10 தான்.
மிக்க நன்றி.
சந்தனா ஆன்டி, நிறைய சொல்வேன்.
ReplyDeleteநீங்கள் முதலில் என் அம்மாவின் வாயில் மைதா மாவை கரைச்சு ஊத்தி, வாயை அடைக்கிற வேலை எல்லாம் செய்ய வேண்டாம். எங்க அம்மா தங்கம்..
very nice vanathy...
ReplyDeleteஉங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
ReplyDeleteபெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
'S' அழகா இருக்கார் வானதி!!:)
ReplyDeleteகுழந்தையின் பார்வையில்...கதை அருமையாகப் போகிறது.
உங்கட குட்டியைப் பார்க்க அப்பாவிமாதிரி இருக்கு வாணி. இப்படிப்பார்த்தால், கோபம் வந்தாலும் ஏசவே மனம் வராது. எங்கட சின்னவரும் இப்படித்தான், நான் கொஞ்சம் முறைத்துப்பார்த்தால், உடனே உதட்டை நீட்டிக்கொண்டு கிஸ் பண்ணச்சொல்லி ஓடிவருவார். கிஸ் பண்ணினால், அம்மா தன்னோடு கோபமில்லை என அவருக்கு ஒரு நினைப்பு:).
ReplyDeleteஆஹா..அதுக்குள்ளே சாம்பு பள்ளிக்கு செல்ல போறானா...வாழ்த்துகள் சாம்பு...
ReplyDeleteha ha ha... super...school pogum padalamaa...super... nalla iruku vanathy
ReplyDelete:))) ohoo
ReplyDeleteமேனகா, நன்றி.
ReplyDeleteஆனந்தி, மிக்க நன்றி. இதோவருகிறேன் விருது வாங்க.
மகி, மிக்க நன்றி.
அதீஸ், உண்மை தான். அவர்களுக்கு தெரியும் எப்படி கோபத்தை குறைப்பது என்று.
கீதா, மிக்க நன்றி.
தக்குடு, நீங்க என்ன சொல்றீங்க? ஒண்ணுமே விளங்கவில்லை.