Wednesday, May 19, 2010

தேடுதல் வேட்டை

" கௌசல்யா, எங்கே இருக்கே? "

" அப்பா, என்னத்தை காணவில்லை? " - இது வாசுவின் 5 வயது மகன்.

ம்ம்... இந்த பொடியனுக்கே இவ்வளவு நக்கல். ( வாசு மனதிற்குள் நினைத்துக் கொண்டான் )

" இல்லை செல்லம். இதிலை இப்பதான் ஒரு முக்கியமான மெயில் வைத்தேன் காணவில்லை. "

" நல்லா தேடிப்பாருங்கப்பா. "

" ம்ம்ம்... கௌஸ் எங்கே போய் தொலைஞ்சே? "

கௌசல்யா : ஆகா! ஆரம்பித்து விட்டார். எத்தனை தடவை சொல்றது கௌஸ் என்று கூப்பிட வேண்டாம்.

வாசு: பெயர் வைப்பது கூப்பிடத்தானே.

கௌசல்யா : எங்கப்பா எனக்கு கௌசல்யா என்று எவ்வளவு அழகா பெயர் சூட்டினார். கௌஸ் கேட்கவே வாந்தி வருது.

கௌஸ் இதிலை இப்ப தான் ஒரு மெயில் வைச்சேன். எங்கே தூக்கி கடாசினாய்?

என்ன மெயில்? நான் எடுக்கவே இல்லை.

வாசு: இந்த வீட்டிலை தான் இப்படிப்பட்ட அதிசயம் எல்லாம் நடக்கும். இப்போஇங்கே ஒரு முக்கியமான கடிதம் வைச்சேன். அதற்குள் மாயமாக மறைந்து விட்டது. அதை தேடாவிட்டால் என் மண்டையே பிளந்துவிடும்.

கௌசல்யா : நான் போகணும். வேலை இருக்கு. நல்லா தேடிப் பாருங்க.

வாசு: ம்ம்.. எல்லாம் என் நேரம். கௌஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா?

கௌசல்யா : சரி நான் தேடுறேன். நீங்கள் போய் டீ போடுங்க. அப்படியே உங்கள் மகனையும் குளிக்க வைத்து, சாப்பாடு குடுத்து, ஸ்கூலுக்கு ரெடி பண்ணுங்க. அப்படியே உங்க சாப்பாடு, லன்ஞ் எல்லாமே எடுத்து வைங்க......

வாசு : ஏதோ தெரியாமல் சொல்லிப் போட்டேன். அதற்கு இவ்வளவு தண்டனையா? நீ போ தாயி.

வாசு: கௌஸ், நீ தான் எங்கேயோ தொலைத்து விட்டாய். உனக்குத் தான் ஒரு பேப்பர் கண்டால் கை துறுதுறுக்குமே . எந்தக் குப்பையில் கிடக்குதோ தெரியவில்லை?

கௌசல்யா : அதோ அங்கே டைனிங் டேபிள் ஓரமா உங்கள் குப்பை எல்லாம் குவித்து வைச்சிருக்கிறீங்க அதிலை கிளறிப் பாருங்க.

வாசு : வேலைக்கு லேட்டாச்சு. வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை. எதற்கும் ஒருக்கா மேலே பார்க்கணும்(மனதிற்குள் ).

கௌசல்யா : என்ன ஐயாவின் சவுண்டையே காணவில்லை?

வாசு : ஹி ஹி.. நான் தான் மேலே கம்யூட்டர் மேசையில் வைச்சுட்டு வீடு முழுக்க தேடி.....ஸாரி, கௌஸ்.

***********


வாசு : கௌஸ், இங்கே இதிலை ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டை இருந்திச்சே எங்கே?

கௌசல்யா : எப்ப வந்திச்சு?

வாசு : எங்கள் மகன் பிறந்தபோது கோவிந்தா மாமா அனுப்பினாரே அந்த அட்டை.

கௌசல்யா : அதாவது 5 வருடத்துக்கு முந்தி வந்த கார்டா?

வாசு : ம்ம்ம்ம்..

கௌசல்யா : கிழிஞ்சுது போ!

வாசு : கௌஸ், தேடி வை. நான் வேலையால் வரும் போது இங்கே இருக்கணும். சரியா?

கௌசல்யா : அதெப்படி நீங்கள் சேர்த்து வைக்கும் கடிதங்கள், கார்டுகளில் ( குப்பை ) ஒன்று காணாமல் போனாலும் கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க?

வாசு : என்ன நக்கலா?

கௌசல்யா : நேரம் கிடைச்சா பார்க்கிறேன். அதற்காக வேலையால் வரும் போது கட்டாயம் கிடைச்சுடும் என்று நம்பிகையோடு வரவேண்டாம்.

மணி காலை 10:30. வாசு அலுவலகத்திலிருந்து கௌசல்யாவை கூப்பிட்டான்.

வாசு: கௌஸ், என்ன வாழ்த்து அட்டை கிடைச்சுதா?

கௌசல்யா : இன்னும் நான் தேடவே இல்லை. வேலை இருக்கு.

மீண்டும் 12 மணி, 3 மணிக்கு மீண்டும் தொலை பேசியில் அழைத்து விசாரித்தான்.

மகன் : அம்மா , ஓ அப்பா தேடும் வாழ்த்து அட்டையை நான் தான் வெட்டி, இந்த டைகரை மட்டும் எடுத்து வைச்சுட்டேன்.

கௌசல்யா : அடப் பாவி ( மனதிற்குள் ). சரி அதை இப்படிக் குடு செல்லம். அப்பா வந்தால் இன்று கச்சேரி தான்.

மாலை வேலையால் வந்தான் வாசு.

வாசு : கௌஸ், என்ன கிடைச்சுதா?

கௌசல்யா : ம்ம்ம்.. இந்தாங்க.

வாசு : யார் இதை வெட்டியது?

கௌசல்யா : உங்கள் மகன்.


வாசு: எல்லாம் என் நேரம் ( கோபமாக உள்ளே போனான் ).

வாசு எப்பவும் இப்படித்தான் பொருட்கள் காணாமல் போனால் வீட்டில் இருப்பவர்களை ஒரு வழி பண்ணி விடுவான். திரும்ப அந்தப் பொருள் கிடைக்கும் வரை கௌசல்யாவுடன் பேச மாட்டான். பொருள் மீண்டும் கிடைத்தாலும் அது காணாமல் போகும் போது எப்படி இருந்திச்சோ அப்படியே இருக்க வேண்டும் என்று அலப்பறை பண்ணுவான். கௌசல்யாவுக்கு திருமணமான புதிதில் கஷ்டமாக இருந்தது. அவளும் வீடு முழுக்கத் தேடி உதவி செய்வாள். இப்ப அவளுக்கு தேட நேரமோ பொறுமையோ இருப்பதில்லை.

வாசு 2 நாட்கள் பேசாமல் மௌனம் காத்தான். ஆனால் கௌசல்யா தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். ரோஷம் வந்தாலும் இப்படி அரைகுறையாகவே வரும் . கௌசல்யாவும் பேசாமல் இருந்து விடுவாள்.

மூன்றாம் நாள்

வாசு : கௌஸ் செல்லம், ஒரு டீ குடிக்க வேணும் போல இருக்குடா....

கௌசல்யா : ஐயாவின் கோபம் என்ன ஆச்சு?

வாசு : ம்ம்... அது போயே போச்சு. இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன். சத்தியம்.

அரை மணி நேரம் கடந்த பின்.

வாசு : கௌஸ், இங்கே இப்போது போஸ்ட் ஆபிஸிலிருந்து கொண்டு வந்த ஸ்டாம்ஸ் வைச்சேனே எங்கே???

வாசு மாறவே மாட்டான் என்று கௌசல்யாவுக்கு எப்போதோ தெரிந்த ரகசியம்.

23 comments:

  1. வானதி : படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!
    இமா: எனக்கு என்னவோ சந்தேகம் வருது!!! ;)))

    ReplyDelete
  2. இம்ஸ், என்ன சந்தேகம்? சந்தேகம் வந்தால் கேட்டுப் போடோணும். மனசுக்குள் பூட்டி வைச்சு புழுங்க கூடாது.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. சிலர் இப்படிதான்...

    ReplyDelete
  4. வானதி : படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!
    இமா: எனக்கு என்னவோ சந்தேகம் வருது!!! ;)))
    மகி: எனக்கு தெளிவாகத் தெரிந்துட்டது! ;)

    ReplyDelete
  5. இய‌ல்பான‌ ந‌டை... ந‌ல்லா இருக்குங்க‌..

    ReplyDelete
  6. வானதி : படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!
    இமா: எனக்கு என்னவோ சந்தேகம் வருது!!! ;
    எல் கே : எனக்கும் அதே சந்தேகம்தான்

    ReplyDelete
  7. இந்த கதையின் நாயகிக்கு என் பெயர்தான் என்பதில் ஒரு குட்டி சந்தோசம். பல வீட்டிலும் தினமும் இப்படிப்பட்ட குரல்கள் கேட்கத்தான் செய்கின்றன. இயல்பான வார்த்தைகள்!

    ReplyDelete
  8. ஆண்டவா என்ன இது ! அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க.கௌஸ் அசத்தலாக இருக்கு.

    ReplyDelete
  9. ஹ்ம்ம்.. நல்லா இருக்கு வானதி.. :)

    (vanathi.. inga oru comment pottaen vandhutha? )

    ReplyDelete
  10. எனக்கு என்னவோ சந்தேகம் வருது!!! ;))) /// எனக்கு சந்தேகமே இல்லை... தெளிவாத் தெரியுது.. என்னவென யாரும் குறுக்குக்கேள்வி கேட்கப்படாதூஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ~கிழிஞ்சுது போ”... நானும் சொல்லிவிட்டுச் சிரிப்பேன்..

    நல்ல நகைச்சுவையான நிஜத்தில் நடக்கின்ற கதைதான்... ஜூப்பர்.

    ReplyDelete
  11. //வாசு மாறவே மாட்டான் என்று கௌசல்யாவுக்கு எப்போதோ தெரிந்த ரகசியம். //

    ஹி...ஹி....

    ReplyDelete
  12. மேனகா, உங்களுக்கு விளங்குது. மிக்க நன்றி.

    மகி, //எனக்கு தெளிவாகத் தெரிந்துட்டது! ;)//
    இப்படி சொன்னா எப்படி எனக்கு புரியும்.
    வருகைக்கு மிக நன்றி.

    எல்கே, சீசீ... மக்கள்ஸ் நீங்கள் நினைப்பது போல எதுவுமே இல்லை. நீங்கள் எல்லோரும் இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடாது.

    ReplyDelete
  13. நாடோடி, மிக்க நன்றி.

    கௌசல்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ஆனந்தி, மிக்க நன்றி. உங்க கமன்ட் வரலைங்க. இருங்க வேறு எங்காவது தேடிப் பார்க்கிறேன்.

    அதீஸ், என்ன சந்தேகம். நாங்கள் மிகவும் ஆதர்ஸ் தம்பதிகள் ( யாருக்காவது மீனிங் தெரிந்தால் சொல்லுங்கப்பா ). வருகைக்கு மிக்க நன்றி.

    ஜெய்லானி, அதீஸ் போல நோண்டாமல் சும்மா கமன்ட் போட்டுட்டு போய் விட்டார். நன்றி.

    ReplyDelete
  14. வாழ்த்துகள்!அருமை...அருமை...

    ReplyDelete
  15. // நீங்கள் எல்லோரும் இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடாது//

    avvvv

    ReplyDelete
  16. யதார்தத்தை அழகான நடையில் எழுதி இருக்கின்றீர்கள் வானதி.பாராட்டுக்கள்

    ReplyDelete
  17. ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
  18. அழகான தேடுதல் வேட்டை..

    ReplyDelete
  19. ###########################################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

    http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
    அன்புடன் >ஜெய்லானி <
    #############################################

    ReplyDelete
  20. யாதவன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    எல்கே, கண்ணைத் துடையுங்கோ. பிளீஸ்.

    ஷாதிகா அக்கா, உங்கள் பாராடிற்கு என் நன்றிகள்.

    அப்பாதுரை, நல்வரவு. கருத்துக்கு மிக்க நன்றி.

    ஜெயா, மிக்க நன்றி.

    ஜெய்லானி, நன்றி. இதோ பறந்தோடி வருகிறேன்.

    புது வரவுகள், றமேஸ், தமிழ் அமுதன், நல்வரவு.

    ReplyDelete
  21. ஹா ஹா ஹா... எப்பவும் மாறாத ஒண்ணு ரங்கமணிகள் மறதி... நல்லா சொன்னிங்க வானதி... சூப்பர்

    ReplyDelete
  22. தங்ஸ், ஆமாங்க!

    //எப்பவும் மாறாத ஒண்ணு ரங்கமணிகள் மறதி... //
    ஞாபக மறதி ஒரு பெரும் தொல்லை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. ஹாஹ்ஹா.. இந்தக் கதையில நாந்தான் வாசு எங்க வீட்டுல :))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!