Tuesday, June 29, 2010

அன்பளிப்பு!



நான் போன மாசம் அன்பளிப்பு என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த அன்பளிப்பை நான் யாருக்கு கொடுக்க போகிறேன் என்ற விபரம் மட்டும் சொல்லவில்லை. அந்த அன்பளிப்பை பெற்றுக் கொண்ட நபர் திருமதி. லீசா டிக்கர்ஸன். என் மகனின் ஆசிரியை.

அந்த அன்பளிப்பை நான் நடுங்கிக் கொண்டே என் மகனிடம் குடுத்து விட்டேன். என்ன சொல்வாரோ என்ற தயக்கமே காரணம். மகன் பள்ளி சென்ற பின் ஒரே தவிப்பு. சே! சும்மா இருந்து தொலைத்து இருக்கலாம். சொந்த செலவில் ஏன் சூனியம் வைத்தாய் என்று என் மைன்ட் வாய்ஸ் ( நன்றி: தங்ஸ் ) கடுப்படித்தபடி.

பள்ளி விடும் நேரம் போய் தூரத்தில் நின்று கொண்டு என் மகனை வரும்படி கை காட்டினேன். வழக்கமாக பக்கத்தில் போய் கூப்பிடுவேன். திருமதி. லீசா என்னைக் கண்டு விட்டார். ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார். எனக்கு சந்தோஷத்தில் பேச வார்த்தைகள் வரவில்லை. ஏதோ உளறிக் கொட்டினேன்.

என் மகனிடம் நன்றி சொல்லி ஒரு வாழ்த்து அட்டை கொடுத்து விட்டார். அதை கவனமாக வைத்திருக்கிறேன். அதை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.





நிறைய நாட்கள் செலவு செய்து செய்த அன்பளிப்பை அவரின் வீட்டு சுவரில் மாட்டியிருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.


நான் எழுதிய வாழ்த்து அட்டை.

ஏற்றிவிட்ட ஏணிகள் - ஆசிரியர்கள்.

In our language, teachers are called ladders. Because, we climb and go up and up. One day, the kids would be doctors, engineers or, even Presidents. But, the ladder is still there waiting for more kids to achieve their goals. My son was like a clay and you have molded him into a beautiful person.

We would like to Thank You for every thing you have done.

With love

*********

22 comments:

  1. மிகவும் அருமையான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டை பரிசு!
    ஒவ்வொரு வரியும் அற்புதம் தோழி. அதை பெற்ற அந்த ஆசிரியைக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. // செலவில் ஏன் சூனியம் வைத்தாய் என்று என் மைன்ட் வாய்ஸ் ( நன்றி: தங்ஸ் )//
    ஹி ஹி ஹி... உங்களுக்கும் இந்த தொல்லை ஸ்டார்ட் ஆய்டுச்சா... சூப்பர்...

    சூப்பர் போஸ்ட் வானதி.... அழகான வார்த்தைகள்...

    ReplyDelete
  3. ஆசிரியர்களுக்கு இது மாதிரி கிப்ட் தருவது அவங்களை சுறுசுறுப்பாக்கும் செயல். வாழ்த்துக்கள் வான்ஸ்..!!

    ReplyDelete
  4. வாவ்... மனதைத் தொடும் வண்ணம் இருந்தது..

    அறிவைத் தரும் ஆசானுக்கு...
    அழகான வரிகளை...
    அன்பாய் கொடுத்த உமக்கு...

    வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete
  5. நீங்கள் எழுதிய வாழ்த்து அட்டை அருமை.கிஃப்ட் கொடுத்தது மிகச்சரியான நபர்,ஆசிரியத்தொழிற்கு மிகவும் பொறுமை அவசியம்,எத்தனை விதமான குழந்தைகள்,அவர்களை சமாளித்து,அப்பாடி அது பெரிய விஷயம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அருமையான வரிகள் கொண்ட வாழ்த்து அட்டை வானதி...பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  7. வானதி,அழகான அன்பளிப்பு..அர்த்தம் நிறைந்த வரிகளை எழுதித் தந்திருக்கீங்க!

    கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி ப்ரெசன்ட் பண்ணுவது ஒரு சந்தோஷம் என்றாலும், நம் நேரத்தை செலவழித்து, கற்பனையையும்,உழைப்பையும் கலந்து செய்த ஸ்பெஷல் கிப்ட் என்றால் ஒரு ஆத்மதிருப்திதான்!

    your son is lucky to have Mrs.lisa as his teacher and she is lucky to have your beautiful gift! Well done vanathy!

    ReplyDelete
  8. கண் கலங்குது வானதி.. அவங்களோட பாராட்டுப் பத்திரம் ஒரு வித அழகுன்னா, நீங்க பதிலுக்கு எழுதினது அத விட அழகு..

    //In our language, teachers are called ladders.//

    நாமென்ன ஏணி ன்னா கூப்பிடுறம்? :)))

    ReplyDelete
  9. உணர்வுகளுக்கு அருமையான வார்த்தைகளில் வடித்து இருக்கிறார்கள். கார்ட் டிசைனை பாராட்டவேண்டியது இல்லை. Its a born gift.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. குருவிற்கு கிடைக்க‌ வேண்டிய‌ ம‌ரியாதை தான்... வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  11. சுபர்ப் வானதி. வாசகங்களும் அழகாக எழுதி இருக்கிறீங்க. ;)

    ReplyDelete
  12. நல்ல வேலை வாணி. எனக்கும் ஒன்று இப்படித்தந்தால்.... நானும் சந்தோசப்படுவேனெல்லோ... சரி சரி முறைக்க வாணாம்....

    //In our language, teachers are called ladders.//
    எல்லோரும் மேலேற உதவுகிற ஏணிதானே ஆசிரியர்கள்.... இங்கும் சிலபேர் புளொக்குகளில் அப்பூடி இருக்கிறார்களே.... நான் பெயரெல்லாம் சொல்லமாட்டேன்.. சொல்லப்பூடாதூஊஊஊஊஉ

    ReplyDelete
  13. க்ராப்டும் டீச்சருக்கு எழுதிய வாசகங்களும் அருமை.

    ReplyDelete
  14. ஹூசைனம்மா, மிக்க நன்றி.

    கௌசல்யா, இனிய வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

    தங்ஸ், அது எப்பவும் சவுன்ட் விட்டபடியே தான். நான் தான் கண்டு கொள்வதில்லை.

    மிக்க நன்றி.

    ஜெய், சரியா சொன்னீங்கள். மிக்க நன்றி.

    ஆனந்தி, மிக்க நன்றி அம்மிணி.

    ஆசியா அக்கா, கஷ்டமான வேலையும் கூட. ஊரைப் போல கையில் பிரம்பு எடுக்க முடியாது. எப்போதும் சிரித்த முகம். அப்படியே மனதில் பதிந்து விட்டது அவரின் முகம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. மேனகா, மிக்க நன்றி.

    மகி, இதற்கு நிறைய நாட்கள் ப்ளான் பண்ணி, சில க்ராப்ட்கள் மனசுக்கு பிடிக்காமல் போன கதையும் இருக்கு. கடைசியில் பிங்க் கலரில் அதற்கு மேட்சிங்கா கலர் தேர்வு செய்து... பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்திச்சு.

    உங்கள் அழகான வரிகளுக்கு மிக்க நன்றி.

    சந்தூ, எனக்கும் முதல் முறை அவங்களின் நன்றிக் கடிதம் பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டன.

    ஊரில் சில ஆசியர்கள் ஏணி போல இருந்தார்கள். ம்ம்ம்.. அதை மனதில் வைச்சு எழுதினேன்.
    மிக்க நன்றி.

    ஹைஷ் அண்ணா, மிக்க நன்றி. நீங்கள் கேட்ட மஞ்சள் அட்டையை நான் இன்னும் மறக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் கட்டாயம் உங்களுக்கு ஒரு க்ராப்ட் உண்டு.

    எல்கே, மிக்க நன்றி.

    ReplyDelete
  16. நாடோடி, மிக்க நன்றி.

    இமா, மிக்க நன்றி.


    அதீஸ், கட்டாயம் உங்களுக்கும் இருக்கு. சப்மரீன்லை வரும்போது தருகிறேன்.

    நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று தெரியுமே!!!!!

    மிக்க நன்றி, அதீஸ்.



    அமைதிச்சாரல், மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ஹா. ஹா. ஹா. முடியலைங்க.

    ReplyDelete
  18. //ஏற்றிவிட்ட ஏணிகள் - ஆசிரியர்கள்.//

    உண்மைங்க...

    ReplyDelete
  19. நிறைய நாட்கள் செலவு செய்து செய்த அன்பளிப்பை அவரின் வீட்டு சுவரில் மாட்டியிருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

    நாம் கொடுக்கும் அன்பளிப்புக்கு ஏற்பவர் தரும் மரியாதை அந்த அன்பளிப்புக்கு கிடைக்கும் கௌரவம்


    ஏற்றிவிட்ட ஏணிகள் - ஆசிரியர்கள்.



    குருவுக்கு மரியாதை நல்ல பதிவு வானதி

    ReplyDelete
  20. வசந்த், நன்றி.

    சரவணன், உண்மைதான்.
    மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!