ரம்யா, இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். 4 மணிக்கு வந்திடு சரியா? - இது ரம்யாவின் அம்மா பார்வதி.
அம்மா, அதெல்லாம் இருக்கட்டும். நான் சொன்ன லிஸ்ட் ஞாபகம் இருக்கில்லை. என்றாள் ரம்யா.
" என்ன லிஸ்ட் ? "
" சரி திரும்ப சொல்றேன். எனக்கு பார்க்கும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொன்ன 10 கண்டிஷன்ஸ்", என்றாள் ரம்யா.
ரம்யா ஒரே பெண். மிகவும் செல்லமாக வளர்ந்தவள். நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் அனுமார் வால் போல டிகிரிகள். தனக்கு கணவனாக வரப்போறவன் தன்னைப் போலவே அறப் படித்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவளுக்கு 28 வயதாகிறது. அவளின் லிஸ்டைப் பார்ப்போமா.
மாப்பிள்ளை
1. நிறமாக இருக்க வேண்டும்
2. நிறைய படித்திருக்க வேண்டும்
3. மதுவை கையால்/ மனதால் கூட தொடக்கூடாது
4. வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
5. புகைப்பிடிக்க கூடாது
6. சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும்
7. உயரமாக இருக்கணும்
8. தாடி, மீசை கூடவே கூடாது
9. சமைக்கத் தெரியணும்
10. அவர் பரம்பரையில் யாருக்குமே வழுக்கைத் தலை இருக்க கூடாது.
இது தான் ரம்யாவின் 10 கட்டளைகள்.
" ரம்யா, மற்றதெல்லாம் அட்ஜட்ஸ் பண்ணிக்கலாம். ஆனால், இந்த தலை வழுக்கை தான் கஷ்டம். மாப்பிள்ளையின் பரம்பரையை நான் எங்கே போய் தேடுவேன். உன் அப்பாவுக்கே தலை வழுக்கை தான். அதற்காக அவர் அழகில்லையா?" என்றார் பார்வதி.
" அதனால் தான் சொல்றேன் மொட்டைப் பரம்பரை மாப்பிள்ளை வேண்டாம்." என்றாள் ரம்யா.
முதன் முதலில் மாப்பிள்ளை பார்க்க வந்தவரின் ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு லேசாக வழுக்கை இருந்தபடியால் ரம்யா அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்றாள்.
இரண்டாவது கொஞ்சம் நிறம் கம்மி, மூன்றாவது கொஞ்சம் குள்ளம், நான்காவது வீட்டில் கடைக்குட்டி.
அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க அந்த லிஸ்டில் 2 கண்டிஷன்களை நீக்க முடிவு செய்தாள் ரம்யா.
8 மற்றும் 9 வது கண்டிஷன்களை நீக்கினாள். இதன் பிறகும் 5 வரன்களை ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்தாள்.
இவளின் பிடிவாத குணத்தால் பல நல்ல வரன்களும் தட்டிப் போயின.
ரம்யாவை விட வயது குறைந்த பக்கத்து வீட்டு ராஜிக்கு திருமணமாகி 2 குழந்தைகள். ரம்யாவின் தாயார் அடிக்கடி ஏக்க பெருமூச்சு விட்டுக் கொள்வார்.
ஆரம்பத்தில் லிஸ்டோடு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த ரம்யாவின் அப்பா வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்தார். ரம்யாக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தரகரின் கையில் ஒப்படைத்து விட்டு, சிவனே என்று இருந்து விட்டார். தரகர் கொண்டு வந்த சில வரன்களையும் இவரே பார்த்து வேறு பெண்களை பரிந்துரைத்தார். அவருக்கு தெரியும் ரம்யா அந்த வரன்களை கட்டாயம் தட்டிக் கழித்து விடுவாள் என்பது.
ரம்யாவிற்கு 32 வயதானதும் அவள் லிஸ்ட் 8 லிருந்து ஆறாகியது. 34 வயதில் 4 ஆக சுருங்கியது. 36 வயதில் 2 ஆக குறைந்தது. நாற்பது வயதில் அப்படி ஒரு லிஸ்ட் இருந்ததே ரம்யாவிற்கு மறந்து போய் விட்டது.
ரம்யாவின் அம்மாவும் ராஜியின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி தன் ஏக்கத்தை போக்கி கொண்டார். அப்பாவும் ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறவே நிப்பாட்டி விட்டார். இனிமேல் என்னை யார் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று ரம்யாவும் தன்னுடைய ஏக்கம், கனவு எல்லாவற்றையும் அடக்கி வாழப்பழகிவிட்டாள்.
ரம்யாவின் அம்மா முன்பு அடிக்கடி சொல்வார், " என் பொண்ணு கிளி மாதிரி எவ்வளவு அழகு. யாராவது வந்து கொத்திண்டு போயிடுவாங்கள் " . கிளி இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கொத்திக் கொண்டு போகத் தான் யாரும் வரவில்லை.
நல்ல கருத்தான கதை...
ReplyDeleteச பாவம்! ரொம்பவும் stubborn ஆ இருக்கக்கூடாதுன்னு விளக்கர அளவுக்கு நல்ல கத!
ReplyDeleteகூண்டுக்கிளி....பாவம் !!.
ReplyDelete:-(
ஆழமான கருத்துள்ள காலத்திற்கு தேவையான ஒன்று
ReplyDeleteமஞ்சள் மலர்கள் அழகு வானதி.
ReplyDeleteஒவ்வொரு கதை ஒவ்வொரு மாதிரி எழுதுறீங்க. ;) ஒன்று சிரிப்பு, ஒன்று சிந்தனை. ;) வாழ்த்துக்கள்.
ஹெடர் போட்டோ சூப்பர் வானதி!யெல்லோ அண்ட் கிரீன்..எனக்கு பிடித்த காம்பினேஷன்..அழகா இருக்கு. எங்க ஊர்ல இந்த மாதிரி பூக்களைப் பார்க்கவே முடியல.
ReplyDeleteநல்ல கதை. எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி நெறைய முதிர் கண்ணன்கள் உண்டு... ஆண்களிலும் கண்டிஷன் போட்டே வாழ்கையை தொலைச்சவங்கள பாத்து இருக்கேன் (அது சரி... நீங்க என்னவெல்லாம் கண்டிஷன் போட்டீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...சும்மா கேட்டேன்...)
ReplyDeletei thot it was going to be a funny story, like SV Sekar's manal kayiru! mm.. ended seriously!
ReplyDeleteரம்யாவின் கட்டளைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இதில் ஒரு நம்பர் நானும் போட்ட கட்டளை:). எந்த நம்பர் என்று யாரும் கேட்கப்படாதூஊஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDeleteமேனகா, மிக்க நன்றி.
ReplyDeleteமாதங்கி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஜெய், மிக்க நன்றி.
எல்கே, மிக்க நன்றி.
இமா, மிக்க நன்றி. இது என் மகனின் ஸ்கூலில் எடுத்த படம்.
மகி, மிக்க நன்றி. இங்கு எங்கு பார்த்தாலும் பூக்கள். கொள்ளை அழகு.
தங்ஸ், நீங்கள் சொல்வது சரிதான். நான் போட்ட கண்டிஷன்ஸ் ஆஆஆஆ... நான் ரொம்ப அப்பாவியாக்கும். கண்டிஷன்ஸ் போட்டு வாழ்வை கன்பியூஸ்ட் ஆக்கவில்லை. நம்ம கண்டிஷன்ஸ் சொன்னாலும் யாரும் காது குடுத்து கேட்கும் நிலமையில் இருக்கவில்லை.
ReplyDeleteசந்தனா, மிக்க நன்றி. நகைச்சுவையாக முடிவு யோசித்தேன். வரவில்லை.
அதீஸ், எனக்கு எந்த நம்பர் என்று தெரியுமே. ஆனால் யாரும் கேட்கப் படாது... இது எப்பூடி இருக்கு.
மிக்க நன்றி.
//நீங்க என்னவெல்லாம் கண்டிஷன் போட்டீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...சும்மா கேட்டேன்./
ReplyDeleteappavi akka, nee enna conditionlam potta,oru todar pathivu start panlaamaa??
வானதி,கதையின் கரு அருமை,இனி ஒரு சொட்டை மாப்பிள்ளையாவது ரம்யாவிற்கு வராமலா போய்விடுவார்?இறுதியில் இப்படி தான் ஆகிறது .
ReplyDeleteஆசியா அக்கா, உண்மைதான். இது போல எனக்குத் தெரிந்த சில பெண்கள் லிஸ்டோடு மாப்பிள்ளை தேடி, பிறகு ஏதோ அகப்பட்டதை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். அழகு என்பது கொஞ்ச நாட்களுக்கே நிரந்தரம். இதெல்லாம் யாருக்கும் விளங்குவதில்லை.
ReplyDelete//LK said...appavi akka, nee enna conditionlam potta,oru todar pathivu start panlaamaa?? //
ReplyDeleteஏற்கனவே பொண்ணு பாத்த பதிவ போட்டே பாதி deposit போச்சு... மிச்சமும் போகனுமா பிரதர்... (மொதல்ல உங்க அம்மணி கிட்ட கேப்போம் அப்புறம் நாங்க சொல்றோம்... டீலா? நோ டீலா?)
Deal எல்கே சார்பில் நானே சொல்றேன், தங்ஸ்.
ReplyDeleteநல்ல கருத்துள்ள கதை வானதி
ReplyDeleteநான் கூடஎன் தளத்தில் மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் சிறுகதை இடுகை இட்டிருக்கிறேன் இதே போன்றது தான் நேரமிருக்கும் போது படிக்கவும் வானதி
சரவணன், மிக்க நன்றி.
ReplyDeleteகட்டாயம் படிக்கிறேன்.