Friday, July 2, 2010

விருது!

எனக்கு ஜெய் தந்த விருது. மிக்க நன்றி, ஜெய்.


என் கேள்விக்கு என்ன பதில்!!!



ஜெய் : டைகர் அண்ணாச்சி, எழுந்திரு?

டைகர் : ம்ம்...( ஆரம்பிச்சிட்டான் ) என்ன வேணும் ?

ஜெய் : டைகர், அது வந்து கடுகு ஏன் உருண்டையா இருக்கு? எண்ணெயில் போட்டா ஏன் வெடிக்குது?....

டைகர் : முதல்ல காலை எழுந்ததும் பல் விளக்ககோணும் என்று எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.

ஜெய் : சரி. நீ இங்கேயே இரு. ஒரு நொடியிலை வந்திடுவேன்.

டைகர் : நீ மெதுவா வா. ( அதற்குள் எங்கையாவது எஸ்கேப் ஆயிடுவேன். )

ஜெய் : ஆகா! எனக்கு உன்னைத் தெரியாதா? இரு உன்னை இந்த கட்டில் காலோடு கட்டிப் போடுறேன்.

டைகர் : ( மனதினுள் ) விவரமான பொடியன் தான்.

ஜெய் : சரி. இப்ப சொல்லு டைகர்?

டைகர் : அதுவா! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை வந்தபோது இந்த கடுகினை தான் ஆயுதமாக பாவித்தார்களாம். ஒரு பாட்டி இப்படி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொடுக்க, தேவர்கள் அதை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அசுரர்கள் மீது கொட்டினார்களாம்.

ஜெய் : தேவர்கள் என்றால் யார்?

டைகர் : குட் ஹைஸ் அதாவது நல்ல பசங்க.

ஜெய் : அப்ப அசுரர்கள் கெட்ட பசங்களா, ஜெய் ?
அப்ப இந்த கடுகினை உருண்டைகளாக உருட்டியது அந்த பாட்டிதானா? ஏன் வெடிக்குது?


டைகர் : அதுவா. தண்ணீர் சேர்த்து உருட்டி இருப்பாங்க அதான்.

ஜெய் : பூசனிக்காயும் அப்படி தானே வந்திச்சு, டைகர்?

டைகர் : ம்ம்..

ஜெய் : அப்ப அவங்க ஏன் புடலங்காயை உருட்டவில்லை?

டைகர் : ( மனதினுள் ) ஐயோ! இவன் தொல்லை தாங்க முடியலை. ஒரு நாள் அழுதிட்டு இருந்தான். ஏன் ராசா அழுவுறே என்று கேட்டேன். அன்றிலிருந்து ஆரம்பமாச்சு இவன் தொல்லை.


ஜெய் : டைகர், நீ சரியான லூசு. உனக்கு எதுவுமே தெரியாது.

டைகர் : ம்ம்.. நீ சொன்னா சரி தான்.

ஜெய் : நிலக்கடலை நிலத்தின் கீழே தானே வளருது...

டைகர் : ஆமாப்பா.

ஜெய் : அதை நிலக்கிழங்கு என்று சொல்லலாமே? ஏன் கடலை என்று பெயர் வந்திச்சு?

டைகர் : கொர்ர்ர்ர்ர்ர்......

ஜெய் : டைகர், என்ன தூங்கிட்டியா?

ஜெய் : இவனுக்கு எப்ப பாரு தூக்கம். இதில் இந்த 'இட்லி' தங்கமணி, பேபி அதிரா இருவரும் சில கேள்விகள் கேட்டிருந்தார்கள். டைகரிடம் தான் கேட்க வேண்டும்.
டைகர், எழும்பு! தூக்கம் போதும்.

அந்த நேரம் போன் அலறுகிறது.

ஜெய் : யாருப்பா அது? ஓ ப்ளாக் எழுதப் போறீங்களா? எடிட் html ஐ க்ளிக் பண்ணி, காப்பி பண்ணி, வேறு எங்கையாவது பத்திரமா வைச்சுக்கோ என்ன? கம்யூட்டரில் ஏதாவது சந்தேகம் இருந்தா என்னைக் கேளு சரியா? வரட்டா.

டைகர் : ( மனதினுள் ) இதெல்லாம் நல்லா சொல்றான். ஆனால் என்னைக் கண்டால் மட்டும் குண்டக்க மண்டக்காவா பேசுறான்.

ஜெய் : டைகர், தங்கமணிக்கு ஏன் இட்லி சரியாவே வரமாட்டேன் என்கிறது? இமாவின் காமரா ஏன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு? அதிரா ஏன் எப்போது பூனை மாதிரி கத்துறாங்க? எல்கே எப்படி சூறாவளி போல சுழன்று சுழன்று பின்னூட்டம் போடுகின்றார்? சந்தனா, அதிரா, இமா மூவரும் ஏன் ஏட்டிக்கு போட்டியா பதிவுகள் போடுறாங்க??? ஏன் ஏன் ஏன் ??

அடுத்த நாள் காலை.

ஜெய் : டைகர், இங்கே வா? மணி 8 ஆச்சு டைகரை காணவில்லை. இங்கே ஒரு கடிதம் இருக்கே .

" என்னை யாரும் தேடி வர வேண்டாம். வந்தால் கடிச்சு குதறிடுவேன். சாக்கிரதை - இப்படிக்கு டைகர்.


ஜெய் : பாவம் டைகர். என்னாச்சு இவனுக்கு? நேற்றுக் கூட நல்லா பேசிட்டு இருந்தானே. என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே பூட்டானே. பாவிப் பயல்.

டைகர்: ( மனதினுள் ) அப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு. இப்படி ஆள்மாறாட்டம் பண்ணியதால் தான் தப்பிச்சேன். இல்லாவிட்டால் என் கதி அதோ கதி தான்.


( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )

34 comments:

  1. சிரிச்சு முடியல..

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............

    ஹாஹ்ஹா..

    //இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! //

    அப்பிடியா?

    ஜெய், அடுத்து என்னான்னு கேட்டீங்களே... இது எப்பூடி?

    ReplyDelete
  2. //
    ( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! //

    நம்பிட்டேன்.

    //எல்கே எப்படி சூறாவளி போல சுழன்று சுழன்று பின்னூட்டம் போடுகின்றார்//

    எல்லாம் கண்ணு வச்சுடீங்க. நேத்து முழுக்க எந்த பதிவுக்கும் பின்னூட்டம் போடல.

    நல்ல நகைச்சுவை வாணி

    ReplyDelete
  3. டைக‌ருக்கு வ‌ந்த‌ நிலைமையை பார்த்தா க‌ஷ்டமா தான் இருக்கு.... ஹா..ஹா..

    ReplyDelete
  4. @@@( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )//

    ஆமாங்க பாசமா கூப்பிட்டா ரெண்டு எழுத்து நீட்டி கூப்பிட்டா நாலு எழுத்து அப்ப இது நான் இல்ல இல்லவே இல்ல .( ச்சே எப்படியெல்லாம் சமாளில்ல வேண்டி வருது எல்லாம் குவாட்டர் பண்ணிய வேலை)

    ReplyDelete
  5. //டைகர் : ( மனதினுள் ) இதெல்லாம் நல்லா சொல்றான். ஆனால் என்னைக் கண்டால் மட்டும் குண்டக்க மண்டக்காவா பேசுறான்//

    ஹி..ஹி.. எல்லாம் ஒரு பாசம்தான்

    ReplyDelete
  6. ;))))))))))
    நான்ஸ்டிக் பாத்திரம், ப்ளாஸ்டிக் பாத்திரம் எல்லாம் இருக்கே. மறந்து போச்சா?
    இப்பிடி எழுதினால் விருதுக்கு வாழ்த்த மறக்கப் போகுது எல்லாருக்கும்.
    வாழ்த்துக்கள் வானதி.

    ReplyDelete
  7. கதைக்கேத்த போட்டோவும் சும்மா நச்சுன்னு இங்கேயும் பொருந்துது . வாழ்த்துக்கள். வாண்ஸ். என் கேள்வியை வச்சே ஒரு பதிவு ..சூப்பர்..அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. //இமாவின் காமரா ஏன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு?//யார் இப்படி தப்பான தகவல் சொன்னது?

    //சந்தனா, அதிரா, இமா மூவரும் ஏன் ஏட்டிக்கு போட்டியா பதிவுகள் போடுறாங்க???// அது 'ஏட்டிக்குப் போட்டி' இல்ல. ;)) சரி, இனிப் பரணைத் தொடரவில்லை. சரியா!!! ;))

    ReplyDelete
  9. சிரிச்சு முடியலே வானதி.

    ReplyDelete
  10. ஜெய்லானி இங்க வந்து பார்க்கலையா. இந்த அழிசாட்டியத்தை. (ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரமாம்) கேட்டுக் கோங்கய்யா. நம்பிட்டோம். அவ்வ்வ்வவ்வ்வ்வ் ...

    ReplyDelete
  11. பயங்கரமா ரசிச்சு எழுதி இருக்கீங்க தோழி. நானும் ரசித்தேன் . அருமை!

    ReplyDelete
  12. ( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )/// கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க வாணி, நான் இதை ஆணித்தரமாக ஆமோஓஓஓஓஓதிக்கிறேன்.... ஏனெனில் எங்கட ஜெய்க்கு இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்குமளவிற்கு “கிட்னி” இல்லையேஏஏஏ....:))).

    கடைசியில் இருக்கும் டைகர் பப்பி சூப்பரோ சூப்பர்.... அகத்தின் அழகு முகத்தில் தெரியுது.... தப்பிட்டேன் என எண்ணுவது...:))

    ReplyDelete
  13. டைகர் : ( மனதினுள் ) இதெல்லாம் நல்லா சொல்றான். ஆனால் என்னைக் கண்டால் மட்டும் குண்டக்க மண்டக்காவா பேசுறான்.///

    ஹாக்...ஹக்...ஹா.. ஒருவேளை எங்கட “பார்த்தீபனுக்”கு சொந்தமோ?:)

    ReplyDelete
  14. //இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! //உண்மையில் ஜெய்லானி அண்ணன் இருந்தால் தான் கதையே டாப் டக்கர்....ஆனால் சூப்பராக அழகாக எழுதி இருக்கின்றிங்க வானதி...வாழ்த்துகள்...

    ReplyDelete
  15. வாழ்துக்கள் வானதி!
    உங்க "கற்பனை"கதை:) சூப்பர்!

    ReplyDelete
  16. //( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! ) // ஹா ஹா அது ஜெய்லானி தான்னு சொல்லாம சொல்லிட்டீங்க...சூப்பர்ர் வாணி,நன்றாக ரசித்தேன்!!

    விருதுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. கலாநேசன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    சந்து, ஜெய் இனிமேல் அடுத்து என்ன என்று கேட்க மாட்டார் என்றே எனக்கு பட்சி சொல்லுது ( எந்த பட்சியா?? ).
    மிக்க நன்றி.

    எல்கே, இனிமேல் கண் வைக்கலை தொடர்ந்து வாங்க.
    மிக்க நன்றி.

    நாடோடி, எனக்கும் தான் டைகரை பார்த்தால் அழுகையா வருது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. // ஆமாங்க பாசமா கூப்பிட்டா ரெண்டு எழுத்து நீட்டி கூப்பிட்டா நாலு எழுத்து அப்ப இது நான் இல்ல இல்லவே இல்ல .( ச்சே எப்படியெல்லாம் சமாளில்ல வேண்டி வருது எல்லாம் குவாட்டர் பண்ணிய வேலை)//

    ஹாஹா...
    இனிமேல் உள்ளூர் சரக்கு வாங்கி கொடுங்கள். வெளிநாட்டு சரக்கு இப்படித் தான் ஏடகூடமா ஏதாவது பண்ணும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. இமா, அந்தப் பதிவுகளை நான் படிக்கவேயில்லை. போய் பார்த்திட வேண்டியது தான். தகவலுக்கு மிக்க நன்றி.
    ///இமாவின் காமரா ஏன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு?//யார் இப்படி தப்பான தகவல் சொன்னது? //
    அப்ப உங்கள் காமரா உடையவில்லையா?????
    மிக்க நன்றி, இம்ஸ்.

    ReplyDelete
  20. ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    எம். அப்துல் காதர், ஜெய்லானி இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்களே. இது சும்மா ஜெய்க்கும் எனக்கும் வேண்டாதவங்க செய்யும் சூழ்ச்சி. யாரும் நம்ப வேண்டாம்.
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    கௌஸ், மிக்க நன்றி - ரசித்ததற்கு.

    அதீஸ், பப்பி படம் கூகிளில் சுட்டது.
    நீங்கள் எங்கட ஜெய்லானியை வடிவேலுடன் ஒப்பிடக் கூடாது. பார்த்திபனுக்கு உறவு என்றால்....அதானே அர்த்தம்????

    ReplyDelete
  21. கீதா, ஆமாம். ஜெய் ஹீரோவா நடிச்சிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி.

    மேனகா, எப்படி கண்டு பிடிச்சீங்க?
    வருகைக்கு மிக்க நன்றி.

    எனக்கு தமிழிஷ் இல் வோட்டுப் போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  22. சூப்பர்.. கலக்கிடீங்க.. வானதி..
    நா கூட ஒரு நிமிஷம் நம்ம ஜெய்லானி-யோன்னு நினைச்சிட்டேன்னா பாருங்களேன்.. :D :D
    படங்களும், வசனங்களும் அருமை.. :)

    ReplyDelete
  23. @@@Ananthi--//நா கூட ஒரு நிமிஷம் நம்ம ஜெய்லானி-யோன்னு நினைச்சிட்டேன்னா பாருங்களேன்.. :D :D //

    என் பிஞ்சி முகம் போட்டோவை பாத்துமா ..? ஏற்கனவே டைகர் பாக்குது ...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. //சந்தனா, அதிரா, இமா மூவரும் ஏன் ஏட்டிக்கு போட்டியா பதிவுகள் போடுறாங்க???// அது 'ஏட்டிக்குப் போட்டி' இல்ல. ;)) சரி, இனிப் பரணைத் தொடரவில்லை. சரியா!!! ;))///
    nope!!! imma... இப்பூடியெல்லம் வெருட்டினால் நாங்கள் பயந்திடப்பூடாது....:))

    இனித் தீபுக்குட்டி வளர்ந்திட்டா.... அதையும் தொடரோணுமெல்லோ...:)

    ReplyDelete
  25. அதீஸ், பப்பி படம் கூகிளில் சுட்டது.
    நீங்கள் எங்கட ஜெய்லானியை வடிவேலுடன் ஒப்பிடக் கூடாது. பார்த்திபனுக்கு உறவு என்றால்....அதானே அர்த்தம்????
    /// சே.. சே... சே... அது வேஏஏஏஏஏற, இது வேஏஏஏஏஏற வான்ஸ்ஸ்ஸ்.... வடிவேல் அங்கிள் கறுப்பெல்லோ.... ஜெய்..லானி என்ன கறுப்பாகவா இருக்கிறார்.... சந்தர்ப்பம் பார்த்து ஜெய்யை உப்புடிச் சொல்லப்பூடாதூஊஊஊஊஊஉ..


    கடவுளே... நான் ஒரு அப்பாஆஆஆஆஆஆவி... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  26. சூப்பர்..!

    கலக்கிடீங்க வானதி..!

    ReplyDelete
  27. ஹைஷ் அண்ணா, மிக்க நன்றி.

    ஆனந்தி, இது ஜெய் அல்ல. இப்படி தப்பு தப்பா நினைக்க கூடாது.
    வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    அதிரா போல தைரியமாக நிற்கோணும். நான் ஏட்டிக்கு போட்டி என்பதை இமா வேறு அர்த்தத்தில் எடுத்துவிட்டார். கட்டாயம் தொடரலாம், அதீஸ்.
    கறுப்போ சிவப்போ பிங்கோ..... வடிவேல் படத்தில் வந்தவுடன் ஒரு சிரிப்பு வரும் பாருங்கள், அதுபோல ஜெய்யின் பதிவுகள் பார்த்ததும் ஒரு சிரிப்பு தானாகவே வரும்.

    குமார், வாங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  28. //ஜெய் : டைகர், தங்கமணிக்கு ஏன் இட்லி சரியாவே வரமாட்டேன் என்கிறது?//
    //என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே பூட்டானே. பாவிப் பயல்//

    நான் கூட என்னோட கஷ்டத்துக்கு விடிவு காலம் வந்துடுச்சோனு நெனச்சேன்... எங்க... ஹும்... பெருமூச்சு தான் மிச்சம்...

    //( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )//

    ஒகே ஒகே... நம்பிட்டோம்...

    ஜெய்லானி - நீங்க பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாக்குறீங்க... அவ்ளோ தான் சொல்லுவேன்... மீ எஸ்கேப்...

    ReplyDelete
  29. சூப்பர் வானதி

    விருதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. @@@அப்பாவி தங்கமணி //ஜெய்லானி - நீங்க பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாக்குறீங்க... அவ்ளோ தான் சொல்லுவேன்... மீ எஸ்கேப்... //

    கொஞ்சம் சூசகமா சொல்றதுதானே இப்பிடியா பேரோட சொல்றது அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  31. //கொஞ்சம் சூசகமா சொல்றதுதானே இப்பிடியா பேரோட சொல்றது அவ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    கடவுளே!!! எங்கட அதீஸை பூனையாம்.

    ReplyDelete
  32. இது பின்னூட்டங்களுக்கு. ;))

    ReplyDelete
  33. vanathy said...
    //கொஞ்சம் சூசகமா சொல்றதுதானே இப்பிடியா பேரோட சொல்றது அவ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    கடவுளே!!! எங்கட அதீஸை பூனையாம்//// ஆஆஆ அதார் சொன்னது??? கடவுளே இப்பத்தானே யாரோ கழுத்தில பவுண்:)மணியாமே கட்டிவிட்டிருக்கென்றார்கள்... இப்போ என்னென்னமோ எல்லாம் சொல்றீங்களே.... பேபி பூஸுக்கு ஒண்ணுமே பிரியல்லே.....:).

    இருந்தாலும் ஜெய்..லானி, சொல்லாமல் இப்படிச் செய்திருக்கப்பூடாதூஊஊஊஊ இல்லையா வாணி:)))))))) மீ எஸ்ஸ்ஸ்ஸ்

    இமா said...
    இது பின்னூட்டங்களுக்கு. ;))//////// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!