Tuesday, April 6, 2010

ஆரஞ்ச் கேக் ( Orange Cake )








தேவையான பொருட்கள்:


மைதா மா - 9 oz 
சீனி              - 9 oz
ஆரஞ்ச் யூஸ் - 1/4 கப்பிற்கு குறைவாக
ஆரஞ்ச் செஸ்ட் ( zest ) - 1 டேபிள் ஸ்பூன்
 முட்டை - 5
பட்டர் (salted) - 1 கப் ( 8 oz)
வனிலா - 11/2 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 oz

முந்திரி வற்றல் - 2 oz

முட்டை, பட்டர் இரண்டும் ரூம் டெம்பரேச்சரில் ( room temperature) இருக்க வேண்டும். 

பருப்பு, வற்றல் இரண்டையும் சிறிது மைதா மாத்தூவி பிரட்டி வைத்துக் கொள்ளவும். ஆரஞ்ச் பழத்தை கழுவி,  ( வெள்ளைத் தோல் கசக்கும் தன்மை உடையது.)  மேலே இருக்கும் தோலை மட்டும் கவனமாக துருவிக்கொள்ளவும்  (this is called zest ) .


செய்முறை:

முட்டையின் வெள்ளைக்கரு தனியாக, மஞ்சள் கரு தனியாக பிரித்து வைக்கவும்.
வெள்ளை கருவை நன்கு நுரைக்கும் வரை அடிக்கவும்.
மா, பேக்கிங் பௌடர் இரண்டையும் 3 தரம்
சலித்து வைக்கவும்.
அவனை 365 டிகிரி க்கு முற்சூடு செய்யவும்.

அறை வெப்பநிலையில் இருக்கும்
பட்டர், சீனி இரண்டையும் நன்கு அடிக்கவும்.

பிறகு, முட்டை மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை சிறிது, சிறிதாக சேர்த்து அடிக்கவும்.
இப்போது , யூஸ்( orange juice) , zest சேர்க்கவும்.  மாவை சிறிது, சிறிதாக சேர்த்து, மரக் கரண்டியால் ஒரே பக்கமாக கலக்கவும். வனிலா  சேர்க்கவும்.


ட்ரேயில் ஊற்றி,  மேலே முந்திரி பருப்பு, வற்றல் தூவி விடவும்.
 30-40 நிமிடங்கள் பேக் செய்யவும். 


கேக் தயார்.


  


8 comments:

  1. yum. ;P

    மேலே இருக்கும் பூக்கள் கேக்கை விட அழகு. ;) போட்டோ யார் எடுத்தது? நீங்களா, திரு. வாணியா?

    ReplyDelete
  2. ஆரஞ்சு கேக்கின் புகைப்படங்கள் ரொம்பவும் அழகு, வானதி!

    ReplyDelete
  3. இமா, கர்.... என் கேக்கை விட பூக்கள் அழகு என்று சொன்னதற்கு. அது திருமதி. வாணி எடுத்தது. இந்த அழகிய பூக்களை பார்த்ததும் எனக்குள் இருந்த புகைப்படக்காரன் விழித்தெழுந்து..... க்ளிக் பண்ணியது.

    ReplyDelete
  4. மனோ அக்கா, மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. Menaga, thanks. Shivani has grown up.

    ReplyDelete
  6. ஆரஞ்சு கேக் ரொம்பவும் அழகு வாணி. நன்றி

    ReplyDelete
  7. பிரபா, நலமா?. பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!